Beauty

குளிர் காலத்தில் வரும் டெட் செல்களை வீட்டிலிருந்து எப்படி சரிசெய்யலாம்

Mohana Priya  |  Jan 2, 2019
குளிர் காலத்தில் வரும் டெட் செல்களை வீட்டிலிருந்து எப்படி சரிசெய்யலாம்

குளிர் காலம் வந்தாலே ஒரே பிரச்சணைதான். முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை குறைந்து முகம் வரண்டு போவதுடன் டெட் செல்களை(Dead cells) அதிகமாக காணப்படும். முகம் பார்ப்பதற்கே ஒரு வித சோர்வுடன் பொலிவிலந்து காணப்படும். குளிர் காலம் எவ்வளவு தான் க்ரீம் அப்பை பண்ணினாலும் சில நேரங்களில் இதற்கு தீர்வு காண முடியாது. அப்படி பட்ட நேரத்தில் நீங்கள் சோர்ந்து போய் உக்கார்ந்து விடுகிறீர்கள் தானே? கவலை வேண்டாம். குளிர் காலம் சருமம் பராமரிப்பதற்கு ஒரு நல்ல தீர்வு தர நாங்கள் உதவுகிறோம்.


நாங்கள் சொல்லும் இந்த குறிப்புகளுக்கு நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியது இல்லை. வீ்ட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தினாலே மிகவும் போதுமானதாக இருக்கும். வீட்டில் தினமும் கிடைக்கும் அன்றாட பொருட்களை பயன்படுத்தி உங்கள் முகத்தி்ல் இருக்கும் டெட் செல்களை(Dead cells) எளிதாக அகற்றலாம். நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள். கட்டாயம் பலம் கிடைக்கும்.

பப்பாளியும் சர்க்கரையும்
பப்பாளியும் சர்க்கரையும் முகத்தில் உள்ள டெட் செல்களை எளிதாக அகற்ற இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். அதற்கு 2 துண்டு பப்பாளியை எடுத்து கொண்டு நன்றாக மசித்து 1 ஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் இறந்த செல்களை உடனடியாக அகற்றி விடலாம்.

காபி பவ்டேர்
உங்களுக்கு உடனடி தீர்வை தருவதற்கு இந்த குறிப்பு நன்கு உதவும். இதற்கு தேவையானவை… தேன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் காபி பவ்டேர் 1 ஸ்பூன்

செய்முறை
முதலில் காபி பொடியுடன் தேனை நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இறந்த செல்கள் விரைவிலே நீக்கி விடும்.

ஆலிவ் எண்ணெய் முறை
குளிர் காலம் முகம் மற்றும் உடலின் நலத்தை பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பெரிதும் உதவும். 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை எடுத்து கொண்டு முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் கொடுக்கவும். பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலசவும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஸ்ட்ராபெர்ரி வைத்தியம்
பழங்களை கொண்டும் நம்மால் எளிதாக இறந்த செல்களை நீக்க முடியும். இதற்கு தேவையானவை… ஸ்ட்ராவ்பெர்ரி 2 தேன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்

செய்முறை
முதலில் ஸ்ட்ராவ்பெரியை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். ஸ்ட்ராவ்பெரியில் உள்ள வைட்டமின் சி, இறந்த செல்களை அகற்றி பொலிவை தரவல்லது.

முட்டையும், எண்ணெய்யும்
1 ஸ்பூன் சூரிய காந்தி எண்ணெய்யுடன்1 முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடம் கழித்து முகத்தை அலசவும். இதில் முட்டையின் வெள்ளை கருவிற்கு இறந்த செல்களை அகற்றும் தன்மை உள்ளதாம்.

ஆப்பிள் சிடர் வினிகர்
முகத்தின் இறந்த செல்களை அகற்ற இந்த எளிய முறை நன்றாக பயன்படும். 1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை பஞ்சால் எடுத்து கொண்டு ஒத்தடம் போன்று கொடுத்து, 10 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி விடும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Also read effective kitchen ingredients which can be used as healers

Read More From Beauty