Bollywood

சோனம் கபூரின் காஸ்ட்லீ ஹாண்ட் பேக் ! விலை வெறும் 18 லட்சம்தான்!

Deepa Lakshmi  |  Apr 25, 2019
சோனம் கபூரின் காஸ்ட்லீ ஹாண்ட் பேக் ! விலை வெறும் 18 லட்சம்தான்!

சோனம் கபூர் பாலிவுட்டில் தனது நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார். சமீபத்தில் அவருடைய திரைப்படம் ஏக் லடிக்கி கோ தேகா தொ ஏசா லகா வெளியானது. இதில் லெஸ்பியன் வேடத்தில் நடித்திருந்தார். ஆனாலும் நீளமான திரைக்கதையால் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

தொழிலதிபர் ஆனந் அஹுஜா வை திருமணம் செய்த சோனம் கபூரை அவர் உள்ளங்கையில் வைத்து தாங்குகிறார் என்பது பொது இடத்தில் சோனம் கபூரின் ஷூ லேஸை ஆனந் கட்டி விட்ட புகைப்படம் வைரலானதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

தமிழுக்கு வரும் ஷாருக் கான் ! மெர்சலாகும் விஜய்!

கதை தேர்வுகளில் மட்டுமல்லாது தனது வித்யாசமான காஸ்ட்யூம் சென்ஸினால் அனைவரையும் கவர்பவர் சோனம் கபூர். சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டில் அவரை கவனிக்க நேர்ந்த பொது அவரது பாஸ் லுக் அனைவரையும் கவர்ந்தது.

சோனம் கபூரை மும்பை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்கள் அவர் கையில் வைத்திருந்த கைப்பையால் ( Handbag) அசந்து போனார்கள்.

என் குழந்தையே.. நீ சுமக்கும் இந்த குழந்தைக்கு நன்றி ! திருமணமின்றி தாய்மை அடைந்த காதலி பற்றி நடிகர் அர்ஜுனின் நெகிழ்வான பதிவு !

ஹாலிவுட் நடிகை போல வெஸ்டர்ன் உடையில் கோட் சூட் பெல்ட் கூலர்ஸ் என்று கலக்கிய சோனம் கபூரின் கையில் ஹெர்மஸ் பிர்கின் நிறுவனத்தை சேர்ந்த கைப்பையை அவர் வைத்திருந்தார். அதன் விலை 18 லட்சம் என்று அறியப்படுகிறது.

க்ரே நிற கோட் அதற்கு பொருந்திய வெண்மை நிற நெக் டாப்ஸ் கருப்பு நிற பாண்ட் மற்றும் சிவப்பு நிற பெல்ட் அதன் உடனான கூலர்ஸ் இவரது காஸ்ட்யூம் சென்ஸை விஸ்தாரமாக வெளிக்காட்டியது.

 

சோனம் மட்டுமல்ல பாலிவுட்டில் பல வாரிசு நடிகைகள் இப்படி லட்சக்கணக்கில் ஆக்சஸரீஸ் வாங்குவது இயல்புதான் என்கிறது புள்ளி விவரம். ஸ்ரீதேவி மகள்கள் இருவரின் ஷூக்களின் விலை 3 லட்ச ரூபாய் என்று கூறப்பட்டது.

இதையெல்லாம் பார்க்கும் நெட்டிசன்கள் அந்த பணம் இருந்தால் நான் என் வாழ்க்கையில் செட்டிலாகி விடுவேன். இவரென்னவோ என் வாழ்க்கையை ஹாண்ட் பேக்காக மாற்றி கையில் தொங்க விட்டு கொண்டிருக்கிறார் என்று கிண்டல் செய்கின்றனர்.

அவர்களுக்கு சொந்தமான பணத்தை அவர்கள் செலவு செய்கிறார்கள் இதில் விமர்சிக்க ஏதுமில்லை என்கிறது என் உள்மனது.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்

—                                                   

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.                                                                

Read More From Bollywood