Lifestyle

அன்பென்றாலே அம்மா : உங்கள் அம்மாவுக்கு ஏற்ற 23 சிறந்த தனித்துவமிக்க அன்னையர் தின அன்பளிப்புகள்

Nithya Lakshmi  |  May 2, 2019
அன்பென்றாலே அம்மா : உங்கள் அம்மாவுக்கு ஏற்ற 23 சிறந்த தனித்துவமிக்க அன்னையர்  தின அன்பளிப்புகள்

ஒரு அன்னையின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. அன்னையின் அன்பிற்கு வேறொன்றும் ஈடாகாது என்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். தாய்மையின் பாசம் தூய்மையான ஒன்றாகும். உங்களுக்காக என்னேரமும் நல்லதை நினைத்துக்கொண்டே இருக்கும் உங்கள் அன்னையை வாழ்த்த நிச்சயம் ஒரு நாள் மட்டும் போறாது! இருப்பினும் இந்த அன்னையர் தினத்தன்று (mothers day) ,அவர்களுக்கு நீங்கள் பரிசளிக்க (gifts) சில சிறந்த பரிசுகளின் பட்டியலை இங்கு அளிக்கிறோம்.

உடனடியாக வாங்கி விடுங்கள்!

இது ஸ்டைலான அம்மாக்களுக்கு – 

இப்போதெல்லாம் அம்மாக்களும் பிள்ளைகளுடன் ஸ்டைலாகவும் அழகாகவும் தோன்றுகிறார்கள். உங்கள் அம்மாவும் இது போல் என்றால், இந்த பட்டியலில் இருந்து உங்கள் கிப்ட்டை தேர்ந்தெடுங்கள் !

1. அழகிய முத்துக்கள்

உங்கள் அம்மாவிற்கு தங்க நகைகள் அணிந்து அலுப்பாக இருந்தால், இதுபோல் ஒரு முத்து செட் வாங்கி கொடுங்கள். இது அவர்களின் பாணியை மேம்படுத்தும்.

POPxo பரிந்துரைக்கிறது – சவேரி வைட் அண்ட் ஆன்ட்டிக் கோல்ட் டொனேட் ஜெவெள்ளேரி ( Rs 699)

2. கிளாஸி ஹான்ட் பாக்

தனது அணைத்து ஆடைகளுக்கும் ஒத்து போகும் அளவிற்கு, அதே நேரம் அணைத்து தேவைப்படும் பொருட்களையும் வெளியில் செல்லும்போது வைத்துக்கொள்ள ,ஒரு ஸ்டைலான டொட் அல்லது ஹாண்ட் பாக் அவசியம்.

POPxo பரிந்துரைக்கிறது – டைனா கோர் வுமன் ஹாண்ட் பாக் ( Rs 1049)

3. சாறி பிரியர்களுக்கு 

அம்மாவின் சேலை மீது நமக்கு கொஞ்சம் கூடுதல் பாசம் இருக்கத்தான் செய்யும். அவர்கள் சேலையில் ரெடி ஆகி நம் முன் வந்து நிக்கும்போது அம்மாவை இன்னும் ரசிக்க நேசிக்க தோன்றும். அதற்காக நாம் அவர்களின் பட்டியலில் இனொரு சேலையை சேர்ப்பதில் தப்பில்லை !

POPxo பரிந்துரைக்கிறது – ஹண்டப்லோக் பிரிண்ட் காட்டன் முல் சாறி (Rs 1439)

4. அவர்களின் தேவைக்கு மிதமான காலணிகள்

ஹீல்ஸ் போட விரும்பாவிட்டால் , பார்க்க ஸ்டைலிஷ் ஆக இருக்கும் மற்றும் நடக்க சொகுசாகவும் இருக்கும் இதுபோல் ஒரு பிராண்டட் காலணிகளை வாங்குங்கள்.

