Health

தகிக்கும் ‘கோடை வெயிலை’ தடுமாறாமல் சமாளிப்பது எப்படி?.. சிம்பிள் டிப்ஸ்!

Manjula Sadaiyan  |  Feb 28, 2019
தகிக்கும் ‘கோடை வெயிலை’ தடுமாறாமல் சமாளிப்பது எப்படி?.. சிம்பிள் டிப்ஸ்!

வழக்கத்த விட சூரிய பகவான் தன்னோட கருணையை ரொம்ப அதிகமாகவே காட்ட ஆரம்பிச்சிட்டாரு, அப்படியே இந்த வருண பகவானும் அடிக்கடி பூமிய எட்டிப்பார்த்து ஒரு ஹாய் சொன்னா நல்லா இருக்கும் தான். ஆனா சூரியனுக்கு பயந்தோ என்னவோ அவர் வழக்கமான டூட்டிய கூட ஒழுங்கா பாக்க மாட்றாரு. இவங்க ரெண்டு பேருக்கு இடையில மாட்டிகிட்டு முழிக்கிறது என்னவோ பாவப்பட்ட இந்த மனுஷ ஜென்மம் தான். வெயில்னா வெயிலு(Sunlight) அப்படி ஒரு வெயிலு. இது மார்ச் மாசமா இல்ல மே மாசமான்னு அடிக்கடி காலண்டர பார்த்து தான் நாம கன்பார்ம் பண்ணிக்க வேண்டியிருக்கு.

மாசி மாசமே இப்படி இருக்கே இன்னும் சித்திரை வெயில் கத்திரி வெயிலுக்கு(Sunlight) எல்லாம் நாம என்ன ஆகப்போறோம்னு தெரியலையே? இப்படி உங்களுக்கு மட்டுமில்ல எல்லோருக்குமே தோண ஆரம்பிச்சிருச்சு. அடிக்கிற வெயிலுக்கு(Sunlight) காலையில ஆபிஸ் போகும்போதே குளிச்ச மாதிரிதான் இருக்குன்னு ஆபிஸ் போறவங்க புலம்ப, பதிலுக்கு பக்கத்துல இருக்குற தெருவுக்கு கூட போய்ட்டு வர முடியலன்னு வீட்டுல இருக்குறவங்களும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

நாம என்னதான் பொலம்பினாலும் சூரியன்(Sun) கொஞ்சம் கூட கருணை காட்ட மாட்டாரு(ஓவர் டியூட்டி வேணா பாப்பாரு) அதனால மனச
தேத்திக்கிட்டு இந்த கோடை(Summer) காலத்தை எப்படி சமாளிக்கலாம்னு பாக்கலாம் வாங்க.

காலை எழுந்ததும்

தூங்கி எந்திரிச்சதும் காபி, டீ சாப்பிடற ஆளா நீங்க. கொஞ்ச நாள் அதையெல்லாம் ஓரங்கட்டி வெச்சுட்டு கம்மங்கூழ், கேழ்வரகு கூழ் இதுமாதிரி ஏதாவது ஒரு கூழ குடிங்க. நைட் சாதம் மீந்து போனா குப்பையில தூக்கி போடாம தண்ணி ஊத்தி வச்சு காலையில சின்ன வெங்காயம்+பழைய சோறு சாப்பிட்டு பாருங்க. பழைய சோத்துல கேழ்வரகு கூழ் சேர்த்து கரைச்சு சைட்டிஷா பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் வச்சு சாப்பிடலாம்.

தயிர் சாதம்-மோர்

கடையில தயிர் வாங்குறத விட நீங்களே வீட்ல தயிர் வச்சா உங்க ஹெல்த்+பர்ஸ் ரெண்டுக்குமே நல்லது. கோடை முடியற வரைக்கும் மாதுளை போட்டு தெனமும் தயிர்சாதம் சாப்பிடலாம். அதேபோல மோர் அடிக்கடி உணவுல சேர்த்துக்கங்க. சாப்பாட்டுல சேர்த்து சாப்பிட புடிக்காட்டியும் மோராகவே குடிக்கவாவது முயற்சி பண்ணுங்க.

