பெண்கள் பொதுவாகவே விருப்பப்பட்டு வாங்கக்கூடிய பொருட்கள் ஏராளமாக இருக்கும். சிலருக்கு ஹான்ட் பேக், சிலருக்கு ஒப்பனைப் பொருட்கள் மற்றும் பலருக்கு அணிகலன்கள் என்றால் அதில் ஒரு வகை ஆட்களுக்கு பிடித்தது வாசனை திரவியங்கள் (perfumes)ஆகும். அந்த சிறிய பாட்டில்களில் வரும் நறுமணம் நம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது என்று கூறலாம். ஆகையால் அதை எதற்கு பயன்படுத்த வேண்டும், சுலபமாகவும் மலிவான விலையிலும் எங்கு வாங்கலாம் மேற்கொண்டு அதை சிறப்பாக உபயோகிக்க சில உத்திகளை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.
வாசனை திரவியத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்?
பெண்களுக்கான 10 சிறந்த நீண்ட நேரம் நீடிக்கும் வாசனைத்திரவியங்கள்
வாசனை திரவியத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி ?
வாசனை திரவியத்தின் முக்கியத்துவம் என்று சொன்னாள் இது முக்கியமாக நம் உடலின் துர்நாற்றத்தை அகற்றி நாள் முழுவதும் புத்துணர்ச்சி அளிக்க பயன்படுகிறது. மேலும் இது ஒரு தனி மனிதனின் மனநிலையை அதிகரிக்க மற்றும் மேம்படுத்த உதவுகிறது. இதுவே இதன் முதன்மையான காரணமாக இருந்தாலும் வாசனை திரவியங்களை உபயோகிக்க மற்றும் பல காரணங்களும் உண்டு. அதாவது இதில் வரும் நறுமணம் ஒருத்தரின் தனித்தன்மையை முன்வைக்கும் திறன், அவரது ஆளுமை, மேலும் வாசனை திரவியத்தின் மயக்கும் நறுமணம் ஒரு மனிதனின் சிறந்த ஞாபகங்களை தூண்டுவதும் ஊக்குவிப்பதும் இரண்டாம் கட்ட காரணமாக அமைகிறது.இதற்காகவே நீங்கள் உங்கள் நறுமணத்தை தேர்ந்தெடுத்து உங்கள் தனித்துவத்தை அழகாக பதிவு செய்ய வேண்டும்.
வாசனை திரவியங்கள் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதன் நறுமணம் நீண்ட நேரம் இருக்க வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் அதன் பயன் என்ன? ஆகையால் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சில மலிவான விலையில் நீண்ட நேரம் நீடிக்கும் திறனுள்ள வாசனை திரவியங்களை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.
மிக ரம்மியமான வசந்த காலத்து தோட்டத்தை மையமாகக் கொண்டு மேலும் ஒரு அழகிய மர்மம் கொண்ட வாசனையாக இருக்கிறது இந்த டைடன் ஸ்கின் வுமன் பேர்பியும் . இதில் சந்தனத்தின் நறுமனம், ஆப்ரிகாட், லில்லி பூக்கள், ஆரஞ்சு பூக்கள் போன்ற பல சுவாரசியமான நறுமணங்களை கொண்டு வரும் இந்த வாசனை திரவியம் உங்களை நாள் முழுவதும் நிச்சயம் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்! இதைதான் நிரூபிக்கிறார்கள் இதை உபயோகித்தவர்கள். உங்கள் மனநிலையை மாற்றி விளையாட்டு தனத்திற்கு கொண்டு போக இந்த வாசனைத் திரவியமே சரியானது.
