உணவு பற்றிய அதிக கவனத்துடன் தற்போதைய தலைமுறை வாழ்ந்து வந்தாலும் சில முறை கவன குறைவின் காரணமாக சில உணவுகளை நாம் அளவுக்கு மீறி உண்டு விடுவோம்.
உணவே மருந்து என்கிற சொல்லிற்கேற்ப நாம் நமது உணவு வகைகளிலேயே பல மருத்துவ குணம் கொண்ட உணவுகளை உண்கிறோம். என்றாலும் கூட அளவுக்கு அதிகமாகும் எதுவுமே நஞ்சுதானே.
அது கிட்டத்தட்ட மருந்து வகையான உணவாக இருந்தாலும் கூட நமக்கு பல்வேறு வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
சில உணவு வகைகளை அளவுக்கதிகமாக எடுத்து கொண்டால் விளைவுகள் என்னாகும் என்பது பற்றிய விளக்கமான இந்த கட்டுரையை படித்து பயன் பெறுங்கள்
இஞ்சி
இது பட்டமே பெறாத மருத்துவர் போன்ற மருந்து குணம் கொண்ட உணவாகும். இதனை எடுத்து கொண்டால் ஜீரண தொடர்பான சிக்கல்கள் ஆற்றும் சளி மற்றும் உடல் கொழுப்பை குறைக்கும் என்றாலும் இதனை அளவுக்கதிகமாக நாம் உண்டோமானால் மென்மையான குரல்வளம் கொண்டவர்களின் குரல் இறுகி விடும்.
Also Read About ஹிமாலியன் இளஞ்சிவப்பு உப்பு நன்மைகள்
பூண்டு
கான்செர் முதலான நோய்களுக்கும் மருந்தாகும் பூண்டை நாம் அளவாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும். அதிக அளவினால் ஆன பூண்டை எடுத்து கொண்டால் ரத்தத்தை கொதிக்க வைக்கும் தன்மை ஏற்படும். இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம். கருவையும் அழிக்கும் தன்மை கொண்டது. ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைய நேரிடும். குடலில் எரிச்சல் உண்டாகும்.
எண்ணெயில் பொறித்தவை
எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதால் உங்களுக்கு கொழுப்பு அதிகம் வயிற்றில் சேரும். வயிற்றில் வலி உண்டாகும்
எலுமிச்சை
எலுமிச்சை பல்வேறு முக்கிய நோய்களுக்கு மருந்தாகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனாலும் இதனை அதிகம் உண்பதால் இதயம் பலவீனம் ஆகும்.
உப்பு
உப்பினை அளவுக்கதிகமாக உண்பதால் மூட்டு வலி ஏற்படலாம். சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படும். விந்தணுக்களை குறைக்கும்.
மிளகாய்
மிளகாயை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதனால் சளிபிடிக்கும். ஆண்களுக்கு விந்தணு நீர்த்து போகும். மூலம் ஏற்படும்.
முருங்கை காய்
முருங்கை காயில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் அதனை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. முருங்கை முத்தி விட்டால் அதன் விதைகளை காயவைத்து பொடி செய்து சாப்பிடலாம். ஆனால் முற்றிய முருங்கைக்காயை வேக வைத்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை உண்டாகும்.
மாங்காய்
மாங்காயை அதிகமாக சாப்பிட்டால் இடுப்பு வலி பித்தம் போன்றவை ஏற்படும். வயிறு கட்டும். மலசிக்கல் ஏற்படும்.
தேங்காய்
பல்வேறு நலக்கூறுகளை கொண்ட தேங்காயை அளவுக்கதிகமாக சாப்பிடும்போது அது சளி நெஞ்செரிச்சல் வறட்டு இருமல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
டீ மற்றும் காபி
டீ அதிகம் குடித்தால் காய்ச்சல் உடல் நடுக்கம் பசியின்மை போன்றவை ஏற்படும். விந்து குறைபாடுகள் ஏற்படும். காபி அதிகம் குடித்தால் நரம்பு தளர்ச்சி ஏற்படும். பித்தம் அதிகமாகும். கண்களில் எரிச்சல் ஏற்படும்.
—-
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.