Lifestyle

சுத்தம் சுகம் தரும் : இந்தியாவின் மிகவும் தூய்மையான 8 நகரங்கள் இவைதான் !

Nithya Lakshmi  |  Sep 13, 2019
சுத்தம்  சுகம் தரும் : இந்தியாவின் மிகவும் தூய்மையான  8 நகரங்கள் இவைதான் !

தூய்மை என்பது ஆரோக்கியத்தின் முதல் விதி.

2014ல் ‘ஸ்வட்ச் பாரத் அபியன்’ என்ற தேசிய அமைப்பை இந்திய (india) அரசு துவங்கியது. இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் தூய்மையும்(clean) , நல்ல கட்டமைப்பையும் பராமரிக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. அதை அதிகாரிகளும் மக்களும் சேர்ந்து அவர்கள் இடத்தை சுத்தமாகவும், பசுமையாகவும் வைக்க முனைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் 2019ம் ஆண்டு, ‘ஸ்வச் சர்வேக்ஷன் சர்வே’ நடைபெற்றது. அதில் 4000 திற்கும் மேற்பட்ட நகரங்கள் பங்குகொண்டனர். அதில் தங்கள் நகரத்தை (city) தூய்மையாக வைத்து, வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றிய 8 முதன்மை நகரங்களை காணலாம்.

1. இண்டோர், மத்திய பிரதேஷ்

Pinterest

இண்டோர் அதிக மக்கள் வசிக்கும் நகரமாக இருந்தாலும், மக்கள் ஒத்துழைப்பால் முதன்மையான சுத்தமான நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. குப்பைகளை வீட்டிற்கு வீடு சென்று சேகரித்து, அதை தகுந்த முறையில் உரமாக மாற்றுகின்றனர். ஒவ்வொருவரும் அவர்கள் காரில் கூட குப்பைக் கூடை வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!!  சிறிய குழந்தைக்கும்கூட குப்பை கண்ட இடத்தில் வீசினால் என்ன தீங்கு வரும் என்று உணரச் செய்துள்ளனர்.

இண்டோரில்  பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள்:

பிரபலமான உணவுகள் : தயிர் வடை, போஹா ஜிலேப்பி(இனிப்பு, காரம் கலந்த முறுவலான ஒரு காலை சிற்றுண்டி), கட்டா சமோசா, மூங் பஜியா(பாசிப்பருப்பு போண்டா), மாவா பாட்டி(நம்ம ஊர் குலாப் ஜாமூன் தாங்க ஆனா நட்ஸ் எல்லாம் போட்டு வேறு லெவல் சுவையுடன்), கரடூ இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் இண்டோரில் கிடைக்கும் உணவுகளை.

2. நவி மும்பை, மகாராஷ்டிரா

Pinterest

நவி மும்பையும் ஒரு முக்கிய பொருளாதார நகரமாக வளர்ந்து கொண்டு வருகிறது. நவி மும்பையின் நகராட்சி தொடர்ந்து நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. மேலும், நகர மக்களையும் இந்த பணியில் ஈடுபடுத்தி உள்ளது. ஆங்காங்கே விளம்பர பலகைகளை வைத்து குப்பைகளை அகற்ற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

ஆகியவை நவி மும்பையின் சுற்றுலா தளங்கள். 

பிரபலமான உணவுகள்:   நவி மும்பையில் உங்களுக்கு அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும். கேரளா பவனில் வீட்டில் செய்யும் உணவு வகையை போன்று அருமையான கேரளா உணவு கிடைக்கும். பஞ்சாப்-சிந்த் மற்றும் வாரண டைரியில் உங்களுக்கு புதிய மலாய் பன்னீர் கிடைக்கும். பீஸ் ஓ கேக்கில் பிரமாதமான கேக் வகைகளும், பாஸ்டரிஸ், டெஸெர்ட்ஸ் போன்றவை கிடைக்கும். ஸ்ரீ வள்ளி’ஸ் கடையில் இட்லி வடை கிடைக்கும். இப்படி எல்லா மாநிலத்தின் உணவுகளும் இங்கு சிறப்பாக செய்து தருகின்றனர்.