விலை - ரூ. 545
இதை இங்கே வாங்குங்கள்
இந்த திரவியத்தை வாங்கி விட்டால் நீங்கள் வேறு எதற்கும் மாற மாட்டீர்கள் என்று நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது இந்த எங்கேஜ் பேர்பியும். இதில் மண்வாசனை, மரத்தின் நறுமணம், சிட்ரஸ் மற்றுமொரு ஆழ்ந்த ஆண்மையின் அம்சங்கள் உள்ளது. மேலும் இதில் இருக்கும் தவிர்க்க முடியாத வியக்க வைக்கும் நறுமணம் உங்களை நாள் முழுவதும் சீராக வைத்துக் கொள்ளும்.மேலும் இதை நீங்கள் அணிந்து செல்லும்போது உங்கள் பார்ட்னெரை (partner) மிக எளிமையாக கவர்ந்து விடலாம் . ஆஹா!! அற்புதம் தானே?!
விலை - ரூ. 372
இதை இங்கே வாங்குங்கள்
குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரோஜா பூவின் நறுமணம் கொண்ட இந்த பேர்பியும் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் ஒன்றாகும். நீண்ட நேரம் நீடிக்கும் வாசனைத்திரவியங்களில் இதுவும் ஒன்று. இது உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். விலை குறைவாக இருப்பதினால் இதை நீங்கள் தாராளமாக வாங்கி சோதனை செய்து பார்க்கலாம்.மஸ்தானி பேர்பியும் உங்களை கைவிடாது! இதை நீங்கள் அணிந்து சென்றால் அனைவரும் நிச்சயம் உங்கள் பக்கம் ஈர்க்கப்படுவார்கள். இது கிபிட் கொடுக்கவும் ஒரு சிறந்த வாசனை திரவியம் ஆகும்.
விலை - ரூ. 549
இதை இங்கே வாங்குங்கள்
உங்களுக்கு வலுவான ஆழமான வாசனைகளில் விருப்பமில்லை என்றால் இலகுவான வாசனை திரவியங்களுக்கு மாறலாம் . அதில் ஒன்றுதான் இந்த எசன்ஸ் பேர்பியும் . இது சிறிய அழகிய பாட்டில்களில் வருவதினால் இதை உங்கள் பயணத்திற்கும் எடுத்துச் செல்லலாம். உங்கள் பயணத்தை சிறந்ததாகவும் தெய்வீகமாகவும் இதன் நறுமணம் மாற்றிவிடும் என்று கூறுகிறார்கள். மேலும் இதில் இருக்கும் மாம்பலம், வெண்ணிலா, திராட்சைப்பழம் போன்ற நறுமணத்தின் அம்சங்கள் உங்களை நாள்தோறும் பிரஷ்ஷாக வைக்க உதவுகிறது. குறைந்தது 8 லிருந்து 10 மணி நேரத்திற்கு இது நீடிக்கும். முயற்சித்து பாருங்கள் !
விலை - ரூ. 799
இதை இங்கே வாங்குங்கள்
ஒரே ஒரு அம்சத்தை (நறுமணத்தை) மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் யார்ட்லி இலண்டன் பேர்பியும் வகைகள் உங்களை நிச்சயம் ஈர்த்துவிடும். இது ஆங்கிலேயர்களின் ஆடம்பர வாசனையை குறிக்கும் விதத்தில் மிக அற்புதமாகவும் இலகுவான நறுமணத்துடனும் அமைத்திருக்கிறது. மேலும் இது உங்களை கடந்த காலத்தின் இங்கிலாந்திற்கு கூட்டி செல்லும் அளவிற்கு ஒரு அற்புதமான வாசனையை அளிக்கிறது . இது குறைந்தது 7 லிருந்து 24 மணி நேரம் வரைக்கும் நீடிக்கும்.
விலை - ரூ. 621
இதை இங்கே வாங்குங்கள்
மலர்களை நீங்கள் அதிகம் நேசிப்பவர் என்றால் இது போல் ஒரு வாசனை திரவியம் உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும். இதில் பட்சவுளி (patchoulli) , ஜாஸ்மின், ,லாவண்டர் , குங்குமப்பூ என்று பல வகைகள் உள்ளன. இதை நீங்கள் பூசி வெளியில் செல்லும்போது இதென்ன ஒரு அற்புதமான நறுமணம் என்று நிச்சயம் உங்களை கேட்பார்கள்! தினசரி பயன்பாட்டிற்கு உங்களுக்கு இது மிகவும் பொருத்தமான ஒரு திரவியம். இயற்கையின் தொடுதலைப் போலவே உணர வைக்கும் ஒரு பிரத்தியேக நறுமணமாகும்.
