Lifestyle

கலைநய டெம்பிள் ஜுவல்லரிகள் : மணப்பெண்களுக்கு அழகிய டிசைன்ஸ்! (Jewellery Design For Bride)

Swathi Subramanian  |  Sep 18, 2019
கலைநய டெம்பிள் ஜுவல்லரிகள் : மணப்பெண்களுக்கு அழகிய டிசைன்ஸ்! (Jewellery Design For Bride)

இன்றைய நவீன காலத்தில் பெண்கள் விரும்பி அணியும் நகைகள் பட்டியலில் முதலிடம் டெம்பிள் ஜுவல்லரிகளுக்கே. தங்கம் அல்லாத கவரிங் நகைகளில் தொடங்கி, தரமான தங்கம் வரை எல்லாவற்றிலும் டெம்பிள் ஜுவல்லரி கிடைக்கின்றன. அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். ஜிமிக்கி, ஒட்டியாணம், கழுத்துக்கான நெக்லஸ் என எல்லாம் இதில் கிடைக்கும். 

அம்மன் போன்ற வடிவங்களில் முத்துக்கள், கற்கள், மணிகள் சேர்த்தது பல்வேறு டிசைன்கள்களில் டெம்பிள் ஜுவல்லரிகள் தற்போது விற்பனையில் உள்ளன. டெம்பிள் ஜுவல்லரி மணப்பெண்களுக்கு ட்ரெண்டிங் மற்றும் பாரம்பரிய அமைப்பை கொடுக்கிறது.

டெம்பிள் ஜுவல்லரியின் வகைகள் (Types Of Temple Jewellery)

டெம்பிள் ஜுவல்லரிகள் (temple jewellery) பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன.  ஒவ்வொரு வகை நகையும் வித்தியாசமான லுக்கை தருகின்றன. என்னென்ன வகைகள் உள்ளன என இங்கே காண்போம். 

மணப்பள்ளி டெம்பிள் ஜுவல்லரி (Manappally Temple Jewell;ery)

மணப்பள்ளி நகைகள் தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப டெம்பில் ஜுவல்லரிகளில் கிடைக்கிறது. இந்த நகைகளில் அம்மன் உருவங்கள் டாலரில் வரும். அதில் பளபளப்பான கற்கள் மற்றும் மணிகள் பொருத்தி பாரம்பரிய நகைகளாக காட்சியளிக்கிறது. இன்றைய இளம் பெண்கள் விரும்பும் நகையாக இந்த நகைகள் உள்ளன. பல்வேறு டிசைன்களில் மணப்பள்ளி டெம்பிள் ஜுவல்லரி சந்தையில் உள்ளன. தங்கம் மட்டுமின்றி தற்போது வெள்ளி மற்றும் வைர நகைகளிலும் கிடைக்கின்றன.

twitter

கலாஷா நகைகள் (Galasha Jewellery)

கலாஷா நகைகள் சிறிய காசு மணிகளை ஒன்றாக பொருத்தி வடிவமைக்கப்படும் டிசைனாகும். இந்த காசு மணிகளில் மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அம்மன், விநாயர் போன்ற கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இவை நெக்லஸ் மற்றும் ஆரம் வடிவங்களில் கிடைக்கின்றன. அதற்கு பொருத்தமான காதணிகளும் உள்ளதால் மேட்ச்சாக அணிந்து கொள்ள சரியான தேர்வாக இந்த நகைகள் இருக்கும். 

மேலும் படிக்க – அழகை அதிகரிக்கும் ஆலோவீராவின் அற்புதங்கள் ! பட்ஜெட் விலையில் உங்கள் அழகை மேம்படுத்தலாம் !

twitter

தங்க பந்துகள் டெம்பிள் ஜுவல்லரி (Gold Balls Temple Jewellery)

