Celebrity Life
தர்ஷன் காதலி சனம் ஷெட்டி மருத்துவமனையில் அனுமதி.. தற்போதைய நிலை குறித்த முக்கிய தகவல்!

அம்புலி’, ‘கதம் கதம்’, ‘சவாரி’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் சனம் ஷெட்டி. இவர் தற்போது தமிழ் பிக்பாஸ் சீசன் 3யின் பிரபல போட்டியாளரான தர்ஷனின் காதலியாக அறியப்படுகிறார். சனம் ஷெட்டி (sanam shetty) தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் பெரிய வைரலாகி உள்ளது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் தர்ஷன். இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
தர்ஷனுக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ச்சியாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வந்தார். தர்ஷன் மற்றும் சனம் (sanam shetty) காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், தர்ஷன் உடன் இனி தனக்கு தொடர்பு இல்லை, அவரை நான் பிரிகிறேன் என்று சனம் ஷெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை ஷேர் செய்து இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முக்கிய காரணம் இது தான் … தர்ஷனின் முதல் பதிவு!
அவரின் இந்த பதிவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் தர்ஷன் பிறந்தநாளின் போது குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் காதலில் சில பிரச்சனைகள் நிலவி வந்தது. இதனிடையே கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டார்.
தர்ஷன் வெளியே வந்ததும் அவரை நேரில் சந்தித்த சனம், இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”இது வருத்தமான நிகழ்வு. பிக் பாஸ் தர்ஷன் விவகாரத்தில் மிகவும் பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளார். தர்ஷன் வின்னராக வெளியே வரவேண்டியர், இது சரியில்லை பிக் பாஸ் என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் இவர்கள் காதலித்து வந்தது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு டியூமர் இருப்பது குறித்து சிலமாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது சர்ஜரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன்.
நான் செய்யும் அறிவுரை என்னவென்றால் உங்கள் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை சம்பந்தபட்ட விஷயங்களை அலட்சியப்படுத்தாதீர்கள். எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே என்று பதிவிட்டு இருந்தார். என்ன நடந்தாலும் என் பக்கம் இருக்கும் நிற்கும் என் அம்மாவுக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார்.
ரூ.5 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கவின் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அந்த புகைப்படத்தில் அவருக்கு அருகில் அவரது அம்மாவும் இருந்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு பலரும் விரைவில் குணமாகிவிடுவீர்கள் என பதிலளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் நலமுடன் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
இந்த செய்தி உங்களுக்கு மகிச்சியை தரும். அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது. இன்னும் இரு நாட்களில் நான் மீண்டும் சரி ஆகிவிடுவேன். உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. இது எனக்கு மிகப்பெரிய விஷயம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு. என்னுடைய மருத்துவர்களுக்கு நன்றி என்று சனம் ஷெட்டி (sanam shetty) தெரிவித்துள்ளார்.
பணத்திற்காக பிக்பாஸ் செல்லவில்லை… வெளியேறிய காரணம் குறித்தும் உருக்கமாக பேசிய கவின்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Celebrity Life
மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!
Swathi Subramanian
தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்….. ரசிகர்கள் அதிர்ச்சி!
Swathi Subramanian
25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!
Swathi Subramanian
நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!
Swathi Subramanian