
காலம் காலமாக ஆண்களை பெண்கள் ஈர்ப்பதற்கு முக்கிய காரணியாக பெண்களின் கூந்தல் விளங்குகிறது. நீளமான அடர்த்தியான கூந்தல் பற்றி பாடாத புலவர்களோ கவிஞர்களோ இல்லவே இல்லை.
அடர்த்தியான முடி என்பது நமது ஆரோக்கியத்தையும் சேர்த்தே அடுத்தவர்களுக்கு எடுத்துரைக்கிறது. நீளமான கருங்கூந்தல் ( Long black hair) பெற சில வழிகள் மற்றும் குறிப்புகள் உங்களுக்காக.
ஆயில் மசாஜ்
ஸ்பா செல்கிறீர்களோ இல்லையோ வாரம் ஒருமுறை கூந்தலுக்கு எண்ணெய் தடவி ஊற வைத்து பின்னர் மென்மையான ஷாம்பூ மூலம் முடியை அலசுங்கள். விருப்பம் இருந்தால் சிகைக்காய் அல்லது அரப்பு உபயோகியுங்கள். இதனால் கூந்தலுக்கு தேவைப்படும் சத்துக்கள் கிடைக்கின்றன. முடி வேகமாக வளர இது உதவுகிறது.
கோடையிலும் டாலடிக்கும் முகம் வேண்டுமா ! சில அழகு குறிப்புகள்!
தேவையில்லை நுனி முடி
மாதம் ஒரு முறை உங்கள் முடியின் நுனிகளை கத்தரித்து விடுங்கள். இது உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். பிளவு பட்ட கூந்தல் நுனி மேலும் இருக்கும் கூந்தலையும் ஆரோக்யமில்லாமல் செய்து விடுகிறது. ஆகவே மாதம் ஒருமுறை கூந்தலின் நுனிகளை கத்தரியுங்கள்.
கூந்தலுக்கும் தேவை புரதம்
உடலை போலவே தலைமுடிக்கும் புரதங்கள் தேவை. ஆகவே முட்டையின் வெள்ளை கரு, வேகவைத்த உருளை கிழங்கு தண்ணீர் போன்றவற்றை தலை முடியில் தடவி சில மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளியுங்கள். இயற்கையான புரதங்கள் கூந்தலில் சேர்வதால் முடி நன்றாகவும் வேகமாகவும் வளரும்.
வெங்காயத்தின் சாறு
வெங்காயம் முடி வளர்ப்பில் அற்புத மாற்றங்கள் புரிகிறது. சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து அதனை பஞ்சினால் ஒற்றி முடி சொட்டையான இடங்களில் தடவி வந்தால் அந்த இடத்தில் கூட முடி வளர்கிறது என்கிறார்கள். காயம் , அறுவை சிகிச்சை காரணமாக முடி வளராமல் இருந்தால் அந்த இடங்களில் வெங்காய சாறு தடவுங்கள். முடி சன்னமாக இருப்பவர்கள் வெங்காய சாறினை தடவி ஊற வைத்து குளித்து வந்தால் முடி அடர்த்தியாகும்.
பீர் ஷாம்பூ
பீர் என்பது பதப்படுத்தப்பட்ட பார்லி தண்ணீர் என்பதால் இதனை கொண்டு தயாரிக்கப்படும் ஷாம்பூக்களை நீங்கள் வாங்கி பயனடையுங்கள். இதனை பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் மென்மையாகவும் அதே சமயம் அடர்த்தியாகவும் வளரும்.
கண்டிஷனர் போடாதீர்கள்
முடியை சில்கியாக காட்டும் கண்டிஷனர்கள் ஸ்கால்ப்பில் படும்போது நீங்கள் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் முடி வளர்ச்சி பாதிக்கும் என்பதால் முடிந்தவரை இயற்கை கண்டிஷனர்களை பயன்படுத்துங்கள்.
வெயில் நேர பாதுகாப்புகள்
முகத்தை போலவே முடிக்கும் பாதுகாப்பு தேவை. ஆகவே வெளியே செல்லும்போது காற்று மாசு, தூசு மற்றும் சூரியனின் நேரடி பார்வையில் இருந்து முடியை பாதுகாக்க ஸ்கார்ப் போன்ற பொருள்களை பயன்படுத்துங்கள்.
உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சில முக அழகு சீரம் மற்றும் க்ரீம்கள்
ஈரத்துடன் தலை சீவாதீர்கள்
ஈரமாக இருக்கும் முடி வலிமை குறைந்து காணப்படும். அப்போது நீங்கள் சீப்பினால் சீவுகையில் பல முடிகள் உதிர நேரும். தரமான சீப்புகளை உபயோகியுங்கள். சிக்கெடுக்க அதற்கான சீப்பு மற்றும் தலைமுடியை நேர்த்தியாக்க ஒரு சீப்பு என்று இரண்டு விதமான சீப்புகளை பயன்படுத்துங்கள்.
பருத்தி தலையணை உறைகளை தவிருங்கள்
இவ்வகை உறைகள் கூந்தலை மேலும் அதிகமாக உதிர வைக்கும். ஆகவே சில்க் துணியில் செய்யப்பட்ட தலையணை உறைகளை பயன்படுத்துங்கள்.
இது தவிர சரியான சாப்பாடு நிம்மதியான உறக்கம் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு கூடுதலாக உதவும் கூறுகள் ஆகும். பின்னர் பாருங்கள். கார்கூந்தல் பெண்ணழகு .. அது எப்போதுமே நீங்கள்தான் !
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்
உங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.