இந்த வகை நகைகள் வழக்கமான நகைகள் போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் டாலர் பகுதி அல்லது நகை முழுவதும் நுனிப்பகுதியில் தங்க பந்துகளை சேர்த்திருப்பார்கள். இந்த தங்க நக்ஷி பந்துகள் உருண்டை வடிவிலும், நீளவாக்கிலும் இருக்கும். இந்த பந்துகள் நகைக்கு புதிய லுக்கை தருகிறது. நமது அசைவிற்கு என்ற இந்த பந்துகள் ஆடும் போது அழகாக இருக்கும்.

twitter

கிருஷ்ணா முத்துக்கள் & கற்கள் நகைகள் (Krishna Pearls & Gem Jewellery)

கிருஷ்ணா முத்துக்கள் & கற்கள் நகைகளில் கிருஷ்ணன் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கும். தென் கடல் முத்து மற்றும் ரூபி கற்கள், அக்வா டயமண்ட்ஸ் உள்ளிட்டவற்றை இணைத்து இந்த நகைகள் செய்திருப்பார்கள். இந்த நகைகளிலும் நெக்லஸ், லேயர் ஜெயின்கள் கிடைக்கும். முழு மணப்பெண் நகை செட்டும் முத்துக்கள் & கற்கள்களால் வடிமைத்திருப்பர். இது பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

twitter

குந்தன் டெம்பிள் ஜுவல்லரி (Kundan Temple Jewellery)

குந்தன் நகைகளில் கண்ணாடி கற்கள், சாதா கற்கள் மற்றும் செயற்கை கற்கள் பல பயன்படுத்தப்படுகிறது. தங்கம் போன்ற பல உலோகங்களில் குந்தன் நகை உருவானாலும் அதில் பதியப்படும் கற்களின் மதிப்பே அதிகமாக இருக்கும். 22 காரட் தங்கத்தில் குந்தன் நகைகள் வடிவமைத்து அதில், கோயில் ஆரம் வடிவமைப்புகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாணிக்கங்கள், மரகதம், வெட்டப்படாத வைரங்கள் மற்றும் முத்துக்கள் இந்த நகைகளை அலங்கரிக்கின்றன.

twitter

ஆண்டிக் டெம்பிள் ஜுவல்லரி (Antique Temple Jewellery)

ஆண்டிக் நகைகள் பெரிய பிரம்மாண்ட தோற்றத்துடன் காணப்படும் நகையாகும். அதன் வடிவங்கள் சிற்ப வேலைப்பாடு பழமையின் பிரதான சின்னங்களுடன் கூடுதல் உழைப்புடன் காணப்படுபவை. ஆன்டிக் நகைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷ நகையாக உள்ளன. தற்போது ஆண்டிக் நகைகளிலும் டெம்பிள் ஜுவல்லரிகள் (temple jewellery) கிடைக்கின்றன.

twitter

லட்சுமி மாம்பழ வடிவ நகைகள் (Lakshmi Mango Shaped Jewellery)

லட்சுமி மாம்பழ வடிவ நகைகளில் சிறு சிறு தங்க மாங்காய்கள் கோர்த்து விடப்பட்ட நெக்லஸ் மற்றும் ஆரம் அமைப்பு. இதில் புதுமை என்ன வென்றால் மாங்காய் மேல் அழகிய வலைபின்னல் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் கயிற்று பகுதியில் சிறு மணி செதுக்கல்களும் செய்யப்பட்டுள்ளன. மெல்லிய அமைப்பில் அதி அற்புதமான வேலைப்பாட்டுடன் டிசைனர் மாங்காய்  டெம்பிள் ஜுவல்லரி காட்சி தருகின்றது.

மேலும் படிக்க – கட்டுக்கடங்காத வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் ஹேர் ஸ்ப்ரே, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

twitter

பாரம்பரிய மயில் டெம்பிள் ஜுவல்லரி (Traditional Peacock Temple Jewellery)

பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. மயில்கள் இருபுறமும் வரிசை கிரமமாய் தோகை விரித்தப்படி அணிவகுக்க அதன் இரு பெரிய மயில்கள் தொங்குவது போன்ற டெம்பிள் ஜுவல்லரி தற்போது அதிகமாக பெண்களை கவர்கிறது.  இந்த நகைகள் பெண்களின் கழுத்திற்கு மயில் தோரணமாய் அலங்கரிக்கின்றன.

