பொலிவான சருமம் கொண்ட பெண்களைப் பார்க்கும்போது நமக்கும் ஒரு ஏக்க பெருமூச்சு எழத்தான் செய்கிறது. சருமத்தின் பொலிவிற்கும் வயதிற்கும் ஒரு சம்பந்தமும் இருப்பதில்லை என்பதன் உண்மையையும் அறிந்து கொள்ள முடிகிறது.
40 வயது பெண்ணின் முகம் இளமை ததும்பும் பொலிவுடன் இருப்பதும் 25 வயது பெண்ணின் முகம் முதுமையடைந்தது போல காணப்படுவதும் நாம் அன்றாடம் சந்திக்கும் முகங்கள் பற்றிய உண்மைகளை நமக்கு எடுத்துரைக்கின்றன.
எப்படி முகம் இளமையாக பளபளப்பாக பொலிவுடன் நாம் பராமரிப்பது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. என்னதான் முகத்தை வீட்டில் உள்ள பொருள்கள் மூலம் பழங்கள் மூலம் பளபளப்பாக வைத்திருந்தாலும் நாள்முழுக்க அவை நீடிப்பதில்லை.
கரும்புள்ளிகளை நீக்கி களையான முகம் பெற சில பெஸ்ட் குறிப்புகள் !
அதற்கு நீங்கள் சரியான மேக்கப் (makeup) முறைகளை கையாளவில்லை என்பது மட்டுமே உண்மை. தவறான மேக்கப் பழக்கங்களை கையாண்டால் உங்கள் முகம் இயல்பை விட வயதாவது போல மாறிவிடலாம். ஆகவே சரியான மேக்கப் முறைகள் உங்கள் பொலிவை கூட்டி அழகை நிரந்தரம் ஆக்குகிறது.
பளபளப்பான மேக்கப்பிற்கான வழிமுறைகள்
சீரம் அல்லது டோனர்
ஒரு மேக்கப்பை ஆரம்பிக்கும் முன்னர் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் முகத்தை ஈரப்பத்தில் வைப்பதுதான். அப்போதுதான் நீங்கள் செய்யும் மேக்கப் முகத்தில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.சீரம் பயன்படுத்துங்கள். உங்கள் சருமத்திற்கேற்ற சீரம் உங்கள் முக அழகை மேலும் பொலிவாக மாற்றும். இயற்கை அழகு கொண்டவராகவே உங்களை மாற்றுகிறது. மேலும் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வெடிப்புகளை இவை சரி செய்து விடும்.
ஒரு நல்ல சீரம் அல்லது டோனர் உங்கள் முகத்தில் மேக்கப் (makeup) ஆரம்பிப்பதற்கு முன்னர் கழுத்து வரை தடவி விடவும். இந்த திரவம் சரும ஒப்பனை கலையாமல் பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் ஒப்பனை பொருள்களால் சருமத்திற்கு ஏற்படும் தீங்கான விளைவுகளை தடுக்கவும் செய்கிறது.
பேரழகு மின்னும் பொலிவான முகம் வேண்டுமா! செலவில்லாமல் செய்யலாம் ரெட் ஒயின் பேஷியல்!
ஃபவுண்டேஷன் க்ரீம்
சீரம் அல்லது லோஷனை முகம் மற்றும் கழுத்து பகுதி முழுதும் தடவிய பின்னர் ஃபவுண்டேஷன் க்ரீமை விரல்களால் தொட்டு முகம் முழுதும் சிறிய புள்ளிகளாக வைக்கவும். அதன் பின்னர் முகம் முழுதும் சீராக பரவும்படி நன்கு தடவ வேண்டும். ஃபவுண்டேஷனில் நல்ல எஸ்பிஎப் உள்ளதாக பார்த்து வாங்கவும். நல்ல தரமான பொருள்களை உபயோகித்தால் முகம் நீண்ட நாள் இளமையை தக்க வைக்கும்.
கன்சீலர்
ஈரப்பத்திற்கு பின்னர் முகம் கண்ணாடி போன்ற பளபளப்பை காட்டும். அதன் பின்னர் தடவப்படும் ஃபவுண்டேஷன் உங்கள் முகத்தை மேலும் பொலிவாக மாற்றி மின்னும் அழகிற்கு சொந்தமாக உங்களை மாற்றியிருக்கும். அதன் பின்னரும் முகத்தில் தெரியும் கரும்புள்ளிகள் மங்கு மரு கண்கருவளையம் ஆகியவற்றை மறைக்க கன்சீலரை உபயோகப்படுத்துங்கள். உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற கன்சீலரை தேர்ந்தெடுத்து அதனை மெதுவாக தொட்டு முகத்தில் தேவையான இடங்களில் தடவி முகத்தின் நிறம் மாறாமல் ஒன்ற விடுங்கள்.அதன் பின்னர் சிறிது நேரம் உலர விட வேண்டும்.
என்றும் இளமை வேண்டுமா ! ஆரோக்கியமான அழகான வாழ்க்கைக்கு இந்துப்புவை இப்படி பயன்படுத்துங்கள
காம்பேக்ட் பவுடர்
உங்கள் சருமத்தை மேலும் ஒளிர (Glowing ) வைக்கும் படி நீங்கள் காம்பாக்ட் பவுடர் பூச வேண்டும். இதன் அடிப்படை என்னவென்றால் இவ்வளவு அடுக்குகளாக நீங்கள் செய்த மேக்கப்பை காப்பாற்றும் வேலியாக காம்பேக்ட் பவுடர் செயல்படும். மேலும் உங்கள் ஒப்பனையை மறைத்து நீங்கள் இயல்பாகவே அழகாக இருப்பவர் போல இந்த பவுடர் காண்பிக்கும். இதிலும் நல்ல தரம் வாய்ந்த SPF உள்ள பவுடராக தேர்ந்தெடுங்கள்.
இன்னொரு ரகசியம் சொல்கிறேன்.. மினரல்ஸ் அடங்கிய காம்பாக்ட் பவுடர்கள் உங்கள் முகத்தை அற்புத பளபளப்பாக மாற்றும் அதிசய சக்தி பெற்றது. இனி இந்த முறையில் மேக்கப் (makeup) செய்யுங்கள். உங்கள் முகத்தை மற்றவர் முகம் பார்க்கும் கண்ணாடி போல மின்ன செய்யுங்கள்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.