POPxo பரிந்துரைக்கிறது – மெட்ரோ ஸ்லிப்பர்(Rs 1990)

5.அழகுக்கு அழகு சேர்க்க – லிப்ஸ்டிக்

அவர்கள் வெளியில் செல்லும்போது தேவைப்படும், ஒரு பொருத்தமான நிறத்தில் உள்ள லிப்ஸ்டிக் ஒன்றை வாங்கி கொடுங்கள்.

POPxo பரிந்துரைக்கிறது – லாக்மே 9 டு 5 லிப் கலர் (Rs 350 )

மேலும் படிக்க – உங்கள் திகைப்பூட்டும் ஒப்பனையில் சீசனிற்கு ஏற்ற சில லிப்ஸ்டிக் வகைகள்

6.புத்துணர்ச்சி அளிக்கும் வாசனை திரவியம்

நாள் முழுவதும் தன்னுடைய வேலையில் பிஸியாக இருக்கும் அம்மாக்களுக்கு , கை பையில் வைத்துக்கொள்ள ,புத்துணர்ச்சி அளிக்க இதுபோல் ஒரு வாசனை திரவியத்தை வாங்கி அன்பளிப்பாய் கொடுங்கள்.

POPxo பரிந்துரைக்கிறது – டைடன் ஸ்கின் வுமன் பேரப்பியும் (Rs 1256)

மேலும் படிக்க – வாசனை திரவியம் : ரூ. 1000 திற்கு கீழ் கிடைக்கும் நீண்ட நேரம் நீடிக்கும் வாசனை திரவியங்கள்

7.மாடர்ன் மும்மிகளுக்கு சல்வார் கமீஸ் 

அம்மா இன்னும் இளமையாக தெரியும்படி, இதுபோல் ஒரு அற்புதமான நிறத்தில், ஒரு சல்வார் கமீஸ் செட்டை வாங்கி கொடுங்கள். இதுபோல் ஒரு அன்பளிப்பு அவர்களின் பாணியை மேம்படுத்தும் !

POPxo பரிந்துரைக்கிறது – பிபா  வுமன் சல்வார் கமீஸ் துப்பட்டா (Rs 3679) 

இது பிட் ஆன அம்மாக்களுக்கு

உங்கள் அம்மா தினம் உடற் பயிற்சி செய்பவர் என்றால் இது அவர்களுக்கான கிபிட்.

8. ஸ்போர்ட்ஸ் வெர்

ஒரு அழகிய ஜிம் வெற் அல்லது வாக்கிங் / யோகா பாண்ட் அவர்களுக்கு நிச்சயம் தேவைப்படும். அது கருப்பு நிறமாக இருந்தால் எந்த நிற டாப்பிற்கும் அவர்கள் அணிந்து செல்லலாம்!

POPxo பரிந்துரைக்கிறது – ப்ளிங்கின் வுமன் ட்ராக்ஸ் (Rs 450)

9. ஸ்போர்ட்ஸ் ஷூஸ்

அதேபோல அவர்கள் வாக்கிங் அல்லது ஸும்பா பயிற்சியில் இருந்தால், அவர்களுக்கு இந்த ஷூஸ் மிக அற்புதமாக பொருந்தும்!

POPxo பரிந்துரைக்கிறது – ரெட் டேப் வுமன் ரன்னிங் ஷூஸ் (Rs 1288)

10.கூல் ஆன அம்மாவுக்கு குலர்ஸ்

சன் கிளாஸ்ஸஸ் எப்பொழுதும் தேவைப்படும் ஒரு பொருள். அம்மா வெளியில் செல்லும் பொது, அல்லது டபயணம் செய்யும்போது தேவைப்படும் ஒரு முக்கியமான பொருள் என்பதால் இதை வாங்க மறக்காதீர் .