twitter

டெம்பிள் ஜுவல்லரி மணப்பெண் டிசைன்ஸ் (Temple Jewellery Pieces For Bride)

இன்றைய நவீன காலத்தில் அனைத்து பெண்களும் டெம்பிள் ஜுவல்லரிகளை (temple jewellery)  தான் விரும்புகின்றனர். அதற்கேற்ப பல்வேறு டிசைன்களில் டெம்பிள் ஜுவல்லரி சீட்டுகளை கிடைக்கின்றன. மணப்பெண்களுக்கு தேவையான மோதிரம், ஆரம், நெக்லஸ், கம்மல், மாட்டல்கள் மற்றும் வளையங்கள் என அணைத்து பொருட்களும் டெம்பிள் ஜுவல்லரிகளில் அழகிய வேலைப்பாடுகளுடன் கிடைக்கின்றன. அவை குறித்து இங்கே விரிவாக பாப்போம்.

நெக்லஸ் (Necklaces)

நெக்லஸ் மணப்பெண்களுக்கு ராயல் லுக் தருகிறது. மூன்று வெவ்வேறு அளவுகளில் நெக்லஸ் அணிவதை தற்போதைய பெண்கள் விரும்புவதில்லை அதற்கு பதிலாக ஒரே அணிகலனில் பல்வேறு லேயர்கள் கொண்ட மல்டி லேயர் நெக்லஸ்களையே பெண்கள் விரும்புகின்றனர். அவரவர் விருப்பத்திற்கேற்ப சிறய, பெரிய மற்றும் நடுத்தர அளவுகளில் வாங்கி அணிகின்றனர். இந்த நகைகளில் நடுவில் சாமி சிலைகளின் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

twitter

சிம்பிள் டிசைன்

இந்த வகை நகைகள் மிகவும் சிம்பிளாக இருக்கும். ஆனால் அணிந்திருக்கும் போது அழகாக இருக்கும். அழகிய வேலைப்பாடுகளுடன் தங்க மணிகளும் தொங்க விடப்பட்டிருக்கும்.

twitter

காசுமாலை நெக்லஸ்

காசுமாலை நெக்லஸ் டிசைனின் சின்னஞ்சிறு காசுமாலைகளை இணைத்து வடிவமைத்திருப்பர். இந்த காசுமாலையில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அம்மன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

twitter

மயில் நெக்லஸ்

மயில் நெக்லசில் டாலரை சுற்றி மயில்கள் இருக்கும். சில நெக்லஸ் முழுவதும் மயில் வரும்படியும் வடிவமைக்கப்படுகிறது. நெக்லஸ் நடுவில் அழகிய அம்மன் உருவமும் அதனை சுற்றி மயில் இருக்கும்.

twitter

காதணிகள் (Earing)

தற்போது இளம்பெண்கள் அணிகின்ற ஜிமிக்கி நகைகள் விதவிதமான டிசைன்களில் அணிவகுக்கின்றன. பாரம்பரிய கோயில் சின்னங்கள் கலை நேர்த்தியுடன் செதுக்கப்பட்ட ஜிமிக்கிகள் வருகின்றன. இவை பாரம்பரியமும், கலாசார பின்னணி கொண்ட பொக்கிஷங்களாக உள்ளன. இதில் மகாலட்சுமி, யாளி, அன்னபட்சி, யானையுடன் மகாலட்சுமி, மயில் போன்றவை அழகுடன் செதுக்கப்பட்டுள்ளது. சில அன்ன பட்சிகள் தத்ரூபமாக தங்கத்தில் உருப்பெற்றும் உள்ளன.

twitter

அடுக்கு ஜிமிக்கி 

ஜிமிக்கி எனும்போது ஒரு கூடை அமைப்பு தொங்க விடப்படும். தற்போது அடுக்குகள் கொண் கூடை அமைப்பில் இரண்டு, மூன்று, நான்கு என கீழிறங்க இறங்க கூடை அமைப்பு சிறியதாக மாறி அதற்கும் கீழ் சிற மணி உருளை நடனமாடும்.

