Health

பயணம் செய்யும் போது பொது / திறந்த கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு விரைவான உதவிக்குறிப்புகள்

Nithya Lakshmi  |  Mar 8, 2019
பயணம் செய்யும் போது பொது / திறந்த கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு விரைவான உதவிக்குறிப்புகள்

பெண்களாகிய (women) நாம் அனைவருக்குமே கழிப்பறை முக்கியமானதுதான். ஆனாலும் நாம் போகும் இடங்களில் வீட்டில் உள்ளபடியே எல்லா வசதிகளுடனும் கழிப்பறை அமையும் என்றதிற்கான உத்தரவாதம் இல்லை!பெரிய க்யூவில் நின்று பொறுத்து இருந்து போனாலும்,  பொது இடங்களில் சுத்தமாக இருப்பது கடினமே ! ஆகையால்,  கீழ் கூறி இருக்கும் விஷயங்களை தெரிந்துகொண்டு உங்கள் முக்கிய பாகங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

கழிவறை ஆப் (App)-

ஆம் ! இதுபோல் ஒன்று இருக்கிறது. நீங்கள் பயணம் (travel) செய்யும் இடம் எதுவாக இருந்தாலும், அங்கு பக்கத்தில் இருக்கும் கழிவறையை கண்டறிந்து உங்களுக்கு வழிகாட்டும் இந்த தொழில்நூட்ப கருவி. இனி நீங்கள் கழிவறை எங்கே என்று அவசரத்தில் வயிற்றுவலியுடன் தேடி செல்ல தேவை இல்லை.

வெட் வைப்ஸ் / டாய்லெட் ஸ்ப்ரே (wet wipes/spray) –

அதேபோல்,  பயணம் செல்லும் இடங்களில் உங்களுக்கு போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைப்பது சந்தேகம்தான். சமீபத்தில் நான் ஒரு உணவு விடுதிக்கு சென்றிருந்தேன். நகரத்தின் முக்கிய இடத்தில் இருந்தும், அங்குள்ள கழிவறையில் தண்ணீர் வரவில்லை. இதுபோல் போகும் இடங்களில் ஏற்படுவதை சமாளிக்க, டாய்லெட் (toilet) வைப்ஸ் அல்லது வெட் வைப்ஸ் அவசியம்.

அடுத்து, நீங்கள் வெஸ்டர்ன் டாய்லெட்டை இப்போதெல்லாம் பெரும்பாலான இடங்களில் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒன்றை பயன்படுத்தும் முன்பு,  டாய்லெட் சீட் சானிடைசர் (seat sanitizer) ஒன்றை எடுத்து செல்லுங்கள். இதை அந்த டாய்லெட் சீட்இல் ஸ்பிரே செய்த பிறகே பயன்படுத்தவும். இதனால் பெண்கள் , சில தொற்றுநோய்யை எளிதில் தவிர்க்கலாம்.

சிறுநீர் கழித்தல் சாதனம் –

இன்றைய காலத்தில், பெண்கள் நின்றுகொண்டே தங்களது கழிவறை வேலையை எளிதில் முடிக்க, உருவாக்கினதுதான் இந்த சிறுநீர் கழித்தல் சாதனம். இதை உபயோகித்தால்-

  1. நீங்கள் எங்கும் உட்கார தேவையில்லை.
  2. நொடியில் வேலை முடியும்.
  3. உடைகளை களற்றவோ அல்லது வேறு எந்த தொந்தரவும் வராமல் தவிர்க்கலாம்.
  4. இது உங்கள் கை பையில் எளிதில் எடுத்து செல்லலாம்.
  5. புதர்களில் ஒளிந்து போக தேவையில்லை.

துப்பட்டா –

எதற்கும் ஒரு துப்பட்டாவை (dupatta/shawl) கையில் வைய்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் பயணம் செய்யும் இடங்களில் மாயமாக உங்களிற்கு ஏற்ற ஒரு கழிவறை அமையுவது சாத்தியமில்லை. சமயங்களில் வெட்ட வெளிச்சத்தில் வெற்று நிலத்தில் அல்லது புதர்களில் போகவேண்டிய அவசியம் வரலாம். இதனால் நீங்கள் உங்கள் சிறுநீரை கட்டுப்படுத்தாதீர்கள். அது உங்களுக்கு பல விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகையால், ஒரு துப்பட்டாவை அந்த புதர்களில் திரைபோல் கட்டிவிட்டு போய் வாருங்கள் !

ஹாண்ட் சானிடைசர் (sanitizer) –

நான் எங்கு சென்றாலும் கை கழுவுவது என் பழக்கம். என் தோழிகள் என்னை கிண்டலாகவும் கேலியாகவும் பார்த்து பேசினாலும், என் கைகளை சுத்தமாக வைத்துகொல்வதுதான் எனக்கு பிடிக்கும். அதனால் என் கைப்பையில் ஒரு ஹாண்ட் சானிடைசர் இருந்துகொண்டேதான் இருக்கும்.இதேபோல், நீங்கள் தண்ணீர் இல்லாத நேரங்களில் உபயோகிக்க ஒரு சானிடைசரை மறக்காமல் உங்கள் பையில் வைத்துக்கொள்ளுங்கள்.

வெளியில்  சுகாதாரமான கழிவறை அமைவது கடினமே.இதற்கு பயந்து பயணத்தின்போது தண்ணீரை  குடிக்க மறந்து விடாதீர்கள். மேல்கூறியிருக்கும் விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொண்டு உங்கள் மனதை தயார்படுத்திக்கொண்டு செல்லுங்கள்.

சுத்தமாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்!

பட ஆதாரம்  – pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Health