Health

பெண் உறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியங்கள் !

Nithya Lakshmi  |  Jan 2, 2020
பெண் உறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய சில எளிய  வீட்டு வைத்தியங்கள் !

ஒரு அசௌகரியமான, சங்கடப்பட வைக்கும் நிலைதான் பெண் உறுப்பில் ஏற்படும் அரிப்பு(vaginal itching). நோய் தொற்றினால் உண்டாகும் இந்த பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ள வீட்டுத் தீர்வுகளைப் பார்க்கலாம்.

1. கெமோமைல்(chamomile)

பழங்காலத்து மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை கெமோமைல். சமோமைல் எண்ணெய் பெண் உறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்யும். கெமோமில் பற்றி தெரிந்து கொள்ள இதை படிக்கவும்.

இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் ஒரு தேக்கரண்டி கெமோமைல் பொடியை போட்டு மேலும் 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடுங்கள். அது குளிர்ந்தது, 4 அல்லது 5 துளிகள் டீ ட்ரீ எண்ணெய் சேருங்கள். தினமும் இரண்டுமுறை பெண் உறுப்பை இந்த தண்ணீர் கொண்டு கழுவுங்கள். ஒருவாரம் இப்படி செய்து வந்தால், விரைவில் அரிப்பு குணமாகி விடும்.

2. தயிர் அல்லது யோகர்ட்

Shutterstock

ப்ரோபயோடிக் தன்மை கொண்ட சுத்தமான தயிர் அல்லது யோகர்ட்டில், நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை வளர்க்கும் தன்மை உண்டு. அதனால் பெண்ணுறுப்பில் pH அளவுகள் சீராக இருக்க வைக்கும். அடிக்கடி தொல்லை செய்யும், நோய்த் தொற்றை நீக்கிவிடும். 

அரிப்பினால் ஏற்படும் எரிச்சலுக்கு இதை பூசிக்கொண்டால், எரிச்சல் குறைந்து, பாக்டீரியா மற்றும் ஃபங்கசை எதிர்த்து வேலை செய்யும். சக்கரை இல்லாத தயிர் அல்லது யோகர்ட்டை சாப்பிட்டால் கூட நல்ல பலன் கிடைக்கும். 

3. வேப்பிலை

வேப்ப இலைகளில் ஆன்டி-ஃபங்கல் தன்மை உடையது. கேண்டிடா உருவாவதைத் தடுக்கக் கூடியது. இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மையும் உண்டு என்பதால், அரிப்பிற்கு நல்ல மருந்தாகும்.வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி, தினமும் பெண்ணுறுப்பை கழுவிக்கொள்ளலாம். 

வேப்பெண்ணை கிடைக்குமெனில் அதையும் தண்ணீரில் கலந்து கழுவ பயன்படுத்தலாம்.வேப்ப இலையின் கொழுந்தை காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் சிறிது உண்டு வந்தால், மூன்று நாட்களில் குறுகுறு அரிப்பு நின்று விடும்.

4. கற்றாழை

Shutterstock

கற்றாழையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. சுத்தமான கற்றாழை ஜெல் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஃபங்கல் தன்மை ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரித்து, ஈஸ்ட் உருவாதை உடலுக்கு உட்புறத்தில் இருந்து தடுக்கும். 

ஏதாவதொரு பழச்சாறில், இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் கலந்து அரைத்து உட்கொள்ளலாம். 

5. பூண்டு

பூண்டில் ஆன்டி-மைக்ரோபையல் தன்மை உள்ளது. பல வகையான ஃபங்கஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் சக்தி கொண்டது.பூண்டை அரைத்து அதன் சாறை தண்ணீரில் கலந்து குளிப்பதற்குமுன் பெண்ணுறுப்பை கழுவிக் கொள்ளலாம். அல்லது, பூண்டு எண்ணெய்யை வைட்டமின் ஈ எண்ணெய்யோடு கலந்து பூசிக்கொள்ளலாம். பத்து நிமிடங்களுக்குப் பின் கழுவி விடுங்கள்.