twitter

சிம்பிள் கம்மல் 

இந்த வகை கம்மல்களில் சிறிதாக சாமி உருவங்கள் பொறிக்கபட்டிருக்கும். அதில்கோயில் மணிகள் அமைப்பில் அடுக்கடுக்காய் மணிகள் தொங்க விடப்பட்டும். நடுவில் பந்து மணி உருளைகள் ஆடும் அமைப்பில் தொங்க விடப்பட்டிருக்கும்.

twitter

வளையம் கம்மல்

இவை சற்று வித்தியாசமான அமைப்பில் உருவாகின்றன. காதுடன் பொருந்தும் மேல் பகுதி பழங்கால தங்க நாணய முத்திரை போன்று அச்சு அமைப்பில் அன்னம், மயில் உருவம் பதித்ததாய் இருக்கும். அதன் கீழ் வண்ண மணிகள் ஓரப்பகுதி முழுவதும் தொங்க விடப்படும். இது நவீனம் புகுத்தப்பட்ட பழங்கால வளையம் வடிவமைப்பு.

twitter

ஒட்டியாணம் (Kamarbandh)

பெண்களின் மெல்லிய இடுப்பிற்கு ஆதாரமாக அணியக்கூடிய நகைதான் ஒட்டியாணம். தங்க ஒட்டியாணங்கள் அனைத்து வயது பெண்களுக்கு ஏற்றவாறு எடை, நீள அகலம் கொண்டவாறு உருவாக்கப்படுகிறது.  பெண்களின் மெல்லிய இடுப்பிற்கு ஆதாரமாக அணியக்கூடிய ஒட்டியாணம், இடுப்போடு ஒட்டி கொண்டிருக்கும் வகையில் அணியும் ஆடையின் மேல் அணிகின்ற நகையாகும். 

twitter

அஷ்டலட்சுமி ஒட்டியாணங்கள்

அஷ்டலட்சுமி ஒட்டியாணங்கள் என்பவை ஒவ்வொரு லட்சுமி உருவங்கள் இணைந்தவாறு உள்ளன. அதாவது ஆறு இதழ் பூ அமைப்புடன் கூடிய தட்டு பகுதியின் நடுவில் மகாலட்சுமியும் இதன் வலது புறம், இடது புறமாக மற்ற லட்சுமிகளும் வரிசை கிரமமாக ஒரே அளவில் இணைக்கப்படும்.  இந்த ஒட்டியாணம் மணப்பெண்களுக்கு கூடுதல் அழகை கொடுக்கும். 

twitter

அன்னபட்சி ஒட்டியாணங்கள்

ஒட்டியாணத்தின் நடுப்புறம் பெரிய மகாலட்சுமி இரு பக்கமும் அன்னபட்சியுடன் காட்சி தருகிறார். அன்னபட்சிகள் அழகுடன் சிற்பங்களாய் அணிவகுக்கின்றன. டெம்பிள் ஜுவல்லரி அமைப்பில் உருவாகும் இந்த ஒட்டியாணம் அனைத்து பெண்களுக்கும் பொருந்தும். 

twitter

கற்கள் பதித்த ஒட்டியாணங்கள்

முற்றிலும் கற்கள் பதித்த ஒட்டியாணங்கள் மெல்லிய அமைப்பில் உருவாக்கப்படுகின்றன. இதில், பூக்கள், மயில், அன்னபட்சி அழகுடன் உள்ளவாறும் அதில் பல வண்ண கற்கள் பதித்து மெருகேற்றப்பட்டுள்ளன. மணப்பெண்களுக்கு ராயல் லுக்கை இந்த ஒட்டியாணங்கள் கொடுக்கும். 

twitter

வளையல்கள் (Bangles)

விருப்பமும், ஆர்வமும் நிறைந்த நகையாய் தற்போது பெண்களை கவரும் விதத்தில் ஒற்றை பெரிய வளையல்கள் உலா வருகின்றன. டெம்பிள் ஜிவல்லரி என்ற இறைஉருவம் பொறித்த மற்றும் கோயில் சின்னங்கள் நகை வடிவமைப்பிலும் பெரிய வளையல்கள் வருகின்றன. கையில் இறுக பிடிக்கும் அமைப்பில் மஹாலட்சுமி, அஷ்டலட்சுமி, பாரம்பரிய பூவேலைப்பாடு, சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

twitter

பூட்டு வளையல்கள்

இவ்வளையல்கள் அணியும் வகையிலும், மாட்டும் வகையிலும் உருவாக்கி தரப்படுகின்றன. கொலுசின் திருகாணி போல இப்போது வளையங்களிலும் வருகிறது. திருகாணியின் இருபுறமும் சாமி உருவங்கள் அழகாக பொறிக்கப்பட்டிருக்கும்.

twitter

பேன்சி வளையல்கள்

இந்த வகை வளையல்களே பெரும்பாலும் மணப்பெண்களில் தேர்வாக இருக்கிறது. வளையல் முழுவதும் அம்மன் அல்லது விநாயகர் போன்ற கடவுள்களின் உருவங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

twitter

காசு வளையல்கள்

காசு வளையல்களில் காசு மாலைகளில் இருக்கும் சிறிய காசுகள் சுற்றி இணைத்து கற்கள் மற்றும் மணிகளால் வடிவமைத்திருப்பர். இந்த வளையங்கள் பூட்டு மாடல்களிலும் கிடைக்கும். தற்போதைய ட்ரெண்டிங்கில் இந்த வளையங்கள் உள்ளன.

twitter

நெற்றி சுட்டி (Mathapatti)

நெற்றியில் திலகத்துக்கு மேல் திலகம் வைத்தது போல அமர்க்களமாக தொங்கும் சுட்டி நகை தான் நெற்றி சுட்டி. தற்போது டெம்பிள் ஜுவல்லரிகளில் எண்ணற்ற வடிவங்களில் நெற்றி சுட்டிகள் கிடைக்கின்றன. மணப்பெண்களுக்கு ஏற்ற தற்போதைய ட்ரெண்டிங்கிலும் சுட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சாமியின் உருவங்கள் வடிவமைக்கப்பட்ட நெற்றி சுட்டிகள் மணப்பெண்களில் முகத்துக்கு பிரத்யேக அழகைத் தந்துவிடும்.

twitter

பேன்சி நெற்றி சுட்டி

இந்த வகை மெட்ரி சுட்டிகள் மணப்பெண்களுக்கு சிம்பிள் மற்றும் அழகான வெளிப்பட்டை தரும். நெற்றி சுட்டியின் நடுப்பகுதியில் சிரிய அம்மன் உருவமும், லட்சுமி உருவத்தின் கீழ் தொங்கும் மெல்லிய வண்ண மணி வேலைப்பாடுகளும் பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

twitter

பீட்ஸ் நெற்றி சுட்டி

தற்போது பீட்ஸ் நெற்றி சுட்டிகளை தான் அதிகளவிலான பெண்கள் விரும்புகின்றனர். நெற்றி சுட்டியுடன் இருபுறமும் அழகான பீட்ஸ்களால் இணைக்கப்பட்டிருக்கும். பெரிய நெற்றி இருப்பவர்களுக்கு இந்த வகை பொருத்தமாக இருக்கும்.

 

twitter

பாரம்பரிய நெற்றி சுட்டி

இந்த வகை நெற்றிசுட்டிகள் பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்தியிருப்பர். பாரம்பரிய ஒற்றை நேற்று சுட்டியானது டெம்பிள் ஜுவல்லரிகளில் தற்போது கிடைக்கிறது. ஒற்றை அம்மன் உருவம் பொறிக்கப்பட்டு அதில் மணிகள் இணைத்து வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

twitter

ஜடை (Jadas)