POPxo பரிந்துரைக்கிறது – பைலட் ஷைனி கிறீன் UV ப்ரொடெக்டட் சன் கிளாஸ் (Rs 1999)

இது மாஸ்டர் செஃப் அம்மாக்களுக்கு

11.வெஜிடபில் சாபர்

நம் அனைவருக்கும் முதல் மாஸ்டர் செஃப் அம்மாதான்! அவர் காலையிலிருந்து இரவு வரை செய்யும் அத்தனை வேலைகளையும் நாம் இன்னும் சுலபமாக்கி தரும் வகையில் இந்த ஒரு வெஜிடபிள் சாபரை அவர்களுக்கு நீங்கள் பரிசாக இந்த அன்னையர் தினத்தன்று அளிக்கலாம்!

POPxo பரிந்துரைக்கிறது – பீஜியன் மினி சாபர் (Rs 495)

12.மம்மி கா தாபா

வீட்டை விட்டு வெளியில் விடுதியில் தங்கி இருக்கும் அனைவருக்கும் வீட்டு சாப்பாட்டின் அருமை பெருமை தெரிந்திருக்கும். நம் அனைவருக்கும் வீட்டு சாப்பாடு ஒன்றே மிக மிக பிடித்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அதை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கும் இந்த ஒரு அழகிய அன்பளிப்பு அம்மாவின் சமையல் அறையில் மிக பொருத்தமாக இருக்கும்.

POPxo பரிந்துரைக்கிறது – மம்மி கா தாபா (Rs 1249)

13.காபி மக்

அவர் எத்தகைய அற்புதமான தாய் என்று நினைவூட்டும் வகையில் அவரது டி/காபி மக் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். அந்த வகையில் நீங்கள் இதை அன்பளிப்பாக குடுக்கலாம்!

POPxo பரிந்துரைக்கிறது – காபி மக் போர் அமேஜிங் மாம் (Rs 599)

இது ஸ்வீட் மாம்களுக்கு

பல அம்மாக்களுக்கு சாக்லேட் மற்றும் கேக் வகைகள் பிடித்திருக்கும். இவை அவர்களுக்கானவை!

14.யம்மி மம்மி

அம்மாவுக்கு கேக் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தால், இதுபோல் ஒரு கேக்கை ஆர்டர் செய்து கொண்டாடுங்கள்!

POPxo பரிந்துரைக்கிறது – சாக்லேட் கேக் போர் மாம் ( Rs 879)

15.சாக்லேட் லவர்

அதேபோல் சாக்லேட்டை மிக விரும்பி சாப்பிடும் அம்மாவாக இருந்தால் நீங்கள் இது போல ஒரு அழகிய வடிவமைப்பில் உள்ள பாஸ்கெட் முழுவதும் அவர்களுக்கு பிடித்த சாக்லேட்டை நிரப்பி அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.

POPxo பரிந்துரைக்கிறது – டெலெக்டபுள் சாக்லேட் இன் பாஸ்கெட் (Rs 138)

தன்னை மேம்படுத்துவதில் ஆர்வம் உள்ள அம்மாக்களுக்கு

புத்தகங்கள், தொழில்நூட்பம், ஆன்மிகம் என மனதை மேம்படுத்த விரும்பும் அம்மாவுக்கு ஏற்ற பரிசுகள் இதுவே!

16.படிக்கப் பிடிக்கும் என்றாள்

அவர்களுக்கு வாழ்க்கைத் தத்துவங்களை பற்றி படிக்க ஆசை இருந்தால் அல்லது தன்னை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தால் இது போல் ஒரு புத்தகம் அவசியம்.

POPxo பரிந்துரைக்கிறது – திங்க் அண்ட் குரோ ரிச் (Rs 180) 

17.தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் உள்ள அம்மாக்களுக்கு

நாள் முழுவதும் வீடு, வேலை, பிள்ளைகள் என்று ஓடிக்கொண்டே இருக்கும் அம்மாக்களை நாம் ஒரு பிஸி பீ என்று அழைக்கலாம். அதற்கு மேட்ச்சாக ஒரு மொபைல் போன் கவரை அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம்.

