Family

நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா? இதோ தாய்மார்களுக்கான வழிகாட்டிகள்!

Meena Madhunivas  |  Apr 25, 2019
நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா? இதோ தாய்மார்களுக்கான வழிகாட்டிகள்!

தாய்மை(parental) ஒரு அழகான அனுபவம். ஒவ்வொரு திருமணம் ஆன பெண்ணும் அடுத்து காத்திருப்பது நாம் எப்போது தாயாகப் போகிறோம் என்பதுதான். இந்த அழகான தருணம் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் முக்கியமானது. மேலும் அது என்றும் வசந்த நினைவுகளாக வாழ்நாள் முழுவதும் இருப்பது.

கர்ப்பகாலம் ஒன்பது மாதங்கள் என்றாலும், அதன் பின் தன் குழந்தையை ஒரு நல்ல மனிதனாக வளர்க்கும் வரை அந்த தாய்(parental) பெரிய பொறுப்பில் இருக்கிறாள். கர்ப்பகாலத்தில் கருவுற்றிருக்கும் பெண் தன் உடல் நலம் மற்றும் கருவில் இருக்கும் சிசுவின் உடல் நலம், என்று இரண்டிற்கும் சேர்ந்தவாறு உணவை எடுத்துக் கொள்கிறாள். பெரிதாக அவளுக்கு செய்ய வேண்டிய வேலைகள் இல்லை என்றாலும், குழந்தை பிறந்த பின் ஒரு புதிய தாயிக்கு அதிக கடமைகள், பொறுப்புகள், என்று பல  பட்டியலிட உள்ளன.

சொல்லப்போனால் ஒரு குழந்தை பிறந்த பின்தான் தாயிக்கு கடமைகள், பொறுப்புகள், மற்றும் வேலை சுமை அதிகமாக உள்ளது. அதனால் ஒரு பெண் கருவுற்றிருக்கும் போதே அடுத்த நிலையான தாய்மைக்கு(parental), அதாவது ஒரு தாயாய் தன் கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஓரலவிர்க்காயினும் தெரிந்து கொண்டு தன்னைத் தயார் படுத்திக் கொள்வது மிக முக்கியம்.

இத்தகைய முன்னதான நடவடிக்கைகள் உங்கள் வேலையை சுலபமாக்குவதோடு, எந்த சவால் நிறைந்த சூழல் வந்தாலும் அதனை எளிதாக நீங்கள் சமாளித்து விடும் வகையில் மாறிவிடும்.


புது தாயிக்கான குழந்தைகள் வளர்ப்பு குறிப்புகள்

இப்போது நீங்கள் ஒரு பெற்றோர், அதாவது ஒரு தாய்(parental). உங்கள் மனதில் பல கேள்விகள் வந்தவண்ணம் இருக்கும். உங்களுடன் குடும்பத்தின் மூத்தவர்கள் மற்றும் உறவினர்கள் இருந்தால், நிச்சயம் அவர்கள் உங்களுக்கு சில அறிவுரைகளை கூறுவார்கள். எனினும், அனேகமானவர்களுக்கு மேலும் சில குறிப்புகள் குழந்தை வளர்ப்பு குறித்து, அதிலும் ஒரு புது தாய் எப்படி குழந்தையை பராமரித்து வளர்ப்பது என்பதை பற்றி தகவல்களை தெரிந்து கொள்வதில் ஆவல் இருக்கும்.

உங்கள் சந்தேகங்களை தெளிவு படுத்தும் வகையில் உங்களுக்குத் தேவையான சில சுவாரசியமான மற்றும் முக்கிய குழந்தை வளர்ப்பு குறிப்புகள்  இங்கே பின்வருமாறு:

உங்கள் புது வரவை தெரிந்து கொள்ளுங்கள்
முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிறந்த குழந்தை எப்படி இந்த பூமியில் நடந்து கொள்ள வேண்டும் என்ற பட்டியலோடு வராது. அதனால் தாயாக நீங்கள்தான் உங்கள் குழந்தையின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். குழந்தை பார்ப்பதன் அர்த்தம், அதன் உடலில் ஏற்பட்டிருக்கும் வித்யாசமான தோற்றம், என்று பல உங்கள் கவனத்திற்கு உள்ளது.

