Health

தும்மல், இருமல் போன்ற இயற்கை உந்துதல்களை அடக்கினால் வரும் துன்பங்களும் தீர்வுகளும்

Nithya Lakshmi  |  Sep 13, 2019
தும்மல், இருமல் போன்ற  இயற்கை  உந்துதல்களை அடக்கினால் வரும்  துன்பங்களும் தீர்வுகளும்

இன்றைய கால கட்டத்தில் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு பிரச்சனையும் நமக்கு ஒவ்வொரு நோயினால் ஏற்படுகின்றது. நோய் வரும்போதும், வருவதற்கு முன்னும் சில அறிகுறிகளினால் நமக்குத் தெரியவரும். அப்படி நமக்கு தெரியவரும் சமயத்தில், நோய் ஆரம்பிப்பதற்கு முன்பே சின்ன சின்ன பிரச்சனைகளினால் நமக்கு அறிவுறுத்தும். அப்போது அலட்சியம் செய்யாமல் அவற்றை இயற்கை முறையில் சரி செய்து (வைத்தியம்) கொண்டால் பெரிய நோயில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். இயற்கையாகவே நம் உடலில் எந்தவொரு அந்நிய உயிர் கிருமி வந்தாழும் அதை வெளியேற்றத்தான் உடல் முனையும். அப்படி முனையும் செயல்தான் தும்மலும், இருமலும். அதை அடக்கினால், நோய்க் கிருமி உடலில் பரவி தன் வேலையை ஆரம்பித்து விடும்.

தும்மல், இருமல் (cold, cough) போன்ற இயற்கையாக தோன்றும் உந்துதல்களை சூழ்நிலை காரணமாகவோ அல்லது வேறு ஏதாவதொரு காரணமாக அடக்கினால் என்ன என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பார்க்கலாம்.

முதலில் தும்மல், இருமல் ஏன் வருகிறது ?

அந்நிய உயிர் கிருமிகள், எரிச்சல் ஏற்படுத்தும் நுண்ணுயிர் கிருமிகள் உங்கள் மூச்சுக் குழாயில் இருப்பின் அது தும்மலாக தோன்றி சளியுடன் சேர்ந்து வெளியே வரும். அதுதான் தும்மல். இதுவே தொண்டையில் சிக்கி இருந்தால் இருமலாக வெளியேற்ற முற்படுகிறது. அந்நிய உயிரினங்கள் உங்கள் உடலில் புகும்போது வெளியேற்றும் இயற்கையான செயல்தான் தும்மல், இருமல்.

Pixabay

அதை அடக்க முற்பட்டால் என்னவாகும்?

நீங்கள் மூக்கை மூடி உங்கள் தும்மலை அடக்க முற்படுகிறீர்கள் என்றால், அந்த உந்துதல் உங்கள் காதுகளை பாதிக்கும், உங்கள் கண்களை பாதிக்கும். உங்கள் தொண்டையை பாதிக்கும், ஏன் உங்கள் மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களையும்கூட பாதிக்கும்! 

ஒரு முக்கியமான சந்திப்பு, அமைதியாக இருக்க வேண்டிய இடம் இப்படியான நேரத்தில் அடக்கித்தானே ஆக வேண்டும் என்கிறீர்களா? கடவுள் நமக்கு இயற்கையாக கொடுத்த ஒரு பாதுகாப்பு வழிமுறை. அதன் பின் விளைவுகள் மிகவும் கொடுமையாக முடியலாம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, உங்கள் முக்கிய சந்திப்புகளின் போது கையில் ஒரு கைக்குட்டை வைத்துக்கொள்ளுங்கள் அல்லது முடிந்தால் சந்திப்பை சிறுது தள்ளிப்போடுங்கள்.

தும்மலை இயற்கையாக எப்படி கட்டுப்படுத்துவது ?

