
அழகிய செல்பிக்களை எடுப்பதற்காகவே லட்சக்கணக்கில் செலவு செய்து மொபைல் வாங்க வேண்டியுள்ளது. ஆனாலும் இன்னமும் யாருக்கும் மிக சரியாக செல்பி எடுப்பது எப்படி என்று தெரியவில்லை.
இதற்காகவே ஹானர் என் 9 வகை போன்கள் சந்தைக்கு வந்துள்ளன. இந்த வகை போனைப் பயன்படுத்தி கண்கவரும் அழகிய செல்பிக்களை எப்படி எடுப்பது என்று பார்க்கலாம்
பட்ஜெட் ஆன்ராய்ட் போன்
இன்ஸ்டாகிராமில் விதம் விதமாக புகைப்படம் எடுத்து கலக்கும் மற்றவர்களைப் போல நம்மாலும் ஜொலிக்க முடியும் வகையில் குறைந்த பட்ஜெட்டில் தரமான போன்களை தயாரிக்கிறது ஹானர் நிறுவனம். அதில் செல்ஃபி மோகம் கொண்டவர்களுக்காகவே உருவானது தான் ஹானர் 9n ரக போன்கள்.
16 பிக்ஸல் கொண்ட இதன் செல்பி முன் காமெரா எந்த வகையான ஒளியிலும் நம்மை அழகாகக் காட்டும் வகையில் உருவாக்கபட்டிருக்கிறது.
இதில் மற்ற உயர் ரக போன்களைப் போலவே 3D ஒளிக்கற்றைகள், போர்ட்ரைட் மோட் மற்றும் போக்கே மோட் போன்றவை ஏற்பட்டுள்ளன. மேலும் இதில் உள்ள இரண்டு முன் காமிராக்கள் HDR, டைம் லாப்ஸ் பர்ஸ்ட் மோட் போன்றவற்றை எடுக்க உதவுகிறது. இரண்டு காமேராக்கலுமே HD வீடியோக்களை எடுக்க உதவுவது இதன் முக்கிய அம்சம்.
வெளிச்சத்திற்கு வாருங்கள்
செல்பி எடுப்பதற்கான அடிப்படை விதிகளில் ஒன்றுதான் குறைந்த வெளிச்சத்தில் படமெடுக்க கூடாது என்பது. ஆகவே நன்கு வெளிச்சம் இருக்கும் இடத்தில நீங்க செல்பி எடுத்தால் உங்கள் அழகு கூடுதலாக பளீரிடும். ஒருவேளை நீங்கள் குறைந்த ஒளியில் படமெடுக்க விரும்பினால் அதற்க்கும் ஹானர் 9n உதவுகிறது. ஒரு அழகான லிட் பிரேம் வசதியில் உங்களைக் குறைந்த ஒளியிலும் துல்லியமாக காட்ட ஹானர் 9n போன்கள் உதவி செய்கின்றன.
மையப் புள்ளியாக நீங்கள் இருக்க வேண்டும்
அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் மையப் புள்ளியாக நீங்கள் மாற வேண்டும் எனில் ஹானர் 9n அதற்கொரு வழி வைத்திருக்கிறது. எப்போதும் மையத்தில் உங்கள் முகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். சில சமயம் செல்பி கிளிக் செய்யும் சமயங்களில் நம் முகம் இடம் மாறி ஓரத்திற்கு போய் விடும். அவ்வாறு போகாமல் இருக்க அதிலேயே ஆட்டோ கிளிக் வசதி இருக்கிறது. இதனால் கை நடுக்கம் பற்றி இடமாற்றம் பற்றி கவலைப்படாமல் நிம்மதியா புகைப்படம் எடுக்கலாம்
உங்களுக்கும் போனுக்குமான இடைவெளி
சில சமயம் பருமனாக இருப்பவர்கள் தங்கள் உருவம் அதில் அப்படியே வருவதை விரும்ப மாட்டார்கள். அந்த மாதிரி சமயங்களில் போனுக்கும் உங்களுக்குமான இடைவெளி கொஞ்சம் அதிகமாக இருந்தால் நீங்கள் ஒல்லியாக தெரிவீர்கள். மேலும் இதற்கு செல்பி ஸ்டிக் உபயோகிப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.
பின்னணி மிக முக்கியம்
எந்த வகையான புகைப்படங்கள் எடுத்தாலும் அதில் முக்கியமான விஷயமாக பார்க்கபடுவது உங்கள் பின்னால் இருக்கும் இடம் அழகானதாகவோ ஈர்க்கும்படியோ இருப்பதாக பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த முறை செல்பி எடுக்கும்போது அழகிய சுவர்களின் பின்னணியில் அல்லது கதவுகளின் பின்னணியில் எடுத்துப் பாருங்கள். இதனை மேலும் அழகாக்குகிறது ஹானர் 9n போனின் 3D வசதி. இதில் பின்னணியை நமது விருபதிர்கேற்றபடி மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி உள்ளது.
இறுதியானதும் முக்கியமானதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்
ஹானர் 9n போனைப் போலவே நீங்களும் உங்கள் மீது உறுதியோடு தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டியது மிக முக்கியம். புகைப்படத்தில் வெளிப்படும் புன்னகையும் மற்றும் பிம்பமும் நிச்சயம் உங்களுடையதாக மட்டுமே இருக்க வேண்டும். அது மட்டுமே உங்களை விலைமதிப்பிலாத சந்தோஷத்தில் ஆழ்த்தும். உங்களில் ஒரு பாகம் தானே செல்பி !
இந்த ஹானர் 9n ரக போன்கள் பிளிப்கார்டில் மட்டும் 11,999 என்கிற விலையில் கிடைக்கிறது, மற்ற வலைதளங்களில் இந்த விலை வேறுபடலாம்.
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi