அனைவருக்கும் அந்த பெர்ஃபெக்ட் பிட் ஜீன் உடன் ஒரு கூலான டாப்பை அணிந்துகொண்டு வெளியில் செல்ல விருப்பம் இருக்கும். இருப்பினும், பெரும்பாலானவர்கள், ஜீன்ஸ் பேண்டுக்குள் ஒல்லியான உடம்பு உடையவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நினைக்கிறார்கள் . அதுதான் இல்லை!! உங்கள் உடம்பின் வடிவத்திற்கு ஏற்ப சரியான ஜீன்ஸை நீங்கள் அணிந்தால், பிரபலங்களை போல அந்த ஒரு அட்டகாசமான தோற்றத்தை நீங்களும் அடையலாம்.
இதுவரை நீங்கள் வாங்கிய ஜீன்ஸ் (jeans) பேண்ட் எதுவும் உங்களுக்கு சரியாக பொருந்தவில்லை என்றால் அதற்கான ஒரு தீர்வை இங்கு நாங்கள் அளிக்க உள்ளோம். இதை எவ்வாறு வாங்குவது, உங்கள் உடலமைப்பை (body shape) தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் தேர்வு செய்வது மற்றும் எதைத் தவிர்ப்பது என்ற அனைத்து விவரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
1. பியர் ஷேப் (Pear shape )
உங்கள் இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் கனமாக இருப்பதால் ஒரு மிட் – ரைஸ் (இடுப்பின் மத்தியில் உயர்வான) ஜீனிற்கு செல்லுங்கள். இது உங்கள் கால்களை நீளமாகவும் ஒல்லியாகவும் காட்ட உதவும். அல்லது ஒரு ரிலாக்ஸ் பிட் ஜீன் ( தளர்வான ஜீன் ) உங்கள் கீழ் பகுதிகளை நிஜத்திற்கும் முரணாக காட்ட உதவும்.
நீங்கள் தவிர்க்க வேண்டியவை : ஹை வெய்ஸ்ட் ஜீன் (high waist) மற்றும் இலகுவான நிறங்கள் கொண்ட ஜீன்.
POPxo பரிந்துரைப்பது ஜரா பாககி ஜீன் வித் பாக்கெட் (ரூ 2,590)
2. ஆப்பிள் ஷேப் (Apple shape)
இந்த வடிவத்தில் இருப்பவர்கள் உங்கள் இடுப்புப் பகுதியை மேலும் கனமாக காண்பிக்காமல் தவிர்க்க ஒரு பிளேர் டிசைன் – பூட் கட் ஜீன் உடன் மிட்-ரைஸ் வெய்ஸ்ட் (mid-rise waist) வகையை அணியலாம். இது உங்கள் இடுப்பில் இருந்து ஒரு இன்ச் கீழிருந்து ஆரம்பிப்பதால் உங்கள் கனமான இடுப்பை உள்ளடக்கி நல்ல வடிவத்தை குடுக்கும்.
நீங்கள் தவிர்க்க வேண்டியவை : இறுக்கமான ஜீன், ஸ்கின்னி ஜீன் மற்றும் ஹை ரைஸ் ஜீன் . எனில் இது மேலும் உங்கள் இடுப்பின் பகுதிகளை பெரிதாக காட்டும் .
POPxo பரிந்துரைப்பது – யுனைடெட் கோளொர்ஸ் ஒப் பேணிடன் பூட் கட் மிட் ரைஸ் ஸ்ட்ரெச்சபிள் ஜீன் (ரூ 1,679)
3. ஹவர் கிளாஸ் ஷேப் (Hourglass shape)
சிறிய இடுப்பு, வளைவுடன் இருக்கும் கீழ் பகுதி மற்றும் முழு மார்பகமாக இருக்கும் உடல் வடிவத்தை ஹவர் கிளாஸ் என்று கூறலாம். இதற்கு நீங்கள் ஒரு பூட் கட் ஜீன், பரந்த கால்கள் கொண்ட டிரௌசர் ஜீன் அல்லது பிளேர் (flare jean) அணிந்தால் சரியாக இருக்கும். எனில் இது உங்கள் தொடைகளை பெரிதாக இல்லாமல் சரியான அளவில் காட்டும் மேலும் உங்கள் கால்களை நீளமாகவும் காண்பிக்கிறது.