Pixabay

  1. ஆவி பிடிப்பது : ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பின் அதில் சிறிது சுத்தம் செய்த புதினா இலைகளைப் போட்டு ஆவி பிடியுங்கள். தும்மல் உடனடியாக சரியாகி விடும்.
  2. புளிப்பான பழங்கள் : ஆரஞ், லெமன் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. இது சளியை எதிர்கொள்ளும் சக்தியை உங்களுக்கு கொடுக்கும்.
  3. மல்லி காபி : மல்லி விதைகளை 2 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு இஞ்சி 1 இன்ச் துண்டை சுத்தம் செய்து தோள் நீக்கி அரைத்துக் கொள்ளுங்கள், பின்பு 1 டம்ளர் தண்ணீரில் இதை கலந்து சிறிது நேரம் பச்சை வாசனை போக கொதிக்க விடுங்கள். அதனை வடிகட்டி, அதோடு பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து தூங்குவதற்கு முன் பருகி வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  4. இஞ்சி : இஞ்சி உடலில் நச்சுப்பொருள் சேராமல் தடுப்பதற்கும், இரத்தத்தம் உறையாமல் இருக்கவும் பயன்படுகிறது. 3 இன்ச் இஞ்சித் துண்டை சுத்தம் செய்து தோள் நீக்கி அரைத்து, அதோடு தேன் கலந்து கொதிக்கும் நீரில் போட்டு தூங்குவதற்கு முன் பருகி வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  5. நெல்லிக்காய் :நெல்லிக்காய் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் கனியாக கருதப்படுகிறது. நெல்லைகாய்யை அப்படியே சாப்பிட நிறையபேர் கஷ்டப்படுவார்கள். அதை ஆவியில் வேகவைத்து, கொட்டைகளை நீக்கிவிட்டு, வெயிலில் உலர்த்தி வைத்துக்கொண்டு, அவ்வப்போது சாப்பிடலாம்.
  6. தேன் : குழந்தைகளுக்கு தேனில் மிளகுத் தூளை சேர்த்து சாப்பிடக்கொடுத்தால் தும்மல் நின்றுவிடும்.
  7. கருப்பு ஏலக்காய் : வாசனை மிகுந்த கருப்பு ஏலக்காயை ஒரு நாளில் இரண்டு மூன்று முறை வாயில் போட்டு மென்றால் தும்மலில் இருந்து விடுபடலாம். மூச்சுக் குழாயில் ஸ்வாசம் சீராக செல்ல கருப்பு ஏலக்காய் எண்ணை மசாஜ் உதவுகிறது.
  8. துளசி : துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்துவிட்டு வெறுமனே சாப்பிடலாம். அதன் இலைகளை கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஆறவைத்து பருகினால், நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். 

இருமலை எப்படி இயற்கையாக கட்டுப்படுத்துவது ?

Pixabay

  1. மஞ்சள் பால் : உங்கள் தொண்டையில் இருக்கும் கிருமிகளை விரட்ட 1 டம்ளர் பாலுடன் அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து தினமும் இரண்டுமுறை குடித்து வந்தால் இருமல் குறையும்.
  2. இஞ்சி+சோம்பு+பட்டை : 1 துண்டு இஞ்சி, கால் தேக்கரண்டி சோம்பு, ஒரு துண்டு பட்டை ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகினால் இருமல் நீங்கும்.
  3. உலர் திராட்சை : சிறிது உலர்ந்த திராட்சைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் இருமல் குறையும்.
  4. மசாலா டீ : அரை தேக்கரண்டி இஞ்சிப் பொடி, ஒரு துண்டு பட்டை, சிறிது கிராம்பு ஆகியவற்றை கொண்டு மசாலா டீ செய்து வெதுவெதுப்பாக பருகினால் இருமல் குறையும். 
  5. மிளகு: சாப்பிட்ட பிறகு அரை தேக்கரண்டி மிளகுத்தூளை நெய்யில் கலந்து உட்கொண்டால் இருமல் வராது.
  6. மாதுளை : மாதுளை ஜூஸுடன் இஞ்சிப் பொடியை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் குறையும்.
  7. தேன் & அதிமதுரம் : கால் தேக்கரண்டி தேன், கால் தேக்கரண்டி அதிமதுரம், கால் தேக்கரண்டி பட்டை ஆகியவற்றை கலந்து தண்ணீரோடு பருகி வந்தால் இருமல் குறையும்.
  8. பூண்டு : சிறிது பூண்டை எடுத்து தோள் உரித்து, பின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகினால் தும்மல் நீங்கும்.                                  

மேலும் படிக்க – நல்ல உடல் வாகோடும், ஆரோக்கியத்தோடும் வாழ சில இரகசிய குறிப்புகள்!

பட ஆதாரம் – Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Health