POPxo பரிந்துரைக்கிறது – பிஸி அஸ் எ பீ போன் கவர் (Rs 499)

18.தன்னை சீராக வைத்துக்கொள்ள பிடிக்கும் அம்மாக்களுக்கு

மற்றவர்களுக்காகவே வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாவுக்காக, அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இந்த பாடிஸ் ஸ்பா ஹாம்பரை பரிசாக நீங்கள் கொடுக்கலாம்.

POPxo பரிந்துரைக்கிறது – பாடி ஹெர்பல்ஸ் , பாடி ஸ்பா ஹாம்பெர் (Rs 1599)

19.கடவுள் பக்தி உள்ள அம்மாவுக்கு 

அவர் தினமும் கடவுளை போற்றி பாடி , தீபம் ஏற்றி பூஜை செய்பவர் என்றால், இது அவருக்கு உதவும் ஒரு அன்பளிப்பு.

POPxo பரிந்துரைக்கிறது – போரோஸில் அகண்ட தியா (Rs 365)  

காம்போ கிபிட்

20. வாட்ச், பேர்ப்பியும் காம்போ கிபிட் 

ஓரிரு கிபிட் சேர்த்து ஒரு காம்பினேஷன் கிபிட்டிற்காக நீங்கள் தேடி கொண்டிருந்தாள் இதுவே சரியானது . இதில் இருக்கும் வாட்ச், பேர்ப்பியும் மற்றும் கிளட்ச் பெர்ஸ் அம்மாவுக்கு மிக முக்கியமான பயனுள்ள பொருட்களே!

POPxo பரிந்துரைக்கிறது – அவிக்ஞா காம்போ செட் (Rs 1899)

21. போட்டோ பிரேம் காம்போ கிபிட் 

மாம் என்று எழுந்திருக்கும் ஒரு போட்டோ பிரேம் உடன் சாக்லேட் மற்றும் ஒரு பூந்தொட்டி முழுவதும் அம்மாவின் அத்தனை அழகிய குணங்கள் மற்றும் அம்சங்கள் அனைத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் இருக்கும் இந்த ஒரு அன்பளிப்பு மிகப் பொருத்தமான ஒன்றாக இருக்கும்.

POPxo பரிந்துரைக்கிறது – போட்டோ பிரேம் சாக்லேட் கிபிட் ஹம்பேர் (Rs 999)

22.எனக்கு கிடைத்த தேவதை

ஆம்! அம்மா நம் அனைவருக்கும் கிடைத்த ஒரு தேவதை தான். அதை மிக அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள் இந்த ஒரு கொட்டேஷன் புக்கில். இத்துடன் ஒரு வாழ்த்து அட்டை மற்றும் இனிப்புடன் வரும் இந்த அன்பளிப்பு மிக சிறந்த அன்பளிப்பாகும் !

POPxo பரிந்துரைக்கிறது – ஸ்பைரல் புக் அண்ட் சாக்லேட் ஹம்பேர் (Rs 649)

23.குஷன் லவ்

அம்மாவுக்கு குஷன் பிடிக்கும் என்றால் இதுபோல் ஒரு குஷனில் பாசத்தை வெளிப்படுத்தலாம்! இந்த கொம்போவில் உங்களுக்கு ஒரு குஷன், வாழ்த்தட்டை, கி செயின் மற்றும் காபி மக் வருகிறது

POPxo பரிந்துரைக்கிறது – அளவீடோ குஷன் கவர் காம்போ (Rs 999)

ஹாப்பி ஷாப்பிங் !

பட ஆதாரம்  – இன்ஸ்டாகிராம்  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

Womens Day Quotes in Hindi
Mothers Day Message in Hindi
मदर्स डे कोट्स और सुविचार
Mothers Day Poem in Hindi from Daughter

Read More From Lifestyle