Lifestyle

உங்கள் காதல் பிரேக்கப் ஆவதற்கு முக்கிய காரணங்கள்!

Mohana Priya  |  Apr 25, 2019
உங்கள் காதல் பிரேக்கப் ஆவதற்கு முக்கிய காரணங்கள்!

மனத்துக்குப் பிடித்த ஒருவருடன் நேரம் செலவிடுவது இதமாக இருக்கிறது, பரஸ்பரம் பேசிக்கொள்ளவும் சிரித்துக்கொள்ளவும் பல விஷயங்கள் உள்ளன, பல நேரங்களில் இருவருக்கும் ஒரே இசை, ஒரே புத்தகங்கள், திரைப்படங்கள், மனிதர்களைப் பிடித்திருக்கிறது. ஆக, எல்லாம் நல்லபடடியாக நடக்கிறது, காதலர்கள் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். இந்த உறவு வாழ் நாள் முழுக்கத் தொடரும் என்று நம்புகிறார்கள்.


ஆனால், எல்லா உறவுகளும் அப்படித் தொடர்வதில்லை. சில உறவுகள் முறிந்துபோகின்றன. ஒவ்வொரு காதலும் திருமணத்தில் முடிவதில்லை. அத்துடன், எல்லாக் காதலர்களும் திருமணத்தை விரும்பிக் காதலிக்கத் தொடங்குவதில்லை. ‘இவரை எனக்குப் பிடிக்கும், இவரோடு நேரம் செலவிடுவது எனக்குப் பிடித்திருக்கிறது’ என்கிற எண்ணத்தில் தான் பல காதல்கள் தொடங்குகின்றன. ஆரம்பத்தில் இருவரும் இப்படி உணர்கிறார்கள்.

பின்னர் திடீரென்று ஒருநாள், அவர்களில் ஒருவர் ‘எனக்குக் கொஞ்சம் தனிமை தேவை’ என்கிறார். இது ஒரு முறிவின் தொடக்கமாக இருக்கலாம். முதன் முதலாக இந்த முறிவைச் சந்திக்கிற ஒருவர் மிகவும் சோகமாகிவிடுகிறார், மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு, பழைய காதல் நினைவுகளில் மூழ்குகிறார். நண்பர்கள், குடும்பத்தினர், மதிப்பெண்கள், உணவு, உடற்பயிற்சி, எல்லாமே இரண்டாம்பட்சமாகிவிடுகிறது. உறவு முறிவு(breaking) தரும் சோகம், விரும்பிய ஒருவருடைய மரணம் தரும் சோகத்துக்கு இணையானது. உறவு இறந்துவிட்டது என, அதையெண்ணி இவர்கள் சோகத்தில் மூழ்குகிறார்கள்.


இப்படி நடக்கும் என்பதை அவர்கள் ஏன் முன்கூட்டியே கவனிக்கவில்லை? இதற்கான சான்றுகள் முன்பே தென்பட்டிருக்கும். இப்படிப்பட்ட உறவு முறிவுகள்(breaking) ஒருநாளில் நிகழ்ந்து விடுவதில்லை. ஒருவர் 16 அல்லது 17 வயதில் ஒருவருடன் நேரம் செலவிடத் தொடங்குகிறார்.

இப்போது அவருக்கு வயது 20 அல்லது 21 என்று வைத்துக்கொள்வோம், இந்தக் காலகட்டத்தில் அவர்கள் வேறுபட்ட ஆளுமைகளாகியிருப்பார்கள், ஆரம்பத்தில் அவர்களுக்கு மத்தியில் தென்பட்ட பொதுவான விஷயங்கள் இப்போது குறைந்திருக்கும். அல்லது, அவர்கள் இருவரில் ஒருவர் மற்றவரைச் சகித்துக் கொண்டிருந்திருப்பார், தன்னை மாற்றிக் கொண்டிருந்திருப்பார், இதை நெடுங்காலத்துக்குத் தொடர்ந்து செய்யச் செய்ய, அவருக்குள் ஒரு சலிப்பு ஏற்பட்டிருக்கும். அல்லது, அவர்களில் ஒருவர், வேறொரு நபருடன் நேரம்செலவிடுவதை விரும்பத் தொடங்கியிருப்பார். இதன் பொருள், இவருடைய காதல் குறைச்சலானது என்பதல்ல, அவருடைய தேவைகள் மாறிவிட்டன, அவ்வளவுதான். காதல் முறிவு(breaking) ஏன் ஏற்படுகின்றது அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

காதல் முறிவிற்கான காரணங்கள்

  1. மெய் காதல் உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும், துன்பத்தை பாதியை குறைக்கும் என்பார்கள். உங்கள் துணை வருத்தமாக இருந்தால் அதை நீங்களே சென்று கேட்க வேண்டும் என நினைப்பார்கள். அனுதாபத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அப்படி இல்லை யெனில் பெரிய ஏமாற்றத்தை சந்திக்க நேரிட்டு பிரிவிற்கு காரணமாகும்.
  2. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அதிக அன்பு சில நேரத்தில் பிறரின் சுதந்திரத்தை தடுக்கின்றது. குறிப்பாக பெற்றோரிடம் அல்லது சகோதரர்களுடன் கூட நேரம் செலவலிப்பது துணைக்கு பிடிக்காமல் போவதால் காதல் முறிவு(breaking) ஏற்படும்.
  3. அதிக பொசசிவ் காரணமாக அது நாளடைவில் சந்தேகத்தை ஏற்படுத்தும். இதனால் காதல் உறவில் மிகப்பெரிய விரிசலை கொண்டு வந்து சேர்க்கும்.
  4. அலட்சிய படுத்தும் விதத்தில் நடந்துக்கொள்ளுதல். குறிப்பாக காதல் கைகூடி வரும் வரை இம்ப்ரஸ் செய்ய பின்னால் செல்வது. காதல் ஒப்புக்கொண்ட பிறகு அலட்சியமாக நடந்துக் கொள்வதால் காதலில் மிகப்பெரிய முறிவு(breaking) ஏற்பட வாய்ப்புள்ளது.
  5. புதிய நபர்கள் காதல் நடுவில் வருவதால் இருவருக்கும் இருக்கும் நெருக்கம் குறைந்து காதல் பிரிவு(breaking) ஏற்படும்.
  6. வெளியிடங்களில் மரியாதை குறைவாக நடத்துதல் அல்லது முகம் சுளிக்கும் படியாக நடந்துக் கொள்ளுவது போன்ற காரணங்களால் காதல் முறிவு(breaking) ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தாடி பாலாஜிக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கோடையில் முடி கொட்டுவதை தடுக்கும் எளிய தெரபிகள்: வீட்டிலேயே செய்யலாம்!

மென்மையான பாதத்தை பெற வீட்டிலேயே இனி பெடிக்யூர் செய்யலாம்!

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Lifestyle