Dating

எப்படிப்பட்ட ஆண்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாகலாம் ? வழிகாட்டுகிறது வேதம் !

Deepa Lakshmi  |  Jan 23, 2019
எப்படிப்பட்ட ஆண்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாகலாம் ? வழிகாட்டுகிறது வேதம் !

செவ்வாயில் இருக்கும் ஏலியனைக் கூடப் படம் பிடிக்க முடிகிறது. ஆனால் இன்னமும் பூமியில் வாழும் ஆண்களில் யார் நல்லவர் யார் மோசமானவர் என்பதை பற்றி நாம் அறிய முடிவதில்லை.

எல்லோரும் திருமணம் செய்கிறார்கள். ஆனால் எத்தனை திருமணங்கள் இறுதி வரை நன்றாக இருக்கின்றன? எல்லோரும் காதலிக்கிறோம்தான் ஆனால் இப்போதெல்லாம் காதலின் எண்ணிக்கையை விடவும் பிரேக்கப் களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன.

இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்க முடியும் ? நீங்கள் நினைப்பது போல ஆண்கள் காரணமல்ல. சரியான ஆணை தேர்ந்தெடுக்க முடியாததுதான் இவ்வளவு சிக்கலுக்கும் அடிப்படை. மேலோட்டமாக நம் மீது பாசம் காட்டும் ஒருவரை நம்புவதும் ஏற்றுக் கொள்வதும் நமது தவறுதான் இல்லையா?

நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் வேதம் வழிகாட்டுகிறது. மிகப் படித்தவர்கள் சிலர் இதனை மத ரீதியாக ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். ஆனால் ஒவ்வொரு மதத்திலும் வேதப் புத்தகம் உண்டு. அதனை சரிவர கடைபிடித்தாலே நமது வாழ்வில் 75 சதவிகிதம் அமைதியாக வாழ்ந்து விடலாம். ஆனால் நாமோ எல்லாவற்றுக்கும் யூட்யூபிலும்  கூகிளிலும் தீர்வைத் தேடுகிறோம்.

நமக்கான ஒவ்வொரு வாழ்க்கைப் பாடத்தையும் வேதங்களில் (vedhas)  எந்த யுகத்திலோ எழுதி வைத்திருக்கின்றனர்.இதனைப் படித்துப் பயன்பெற்றால் போதுமானது. இனி எந்த மாதிரியான குணம் கொண்ட ஆணை நமது வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

விழிப்புணர்வு

தனக்கு நடப்பதை பற்றியும் தான் நடந்து கொள்வதைப் பற்றியும் விழிப்புணர்வோடு ஒரு ஆண் இருக்க வேண்டும். கவனமாக இருப்பதால் எதனையும் தவறவிடாமல் பிடிப்போடு இருப்பார். ஆகவே இந்த குணம் உங்கள் ஆணிடம் இருக்கிறதா என்று பாருங்கள்.

விடிகாலை விழிப்பு

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆண் விடியலில் நேரமே எழுபவராகவும் சுறுசுறுப்போடு மற்றவரையும் எழுப்பி ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் கொள்பவராகவும் இருக்க வேண்டும். இது அவரது சுயஒழுக்கத்தை பறைசாற்றும் குணமாகும்.


சமநிலை மனப்பக்குவம்

உங்கள் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆண் அனைவரையும் சமமாகப் பார்க்கவும் பழகவும் வேண்டும். உணவு உடை போன்றவற்றை குடும்பத்தாரோடும் மற்றவரோடும் பகிர்ந்து உண்ணுதல் வேண்டும். உடல்  உழைப்பையும் பகிர்ந்து கொள்வது அவசியமாகும்.

ஏற்றுக் கொள்ளும் தன்மை

ஆக சிறந்த ஆண்மகனாக நீங்கள் தேர்ந்தெடுத்தனர் இருந்தாலும்கூட பொறுமை இல்லாவிட்டால் எல்லாம் மாறிவிடும். உங்களை அவமதிக்கக் கூட செய்யலாம். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மை அவரிடம் இருக்கிறதா என்பதை சரிபாருங்கள்.