இன்றைய நவீன காலத்தில் தலைமுடியில் பின்னப்பட்ட ஜடையின் மேற்புறம் தங்கத்தில் செய்யப்பட்ட ஜடை அமைப்பு அலங்காரத்திற்கு என அணியப்படுகிறது. மேல் முதல் கீழ் வரிசையில் அம்மன் உருவங்கள் பொறித்து டெம்பிள் ஜுவல்லரிகள் கிடைக்கின்றன. ஜடை வில்லை, சூர்ய பிரபை, சந்திர பிரபை, ஜடை, தற்கால கிளிப் மற்றும் ஹேர்பின்கள், கொண்டை ஊசி, குஞ்சரம் போன்றவைகளும்  உள்ளன. இவை அனைத்தும் 22 காரட் தங்கத்தில் கற்கள், மணிகள் பதித்தவாறு உருவாக்கப்பட்டு தரப்படுகின்றன. 

twitter

டாலர் ஜடை

டாலர் ஜடை வகைகளில் சாமியின் உருவங்கள் பொறிக்கப்பட்ட டாலர் போன்ற வடிவ கிளிப்கள் இருக்கும். இவற்றை ஜடையுடன் மாட்டி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும் ஜடையில் தொங்கும் குஞ்சரங்கள் எனாமல் பூசப்பட்டு வண்ண குஞ்ரங்களாக தொங்குகின்றன.

twitter

மலர்கள் ஜடை

இந்த வகை ஜடைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிற்கும். இவற்றின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் தகடுகளில் அம்மன், சரஸ்வதி போன்ற சாமி உருவங்கள் இருக்கும்.
இந்த தலையலங்கார நகைகள் 18 காரட் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டும் கிடைக்கின்றன.

twitter

வங்கி (Bajubandh)

மணப்பெண் கைகளில் கட்டும் வங்கி தற்போது பல்வேறு கலை வடிவங்களில் கிடைக்கின்றன . லட்சுமி உருவம்… இருபுறமும் வளைந்த மயில் உருவம்… சுற்றிலும் பதிக்கப்பட்ட சிவப்பு, பச்சை நிற சிறு கற்கள்… அழகுக்கு அழகு சேர்க்க கீழ்ப்புறம் தொங்கும் வெள்ளி மணிகள்… தொட்டுப் பார்க்கத் தூண்டும் டிரெடிஷனல் வங்கிகள் மணப்பெண்களுக்கு கூடுதல் அழகை தருகிறது. டெம்பிள் ஜுவல்லரிகளிலும் தற்போது வங்கிகள் கிடைக்கின்றன. அவரவர் உடை நிறத்திற்குஏற்ப இதனை தேர்வு செய்து கொள்ளலாம். 

twitter

சிம்பிள் வங்கி

பல்வேறு வடிவங்களில் வங்கிகள் கிடைக்கின்றன. சிம்பிள் டிசைன் வங்கிகளில் நடுவில் மட்டும் சாமி உருவங்கள் இருக்கும். அதனை கையுடன் இணைக்கும் வகையில் இருபுறமும் ஜெயின் இருக்கும். இதில் சிறிய மணிகள் மற்றும் கற்களும் இணைக்கப்பட்டிருக்கும்.

twitter

அம்மன் வங்கி

அம்மன் வங்கி மணப்பெண்களுக்கு பொருத்தமான ஒன்றாகும். இதில் பெரிய வடிவிலான அம்மன் நடுவில் இருக்க தனக்கு கீழே மணிகள் மற்றும் உருண்டைகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வங்கிகள் மணப்பெண்களுக்கு ராயல் லுக்கை கொடுக்கும்.

twitter

முல்லை மொட்டு வங்கி

இந்த வகை வங்கிகள் விற்பனைக்கு புதுவரவுகள். அமமன் உருவம் நடுவில் இருக்க அதனை சுற்றி ரூபி கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். அதன் வெளிப்புறத்தில் முல்லை பூவின் மொட்டுகளை போன்ற டிசைன் செதுக்கப்பட்டிருக்கும்.

twitter

மோதிரம் (Rings)