3. மைசூரு, கர்நாடகா

Pinterest

மைசூரு என்று சொன்னாலே பாரம்பரியம்தான் நியாபகத்திற்கு வருகிறது. வீட்டிற்கு வீடு சென்று குப்பைகளை ஈரப்பதம் உள்ள குப்பைகள், வறண்ட குப்பைகள் என தனித்தனியே சேகரிக்கிறார்கள். அவற்றை நல்ல உரமாக்கி கார்ப்பரேஷன் விற்று நல்ல வருவாய் ஈட்டுகிறது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். இந்த வளர்ச்சிப் பணியினால் இந்த ஊருக்கு அதிகமான மக்கள் வர விரும்புகிறார்கள். 

பாரம்பரியம் மிக்க இந்த ஊரில் காணக்கூடிய இடங்களை பார்க்கலாம்.

பிரபலமான உணவுகள்: பேரிலேயே இருக்கும் மைசூர் போண்டா, மைசூர்பாக் மைசூரில் மட்டுமல்ல நம்ம ஊரிலும் பிரபலம் அல்லவா. புகழ் பெற்ற தென்னிந்திய உணவுகளான இட்லி, தோசை, மெதுவடை, ஊத்தப்பம், கேசரி, கராபாத்(கிச்சடி), போண்டா, பூரி, சவிகேபாத்(சேமியா உப்புமா) ஆகியவை தவிர பிசிபெல்லாபாத் எனப்படும் சாம்பார் சாதம் மிகவும் தனிச்சிறப்பு கொண்ட உணவு.

4. நியூ டெல்லி முனிசிபல் கவுன்சில் ஏரியா, நியூ டெல்லி

Pinterest

என்டிஎம்சி ஏரியாவில் வீட்டிற்கு வீடு சென்று குப்பைகளை வகைப்படுத்தி நிர்வகிக்கிறார்கள். வறண்ட குப்பைகளை ஒக்ஹ்லா எனர்ஜி பிளான்ட்க்கு அனுப்பப்படுகிறது. ஈரப்பதம் உள்ள குப்பைகள் உரமாக தயாராகிறது. தோட்டக்கலையில் இருந்து வரும் கழிவுகளை நிர்வகிக்க 100 உரம் தயாரிக்கும் குழிகளுக்கு மேல் இருக்கிறது. அரசு இருபது நிலத்தடியில் குழிகளை வெட்டி குப்பைகளை திறந்த வெளியில் கொட்டாமல் தடுக்கிறது. இந்த ஏரியாவில் குடியிருக்கும் மக்களும்கூட குப்பைகளை சரியாக பராமரிக்க ஈடுபடுகின்றனர். 

நியூ டெல்லியில் நீங்கள் பார்க்க கூடிய இடங்கள்.

பிரபலமான உணவுகள்:    பராத்தா, சேட், பட்டர் சிக்கன், கெபாப், சோலே பட்டுரெ, பிரியாணி, நிஹாரி, ரோல்ஸ், மோமோஸ், டெஸெர்ட்ஸ் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் டெல்லியின் சுவைகளை.

5. அம்பிகாபுரி, சட்டிஸ்கர்

Pinterest

இந்து கடவுளான அம்பிகாவின் பேரில் அமைந்த அம்பிகாபுரி, சர்குஜா மாவட்டத்தில் இருக்கும் ஒரு சின்ன நகரம். இந்த ஊரில் உள்ள முனிசிபல் குப்பைகளை திடக்கழிவு, நீர் கழிவு என பிரித்து கையாளுகிறார்கள். வறுமையில் உள்ள பெண்கள் முக்கியமாக இந்த வேலையில் ஈடுபட்டு மாதம் 5000ரூ சம்பாதிக்கிறார்கள். இந்த ஊரில் நீங்கள் குப்பை மலைகளை காண முடியாது. ‘ஜீரோ-வேஸ்ட் சிட்டி’ என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் இந்த நகர குப்பை பராமரிக்கும் முறையை நம் நாடு மட்டுமல்ல, உலகளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

சின்ன நகரமாக இருந்தாலும், இங்கும் பார்க்க சில அற்புதமான இடங்களை கீழே காணுங்கள்.

பிரபலமான உணவுகள் : முதியா(அரிசி மாவில் செய்து ஆவியில் வேகவைக்கும் பதார்த்தம்), சிலா(நம்ம ஊரு தோசை), பிஜியா(பஜ்ஜி), சாபுதனா(ஜவ்வரிசி கிச்சடி), பரா(வடை), ஃபரா(கொழுக்கட்டை), தில்குர்(பொறி உருண்டை போல எள்ளுருண்டை) ஆகியவை இந்த ஊரில் கிடைக்கும் சுவையான உணவுகள்.

6. அகமதாபாத், குஜராத்

Pinterest

அஹமதாபாத் ஒரு முக்கிய பொருளாதார மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கும் நகரம். நூறு சதவிகிதம் குப்பைகளை எல்லோரிடமும் இருந்து சேகரிப்பதால்   தூய்மையான நகரங்களின் பட்டியலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

அஹமதாபாத்தில் சுற்றிப்பார்க்க முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் இருக்கின்றது. 

பிரபலமான உணவுகள்:   டோக்ளா, குஜராத்தி சமோசா, காந்த்வி, உந்தியு(குஜராத்தி காய்கறி பொரியல்), ஆம் ஸ்ரீகாந்த்(குஜராத்தி டெஸெர்ட்), குஜராத்தி காதி, பர்டோலி கி கிச்சடி, மேத்தி கா தேப்லா ஆகிய வித்தியாசமான சுவை மிகுந்த உணவுகள் இங்கே பிரபலம்

7. திருப்பதி, ஆந்திர பிரதேஷ்

Pinterest

திருப்பதி மதிப்புமிக்க யாத்திரிகர்கள் வந்து செல்லும் இடம். திருப்பதி வெங்கடாசலபதி கடவுளை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் புண்ணிய தலம். இருப்பினும், தெரு வீதிகளிலோ, சுவற்றிலோ எந்த குப்பையும் இன்றி சுத்தமாக காட்சி அளிக்கிறது. பூங்கா, வெற்றிடம், நடைபாதை ஆகிய இடங்கள் கூட சுத்தமாக இருக்கிறது. 800க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள், வருவாய் பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அங்கு வாழும் மக்கள் என அனைவர்க்கும் சுகாதாரத்துறை சுத்தம் பற்றிய இயக்கங்களை நடத்தி தூய்மையை அறிவுறுத்துகிறது. 

 

திருப்பதி என்றாலே, பெருமாள் கோவிலில் தருகின்ற திருப்பதி லட்டு தான் நியாபகத்திற்கு வரும். ஆந்திர தாலி என்றால் முழு சாப்பாடு(அதில் சாப்பாடு, சாம்பார், கரி வகைகள், ஊறுகாய், குர்மா, கூட்டு). ஆந்திரா என்றால் மிர்ச்சி. மிர்ச்சி என்றால் காரம். கார சாரமாக சாப்பிட விரும்புபவர்கள் ஆந்திரா செல்லலாம்.

8. உஜ்ஜைன், மத்திய பிரதேஷ்

Pinterest

க்ஷிபிரா ஆற்றங்கரையோரம் அமையப்பெற்ற உஜ்ஜைனுக்கு நிறைய யாத்திரிகர்கள் வருகிறார்கள். உஜ்ஜைன் இந்தியாவின் சுத்தமான நகரத்தில் ஒன்றாக விளங்க நகராட்சி முழு முனைப்பாக ஈடுபட்டுள்ளது. இப்படியான சிறிய மாற்றங்களே ஆன்மீக, கலாச்சார மற்றும் மதம் சம்மந்தமான இடங்களை அழகாகவும், பாத்திரமாகவும் வைக்க உதவும். பல்வேறு சுத்தம் செய்யும் செயல்களை ஆற்றங்கரையோரங்களிலும் மேற்கொண்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு உஜ்ஜைன் முழுவதும் சுகாதாரத்தை பேணிக்காப்பதுடன், அனைத்து இடங்களுக்கும் குடிநீர் வசதியையும் ஏற்பாடு செய்து தருகிறது.

உஜ்ஜைனில் பார்க்க வேண்டிய இடங்கள்:

பிரபலமான உணவுகள்:   கத்தியா, காமன், ஆளூ கச்சோரி, தால் கச்சோரி, சபூதானா கிச்சடி, கதியா போன்ற வகை வகையான மாலை நேர ஸ்னாக்ஸ் உஜ்ஜைனில் கிடைக்கும். அசைவம் இல்லாத ஒரு நகரமாகவும் உஜ்ஜைன் விளங்குகிறது. 

 

மேலும் படிக்க – பயணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை எப்படி சரி செய்வது?

பட ஆதாரம் – Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Lifestyle