Fashion

வெயிலுக்கு இதமா எப்படி டிரஸ் பண்ணிக்கறதுனு யோசனையா ! இதோ சம்மர் ட்ரெண்டிங் பேஷன் டிப்ஸ் !

Deepa Lakshmi  |  Apr 8, 2019
வெயிலுக்கு இதமா எப்படி டிரஸ் பண்ணிக்கறதுனு யோசனையா ! இதோ சம்மர் ட்ரெண்டிங் பேஷன் டிப்ஸ் !

கோடை காலத்துல வீட்ல இருக்கவே இறுக்கமா இருக்கும். இதுல வெளில போறவங்க நிலைமையை நினைச்சா கவலைதான் இல்லையா. கவலைய விடுங்க . உங்களுக்கு இதமான கோடையா (summer) இந்த சீசனை மாத்திரலாம்.

கோடை காலத்தில் இறுக்கமான உடைகளை மறந்து கொஞ்சம் நீளமான ஸ்கர்ட், தளர்வான மேக்ஸி, முழங்கால் வரையிலான கவுன் போன்ற உடைகளை பெண்கள் அணியறது வெயிலுக்கு கொஞ்சம் சௌகர்யமா உணர வைக்கும்.

 

வெயில் நேரத்தில் சிந்தெடிக் உடைகளை தவிர்க்கவும். முக்கியமா பாலியஸ்டர், ஜார்ஜெட் ஷிபான் ரக உடைகளை தவிர்க்க வேண்டும். அதிகமான வெப்பத்தை இந்த துணிகள் வெளியிடும். பருத்தி மற்றும் ரேயான் போன்ற உடைகளை கோடை நேரங்களில் பயன்படுத்தலாம்.

வெயிலில் வியர்த்து வழியும் உடைகள் இறுக்கமாக இல்லாமல் லேசாக, கொஞ்சம் லூசாக இருந்தால் உடையால் ஏற்படும் அசௌகரியங்கள் குறையும்.

கோடை காலத்தில் பெண்கள் நல்ல லெக்கின்ஸ் மற்றும் பலாஸோ பேன்ட்களையும் அணிந்தால் வியர்ப்பதால் ஏற்படும் எரிச்சல் அல்லது சரும பிரச்னைகள் இருக்காது.

ஐ டி பெண்களுக்கு தேவையான டை, கோட் இவைகளைத் தவிர்க்க முடியாது. கிளம்பும்போது பயண நெரிசல்களில் இதனையும் அணிந்து சிரமப்படாமல் அலுவலகத்தில் உள்ளே செல்லும்போது மட்டும் டை, கோட் போன்றவற்றை அணியலாம்.வெயில் காலத்திற்கு ஏற்ற லினன் வகை கோட்கள் அணிவது மேலும் சிறப்பு.

உடலில் ஏற்கனவே வெப்பம் தகிக்கும் சமயம் உலோக அழகு ஆபரணங்கள் மேலும் வெப்பத்தை உடலுக்கு கடத்தும். ஆகவே அவைகளை தவிர்த்து விடுங்கள். பருத்தி புடவைகள் மற்றும் மெல்லிய பருத்தி டாப்ஸ்கள் வெயிலுக்கு இதமானவை.

இந்த வெயில் நேரத்தில் இறுக்கமான முழுமையான பிராக்கள், பேடட் பிராக்களை தவிர்த்து லேஸ் பொருத்தப்பட்ட மெல்லிய உள்ளாடைகளை அணிவது உடலுக்கு நல்லது.

வெயிலை இதமாக மாற்ற பாலியஸ்டர் போன்ற துணிகளை முகத்தில் கட்ட வேண்டாம். பருத்தி மாஸ்க்குகளை உபயோகியுங்கள்.

வெளியே செல்லும்போது குடை, தொப்பி போன்ற உபகரணங்களை கையில் வைத்து கொள்ளுங்கள். சன் க்ளாஸ் அணிவது நல்லது.

இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்தும் பெண்கள் கண்டிப்பாக நேரடி சூரிய வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளவும் சருமம் நிறம் மாறாமல் இருக்கவும் நீளமான பருத்தி கிளவுஸ்களை வாங்கி அணிந்து கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும்.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்

சேலை கட்டும் வாசனை பெண்களுக்கான பிரத்யேக புடவைகள் ! சம்மர் ஸ்பெஷல் !

ஷாப்பிங் : பெண்களே! சரியான செலவில், ஸ்மார்ட் ஷாப்பிங் செய்து, ஸ்டைலாக தோன்ற சில வழிகள்

—                                                             

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.                                             

Read More From Fashion