நீங்கள் தவிர்க்க வேண்டியவை – ஸ்கின்னி ஜீன்,டையிட் பிட் ஜீன்
இதற்கு POPxo பரிந்துரைப்பது – மைல் ஹை வைட் லெக் ஜீன்ஸ் (ரூ 2,999)
4. பெட்டைட் ஷேப் ( Petite shape)
சிறிய உடல் வடிவம் கொண்டவர்கள் எந்த வகையான ஜீனையும் அணியலாம் என்று நாம் நினைப்போம். ஆனால் இந்த உடல் அமைப்பிற்கும் சில சிறப்பாக பொருந்தும் வகைகள் உள்ளது.சூப்பர் ஸ்கின்னி அதாவது டயிட் பிட் ஜீன்களை அணியலாம். இது உங்கள் சிறிய வடிவத்தை அழகாக காட்டும். மேலும், ஹை வெய்ஸ்ட் ( இடுப்பின் மேல் அணியும் ஜீன் ) நேரான கால் கொண்ட ஜீன் இதற்கு பொருத்தமாக இருக்கும். இது இடுப்பில் இருந்து ஹெம் வரை உங்கள் கால்களை நீளமாக காண்பிக்கும்.
நீங்கள் தவிர்க்க வேண்டியவை : தளர்வாக தொங்கும் ஜீன்
இதற்கு POPxo பரிந்துரைப்பது – லெவிஸ் சூப்பர் ஸ்கின்னி ஜீன் ( ரூ 1,859)
Pexels
5. உயரமான உடல் அமைப்பு (Tall body shape)
உயரமான உடலமைப்பு உள்ளவர்கள் எந்த விதமான ஜீன் பேண்ட்டுகளையும் எளிதில் அணியலாம். இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியவை பிளேர் ஜீன், பூட் கட் ஜீன் அல்லது ஸ்கின்னி ஜீன். அதிலும் உங்கள் இடுப்பிற்கு மேல் அல்லது கீழ் அணியும் ஜீன்கள் (high / low waist jean ) மிக பொருத்தமாக இருக்கும். இவை அனைத்தும் உங்கள் உடலின் உயரமான தோற்றத்தை இன்னும் அழகாக முன்வைக்கும்.
நீங்கள் தவிர்க்க வேண்டியவை – உங்கள் உடல் அம்சத்திற்கு முரணானவை மற்றும் தளர்வான பாய்பிரண்ட் ஜீன் வகைகள்
POPxo பரிந்துரைப்பது – ஜரா ஹை ரைஸ் ஸ்கின்னி ஜீன் (ரூ 2,290)
6. பஸ்டி ஷேப் (Busty shape)
கனமான மார்பளவு கொண்ட உங்கள் உடல் அமைப்பிற்கு ஏற்ற ஜீன் லோ வெஸ்ட் (low waist) அதாவதுகீழ் இடுப்பில் அணியும் ஜீன் மற்றும் பூட் கட் ஜீன் ஆகும். எனில் இந்த வகை ஜீன்களில் இடுப்பில் இருந்து ஹெம் லைன் வரை சிறிது தளர்வான தோற்றத்தை அளிப்பதால் உங்கள் உடலின் மேல் பகுதி கனமாக காண்பதை சமநிலை படுத்தும்.
மேலும் இலகுவான வண்ணங்களை அணிவது மற்றவர்களை உங்கள் உடலின் மேல் பகுதியிலிருந்து கவனத்தை விலக வைக்கும் .
டிப் – இந்த ஜீன் வகைக்கு ஏற்ற ஒரு லோ நெக் டாப் அல்லது இடுப்பின் பகுதியில் இதற்க்கு ஏற்ற பெல்ட் , மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பும்.
நீங்கள் தவிர்க்க வேண்டியவை : ஸ்கின்னி அல்லது ஏதேனும் இறுக்கமான ஜீன் பேண்ட்டுகளை தவிர்க்கவும்.
