
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் ரானோஜிராவ் – ராமாபாய் இருவருக்கும் 1950ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி பிறந்தவர் சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்த். சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கை தொடங்கிய இவர், தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து வில்லன், குணசித்திர வேடம், ஹீரோ என முன்னேறி ஏராளமான வெற்றிகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.
1981ம் ஆண்டு லதாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். 160ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இன்னும் தமிழ் சினிமாவின் மாபெரும் அத்தியாயமாகவே உள்ளார் ரஜினிகாந்த்.
மேலும் தமிழ் சினிமாவில் பிளாக் அண்ட் ஒயிட், ஈஸ்ட்மேன் கலர், டிஜிட்டல், 3டி, 3டி மோஷன் பிக்சர் என 40 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியாகவும் அனைத்து தளங்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கால் பதித்துள்ளார்.
எந்திரன் மற்றும் 2.0 படங்களில் டெக்னாலஜியின் முழு வடிவான ரோபோவாகவும் தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்திய ரஜினி என்றும் எல்லாருக்கும் சூப்பர் ஸ்டாராக உச்சத்தில் இருக்கிறார்.
மேலும் படிக்க – காமெடி நடிகர் சதீஷ் – சிந்து திருமண வரவேற்பு…நேரில் சென்று வாழ்த்திய முக்கிய பிரபலங்கள்!
தமிழ் திரையுலகில் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இன்றுள்ள இளைய தலைமுறைக்கும் போட்டி கொடுக்கும் வகையில் வெற்றி நடை போட்டு வருபவர் ரஜினி மட்டுமே.
எளிமை, பண்பு, அடக்கம், அமைதி என மொத்த உயர்குணத்தையும் தனக்குள் வைத்துள்ள ஒரு மாபெரும் அத்தியாயம் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
பிறந்தநாளன்று தான் ஊரில் இருக்க மாட்டேன் என ரஜினி ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அவருக்கு வாழ்த்து கூற இரவு முதலே ரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். திருச்சி போயஸ் கார்டன் இல்லம் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு லதா ரஜினிகாந்த் இனிப்பு வழங்கினார்.
மேலும் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் நடிகர் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இதுவரை 3 லட்சம் பேர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து, ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க – ரஜினிகாந்தின் 168வது படத்தில் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அண்மையில் நடைபெற்ற தர்பார் இசை வெளியீட்டு விழாவிலேயே தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் ரஜினி.
எனினும் தமிழகம் முழுக்க ரஜினி மக்கள் மன்றத்தினர் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு கமலஹாசன், ஸ்டாலின், தனுஷ் உள்ளிட்ட திரையுலக மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.
மேலும் ரசிகர்கள் பலர் ட்விட்டரில்வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அவற்றில் சில,
இதனிடையே ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 2021 தேர்தலில் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்ற அறிவிப்பை அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் வெளியிட்டுள்ளார்.
2020ல் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார், சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திப்பார். 2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம் அற்புதம் நிகழும் என் அவர் கூறியுள்ளார்.
எத்தனை உயரத்திற்குச் சென்றாலும் ஆரம்ப காலத்தை மறக்காத ரஜினிகாந்த, தற்போது அரசியலில் நுழைய அதிரடியாக முனைப்பு காட்டி வருகிறார். சூப்பர் ஸ்டாருக்கு சினிமாவை போல அரசியலிலும் வெற்றி கிட்ட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.
மேலும் படிக்க – பிரபல நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்.. ட்விட்டரில் காதலை வெளிப்படுத்திய ரைசா!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Celebrity Life
மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!
Swathi Subramanian
தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்….. ரசிகர்கள் அதிர்ச்சி!
Swathi Subramanian
25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!
Swathi Subramanian
நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!
Swathi Subramanian