Beauty

‘நோ – மேக்கப்’  மேக்கப் லுக் அடைவதற்கான யுத்திகள்

Nithya Lakshmi  |  Apr 11, 2019
‘நோ – மேக்கப்’  மேக்கப் லுக் அடைவதற்கான யுத்திகள்

இப்போதெல்லாம் அனைவரும் இந்த “நோ மேக்கப் ” (சிம்பிள் மேக்கப்) தோற்றத்தை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். இதில் ஒரு எளிமையான தோற்றத்தை அடையலாம். வேடிக்கை என்னவென்றால் .. மேக்கப்  செய்தும் செய்யாததுபோல் ஒரு தோற்றம் அளிக்கும் இந்த “நோ மேக்கப் ” லுக் ! இது இன்றைய பெண்மணிகளுக்கு மிக அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. இதை எவ்வாறு பூசுவது என்று நாங்கள் உங்களுக்கு படி படியாக விளக்கம் அளிக்கிறோம்.

முகம் –

முதலில் உங்கள் முகத்தை கழுவிக்கொண்டு உங்கள் நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனை பூசுங்கள். இதை ஒரு பிரஷால் பூசலாம் அல்லது உங்கள் விரல்களால் இலகுவாக தோன்றும் அளவிற்கு பூசுங்கள். பிறகு, ஒரு கன்சலரை தேவைக்கேற்ப உங்கள் பருக்கள் , கரும் புள்ளிகளின் மீது பூசிக்கொண்டு இரண்டையும் ப்ளேன்ட் செய்யவும். ஹைலைட்டர்  மற்றும் ப்ளஷை தவிர்க்கவும்.

இதற்கு POPxo பரிந்துரைக்கிறது – மெபிளீன் மாட் பவுண்டேஷன் (Rs.425) , வெட் அண்ட் வைல்ட் பவுண்டேஷன் (Rs.449), பியூட்டி ப்ரஷ் (Rs.494)

 

கண்களிற்கு –

எப்போதுமே கண்களை பெரிதாக காட்ட பூசும் மஸ்கேராவை பூசிக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் ஐ லைனரை கண்களிற்கு மேல் பூசாமல் கண் இமைகளின் உள்பகுதியில் பூசுங்கள். இது உங்கள் கண்களை இன்னும் அழகாகவும் பெரிதாகவும் காட்டும். இதுவே ஒரு நுட்பமான ஒப்பனையின் உத்தி ! புருவங்களில் .. ஒரு மஸ்காரா அப்ளிகேட்டரை பயன்படுத்தி இலகுவான இறகுகள் போல் பூசுங்கள்.

இதற்கு POPxo பரிந்துரைக்கிறது – மெபிளீன் ப்ளாக் வாட்டர்ப்ரூப் மஸ்காரா (Rs.325),லாக்மீ ஐகோனிக் காஜல்  (Rs.152)

Also Read Bridal Makeup Artist In Chennai In Tamil

உதட்டில் –

பளிச்சிடும் உதட்டு சாயத்திற்கு நேர்மாறாக நுட் , வெளிர் கோரல் நிறம்  அல்லது இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை பூசுங்கள். இது மெட் அல்லது ஒரு இலகுவான லிப்ஸ்டிக்காக இருக்கலாம். லிப் லைனர் மற்றும் கிளாஸ்ஸி லிப்ஸ்டிக்கை தவிர்க்கவும்.

இதற்கு POPxo பரிந்துரைக்கிறது – லாக்மீ 9 to 5 மாட் மூஸ் லிப் கலர் (Rs.600),  பாபி பிரவுன் காபனா கிரஷ்ட் லிப் கலர் (Rs.1800)

மேலும் படிக்க – யாரும் உங்களிடம் கூறாத சில ஒப்பனை குறிப்புகள்

நோ மேக்கப் (No – makeup) லுக்கை பெற சில டிப்ஸ் (tips/hacks) –

இந்த தோற்றத்தை நீங்கள் இன்னும் எளிமையாக கட்சிதமாக அடைய சில டிப்ஸ் – 

1) முதலில் உங்கள் முகத்தை இதற்கு தயார் செய்யுங்கள்.ஏதேனும் ஒரு பேஸ் மாஸ்க்கை (face mask) அணிந்து ஆரம்பியுங்கள். சருமத்தில்  போதுமான அளவிற்கு ஈரப்பதம் இருக்கவேண்டும்.

2) டியூ (dew) பினிஷ் பெற ஏதேனும் ஒரு பேஸ் மிஸ்டை (face mist) பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தை இன்னும் பளபளப்பாக இயல்பாக  காட்டும்.

3) பவுண்டேஷன் மற்றும் கன்சீலரை குறைவாக பயன்படுத்தவும்.

4) லிப்ஸ்டிக்க்கை பூசிக்கொண்டு டிஸ்ஸு பேப்பரில் ஒத்தி எடுங்கள்.

5)முதலில் ஒரு பிரைமரை பூசினால் , முகத்தில் பருக்கள் மற்ற குறைகளை மறைத்து உங்கள் முகம் உள்ளிருந்து ஜொலிக்கும்!

மேலும் படிக்க – ஒளிரும் சருமத்தை பெற சில அழகு குறிப்புகள் (வீட்டு வைத்தியம்) !

பட ஆதாரம்  – இன்ஸ்டாகிராம்  , இன்ஸ்டாகிராம்  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Beauty