Health

உங்களின் மன அழுத்தத்தை போக்க இதை பார்த்து மகிழுங்கள் !

Nithya Lakshmi  |  Jan 4, 2019
உங்களின்  மன அழுத்தத்தை போக்க இதை  பார்த்து மகிழுங்கள் !

சீரியல்கள் மக்களுக்கு சலிக்காத ஒன்று.அதுலயும் ரமணி vs ரமணி மாதிரி நகைச்சுவை மிக்க தொடர்களாக இருந்தால் நேரம் தவறாமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் முக்கியமாக ரிமோட்காக சன்டையிடாமல் ஒற்றுமையாக பார்க்கும் ஒரு தொடராக இருந்தது..

‘ரமணி விசஸ் ரமணி’ ஒரு கமெடி தொடர்!!

பார்வையாளர்கள் வயிறு குலுங்க சிரித்து கண்ணில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் அளவிற்கு ஒரு சூப்பரான நகைச்சுவை தொடராகும்.. இதில் பல்வேறு முன்னனி கதாபாத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

சீரியல் பலதாக இருந்தாலும் இன்றைக்கும் இதை நீங்கள்  இஷ்டம்போல்  யு டியூபில் (youtube) பார்க்கலாம், சிரிக்கலாம் !!

திரு. மற்றும் திருமதி. ரமணி அவர்கள் தான் ஹிரோ ஹிரோயின் அவர்கள் குடும்பத்தினர் சேர்ந்துதான் இந்த கதை.  திரு. மற்றும் திருமதி. ரமணி என்பவர்கள் வெகுளியான ஒருவரை ஒருவர் நகைச்சுவை உணர்வில் கலாய்த்து கொண்டு எதைப்பற்றியும்  கவலைப்படாத ஒரு தம்பதிகள்.இந்த தம்பதிக்கு அழகான முக்கியமாக அறிவான ரம்யா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது.தன் பெற்றோர்களின் சிறு பிள்ளைதனமான சன்டைகளை தீர்த்து வைக்கும் குடும்பத்தில் உள்ள  ஒரே புத்திசாலி ரம்யா தான்!

கதைப்படி தேவதர்ஷினி மற்றும் ராம்ஜி திருமணமாகி பள்ளிக்கு செல்லும் ஒரு பெண் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் குடும்பம்… அதை பார்க்கும் போதே நம் அன்றாட வாழ்வில் பார்க்கும் கேட்கும் விஷயங்களை சந்தர்ப்ப சூழ்நிலையை நகைச்சுவை உணர்வோடு எடுத்துக் காட்டுகிறது…

குழுவினர் மற்றும் கதாபாத்திரங்கள் –

ரமணி vs ரமணி சீரியலை நினைக்கும் போது முதலில் நினைவிற்கு வருவது  கேரக்டர்ஸ் தான். அத பார்க்கும் போது எல்லாருடைய வீட்டிலும் இது போன்ற ஒவ்வாரு கேரக்டர் இருக்கும் என்று தோன்றும்!

திரு.ரமணி ஆக நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராம்ஜி (Ramji) நடித்துள்ளார்.. இவர் காதல் கோட்டை’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…’ பாடல் அப்போது பட்டி தொட்டியெங்கும் ஹிட். அந்தப் பாடலுக்கு நடனமாடிய பின் பிரபலம் அடைந்தார் நடிகர் ராம்ஜி . பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தவர், திடீரென சீரியல் பக்கம் ஒதுங்கினார். ஜெயா, கலைஞர், சன் என பல தொலைக்காட்சித் தொடர்களில் தலை காட்டியவர். ரமணி விசஸ் ரமணி (Ramany Vs Ramany)  இவருக்கு ஒரு பெரிய பிளாட்பாரமாக அமைந்தது.

திருமதி. ரமணியாக  தேவதர்ஷினி (Devadarshini)  நடித்துள்ளார். தேவதர்சினி, ஒர் இந்தியத் தமிழ்த் திரைத்துறை நடிகையாவார். இவர் பார்த்திபன் கனவு,காக்க காக்க என்னும் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தொலைக்காட்சித் தொடர்களின் வழியாக பரவலாக அறியப்படுகிறார்.. மேலும் இவர் மர்மதேசம்,சிதம்பர ரகசியம், அண்ணாமலை,கோலங்கள், சின்னப் பாப்பா பெரியப் பாப்பா என்று அடுக்கடுக்காக பல தொடர்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவையாக நடிப்பதில் பெயர் பெற்றவர் ‘ரமணி விசஸ் ரமணி’ சீரியல் இவருக்கு மேலும் புகழைப்பெற்று தந்தது..

   மேலும் ஒரு வரலாற்று கதையை சார்ந்த தொலைக்காட்சி தொடரிற்கு –இதை பார்க்கவும் 

எழுத்து மற்றும் இயக்கம் நாகா, தயாரிப்பாளர் கீதா கைலாசம், மேலும் பல நடிகர்கள் ராமன்,சீனிவாசன், ஷோபனா, பேபி.ரன்ஜிதா இன் நகைச்சுவை தொடரில் நடித்துள்ளார்கள்.

தேவதர்ஷினி மற்றும் ராம்ஜியின் ஜோடி தான் இந் இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.முதல் பாகத்தை விட பல மடங்கு பெயரையும்  புகழையும் பெற்றது.. அதற்கு காரணம் ‘ரமணி vs ரமணி பாகம் 2’ ன் அனைத்து குழுவினர் தான்..

என்ன ஒரு நடிப்பு!!!!

கதையை எழுதியவருக்கு நகைச்சுவை (comedy) உணர்வு அதிகமாக இருந்ததால் மட்டுமே இக்கதை சூப்பர் ஹிட்டானது..

கதையின் தனித்தன்மை –

தேவதர்ஷினியின் நடிப்பை பாராட்டத்தக்கது ..ராம்ஜி, ரமணி என்னும் கதாபாத்திரத்தில் சூப்பராக  நடித்திருக்கிறார். இக்கதையில் வரும் ஒவ்வாரு காட்சியும் நம் நிஜ வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தங்கள் தான். ஒரு ஹவுஸ் வைப் என்கின்ற குடும்பத் தலைவி எப்படி தினம் தினம் பிரச்சினைகளை சம்மாளிக்கிறாள்  உதாரணமாக சேல்ஸ் மேன்களுக்கு பதில் கூறுவது காய்கறி காரன், கீரை விற்பவள் ,பால் காரன் என அத்தனை பேரையும் சமாளிப்பது இதை அத்தனையும் தாண்டி தான் கஷ்டப்பட்டு சமைத்த சாப்பாட்டை பற்றி கனவனின் குறைகளைக் கேட்டு சகித்து கொள்வது. பண்டிகை காலங்களில் நடக்கும் விஷயங்கள் என அனைத்துமே சிந்திக்க வேண்டிய விஷயம் அதையே நகைச்சுவையுடன் எடுத்திருக்கிறார் இயக்குனர்..

சிறந்த படைப்புகள், என்றுமே வெற்றி பெரும் என்பதற்கு இந்த நாடகம் இன்று யூ டியூப்ல ட்ரெண்டிங் லிஸ்ட்ல இருக்க முக்கிய காரணம்.

லாஸ்ட் தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கு இந்த சீரியலில் (series)  பலகாரம் செய்யும் வீடியோ செம ட்ரெண்டிங்ல இருந்ததே இதற்க்கு சாட்சி.

உங்கள் மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்து ….

பார்த்து மகிழுங்கள்!

படங்களின் ஆதாரங்கள் –  youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Health