
தண்ணீர் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் குடிநீருக்கு கூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலையில் கடந்த வாரம் சென்னையில் பெய்த மழை நீரோ (rain water) சாலையில் ஆறாக ஓடியது. இதனை பார்த்த சென்னை வாசிகள் அனைவருக்கும் கணிப்பாக மனது லேசாக கனத்திற்கும். வாடகைக்கு இருபவர்களுக்கோ சொந்த வீடா இருக்கு மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த என்றும், சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கோ ஏற்கனேவே உள்ள செலவை கவனிக்க முடியவில்லை, இதில் இதை வேறு செய்து தரமுடியுமா என்று புலம்பி கொண்டிருந்தனர்.
இதனிடையே மழைக்காலத்தில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வடிகால் கட்டமைப்புக்குள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் புது முயற்சியை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. இத்திட்டம் கணிசமான மழைநீர் பூமிக்குள் சென்று நிலத்தடி நீர்மட்டம் உயர உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை, செயல்படுத்த முடியாத இடங்களில் மழைநீரை, நீர்நிலைகளில் திருப்பி விடும் வகையில் வடிகால்கள் கட்டமைக்கப்படுகின்றன.
மேலும் படிக்க – முதல் மழை நம்மை நனைத்ததே..! சென்னையின் மழைக் கொண்டாட்டங்கள் !
அதிகாரிகள் ஒரு புறம் நடவடிக்கை எடுத்து வர, மற்றொரு புறமோ சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த தயானந்த் கிருஷ்ணா என்பவர் ரூ.250 செலவில் மழை நீரை சேகரித்து வருகிறார். தமிழகத்துக்கு தென் மேற்குப் பருவ மழை பெரிய அளவில் கை கொடுக்காது என்பது நன்கு தெரியும். ஆனால் தற்போது பெய்யும் சொற்ப மழை நீரை சேகரித்து வைக்கும் வழியை அவர் கண்டறிந்துள்ளார்.
இதற்காக அவர் பயன்படுத்திய பொருட்கள், இரண்டு பிவிசி வளைவு குழாய்கள், 3 அடி பிவிசி குழாய், வெள்ளை துணி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விளக்கமளித்த கிருஷ்ணன், தனது மொட்டை மாடியில் இருந்து மழை நீர் வெளியேற்றும் குழாயுடன் பிவிசி வளைவு குழாய், பிறகு நீண்ட பிவிசி குழாயை இணைத்து ஒரு அமைப்பை உருவாக்கினேன். குழாயின் இறுதியில் வாங்கிய வெள்ளை துணியை காட்டினேன். அதனை வடிகட்டி போல அமைத்து, அதன் அருகே 225 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம் ஒன்றை வைத்து விட்டேன்.
இதன் மூலம் மழை பெய்யும் போது 10 நிமிடத்தில் 225 லிட்டர் தண்ணீரை சேகரிக்கு முடியும் என கிருஷ்ணா தெரிவித்தார். முதலில் பெய்த மழை நீர் (rain water) தூசியாக இருக்க வாய்ப்புள்ளதால், அதனை பூமிக்குள் அனுப்பிவிட்டேன். பிறகு வந்த சுத்தமான தண்ணீரை வீட்டுப் பயன்பாட்டுக்குப் பிடித்துக் கொண்டேன் என்கிறார் கிருஷ்ணா மகிழ்ச்சியாக. இப்படி சேகரித்த மழை நீரைக் கொண்டு அவர் குடும்பத்தினர் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தி கொள்கின்றனர். பாத்திரங்களை சுத்தம் செய்ய, வீட்டைத் துடைக்க, துணி துவைப்பது உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு இந்த நீரை பயன்படுத்துகின்றனர்.
மேலும் படிக்க – ஒரு நாள் சென்னை மக்களுடன் தலைமறைவாக வாழ விரும்பும் தீபிகா!
சென்னையில் பெய்யும் பெரும்பாலான மழை நீர் (rain water) கடலில் கலந்து வீணாகிறது. பெரிய அளவிலும் முடியாவிட்டாலும், சின்னச் சின்ன அளவாச்சும் மழை நீரை சேமிக்க மக்கள் முயற்சிக்க வேண்டும் என் கிருஷ்ணன் வலியுறுத்துகிறார். குறைந்த செலவில் நிறைவாக மழை நீரை சேமிக்க வேண்டும் என்பதற்கு இவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இதுபோன்று செய்து வைத்துக் கொள்வதால் மழைக்காலங்களில் மின் துண்டிப்பு ஏற்படும் போதும் கூட தண்ணீருக்காக அலைய வேண்டியதிருக்காது என அவர் தெரிவித்தார்.
இதே போல சென்னையில் உள்ள சபரி டெரஸ் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஒரு மணி நேரத்தில் 30 ஆயிரம் லிட்டர் மழை நீரை சேமித்துள்ளனர். 25,000 சதுர அடி மேற்கூரையின் வாயிலாக மழை நீர் (rain water) சேமிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் 56 குடும்பங்கள் உள்ளன. இங்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படாததால் இவர்கள் ஒரு வருடத்தின் மூன்று மாதங்களுக்கு மழை நீரையே பயன்படுத்துகின்றனர். இவர்களை முன் மாதிரியாக எடுத்து கொண்டு அனைத்து மக்களும் மழை நீரை சேமிக்க ஆரம்பித்தாலே தண்ணீர் பற்றாக்குறையை நீக்கிவிடலாம்.
மேலும் படிக்க – மழையின்றி வறளும் பூமி .. மனிதர்களால் மாசடையும் காற்று.. உலக சுற்று சூழல் தினம்! இதில் நமது பொறுப்புகள் என்னென்ன..
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi