Wellness
வீழ்வோம் என்று நினைத்தாயோ .. இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ! கொண்டாடும் கோலிவுட் பிரபலங்கள் !

கடந்த பெப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை தற்கொலை படை மூலம் வெடித்து சிதற வைத்தது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம். இதில் 40 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்தியர்கள் அனைவருமே இந்த பயங்கரவாத தாக்குதலால் கொதித்து போயிருந்தனர். சரியான சமயத்தில் தக்க பதிலடி தருவோம் என்று இந்திய ராணுவத்தினரும் உறுதி பூண்டனர்.
இவர்களுக்கான முழு சுதந்திரத்தை தான் அளிப்பதாக பிரதமர் அறிவித்தார்.
இந்நிலையில் பிப்ரவரி 26 அன்று இந்திய விமானப்படையினர் இந்த பழிவாங்கல் நிகழ்வை கச்சிதமாக செய்து முடித்தனர். அதிகாலை 3.30மணிக்கு பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கம் ஜெய்ஷ் இ முஹம்மது அமைப்பினர் தங்கியிருந்த இடத்தைக் குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 21 நிமிடங்களில் 1000கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை வீசி இந்த தாக்குதலை நடத்திவிட்டு பத்திரமாக திரும்பியிருக்கின்றனர் இந்திய விமானப்படை வீரர்கள்.
இது குறித்து நாடு முழுவதும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரபலங்களும் இந்த சந்தோசத்தை சக இந்தியனாக கொண்டாடி வருகின்றனர்.
அதிலிருந்து சில துளிகள் (surgical strike)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டீவீட்டில் பிராவோ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் நமது 12 வீரர்களும் எதிரியின் இடத்தில் புகுந்து அழித்து விட்டு பத்திரமாக திரும்பி இருக்கின்றனர்.இந்தியா தனது ஹீரோக்களை எண்ணி பெருமைப்படுகிறது, நான் இந்த வீரத்தை வணங்குகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வாவ் என்று தனது ஆச்சர்யத்தை தெரிவித்திருக்கிறார்.
போரை தொடங்கவில்லை ஆனால் அதன் முடிவு… என்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சமந்தா அக்கினேனி.
எப்படி இருக்கு இந்த ஜோஷ் ? நமது பாதுகாப்பு படையினரை பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன். ஒவ்வொரு முதல் வரிசை வீரருக்கும் நான் உறுதுணையாக இருக்கிறேன். நமது இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்காக உயிரைக் கொடுத்து பாடுபடும் வீரர்களுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார் நடிகை கௌதமி/
வாங்கிய அடியை இந்தியா திரும்பிக் கொடுத்திருக்கிறது. விமானப்படை வீரர்களுக்கு எனது மிகப்பெரிய வணக்கம் என்கிறார் காஜல் அகர்வால்.
இந்திய விமானப்படையினர் மீது நான் அதீத பெருமிதம் கொள்கிறேன். இந்த வீரத்தை நான் வணங்குகிறேன் என்று கூறியிருக்கிறார் தமன்னா/
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.