குழந்தைக்குத் தாய்பால்(parental)
பிறந்த குழந்தைக்குத் தாய்பால்(parental) மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். எனினும், இதில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், எப்போதெல்லாம் தாய்பால்(parental) கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும் மற்றும், குழந்தைத் தொடர்ந்து அழுதாலும், எப்போது கொடுக்கக் கூடாது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தையை குளிக்க வைப்பது
இது ஒரு பெரிய சவால் நிறைந்த வேலை என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். உங்கள் குழந்தையை நீங்கள் குளியலுக்குத் தயார் படுத்தும் முன், எந்த நேரத்தில் குளிக்க வைக்க வேண்டும், தண்ணீரின் சூடு எவ்வளவு இருக்க வேண்டும், எந்த மாதிரியான குளியல் பொருட்களை பயன் படுத்த வேண்டும், குளித்த உடன் என்ன செய்ய வேண்டும் என்று பல விடயங்கள் உள்ளன.

குழந்தையின் ஆடை (நாப்பி பேட்)
இன்றைய காலகட்டத்தில் அனேக தாய்மார்கள்(parental) தங்களது குழந்தைகளுக்கு பருத்தி துணியை பயன் படுத்துவதை விட கடைகளில் கிடைக்கும் மற்றும் எளிதாக பயன் படுத்தக் கூடிய நாப்பி பேடுகளை அதிகம் பயன் படுத்துகிறார்கள். எனினும் உங்கள் குழந்தையின் சருமத்தின் நலன் கருதி நீங்கள் எத்தகைய அணையாடையை  உங்கள் குழந்தைக்கு பயன் படுத்த வேண்டும், மற்றும் எப்படி பயன் படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை தெரிந்து கொள்வது நல்லது.

அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது
நிச்சயம் இது மற்றுமொரு பெரிய சவாலாகத்தான் ஒவ்வொரு புதிய தாயிக்கும் இருக்கும். பிறந்த குழந்தை குறைந்தது 4 முதல் 6 மாத காலம் வரை அதிகமாக அழுது கொண்டே இருக்கும். இதன் காரணம் யாருக்கும் புரியாது. எனினும், நீங்கள் நன்கு உங்கள் குழந்தையை கவனித்து, அவன் அழுவதற்கான காரணத்தை புரிந்து கொண்டு அவனை சமாதானப் படுத்த முயற்சி செய்ய வேண்டும்.


குழந்தையை தூங்க வைப்பது எப்படி
ஒன்றை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். புதிய தாய்மார்கள்(parental), தங்கள் குழந்தை தூங்கும் போதுதான் சற்று தானும் கண்ணசர முடியும். பிறந்த குழந்தை தொடர்ந்து 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தூங்குவான். அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் அதிகம் தூங்காமல் உங்களுக்கு நைட் ட்யுட்டி போட்டு விடுவான். இப்படி இருக்க பகலில், நீங்கள் உங்கள் கணவருக்குத் தேவையான வேலைகளை செய்து அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அதனோடு சேர்ந்து வீட்டு வேலைகளை முடிக்க வேண்டும். மேலும், முக்கியமாக நீங்கள் ஏதாவது வீட்டு வேலையில் இருக்கும் போதுதான் அதிகம் அழத் தொடங்குவான் அல்லது உங்களுக்குத் தூங்காமல் வேலை வைப்பான். அதனால் பிறந்த குழந்தைகளை போதுமான அளவு எப்படி தூங்க வைப்பது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தையின் உடல் நலம்
பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுவது இயல்பு. எனினும் அதனை சரியாகப் புரிந்து கொண்டு தாய்(parental) கவனிக்க வேண்டும். சற்று அஜாக்கரதையாக விட்டுவிட்டால், விபரீதமாகிக்கூட விடலாம். அதனால் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கிரானா அல்லது ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று தாய்(parental) கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

தாயின் உடல் நலத்தின் மீது கவனம்
இதுவரை நீங்கள் எப்படி உங்கள் பிறந்த குழந்தையை ஒரு புதியத் தாயாய் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் அதற்க்கு இணையாக ஒரு தாயின் உடல் நலமும் மிக முக்கியம். தாய்(parental) நல்ல உடல் நலத்தோடு ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். அதனால், உங்களின் உடல் நலத்தின் மீதும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தாயின் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்:

உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்
குழந்தை பிறப்பதற்கு முன் நீங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்திருப்பீர்கள். ஆனால் தற்போது உங்கள் வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறி இருக்கும். அதனால் உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ள தவறக் கூடாது. உங்களுக்காக இங்கே சில குறிப்புகள் உங்களுக்காக:

o   அவ்வப்போது சரியான உணவு மற்றும் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

o   போதுமான உறக்கம் வேண்டும். உங்கள் குழந்தை உங்களை தூங்க விட மாட்டான் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் நீங்கள் ஒரு நாளைக்குத் தேவையான தூக்கத்தை பெற்றால் மட்டுமே உங்கள் மனம் மற்றும் சிந்தனை, அமைதியாகவும், தெளிவாகவும் இருக்கும். இது நீங்கள் மகிழ்ச்சியோடு வாழவும் உங்கள் குழந்தையை நன்கு பார்த்துக் கொள்ளவும் மிக முக்கியமாகத் தேவைப் படுகிறது