இளநீர், நுங்கு, பதநீர்

கோடை(Summer) முடியும்வரை தினசரி இளநீர், நுங்கு, பதநீர், தர்பூசணி, கரும்பு ஜூஸ் என ஏதாவது ஒன்றினை சாப்பிட்டு வாருங்கள். நமது உடலில்
இருக்கும் நீர்ச்சத்துகளை தக்க வைப்பதுடன் உடல் உஷ்ணம் தொடர்பாக ஏற்படக்கூடிய சிறுநீர் பிரச்சினைகளையும் தடுக்கும். இதேபோல நீர்ச்சத்து
அதிகம் இருக்கும் பழங்களை தனியாகவோ அல்லது மிக்ஸ்டாகவோ சாப்பிட்டு வாருங்கள்.

அசைவ உணவுகள்

சேர்ந்தாற்போல விடுமுறைகள் இருக்கும் என்பதால் இந்த நாட்களில் விஷேசங்கள் அதிகம் நடைபெறும். பெரும்பாலும் அசைவ உணவுகள் அதிகம் இருக்க வாய்ப்புண்டு. அப்படி ஏதாவது விருந்து, விழாக்களில் கலந்து கொள்வதாக இருந்தால் இரவில் அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். மதிய நேரமென்றால் செரிமானம் பிரச்சினை ஆகாது. இதுவே இரவு நேரங்களில் அசைவ உணவு சாப்பிட்டால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அத்துடன் உடல் உஷ்ணத்தையும் அதிகப்படுத்தி விடும்.

காய்கறிகள்

தினசரி உங்கள் உணவில் பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய், பூசணிக்காய், வாழைத்தண்டு என ஏதாவது ஒரு காய் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பொரியல், கூட்டு, குழம்பு என எதுவாக இருந்தாலும் கோடை (Summer)முடியும்வரை இதுபோன்ற தண்ணீர் காய்களை பயன்படுத்தி சமைப்பது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லது.

உள்ளாடைகள்

இந்த நாட்களில் அதிகம் வியர்க்கும் என்பதால் உள்ளாடைகளை தினசரி 2 முறையாவது மாற்றி விடுங்கள். அதேபோல குளிர்ந்த தண்ணீரில் தினசரி
காலை,மாலை என 2 வேளையும் குளிப்பது நல்லது. பருத்தி ஆடைகளை அதிகம் அணியுங்கள். நன்கு துவைத்து உலரவைத்த துணிகளை மட்டுமே
பயன்படுத்துங்கள். வாரத்தில் இருமுறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பது நல்லது. இது பொடுகு, தலை அரிப்பில் இருந்து உங்களைக்
காத்திடும்.

ஐஸ்கிரீம்

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு ஐஸ்கிரீம் சாப்பிட்டா நல்லா இருக்கும் தான். அதுக்காக அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லதல்ல. இதேபோல ஐஸ் தண்ணீர், டீ, காபி, எண்ணெய் பலகாரங்கள்,குளிர்பானங்கள் போன்றவற்றையும் முடிந்தளவு தவிர்த்து விடுங்கள். இதுபோன்றவற்றை சாப்பிடும்போது நாவறட்சி ஏற்பட்டு அடிக்கடி தண்ணீர் குடிக்கத் தோன்றும் என்பதால் இவற்றினை தவிர்ப்பது நலம். ஒருநாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம்.

அதிக வெயில்(Sunlight)

அதிகம் வெயில்(Sunlight) அடிக்கும் நண்பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து விடுங்கள். ஒருவேளை வெளியில் செல்ல வேண்டிய தேவை இருந்தால் பருத்தி ஆடைகள் அணிந்து செல்லுங்கள். செல்லும் இடங்களில் எல்லாம் தண்ணீர் வாங்கிக்குடிக்காமல் கையோடு தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள். மிகவும் அடர்நிறம் கொண்ட ஆடைகளை தவிர்த்து வெளிர்வண்ண ஆடைகளை அணிந்து செல்லுங்கள். தாகம் எடுப்பது போல தோன்றினால் உடனே தண்ணீர் குடித்து விடுங்கள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Health