திறந்த மனது

உங்கள் ஆண் நேர்மையானவராகவும் திறந்த மனதுடையவராகவும் உங்களிடம் வெளிப்படையாகவும் இருப்பது அவசியம். அவர் ரகசியமானவராகவே இருந்தால் உங்களால் அவரோடு முழு நம்பிக்கையோடு வாழ முடியாது.

பெருந்தன்மை

நீங்கள் விரும்பிக் கேட்கும் விஷயங்களை செய்து முடிக்கும் ஆற்றலும் அதனைப் பற்றி மீண்டும் சொல்லிக் காட்டாத பெருந்தன்மையும் அவரிடம் இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது.

தற்பெருமை இல்லாமல் இருக்க வேண்டும்

பெரும்பாலான ஆண்கள் அனைவரும் செய்யும் மிக முக்கியமான விஷயம் தங்கள் அந்தரங்க விஷயங்களை பற்றி சக நண்பர்களிடம் பெருமைப்படுவது. இவர்களது ஆண்மை பற்றிய விஷயங்களில் நமது பெண்மையும் அவமதிக்கப்படுகிறது. இது எப்போதும் தவறானது என்பது ஆணுக்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் அந்தரங்கங்களைப் பற்றி வெளியே பெருமை பேசாத ஆண் தான் சிறந்த ஆண்.

தன்னம்பிக்கை

என்ன சூழ்நிலை வந்தாலும் இயற்கை பேரிடர் வந்தாலும் கூட தனது தொழிலில் வியாபாரத்தில் நம்பிக்கை இழக்கக் கூடாது. தளர்ந்து விட்டால் தொழில் தோல்வி ஏற்படும். வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

அளவிற்கு மிஞ்சாமல் அன்பிருக்க வேண்டும்.

அன்பு என்பது அற்புதமான விஷயம்தான். ஆனாலும் தனது தேவைக்கு அதிகமான நபர்களோடு அன்போடு இருப்பது என்பது உங்களை கடைசி இடத்தில் தள்ளி விடும் வாய்ப்பளிக்கும். அவசியமானவர்களோடு மட்டும் அதிக உறவாக இருப்பது முக்கியம்.

திருப்தி

இருப்பதைக் கொண்டு திறம்பட வாழ்தல் என்பது ஒரு கலை. இதனை உங்கள் ஆண் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மற்றவரோடு ஒப்பிட்டு நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது.

ஆரோக்யம்

ஆரோக்கியத்தின் மீது அதிக கவனமும் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களையும் கவனிப்பவராக உங்கள் ஆண் இருக்க வேண்டும். ஏனென்றால் தன்னை நேசிப்பவரால்தான் பிறரையும் குறைவின்றி நேசிக்க முடியும்.

நிதானம்

எத்தனை மோசமான நிலைமை ஏற்பட்டாலும் நிதானம் தவறவோ கோபப்படவோ கூடாது. அதே சமயத்தில் அந்த மோசமான சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான புத்தி கூர்மையும் உங்கள் ஆணுக்கு இருக்கு வேண்டும்.

ஒழுக்கம்

ஒழுக்கம் என்பது ஒரு ஆகச்  சிறந்த ஆணுக்கு மட்டுமே உண்டான ஒற்றைத் தகுதி. பெரும்பாலான ஆண்கள் இங்கேதான் தோற்றுப் போகிறார்கள். ஒரே பெண்ணுடனான காதல் என்பது பெரும்பாலும் நடப்பதில்லை. ஒரு சில ஆண்கள் அப்படி ஒரு மாயையை உண்டாக்கி பெண்களிடம் பேசி ஏமாற்றுவதில் வல்லவர்கள். இந்த பரிட்சையிலும் உங்கள் ஆண் பாஸ் ஆகிவிட்டார் என்றால் அவர்தான் உங்களுக்கான வாழ்க்கை முழுதும் வரக் கூடிய ஒற்றைத் துணை என்று வேதங்கள் கூறுகிறது.

 —

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

 

 

 

 

 

Read More From Dating