திருமண பெண்கள் பெரிய அளவிலான மோதிரம் அணிந்து கொள்ளலாம் திருமண உடையில் இந்த பெரிய மோதிரம் அழகாக இருக்கும். தற்போது பெரிய வடிவிலான மோதிரங்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது. கட்டிய புடவைக்கும் மற்ற நகைகளுக்கும் சிவப்பு கற்கள் பதித்த மோதிரங்கள் கச்சிதமான பொருத்தம், டிசைனர் புடவைகளுக்கு ஒரு பெரிய மோதிரம் அணிந்தால் எடுப்பாக இருக்கும். பல்வேறு வடிவங்களில் மணப்பெண்களுக்கு ஏற்றவாறு டெம்பிள் ஜுவல்லரி மோதிரங்கள் தற்போது விற்பனையில் உள்ளது. 

youtube

பேன்சி மோதிரம்

பேன்சி மோதிரங்களுக்கு எபோதும் மவுசு உண்டு. இதன் வகை மோதிரங்களில் அழகிய வேலைப்பாடுகளும், விலை உயர்ந்த கற்களும் பதிக்கப்பட்டிருக்கும். மணப்பெண்கள் இந்த வகை மோதிரம் அணிவதால் ட்ரெண்டிங் லுக் கிடைக்கும்.

youtube

அம்மன் மோதிரம்

இந்த வகை மோதிரங்களில் சிறிய வடிவில் அம்மன் உருவம் இருக்கும். அம்மன் மோதிரம் அணிந்தால் எடுப்பாக இருக்கும். இந்த மோதிரத்தில் அம்மனை சுற்றி மயில்கள் அழகாக உள்ளது.

youtube

கூம்பு மோதிரங்கள்

கூம்பு மோதிரங்கள் தற்போது டெம்பில் நகைகளிலும் கிடைக்கின்றன. வட்ட வடிவில் சிறிய மற்றும் பெரிய அளவில் இந்த மோதிரங்கள் உள்ளன. மணப்பெண்கள் இந்த ஒற்றை மோதிரம் மட்டும் அணிந்தாலே அழகாக இருக்கும்.

youtube

திருமண நகைகளை ஆன்லைனில் வாங்கலாம்! (Buy Wedding Temple Jewels Online)

உங்கள் திருமணத்திற்கு தேவையான நகைகளை ஆன்லைனில் இருந்தபடியே நீங்கள் வாங்கலாம். இதனால் நேரம் மற்றும் அலைச்சல் மிச்சமாகும். எண்ணற்ற டெம்பிள் ஜுவல்லரிகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

 

கேள்வி பதில்கள் (FAQ’s)

டெம்பிள் ஜுவல்லரி என்ற என்ன? (What is temple jewellery)

டெம்பிள் ஜுவல்லரிகள் என்பது நகைகளில் கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். டெம்பிள் ஜுவல்லரிகள் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட நிலையில் தற்போது வெள்ளியில் உருவாக்கப்பட்டு அதில் தங்கள் முலாம் பூசப்பட்டு கிடைக்கிறது. மேலும் இதில் பல்வேறு வகையான விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் ரத்தினங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

டெம்பிள் ஜுவல்லரிகள் சேதமாகாமல் பாதுகாப்பது எப்படி? (How to protect temple jewellery at home)

ஒவ்வொரு டெம்பிள் ஜுவல்லரி நகையையும் தனி தனி பெட்டிகளில் வைக்க வேண்டும். கம்மல்களை தொங்கவிட்ட படி வைத்தால் அறுந்து போகாமல் இருக்கும். சிறிய பெட்டிகளில் மோதிரங்களை வைக்கவும். ஒரே பெட்டியில் அனைத்தையும் போட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும். 

டெம்பிள் ஜுவல்லரிகள் நகைகளை எவ்வாறு சுத்தம் செய்வது? (How to clean temple jewellery)

தண்ணீரில் சிறிதளவு அம்மோனியாவை கலக்கவும். அதில் சில நிமிடங்கள் நகைகளை ஊறவைக்கவும். பின்னர் நகைகளை எடுத்து சுத்தமான வெள்ளை துணியால் துடைக்க வேண்டும். பின்னர் நன்கு உலர வைத்து விட்டு பெட்டிக்குள் எடுத்து வைக்க வேண்டும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle