Lifestyle

பனிமழை பொழியும் மார்கழி மாதத்தின் சிறப்பம்சங்களை அறிவோம் வாருங்கள்!

Nithya Lakshmi  |  Dec 15, 2019
பனிமழை பொழியும் மார்கழி மாதத்தின் சிறப்பம்சங்களை அறிவோம் வாருங்கள்!

ஆன்மீகத்திற்கு என்று ஒரு மாதமே சிறப்பு வாய்ந்தது என்றால் அது மார்கழிதான்! நிச்சயம் பழைய பழக்கங்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் ஒரு விஞ்ஞானபூர்வமான அர்த்தம் உண்டு என்றால் அது மிகை இல்லை. நாகரீகத்தின் மிகுதியால், வாழ்க்கை முறை மாற்றத்தாலும் சில பழக்கங்கள் இடையில் மாறினாலும், தற்காலத்து இளைஞர்கள் அவற்றில் அர்த்தங்களை தெரிந்துகொண்டு, புரிதலோடு பழைய பழக்கங்களை பின்பற்ற நினைக்கிறாங்க என்று தான் சொல்ல வேண்டும். அப்படி என்னென்ன சிறப்புகள் இந்த மாதத்தில் (margazhi month) உண்டு என்று தெரிந்து கொள்வோமா?!

மார்கழி மாதத்தில் பெண்கள் மாக்கோலமிடுவர்

மார்கழியில் அதிகாலையில் கோலம் போடுவது ஏன்?

காலங்களை பகல் பொழுதை உத்ராயணம் என்றும், இரவை தக்ஷனாயணம் என்று இரண்டாக பிரிப்பார்கள். பகல் பொழுதை வரவேற்கும் தமிழ் மாதம் தான் மார்கழி. அப்படி அதிகாலையில், 4 முதல் 5 மணிக்குள், தேவர்கள் வளம் வரும் நேரம் அவர்களை வரவேற்கும் விதமாக கோலம் போட வேண்டும்.

எப்படி கோலம் போட வேண்டும்?

Pinterest

கோலம் போடுவதால் என்ன பயன்கள்?

பொதுவாக, கோலம் போடுவதில் பல பலன்கள் உள்ளது.

  1. குனிந்து கோலமிடுவது, நல்ல யோகா செய்வது போன்ற பயன்தரும். 
  2. நல்ல சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.
  3. புள்ளியிட்டு உன்னிப்பாக கோலம் போடுவதால், புத்தி சிதறாமல் ஒரு நிலையில் இருக்க பயிற்சியாகும்.
  4. தலைக்கு ரத்த ஓட்டம் பாய்வதால், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
  5. இந்த மாதத்தில் மழையும், குளிரும்  இருப்பதால், பறவைகளும், எறும்புகளும்  இறை கிடைக்காமல் திண்டாடும். அரிசிமாவில்  கோலம் போடுவதால், எறும்புகளுக்கு உணவாகும். அன்னதானம் செய்த பயன் கிடைக்கும்.

இந்த பனி கொட்டும் மார்கழி மாதத்தில், காலையில் ஏன் விரைவாக எழுந்திரிக்க வேண்டும்?

இந்த மாதத்தில், ஓசோன் படலம் பூமிக்கு அருகாமையில் வருவதால் நல்ல ஆக்சிஜென் சக்தி  கிடைக்கும்; பிராண சக்தி அதிகமாகக் கிடைக்கும். புத்துணர்ச்சி தரும். மன வலிமையை அதிகரிக்கும். 

மார்கழி மாதத்தின் தெய்வ வழிபாடுகள்

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், 12 மாதங்களில் தன்னை மார்கழியாகக் கூறுகிறார். மேலும், அனைத்து கடவுளுக்கும் இந்த மாதம் ஸ்பெஷல்தான்.

வைகுண்ட ஏகாதசி

Pinterest

நாள் முழுவதும் விரதம் இருந்து, இரவு முழுவதும் தூங்காமல் விஷ்ணுவை வணங்கி துதி பாடி, காலையில் 4 மணிக்கு ரங்கநாதராக லட்சுமி மற்றும் ஆதிஷேஷனுடன் எழுந்தருளும் விஷ்ணு பகவானை வேண்டும் தினமாக வைகுண்ட ஏகாதசி வருடம் ஒரு முறை கொண்டாடப்படுகிறது. 

மார்கழி 21, 2020(ஜனவரி 6ம் தேதி) வைகுண்ட ஏகாதசி நாளாகும். பகவானின் சொர்க்க வாசல் இன்று மட்டும் திறந்திருக்கும் அதிசய நாளில், அனைவரும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட பகவானை சொர்க்க வாசல் வழியாகச் சென்று வேண்டி வணங்குவர்.

இந்த நாளில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில், திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் போன்ற 108 வைணவ கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் தரிசனம் கிடைக்கும்.

மேலும் படிக்க- தெய்வ தரிசனம் : தமிழகத்தின் சிறப்பு மிக்க நவகிரக கோயில்களை வலம் வருவோம்!

 

ஆண்டாள் திருப்பாவை

விஷ்ணு பகவானை மணக்க, பெரியாழ்வாருக்கு மகளாகப் பிறந்த ஆண்டாள், மார்கழி மாதம் “மார்கழித் திங்கள் அல்லவா…” என்று ஆரம்பித்து, 30 பாசுரங்களை தினம் ஒன்றாகப் பாடி வழிபட்டு மணந்தார். 

ஸ்ரீ விஷ்ணுவிற்கான 108  திவ்விய தேசங்களில், ஸ்ரீ வில்லிபுத்தூரும் ஒன்று. இந்தக் கோவிலில் வடகிழக்கில் வடபார்த்தசாரதியும், தென்மேற்கில் 192 அடியில் ஆண்டாளிற்கான ராஜ கோபுரமும் அமைந்திருக்கிறது. மேலும், ஆண்டாளின் வாழ்க்கையையும், மற்ற ஆழ்வார்கள் பற்றியும் கோவில் சுவர்களில் சித்திரங்களாக காட்சி தருகிறது. 

திருமணமாகாத பெண்கள் மார்கழி நோம்பு இருந்து ஆண்டாள் போல  திருப்பாவை பாடி, நல்ல மணாளன் பெற பூஜை செய்வது வழக்கம்.

ஆருத்ரா தரிசனம்

Pinterest

மார்கழி 25, 2020(ஜனவரி 10ம் தேதி) ஆருத்ரா மகா தரிசன நாளாகும்.மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று, காலையில் ஆருத்ரா தரிசன அபிஷேகம் செய்து சர்வ சிவாலயங்களிலும் நடன போஸில் நடராஜ பெருமானுக்கு அலங்கரித்து வழிபடுவர். சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். 

மேலும், பௌர்ணமியோடு சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திர நாளில், திருவாதிரை விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இந்த தினத்தில்தான் சிவபெருமான் பார்வதியை கரம் பிடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும், அன்று கன்னிப் பெண்கள்  நல்ல கணவர் அமையவும், திருமணமானவர்கள் என்றென்றும் சுமங்கலியாக இருக்கவும், இந்த நாளில் விரதம் இருந்து, அவரவர்கள் குடும்ப வழக்கத்தின்படி, திருவாதிரை களி செய்து இறைவனுக்கு படைப்பார்கள்.

மேலும் படிக்க – இதற்காகத்தான் ஒரு வாழை இலையில் உங்கள் உணவை சாப்பிடவேண்டும் என்று கூறுகிறார்கள்!

மார்கழி மகா உட்சவம்

பனிமழை பொழியும் மார்கழி மாதத்தில் இசை மழை பொழிவதை எங்கும் காணலாம். வருடமெல்லாம் பயிற்சி செய்த சாதகங்களை இந்த மாத கச்சேரிகளில் பாடி அசத்துவார்கள், வாய்ப்பாட்டு கலைஞர்கள். பல ஊர்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் இந்தக் கச்சேரியைக் கேட்கவே பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வருவார்கள். 

காலைபொழுதில் மார்கழி மாதத்தில் வாசலில், இரண்டு விளக்குகள் ஏற்றுவார்கள். மார்கழி மாதத்தில் சூரியன் சற்று நேரம் களித்து வருவதால், அதிகாலை இருள் வெகுநேரம் சூழ்ந்திருக்கும், வழிப்போக்கர்களுக்கு வெளிச்சம் தருவதற்காக விளக்கு ஏற்றும் பழக்கம் வந்ததாம். ஆண்கள் பெண்களைப்போல பஜனை பாடுவர் , பெண்கள் ஆண்களைப்போல், கோலங்களில் வடிவங்கள் செய்வர். குழந்தைகளையும், சிறுவர்களையும் உங்கள் வேலைகளில் ஈடுபடுத்தி, மார்கழி மாதத்தின் முக்கியத்துவத்தை (special) கற்றுக்கொடுங்கள். நிச்சயம் பயன்களைச் சொன்னால், அவர்களாகவே காலையில் விரைவில் எழுந்திருப்பார்கள். 

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

Read More From Lifestyle