விலை - ரூ. 653
இதை இங்கே வாங்குங்கள்
உங்கள் பயணத்திற்கு ஏற்ற ஒரு அழகிய சிறிய கச்சிதமான பாட்டிலில் வரும் இந்த நியூ யு - பாக்கெட் பேர்பியும் மற்றுமொரு சிறந்த, அதிக நேரம் நீடிக்கும், வாசனை திரவியம் ஆகும். இதில் ஆரஞ்சு, தேன், மல்லிகை போன்ற மலர்கள் மற்றும் பழங்களின் நறுமணங்கள் அடைந்துள்ளது. இதன் சிறிய பேக், மலிவான விலை, இலகுவான நறுமணம் மற்றும் நாள் முழுவதும் நீடிக்கும் வாசனை உங்களுக்கு நிச்சயம் பிடித்ததாக அமையும்.
விலை - ரூ. 112
இதை இங்கே வாங்குங்கள்
உங்கள் அலுவலகத்திற்கு செல்லும் போது நீங்கள் தினசரி உபயோகிக்க ஒரு விலை உயர்வான வாசனை திரவியத்தை தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இதுபோல் ஒரு மலிவான விலையில் அதிக நேரம் நீடிக்கும் திரவியங்களும் உள்ளனர். நைக் அப் ஓர் டவுன் வுமன் பேர்பியும் வலுவான - இலகுவான வாசனை என்று இல்லாமல் , இதற்கு நடுவில் இருக்கும் ஒரு நறுமணம் . இது நாள் முழுவதும் உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் .
விலை - ரூ. 893
இதை இங்கே வாங்குங்கள்
மலர்கள் மட்டுமல்லாமல் மேலும் பல பொருட்கள் கொண்ட ஒரு கவர்ச்சிகரமான வாசனை திரவியம் இது. பேருக்கு ஏற்றது போல் இது உங்கள் பார்ட்னெரை ஈர்க்க வைக்க நிச்சயம் ஒரு கருவியாக பயன்படும். நீங்கள் காபி பிரியராக இருந்தால் இதை நீங்கள் நிச்சயம் உபயோகிக்க வேண்டும். ஏனெனில் இதில் காபி, சாக்லேட்,மல்லிகை , ஆரஞ்சு போன்ற அனைத்துப் பொருட்களின் நறுமணங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உங்களுக்குள் இருக்கும் அந்த குறும்புத்தனமான பெண்மணிக்கு இதுபோல் ஒரு வாசனை திரவியம் அவசியம் .
விலை - ரூ. 680
இதை இங்கே வாங்குங்கள்
உங்கள் தோழிகளுக்கும் சகோதரிகளுக்கும் அன்பளிப்பாக நீங்கள் இந்த வாசனைத் திரவியத்தை கொடுக்கலாம். இது மலிவான விலையில் அதிக நேரம் நீடித்து இருக்கும் ஒரு வாசனை திரவியம். இதன் இலகுவான நறுமணம் உங்களுக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சி அளிக்க உள்ளது. அற்புதமான பேக்கில் ஒரு அழகிய பாட்டிலில் வரும் இந்த வாசனை திரவியம் உங்கள் ஒப்பனை பொருட்கள் ஒன்றாக நிச்சயம் இருக்க வேண்டும்.
விலை - ரூ. 899
இதை இங்கே வாங்குங்கள்
வாசனை திரவியத்தை அதிக நேரம் நீடிக்க வைத்து அதை சிறப்பாக பயன்படுத்துவதும் அவசியம். ஆகையால் நாங்கள் உங்களுக்கு அதை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்று சில யுத்திகளை அளிக்கிறோம்.
பட ஆதாரம் - shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.