
பெற்றோர் சிலருக்கு தங்கள் குழந்தைகளின் விடுமுறை தினங்களை அவர்களுடைய எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக மாற்றலாம் என்ற திட்டம் மனதில் இருக்கும். வேறு சிலருக்கு, விடுமுறையில் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற பயம். சிலருக்கு குழந்தைகளை சொந்த ஊரில் உள்ள உறவினர்களின் வீட்டில் கொண்டு விட்டு விட்டு, வழக்கம்போல் தங்கள் பணிக்கு செல்லலாம் என்கிற திட்டம்.
அவ்வகையில் ஒரு சில பெற்றோர் தங்களது கனவுகளை தங்கள் குழந்தைகள் மீது திணிப்பது வழக்கம். இதன் சாட்சியாகவே கோடை(summer) விடுமுறை நாள்களில் தனியார் கணினி பயிற்சி மையங்கள் முதல் விளையாட்டு பயிற்சி மையங்கள் வரை பள்ளி மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிகின்றன.
இது போன்ற பெற்றோர்களின் விருப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் சில தனியார் நிறுவனங்கள், கோடை(summer) விடுமுறையில் அந்தப் பயிற்சி, இந்தப் பயிற்சி என்று விளம்பரம் செய்து வருமானம் பார்க்கின்றன.இதில் ஒருவரை அழைத்து வந்து சேர்த்துவிடும் இன்னொருவருக்கு சலுகை கட்டணம் வேறு. இப்படிச் சலுகைக் கட்டணம் வழங்குவோரிடம் எவ்வகையில் தரமான பயிற்சியை எதிர்பார்க்க முடியும்?
குழந்தைகளும் தங்களது பெற்றோரின் வற்புறுத்தலுக்காக தங்களின் கனவுகள், மகிழ்வுகளை துறந்து, விருப்பமில்லாமல் கோடை(summer) விடுமுறை பயிற்சிகளில் சேர்வது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இது குழந்தைகளுக்கு மனதளவில் அழுத்தத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
பெற்றோர்கள் தங்களது கனவுகளுக்காக குழந்தைகளின் கனவுகளை காற்றில் பறக்கச் செய்வது எவ்வகையில் நியாயம்? இவர்கள் கோடை(summer) விடுமுறையில் அனுப்ப நினைக்கும் பயிற்சியைத்தானே ஆண்டு முழுவதும் பள்ளியில் கற்றுத் தருவதாக கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். பிறகு எதற்கு கோடை விடுமுறையிலும் பயிற்சி?
ஆனால் ஒரு சாதாரண மிடில் கிளாஸில் வாழும் பெண் தனது ஆசையை அப்பாவிடம் தெரிவித்துள்ளார். அதை என் நண்பர் சொல்ல கேட்டேன். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நீங்களே படியுங்கள்.
என் மகளை எனது கிராமத்திற்கு அனுப்பப்போகிறேன்… அங்கு அவள் எதையும் கற்கமாட்டாள்…அங்கே தட்டான், பட்டுப்பூச்சிகளை பிடிப்பாள்… பல்லாங்குழி, கண்ணாமூச்சு விளையாடுவாள்… வீட்டில் எங்க அம்மா செய்த அதிரசம், முறுக்கு, பனியாரம் சாப்பிடுவாள்… கிணற்றில் சுரைக்குடுக்கையுடன் நீச்சல் அடிப்பாள்.. (சுரைக்குடுக்கை என்பது முற்றிலும் காய்ந்த சுரைக்காய்.. நீரில் மூழ்காமல் பாதுகாக்கும்…நானும் சிறுவயதில் இதை கட்டித்தான் நீச்சல் அடிப்பேன்…) மதிய வேலையில் பாக்கு மரங்கள் சூழ்ந்த எங்கள் வீட்டில் தன் ஆயாவின் மடியில் குட்டி உறக்கம் போடுவாள்.. அவ்வப்போது அவளுக்கு பிடித்த மரத்திலிருந்து இளநீர் இறக்கித்தரச்சொல்லி மரத்தடியில் ருசிப்பாள்.. கொஞ்ச நேரம் கழித்து நுங்கு சாப்பிட்ட பின் அதை நுங்கு வண்டியாக்கி ஓட்டுவாள்… ஆடு மாடுகளுடன் வயல்வெளியில் வலம் வருவாள்…புள்ளி வைத்து கோலம் போடுவாள்…செம்பருத்தி பூக்களை அவளே பறித்துக்கொண்டு அருகிலுள்ள கோயிலுக்கு வாண்டுக்கூட்டத்தோடு போய்வருவாள்…
இரவில் கண்டீப்பாக நிலாச்சோறு உண்ட பிறகு வெட்டவெளியில் பாய்போட்டு, பாட்டியின் கதை கேட்டு நிலாவைப்பார்த்தவாரே உறங்குவாள்… இப்படித்தான் என் மகள் கோடை(summer) விடுமுறையை அனுபவிப்பாள்.. இதுகூட நான் போட்ட Plan அல்ல… இது அவள் தீர்மானித்தது… நான் வாழ்ந்த வாழ்க்கையை அவளும் வாழ நினைக்கிறாள்… உங்கள் மகள் போல் இவள் High class City பொண்ணு கிடையாது சார்..” என்று தெரிவித்திருந்தார்.
இதை கேட்டதும் எனக்கே மிகவும் ஆர்வம் வந்துவிட்டம். விடுமுறை என்பது குழந்தைகளுக்கான உலகம். அதை நாம் சிதைக்காமல் பார்த்துக்கொண்டாலே போதுமானது.
ஆண்டுதோறும் பள்ளி வேன் பயணம், மதிய சாப்பாடு, புத்தகம், பேனா, வகுப்பறைகள், ஆசிரியர்கள் என்று பார்த்துப்பார்த்து சலித்துப் போன குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பது புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு விஷயம். அதை அவர்கள் விருப்பப்படி கொண்டாட விடுங்கள்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo