Fashion

தி நகர் ஷாப்பிங் ஏன் ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா !

Deepa Lakshmi  |  Apr 15, 2019
தி நகர் ஷாப்பிங் ஏன் ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா !

ஷாப்பிங் .. பெயரை கேட்டாலே பெண்களுக்கெல்லாம் சும்மா சிலிர்க்குதுல்ல ! ஆமாம் அதை பற்றித்தான் பேச போகிறோம். அதுவும் எல்லோருக்கும் பிடித்த தி நகர் ( Tnagar) ஷாப்பிங் பற்றித்தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். ஷாப்பிங் செய்ய தயாரா!

தியாகராய நகர் என்பதன் சுருக்கமான தி நகர் முதலில் ஒரு ஏரியாக இருந்திருக்கிறது. லாங் டேங்க் என அழைக்கப்பட்ட அந்த பகுதிதான் முதல் முதலில் சென்னையில் நகரமயமாக்கப்பட்ட முதல் பகுதி. ஆரம்ப காலத்தில் வெறும் மூன்றே மூன்று கடைகள்தான் இருந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா. நல்லி குப்புசாமி செட்டியாரின் அன்றும் இன்றும் புத்தகத்தில் இப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெள்ளிக்கிழமை ஆனாலே சாலை நெரிசல் அதிகமாகும் தி நகர் பகுதியில் ஞாயிறு இரவு வரைக்கும் நெரிசலாகவேதான் இருக்கும். ஒவ்வொரு வார இறுதியிலும் இத்தனை ஆயிரம் மக்கள் இங்கு ஏன் படையெடுக்க வேண்டும் என்கிற கேள்வி எல்லோருக்கும் வரும்.

அதற்கான காரணம் கையில் 1000 இருந்தாலும் கூட சந்தோஷமாக ஷாப்பிங் செய்ய கூடிய ஒரு இடம்தான் தி நகர். தி நகர் பஸ் ஸ்டேண்டில் இறங்கி நடப்பதில்தான் ஷாப்பிங்கின் முழு சுகம் ஆரம்பிக்கிறது. வரிசையாக உங்கள் தேவைகளுக்கான ஒவ்வொரு கடைகளையும் நீங்கள் வேடிக்கை பார்த்தபடியே தாண்டலாம்.

என்வரைக்கும் ஒரு சின்ன அட்வைஸ் என்னவென்றால் கிளம்பும்போதே நல்ல ஒரு எனர்ஜி ட்ரிங்க் குடித்து விட்டு கிளம்பினால் திரும்ப வரும் வரைக்கும் உங்கள் எனர்ஜி இறங்காமல் பார்த்து கொள்ளலாம்.

சின்ன சின்ன அலங்கார பொருள்கள் முதல் கட்டில் பீரோ ஏசி வரைக்கும் ஷாப்பிங் செய்பவர்களுக்கு எல்லாமே கிடைக்கிறது. மால்களில் நம்மால் அதன் விலையை இரண்டாவது முறை கூட கேட்க முடியாது. கேட்டோமானால் ஸ்டைலாக இருக்கும் விற்பனை பிரதிநிதியின் முகசுளிப்பு நம்மை ஏதோ செய்யும்.

அதே சமயம் மால்களில் கிடைக்கின்ற அதே பொருள்களை அதை போலவே உள்ள பொருள்களை அற்புதமாக விலை பேசி வாங்க முடியும். நாம் கேட்கிற விலைக்கு பொருள்கள் கிடைக்கும்போது ஏற்படுகிற சந்தோஷம் சொல்லில் அடங்காத சுகம்.

பெண்களுக்கான த்ரீ போர்த் ரகங்கள், டி ஷர்ட்கள், நைட்டிக்களை நம்ப முடியாத விலையில் நீங்க வாங்க முடியும். நிச்சயமாக நன்றாகவும் உழைக்க கூடியதுதான். 250 ரூபாய்க்கு இரவில் உறங்கும் உடைகள் வாங்கும் போது அவை ஒரு வருடம் வரை உழைக்கின்றன. அதைப்போலவேதான் மற்ற உடைகளும்.

ஷாப்பிங் செய்வது பெரும்பாலும் வெளிச்சத்தில் செய்தால் வாங்கும் பொருளின் நிறம் மற்றும் தரம் நமக்கு தெளிவாக தெரியும். இரவு விளக்கொளியில் நம்மால் சில நெசவு தவறுகளை காண முடியாது. வீட்டுக்கு வந்த பின்னர் திரும்ப தரவும் முடியாது.

விதம் விதமான செருப்புகள், தோடுகள், வளையல்கள், கழுத்து நகைகள் , ஸ்டிக்கர் பொட்டுக்கள் என பார்க்கும்போதே பரவசப்படுத்தும் தி நகரில் ரங்கநாதன் தெரு மட்டுமல்ல அதற்கருகே இருக்கும் வீதிகளிலும் விற்பனை அற்புதமாக இருக்கும்.

இது தவிர வீட்டு உபயோக பொருள்கள், தலையணை உறைகள், மிதியடிகள், திரைசீலைகள் என பல அத்யாவசியப்பொருள்கள் நம்ப முடியாத விலையில் உங்களால் வாங்க முடியும். பாதிக்கு பாதி குறைவான விலையில் ஒரு பொருளை வாங்கினால் அதன் திருப்தியே வேறுதான் இல்லையா.

சின்ன சின்ன கடைகளை கடந்து கடந்து நடந்து நடந்து அலுத்து போயிருந்தால் சாப்பிட சுவையான நொறுக்கு தீனிகள், பானி பூரி, ஸ்வீட் கார்ன்களின் வாசம் நம் மூக்கை துளைக்கும். அப்படியே வாங்கி சாப்பிட்டு கொண்டே அற்புதமாக சுற்றி வரலாம். மால்களில் இதற்கான சுதந்திரம் நமக்கு இல்லை.. அங்கு உள்ளே வரும் எல்லோருமே ஏதோ ப்ரோக்ராம் செய்யப்பட்ட ரோபோட்களை போல இறுக்கமான முகத்துடன் நேர்த்தியாக நடந்து கொள்வார்கள்.

ஆனால் தி நகரில் விஷயமே வேறு. எங்கு பார்த்தாலும் சந்தோஷமான முகங்கள், புன்னகைகள், உறவுகளை பாதுகாக்கும் அக்கறைகள், உறவுகளுக்குள் கிண்டல் கேலி பேச்சுக்கள் என ஷாப்பிங்கின் சந்தோஷத்தை பலமடங்காக்கி விடும்.

இது தவிர கடைக்காரர் அல்லது கடைக்காரம்மா நம்மை கனிவுடன் அணுகுவார்கள். நமக்கேற்ற பொருள்களை தேர்ந்தெடுப்பார்கள். அக்கறையோடு விசாரித்து விற்பனை நடக்கும். இது எல்லாம் மால்களில் கிடைக்காதது.

பூக்கள் பழங்கள் என தி நகர் அத்தனை அழகாக ஜொலிக்கும். ரங்கநாதன் தெருவிற்கு மட்டும் செல்லாமல் , வடக்கு உஸ்மான் வீதியில் இருந்து பாலத்திற்கு கீழே நடந்து ஷாப்பிங் செய்கையில் பல பொருள்களை உங்களால் வாங்க முடியும். விலையும் மலிவாக இருக்கும்.

அங்கு என்ன வாங்கினாலும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். நீங்கள் அதனை தூசி போக துடைத்து பின்னர் பயன்படுத்துங்கள். கழுவும் துவைக்கும் வகை பொருள்கள் என்றால் துவைத்து பயன்படுத்துங்கள். மலிவாக வாங்கும் உடைகளை ஒருமுறை இரண்டாவது தையல் போட்டு பயன்படுத்தினால் நீண்ட காலம் உழைக்கும்.

இது தவிர உங்கள் விருப்பத்திற்கேற்ப பொருத்தமாக ஜாக்கெட் சுடிதார் போன்றவைகளை தைத்தும் கொடுக்கிறார்கள். அதுவும் வெளியில் எங்கும் இல்லாத விலைக்கு தைக்கிறார்கள். நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள். பெரிய பெரிய கடைகளுக்கே செல்வதை விட இப்படி ஒரு நாள் ஷாப்பிங் செய்யுங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். உங்கள் பொழுதுபோக்கு இடமாக தி நகர் இடமும் மாறும்.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்

உங்கள் லேட் நைட் பசியை போக்க சென்னையில் 6 சிறந்த உணவகங்கள்

உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சில முக அழகு சீரம் மற்றும் க்ரீம்கள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Fashion