இதற்காகத்தான் ஒரு வாழை இலையில் உங்கள் உணவை சாப்பிடவேண்டும் என்று கூறுகிறார்கள்!

இதற்காகத்தான் ஒரு வாழை இலையில் உங்கள் உணவை சாப்பிடவேண்டும் என்று கூறுகிறார்கள்!

தலைவாழை இலையில் உணவு படைப்பது என்பது ஒரு கவுரவமான விஷயம். இதுல  என்ன கவுரவம் இருக்கிறது, பெரும் பணக்காரர்கள் வீட்டு திருமணத்தில் தற்போது  தங்கத் தட்டில் உணவு பரிமாறுவது என்பது மிக பிரமாண்டமாக கருதப்படுகிறது. அதைவிட வாழை இலையில் என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்? இலையில் சாப்பிடுவதால்  ஏற்படும் நன்மைகளைத் (banana leaf benefits) தெரிந்துகொண்டீர்களானால், தினமும் இலையில் சாப்பிடத் தொடங்கி விடுவீர்கள்.

வாழை இலையில் உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Shutterstock

 1. வாழை இலையில் சாப்பிடும்போது, சூடான உணவு இலையில் படும்போது, பாலிபினால் என்னும் சத்து வெளியேறும். அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை உள்ளதால், உடல் ஆரோக்கியம் பெருக வைக்கும். 
 2. வாழை இலையில் சாப்பிடுவதால், இலைமீது உள்ள இயற்கையான மெழுகு உருகி, சுவையை கூட்டும். சுவை அதிகமானால், நம்மை உணவு உண்ணத் தூண்டும். ருசியின்மை தன்மையை தீர்க்கும். 
 3. வாழை இலையில் உள்ள சாலி சிலிக் அமிலம் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
 4. ஆயுளை வளர்க்கும் : வாழை இலையில் ஆன்டி-பங்கல் மற்றும், ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், ஆயுளை நீட்டிக்கும். 
 5. சருமத்திற்கு பளபளப்பைத் தரும் - அலோட்டின் என்னும் சத்து சருமத்தில் ஏற்படும் அரிப்பு, புண், ஆகியவற்றிற்கு அருமருந்தாகும். மேலும் சருமத்தை பளபளப்பாக வைக்கும். 
 6. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், செம்பு ஆகிய சத்துக்களும் உள்ளது . இது  நாள்பட்ட சளியை போக்கும்!
 7. இலையில் உள்ள கிளோரோபில் குடலில் ஏற்படும் அல்சரை தடுக்கும். 
 8. வாழை இலையில் உள்ள பினால் சத்து குடல் புண்களை ஆற்றும்
 9. வைட்டமின் கே  ரத்தத்தை உறைய வைக்க உதவும்.
 10. இலை எளிதில் மக்கும் தன்மை கொண்டது, நெகிழி போல இயற்கைக்கு தீங்கு விளைவிக்காது. 
 11. செரிமானத்தை எளிதாக்கும் : வாழை இலையில் தொடர்ந்து உண்டு வந்தால், மந்தமான நிலையை மாற்றி, பித்தத்தை தணிக்கும் குணம் கொண்டது. அது செரிமானத்தை சீராக்கி, குடல் புண்களை சரி செய்யும். 
 12. வாழை இலையில் நார்ச்சத்து உள்ளதால், உடல் எடை கூடாமல் தடுக்கும்.

மேலும் படிக்க - விரைவில் உடல் எடையை குறைப்பதற்கான மிகச்சிறந்த வழிகள்!

வாழை இலையில் உணவை எப்படி பரிமாறி சாப்பிட வேண்டும் ?

Shutterstock

 • தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, வாழை இலையை அதன்மீது போட வேண்டும். அமர்பவருக்கு இடதுபுறம் வாழை இலையின் நுனியும், வலதுபுறம் வாழை இலையின் அடிப்பாகமும் இருக்குமாறு போட வேண்டும். அதனால் நாம் வலது கைகளில் சாப்பாடு பிசைந்து உண்ண இடம் அதிகமாக இருக்கும். 
 • முதலில், இலையின் மீது சிறிது நீர் தெளித்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பின்னர், நெய் தடவி உணவு பரிமாற வேண்டும்.
 • இலையின் நுனி பகுதியில் உப்பை வைப்பார்கள்.பின் வரிசையாக, ஊறுகாய், பச்சடி, பொரியல், கூட்டு, வடகம், வடை, அப்பளம், சாதம், பருப்பு ஆகியவற்றை பரிமாறி, அதன்மீது நெய் விட்டு ஆரம்பமாகும் உணவு. பின்னர், சாம்பார், ரசம், பாயாசம் அதன் பின் மோர் என பரிமாறுவார்கள். சொல்லும்போதே நாக்கு ஊறுகிறதல்லவா?
 • சுப காரியங்களில், உப்பு வைத்தவுடன் இனிப்பு வைப்பது வளக்கம். எல்லாம் இனிமையாக ஆரம்பிக்கட்டும் என்ற அர்த்தத்தில் செய்தார்கள். எடுத்தவுடன் இனிப்பு சாப்பிட்டால், அதிக சாப்பாடு சாப்பிட முடியாது என்பதற்காத்தான் வைக்கிறார்கள் என்று தற்காலத்தில் கூறுவது உண்மை அல்ல. முதலில் இனிப்பை சுவைப்பதால், உமிழ்நீர் நன்றாக சுரந்து, நீங்கள் மேலும் சாப்பிடும் உணவை நன்றாக ஜீரணம் செய்ய உதவும். 
 • வாழை இலையில் கெட்டுப்போன பழைய உணவைப் பரிமாறினால், அந்த உணவில் இருந்து, தேவை இல்லாத நீர் பிரிந்து வருமாம். அதனால், வாழை இலையில் பரிமாறினால் எதிரிகள் வீட்டில் கூட பயமின்றி உணவு அருந்தலாம் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
 • உணவு உண்டபின், இலையை நம்மைநோக்கி மடக்க வேண்டும். ஏன்னெனில், அது உணவு நன்றாக இருந்தது, உணவு பரிமாறியவருக்கும், நமக்கும் நல்ல உறவு நீடித்து வளர வேண்டும் என்று பொருள் தரும். 

இப்படி சூடான உணவை வாழை இலை மீது பரிமாறும்போது, மேல் சொன்ன சத்துக்கள் வாழை இலையில் இருக்கும் கிளோரோபில்லுடன் கரைந்து உணவுடன் கலந்துவிடும். உங்கள் இல்லத்தில் இடம்  இருந்தால், வாழை மரம் வளர்க்கலாம். ஏன் மொட்டைமாடியில் தொட்டியில் கூட தற்போது வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். விரைவாக வளரக் கூடிய, மரத்தில் உள்ள எல்லாப் பாகங்களும் பயன்தரக்கூடிய (நன்மை) ஒரு அற்புதமான மரம் வாழை மரம். நிச்சயம் இனி தவிர்க்காமல், வாழை இலையை தேடிச்சென்று உண்ணப்போகிறீர்கள் தானே?!

 

மேலும் படிக்க - சரும அழகை அதிகரிக்கும் வாழைப்பழம் : பலன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்!

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!