கணவன் மனைவி உறவு
எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள் கணவனுடனான உறவு பாதிக்கப் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் நடக்க மிக முக்கியம். குழந்தை பிறந்ததும் அனேகப் பெண்கள் தங்கள் குழந்தைக்கு அதிக நேரம் செலவிட்டு கணவனை கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் உங்கள் கணவருக்கு மன உளைச்சல் அல்லது வருத்தம் ஏற்படக் கூடும். இது நாளடைவில் உங்கள் திருமண வாழ்க்கையை பாதிக்கக் கூடும். அதனால், குழந்தையை கவனிப்பதோடு உங்கள் கணவருக்கும் போதுமான நேரத்தை நீங்கள் ஒதுக்க வேண்டும்.

உடற் பயிற்சி
குழந்தை பிறந்த பின் பெரும்பாலான பெண்கள் தங்கள் உடல் தோற்றம் மற்றும் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை. இது தவறான செயல். நீங்கள் குண்டாக இருக்குறீர்களோ அல்லது ஒல்லியாக இருக்கிறீர்களோ, உடற் பயிற்சி என்பது உங்கள் உடல் விரைவாக ஆரோக்கியமான நிலைக்குத் திரும்ப உதவியாக இருக்கும். அதனால் நீங்கள் குழந்தை பிறந்த சில நாட்களுக்கு பின் உடற் பயிற்சி மற்றும் யோகா செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.


புதிய தாய்மார்கள்(parental) தவிர்க்க வேண்டிய தவறுகள்

·        குழந்தைக்கு இயல்பை விட புதிதாக எது நடந்தாலும் பீதி அடைவதை தவிருங்கள். நிதானமாக யோசித்து செயல் படுங்கள்

·        குழந்தையை சிறிது நேரமாவது அழ விடுங்கள். உடனடியாக அவன் அழுகையை நிறுத்த முயற்சி செய்யாதீர்கள்

·        தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை கட்டாயமாக எழுப்பி தாய்பால்(parental) தராதீர்கள். அவ்வாறு கொடுக்கும் உணவு சரியாக ஜீரணிக்காது

·        குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி கொடுக்க வேண்டும். நிதானிக்க வேண்டாம் 

·        குழந்தை முன் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியோடும் அன்பாகவும் நடந்து கொள்ளுங்கள். சண்டை போடாதீர்கள்.

·        யார் எதை கூறினாலும் சிந்திக்காமல் உடனடியாக செயல் பட முயற்சி செய்யாதீர்கள்

·        முடிந்த வரை வேலைக்கு செல்லும் பெண்கள், குழந்தை பிறந்த 6 மாத காலத்திற்காவது குழந்தையிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தாயின் அரவணைப்பு பிறந்த குழந்தைக்கு மிக முக்கியம்

·        கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளியல் சோப் மற்றும் ஷாம்பூக்களை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரை வீட்டிலேயே இயற்கையாக தயார் செய்த ஸ்நானப் பொடியை பயன் படுத்துவது நல்லது

·        முடிந்த வரை உங்கள் குழந்தையுடன் முழு நேரமும் நீங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பிறரிடம் உங்கள் குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு வெளியே போகாதீர்கள்.

புதியத் தாய்மார்களுக்கான(parental) இந்த குறிப்புகள் நிச்சயம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம். முன்பு போல் இல்லாமல் இன்றைய தாய்மார்களுக்கு(parental) அதிக தகவல்கள் பெற கூகிள் உள்ளது. அதனால் உங்களுக்கு உதவி செய்யவும், சில குறிப்புகள் கூறவும் பெரியவர்கள் அருகில் இல்லை என்று வருத்தப் படாதீர்கள். வலைதளங்களில் உங்களுக்குத் தேவையான தகவல்களை சேகரித்து, சிந்தித்து, பின் உங்களுக்குத் தேவையான குறிப்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு செயல் படுத்துங்கள்.

கோடையில் முடி கொட்டுவதை தடுக்கும் எளிய தெரபிகள்: வீட்டிலேயே செய்யலாம்!

தாடி பாலாஜிக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

 உங்க காதலருக்கு சும்மா இருக்கி அணைச்சு நச்சுனு ஒரு கிஸ் கொடுக்க ரெடியா!

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Family