Beauty

அனைத்து வகையான கூந்தல் பிரச்னைகளும் நீங்க மயோனைஸ் ஹேர் பேக் பயன்படுத்துங்கள்!

Swathi Subramanian  |  Jan 8, 2020
அனைத்து வகையான கூந்தல் பிரச்னைகளும் நீங்க மயோனைஸ் ஹேர் பேக் பயன்படுத்துங்கள்!

இன்றைய காலத்தில் சாண்ட்விச், தந்தூரி, கிரில்டு சிக்கன், ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், சமோசா, கட்லெட் என எந்த உணவை சாப்பிட்டாலும் கூடவே ஒரு வெள்ளை நிற க்ரீம் வைக்கப்படும். அதுதான் மயோனைஸ் (Mayonnaise). இதில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற ஏராளமான சத்துகள், தாதுக்கள் மற்றும் கரையக்கூடிய கொழுப்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 

மயோனைஸ் என்பது முட்டையினால் செய்யப்படுவது. முட்டையை உடைத்து ஒரு பவுலில் ஊற்றி நன்றாக அடித்து அதில் சிறிது சிறிதாக எண்ணையை சேர்த்து கொண்டே நன்றாக அடித்தால் அவை க்ரீம் போல் ஆகிவிடும். அதில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது வினிகர் கலந்தால் மயோனைஸ் தயார்.

பல்வேறு சத்துக்கள் நிறைந்த இந்த மயோனைஸ் கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரிகிறது. இதில் உள்ள முட்டையில் நற்குணங்கள் அனைத்து கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. 

pixabay

மேலும் மயோனைஸில் இருக்கும்  ‘எல்-சிஸ்டைன்’ என்ற அமினோ அமிலம், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மயோனைஸ் உடன் உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை சேர்த்து ஹேர் பேக்காக பயன்படுத்தினால் அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளும் சரியாகும். 

மேலும் படிக்க – பனிக்கால பாத வெடிப்பு…. வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எளிதாக குணப்படுத்தலாம்!

மயோனைஸ் மற்றும் அவகோடா ஹேர் பேக் :

நன்கு பழுத்த ஒரு அவகோடா பழத்தை எடுத்து அதனை மிஸ்சியில் அடித்து கொள்ளவும். இதனுடன் மயோனைஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையைத் தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரால் கூந்தலை நன்றாக அலசவும். 

pixabay

இதில் அதிக புரதம் நிறைந்துள்ளதால் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. வாரம் ஒரு முறை இந்த பேக் பயன்படுத்தலாம். வைட்டமின் பி, ஈ நிறைந்த அவாகோடா பழத்தை ஹேர் மாஸ்காகப் பயன்படுத்துவதால் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, முடியைப் பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க – பெண் உறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியங்கள் !

மயோனைஸ் மற்றும் தேன் ஹேர் பேக் :

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் மயோனைஸ், 2 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் தலைமுடிக்கு வேர்களிலிருந்து தொடங்கி நுனி வரை தேய்த்து கொள்ளவும். பின்னர் ஒரு மெல்லிய துணியால்  மூடி 30-45 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின்னர் உங்கள் ரெகுலர் ஷாம்பூ கொண்டு கூந்தலை அலசுங்கள். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் கூந்தலின் ஈரப்பதம் தக்கவைப்பட்டு செழித்து வளரும். 

pixabay

மயோனைஸ் மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் பேக் :

ஒரு பவுலில் அரை கப் மயோனைஸ் (Mayonnaise), அரை கப் ஆலிவ் ஆயில் எடுத்து கொள்ளுங்கள். இந்த கலவையை நன்கு ஒரு மென்மையானன் எண்ணெய் கலந்த கலவையைப் பெறும் வரை கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனை உங்கள் தலைமுடிக்கு வேர்களிலிருந்து தொடங்கி முடி முழுவதும் மசாஜ் செய்தவாறு அப்ளை செய்துகொள்ளுங்கள். 

உங்கள் தலைமுடியை சூடான துண்டில் போர்த்தி 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் ஷாம்பூ கொண்டு அலசுங்கள். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ சல்பேட் இல்லாததாக இருப்பது நல்லது. இதனை வரை ஒரு முறை செய்து வந்தால் கூந்தல் வறட்சி நீங்கும். உங்கள் தலைமுடியை ஈரப்படுத்த ஆலிவ் எண்ணெய், மயோனைஸ்வுடன் வேலை செய்கிறது. இதனால் சேதமடைந்த முடி புத்துணர்வாகிறது. 

மேலும் படிக்க – சலூனுக்கு போகாமல் ஹேர் கலரை நீக்க 8 எளிமையான வழிகள்!

 

pixabay

மயோனைஸ் மற்றும் வாழைப்பழ ஹேர் பேக் :

ஒரு பவுலில் 2 பழுத்த வாழைப்பழங்கள், 2 ஸ்பூன் மயோனைஸ், 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். முதலில் வாழைப்பழங்களை கட்டி இல்லாமல் நன்கு பிசைந்து கொள்ளுங்கள். 

இதனுடன் மயோனைஸ் மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து முடி முழுவதும் அப்ளை செய்து 45 நிமிடங்களுக்கு பிறகு கூந்தளை அலசுங்கள். பயோடின் மற்றும் பி காம்பிளெக்ஸ் உயிர்ச்சத்துகள் முடியின் வேர்களை வலுப்படுத்துவதன் மூலம் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும் கூந்தலில் மயோனைஸ் (Mayonnaise) தடவுவதால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty