Beauty

ஐ – பென்சிலை மட்டுமே பயன்படுத்தி ஸ்மோக்கி ஐ லுக்கை எவ்வாறு பெறலாம்?

Nithya Lakshmi  |  Aug 5, 2019
ஐ – பென்சிலை மட்டுமே பயன்படுத்தி ஸ்மோக்கி ஐ லுக்கை எவ்வாறு பெறலாம்?

பார்ட்டிகளில் அனைவருக்கும்  ஒரு அசத்தலான தோற்றத்துடன் செல்ல ஆசை இருக்கும். இன்றைய காலகட்டத்தில் விதவிதமான கண் ஒப்பனைகளை  (eye makeup) முயற்சித்துப் பார்ப்பதில் மிக ஆர்வம் கொண்டவர்கள் பல பேர் உள்ளனர். நீங்களும் இதுபோல் முயற்சிக்க விரும்புறீர்களா?  உங்களின் அடுத்த பார்ட்டியில் ஒரு போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் தோற்றத்தை உங்களுக்கு அளிக்க நினைத்துக் கொண்டிருந்தால் ஸ்மோக்கி ஐ மேக்கப்பை முயற்சித்து பாருங்கள். பதற வேண்டாம்! இதில் மற்ற ஒப்பனைக் கலைஞர்கள் கூறுவதுபோல் பலவிதமான படிகள், அதற்கேற்ற ப்ரஷ்கள் மற்றும் தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. 

இங்கு நாங்கள் உங்களுக்கு ஒரு மிக எளிமையான முறையை அளிக்க உள்ளோம்.  ஆம்! உங்கள் ஸ்மோக்கி மேக்கப் லுக்கை ஒரு கோஹ்ல் (காஜல்) பென்சிலால் மட்டுமே எளிதில் அடையலாம்.  இதை எவ்வாறு என்று பார்க்கலாம் வாங்க. 

1. முதலில், உங்கள் முகத்திற்கு தேவையான அடித்தள ஒப்பனையை முடித்து விடுங்கள். 

2. கண்களுக்கு பிறைமறை பூசிவிட்டு, ஒரு காம்பெக்ட் பவுடர் அடித்து கொள்ளவும். 

3. இப்போது, ஏதேனும் ஒரு அடர் பழுப்பு நிற ஐ பென்சிலை எடுத்து உங்கள் கண்களின் மேல் இமைகளை ஒட்டி ஐ லைனர் வரைவது போல் கொடு வரைந்து, பின்பு  கண் மடிப்பு வரை வடிவம் குடுத்து, அதை கன் மடல் முழுவதும் நிரப்பிவிடுங்கள். புருவங்களின் கீழ் போகாதபடி கவனித்து கொள்ளுங்கள்.

POPxo பரிந்துரைப்பது – லாக்மி ஐகானிக் காஜல் கிளாசிக் பிரவுன் (ரூ 206) 

4. முதலில், உங்கள் விரல்களால் இதை  ச்மட்ஜ் ( களைத்து ) செய்யவும். இதன் பிறகு ஒரு ஐ பிரஷை பயன்படுத்தி, மேற்கொண்டு இதை சீராக்கவும். 

டிப் – விரலின் நுனிகளை மட்டுமே பயன்படுத்தினால், ஒரு அழகிய வடிவத்தை பெறலாம். 

5. அடுத்து, ஒரு கருப்பு நிற கோஹ்ல் பென்சிலை பயன்படுத்தி, மீண்டும் லைனர் வரையும் வடிவத்தில் உங்கள் கண் இமைகளின்  மேல் சிறிது அடர்த்தியான வடிவத்தை கொடுக்கவும். 

POPxo பரிந்துரைப்பது  – ப்ளம் நேச்சர் ஸ்டூடியோ ஆல் டே வெற் கோஹ்ல் காஜல் (ரூ 428) , மேக் டெக்நா கோஹ்ல் லைனர் (ரூ 1300) 

Instagram

6. இதை மீண்டும் விரல்களால் மிதமாக  தடவி முந்தையதாக பூசிய பழுப்பு நிறத்துடன் ஒன்றி போகும்படி ப்ளேன்ட் செய்யவும். 

7. இவை அனைத்தும் சரியாக அமைய பிரஷால் மீண்டும்  ப்ளேன்ட் செய்யவும். 

டிப் – எவ்வளவு ப்ளேன்ட் செய்படுகிறதோ, அவளவு அழகிய தோற்றத்தை அடையலாம்.

8. இப்போது, அதே கோஹ்ல் பென்சிலை ( ஐ பென்சில் ) பயன்படுத்தி உங்கள் கண் இமைகளின் உள் பகுதிகளில் வரைந்து கொள்ளுங்கள். 

9. அதேபோல், கீழ் இமைகளின் வாட்டர் லைன் பகுதிகளிலும் அடர்த்தியாக வரைந்து கொள்ளுங்கள். இதை விரல்களால் /  பிரஷால் கீழ் இமைகளின் பகுதிகளில் ச்மட்ஜ் செய்யவும். 

இது  உங்களுக்கு ஒரு ஈர்க்கவைக்கும் அடர் நிற கண் ஒப்பனை தோற்றத்தை அளிக்கும். 

10. இதற்கான ஒரு  பினிஷ் குடுக்க, வொலியும்நஸ் மஸ்காராவை பயன்படுத்தலாம். மஸ்காரா கெர்லரை பயன்படுத்தி முதலில் உங்கள் கண் இமைகளை சீராக்கியா பிறகு மஸ்காராவை பூசவும். தேவை பட்டால் கண் இமை நீடிப்புகளையும் பயன் படுத்தலாம்.

POPxo பரிந்துரைப்பது  – மெபிலீன் நியூ யார்க் வாட்டர் ப்ரூப் வொலியும் எக்ஸ்பிரஸ் மஸ்காரா (ரூ 335) 

கவனிக்க வேண்டியவை : 

 

Instagram

ஸ்டைலிங் டிப் – 

  1. உங்கள் கண்கள் மிகவும் அடர் நிறத்தில் இருப்பதால், முகத்தின் மற்ற பகுதிகளில் ஒப்பனை அதிகம் இல்லாதது போன்ற ஒரு  மேக்கப் லுக்கை அமைப்பது அவசியம். 
  2. இதற்கு உங்கள் உதடுகளுக்கு ஏதேனும் ஒரு நுட்  நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். 
  3. மேலும் கூந்தல் சுரூர்ல கொண்ட வடிவத்திற்கு அமைத்துக் கொண்டால், இதில்  ஒரு அட்டகாசமான தோற்றத்தை நீங்கள் அடையலாம்! 
  4. இத்துடன்  ஆக்ஸிடைஸ்ட்  அணிகலன்கள் (oxidised jewellery) மிக பொருத்தமுள்ளதாக இருக்கும். 

 

ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது? படிப்படியான விளக்கங்கள் உடன் சில உத்திகள்

பட ஆதாரம் – Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Beauty