6. தேங்காய் எண்ணெய்

Shutterstock

தேங்காய் எண்ணெயில் ஆன்டி-ஃபங்கல் தன்மை உள்ளதால், கேண்டிடா(candida) என்று பொதுவாகத் தோன்றும் ஃபங்கசை எதிர்த்து வேலை செய்யும். சுத்தமான சருமத்திற்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்யை தடவிக் கொள்ளலாம். சிறிது சூடு செய்தும் பயன்படுத்தலாம். தண்ணீரோடு கலந்து கழுவுவதற்கு பயன்படுத்தலாம்.

7. ஆப்பிள் சிடர் வினீகர்

இதில் ஆன்டி-ஃபங்கல் தன்மையும், பெண்ணுறுப்பில் pH அளவுகள் சீராக இருக்கவும் உதவுகிறது. நல்ல பாக்டீரியாவை அதிகரித்து, ஈஸ்ட் உற்பத்தியை நசுக்குகிறது. ஒரு கோப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினீகரை கலந்து பெண் உறுப்பை (யோனி) கழுவலாம். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை இப்படி பயன்படுத்த வேண்டும். 

மேலும், குளிக்கும்போது தண்ணீரில் கலந்து குளிக்கலாம். ஒரு டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரில் இந்த வினீகரைக் கலந்து, அந்த நீரில் அமர்ந்து பெண் உறுப்பை நன்றாக சுத்தம் செய்யலாம். 

8. க்ரீன் டீ

Shutterstock

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை உள்ளது. அது நோய்த்தொற்றை எதிர்த்து போராடும். தினமும் க்ரீன் டீ பருகுவதால், நல்ல மாற்றத்தை பார்க்கலாம். 

பெண்ணுறுப்பில் ஏற்படும் அரிப்பை எப்படி தடுப்பது ?

Shutterstock

  1. ஜிம் அல்லது நீச்சலுக்கு சென்றால், பயிற்சி முடிந்ததும் விரைவாக உடைகளை மாற்ற வேண்டும்.
  2. பெண்ணுறுப்பில் சென்ட், ஸ்பிரே, லோஷன் போன்றவற்றை தவிர்க்கலாம். மேலும், சோப்பு பயன்படுத்தி கழுவாதீர்கள். அவை எரிச்சலை ஏற்படுத்தி, பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவற்றை அதிகரிக்கும். 
  3. கழிவறையை பயன்படுத்திய பிறகும், குளித்த பிறகும் ஈரம் இல்லாமல் பெண்ணுறுப்பை காய வைக்க வேண்டும். 
  4. இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடாதீர்கள். 
  5. மிகவும் தேவை ஏற்படும்போது மட்டும் ஆன்டி-பயோடிக் மருந்துகளை சாப்பிடுங்கள். இல்லையென்றால், அதுவே உங்கள் உடலில் பாக்டீரியா, ஈஸ்ட் பெறுக வழிவகுக்கும்.
  6. இறுக்கமான ஆடை அணியாமல், பருத்தியாலான உள்ளாடைகளை அணியலாம்.

உங்கள் ஆரோக்கியத்தை திரும்ப பெற,  இந்த எளியமுறை வீட்டு வைத்தியம்/தீர்வுகளை (home remedies) முயற்சி செய்து பாருங்கள். இருப்பினும், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போதோ, பால் கொடுக்கும் தாய்மாராக இருந்தாலோ, அல்லது நீரழிவு நோய் உள்ளவராக இருந்தால், வீட்டுத் தீர்வை ஒரு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யக்கூடாது.

மேலும் படிக்க –  அந்த’ இடத்தில் இருக்கும் கருமையால் கவலையா? இரண்டே வாரங்களில் அதனை போக்கும் சில எளிய தீர்வுகள் !

பட ஆதாரம்  – Shutterstock 

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்

Read More From Health