Health
நீங்கள் தினமும் சாப்பாட்டில் அரிசி சேர்பவரா ? அரிசி நீர் (rice water) தரும் பிரசித்தமான நன்மைகள் – Benefits Of Rice Water In Tamil

மனித உயிர்கள் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு. இவ்வுணவு முறையில் பண்டைக்காலம் முதல் இன்று வரை பல பரிணாம மாற்றம் ஏற்பட்டுள்ளது . ஆதியில் பச்சையாக மாமிசத்தை உண்டு வந்த முன்னோர்கள், தீயை கண்டுபிடித்தனர். பின்னர் சுட்டு உண்டு, சமையல் வந்தது. பயிரிட்டு விவசாயம் செய்தனர். இதன் மூலம் மனிதன் கண்டெடுத்த பொக்கிஷம் நெல் மணிகள். இதற்கு பிறகு சீனா, ஜப்பான், இந்தோனேஷியா, இந்தியா போன்ற ஆசியா கண்டத்து நாடுகளில் அரிசி(rice) பிரத்யோக உணவாக உருவெடுத்தது.
முந்தைய காலத்தில் அரிசியை ஊறவைத்து கழனியை வடித்து, உலை கொதித்த பின் அரிசியை வேக வைத்து சாதம் பக்குவம் அடைந்ததும் நீரை(water) வடித்து வடிகஞ்சியை தனியாக எடுத்து விட்டு, சாதம் தயாராகும். ஆனால், இன்று நாம் எலக்ட்ரிக் குக்கர், பிரஷர் குக்கர் போன்ற சாதனங்கள் வந்ததால் சாதம் செய்யும் முறை முற்றிலும் மாறியது.இதன் மூலம் நாம் பேரிழப்பு அடைந்துவிட்டோம். நாம் இழந்த வரப்பிரசாதம் கழனியும், வடிகஞ்சியும் தான்.
உரமிடாமலும், மேல்பூச்சு செய்யப்படாத அரிசியின் மூலம் பெறப்படும் கழனி (rice water)வடிகஞ்சியில் ஏகப்பட்ட அமினோ ஆசிட் மற்றும் பல வித சத்துப்பொருள்கள் உள்ளன.
கழனி (Rice water)
ஊற வைத்த அரிசியின் நீரே கழனி (rice water) ஆகும். இதனை ஒரு போதும் வீணாக்காமல் எவ்வாறு பயன்படுத்தலாம் …
- துர்நாற்றத்தை போக்க பெரிதும் உதவுதால், கோழி மீன் போன்ற அசைவ உணவை கழுவிய பின்பு கழனியில் அலசினால், ஒரு வாடையும் வராது.
- அதோடு, அசைவம் சுத்தம் செய்த இடத்திலும் தெளித்து விடலாம்.
- குழம்புக்கு புளியை தண்ணீரில் ஊறவைப்பதிற்கு பதில், கழனியில் ஊறவைக்கலாம். இதனால் கூடுதல் சுவையோடு, சீக்கிரம் புளி கரையும்.
- வாழைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகள் நறுக்கியதும் கறுத்துவிடும் . அதனை நறுக்கியது கழனியில் போட்டால் கருக்காது .
- துணி இட்லி சமைக்கும் வீட்டில் அந்த இட்டலி துணியை கழனியில் ஊறவைத்து கழுவினால் சுத்தமாக இருக்கும்.
- ரசம் வைக்க தண்ணீரில் புளியை காரைக்காமல், கழனியில் கரைத்தால் ரசம் கூடுதல் ருசியாக இருக்கும்.
- கழனியை தனியாக அரைமணி நேரம் வைத்தால், நீர் தெளிந்து காணப்படும். அடியில் கிடைக்கும் கெட்டியான கழனியை, கீரைக் கூட்டுக்கு சேர்த்தால் சுவையோடு சத்தான கீரை தயார்.
வடிக்கஞ்சி (Rice porridge ):
ஊறிய அரிசியை உலையில் கொதிக்க வேக வைத்த பின் வடித்து எடுக்கும் நீர் வடிக்கஞ்சி ஆகும். இதில் அதிகமான அளவு ஊட்டச்சத்து உள்ளது.
- வடிகஞ்சியை அசைவ சமையல் செய்து முடித்த பின் கைகழுவினால் எந்த வித வாடையும் போய்விடும்.
- வடிகஞ்சியை சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை போக்க முகப்பூச்சாக ( sun screen/ makeup ) பயன்படுத்தலாம். அதனோடு சருமத்தின் பி.எச் லெவல்யும் (pH level) சமமாக வைக்க உதவும்.
- வடிகஞ்சியை முகத்திற்கு பஞ்சில் ஊறவைத்து முகமுடியாக (face mask) பயன்படுத்தி வந்தால் முகப்பொலிவு பெரும்.
- வடிகஞ்சியை ஐஸ் ட்ரேயில் 6 மணிநேரம் வைத்து, அந்த கட்டியை முகத்திற்கு தேய்த்து வர தோல் சுருக்கம் குறைத்துவிடும்.இளமையான தோற்றம் பெற வடிகஞ்சியும், கழனியும் பெரிதும் உதவும்.
- தலை அலசும் போதும் இதனை கொண்டு ஊறவைத்து அலசினால், முடி உதிர்வு, பொடுகு போன்ற தொல்லை நீங்கி, நீளமான, பளபளக்கும் முடியை பெறலாம்.
- இதற்கு வளவளப்பு தன்மை உள்ளதால் காட்டன் துணியை ஊறவைத்து காயவைத்தால், காட்டனின் விறைப்பு தன்மை பெரும்.
- வெடிப்புகள் உள்ள பாதத்தை வடிகஞ்சியில் ஊறவைத்து அலசி வந்தால் பாதவெடிப்புகள் மறையும்.
மேலும் வாசிக்க : எதை சாப்பிடுவது? நீரிழிவு நோய்க்கான சிறந்த உணவுகள்
ஆக, பழைய முறையை கையில் எடுத்து, கையில் உள்ள எலக்ட்ரிகல் ரைஸ் குக்கர்க்கு குட் பை சொல்லி, ஆரோக்கியத்தோடு அழகையும் காப்பாற்றுவோம்.
படங்களின் ஆதாரங்கள் – பிக்ஸாபெ ஜிபி பேக்செல்ஸ்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.