POPxo பரிந்துரைப்பது – ஹியர் அண்ட் நொவ் மிட் ரைஸ் பூட் கட் ஜீன் (ரூ 1.099)
Pexels
7. தட்டையான பிட்டம் (Flat butt )
உங்கள் பிட்டம் மிகவும் தட்டையாக இருந்தால் எந்த வகையான ஜீனையும் அணியலாம்! இருப்பினும் இது மேலும் தட்டையாக தெரியாமல் இருக்க ஜீன் பாக்கெட்டுகளை நீங்கள் கவனிக்க வேண்டும். இது பெரிதாகவும் உங்கள் பின்புறத்தை முழுமையாக மறைப்பதும், மேலும், இரண்டு பாக்கெட்டுகள் விலகி அமைத்திருந்தால் , இதுபோன்ற ஜீன்ஸை தவிர்க்கவும். ஒரு குறுகிய / நடுத்தர உயர்வு அளிக்கும் ஜீன் உங்கள் பின்புறத்திற்கு ஒரு வடிவத்தை அளிக்கும்.
நீங்கள் தவிர்க்க வேண்டியவை : பின்புறத்தில் சிறிய பாக்கெட் உள்ள ஜீன் மற்றும் லோங் ரைஸ் ஜீன்
POPxo பரிந்துரைப்பது – மஸ்ட் அண்ட் ஹார்பர் மிட் ரைஸ் ஜீன் (ரூ 659)
8. அத்லெடிக் ஷேப் ( Athletic shape)
நீங்கள் ஒரு அத்லெட்டிக் அதாவது ஒல்லியான உடம்பு அமைப்புள்ளவர்கள் என்றாள் உங்கள் உடம்பில் வளைவுகளை தெளிவாக காட்டக்கூடிய ஜீன் பேண்ட்டுகள் அவசியம். ஆகையால் பிளேர் ஜீன் அல்லது பூட் கட் ஜீன் அதாவது இடுப்பின் பகுதிகளிலும் மேல் தொடை பகுதிகளிலும் இறுக்கமான வடிவம் கொண்டு முழங்கால் கணுக்கால் இடங்களில் தளர்வாக காட்டக்கூடிய இந்த வகை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
நீங்கள் தவிர்க்க வேண்டியவை : உங்கள் உடல் அமைப்பு ஏற்கனவே ஒல்லியாக இருப்பதால் ஸ்கின்னி ஜீன் அல்லது ஏதேனும் உங்களை இன்னும் சிறிதாக காட்டக்கூடிய வடிவங்களை தவிர்க்கவும்
POPxo பரிந்துரைப்பது – ஷீன் ப்ளீச் வாஷ் ஜீன் (ரூ 1,550)
ஜீன்ஸ் வாங்கும் போது நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்
Pexels
- நிறம் – அடர் நிறம் உங்களை ஒல்லியாகவும் இலகுவான நிறங்கள் உங்களின் தோற்றத்தை மேலும் தடிமானமாக காட்ட உள்ளது.
- ரைஸ் (Rise)- உங்கள் தொடைகளின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பித்து வேஸ்ட் அதாவது இடுப்பு வரை வரும் பகுதியை ரைஸ் என்று கூறலாம். இது சுமார் 7 – 12 இன்ச் வரை இருக்கும். இது உங்கள் ஜீன்ஸ் பேன்ட் இடுப்பில் எங்கு ஆரம்பிக்கிறது என்றும் உங்கள் இடுப்பு பகுதிகளை சீராக அமைக்க உள்ளதால் இதை தெரிந்து கொள்வது முக்கியம்.
- பாக்கெட் – பெரிய பின் பாக்கெட் கொண்ட ஜீன்ஸ் உங்கள் பிட்டத்தை சிறிதாகவும், சிறிய பாக்கெட் அதை பெரிதாகவும் காட்டும்.
கடைசியாக, மிக முக்கியமாக, இதை அணியும் போது தன்னம்பிக்கை அவசியம்!
பட ஆதாரம் – Pexels, Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Fashion
அழகான பட்டு புடவைகளுக்கு அழகான பிளவுஸ் (ரவிக்கை) தேர்வு செய்ய சில சுவரசியமான குறிப்புகள்!
Meena Madhunivas
அனைத்து சிறப்பு நிகழ்சிகளுக்கும் மற்றும் சூழலுக்கும் பெண்கள் தேர்வு செய்ய சில ஆடை குறிப்பு
Meena Madhunivas