Bollywood

தேசப்பற்றை உணர்த்தும் தமிழ், ஹிந்தி திரைப்படங்களின் தொகுப்பு! (Patriotic Movies In Tamil)

Swathi Subramanian  |  Jul 18, 2019
தேசப்பற்றை உணர்த்தும் தமிழ், ஹிந்தி திரைப்படங்களின் தொகுப்பு! (Patriotic Movies In Tamil)

இந்திய தேசத்தின் சுதந்திரத்தில் சினிமாவுக்கும் பெரிய பங்கு உண்டு. இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு 73 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் (patriotic) திரைப்படங்கள் குறித்து நாம் இங்கு காணலாம். 

தமிழ் தேசப்பற்று திரைப்படங்கள் (Patriotic Movies In Tamil)

தேசியத்துக்கான போராட்டங்களில் லட்சிய வேட்கையுடன் உயிர் துறந்த வீரர்களைப் பற்றிய திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் உண்டு. எதிரிகள் சூழ, ஆயுதங்கள் வெடிக்க, தேசியக் கொடிகளுடன் முன்னணி நாயகர்களின் சாகசங்கள் தேசபக்தர்களுக்கு ‘கூஸ்பம்ப்ஸ்’ மொமென்ட்களைத் தரும். அப்படி தமிழ் சினிமாவில் தேசப்பற்றை உணர்த்தும் வகையிலான படங்களை குறித்து இங்கு காணலாம்.

 Also Read : தமிழ் திரைப்படங்கள் பட்டியல்

ஹே ராம் (Hey Ram)

ஹே ராம் திரைப்படம் கமல் ஹாசன் இயக்கி, அவரே இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடன் ஷாருக்கான், ராணி முகர்ஜி உள்ளிட்டோர் நடித்தனர். மதர்ச்சார்பற்ற தேசம் எனும் காந்தியின் கொள்கைதான் தன் மனைவியை கொன்றதாக நினைத்து காந்தியை கொல்ல புறப்படுகிறார் சாகேத்ராம் எனும் பிராமண தமிழர். ஆனால் அந்த பயணத்தின் ஊடே இழப்பு என்பது இந்துக்களுக்கு மட்டுமின்றி முஸ்லிம்களுக்கும் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து காந்தியிடம் மன்னிப்பு கேட்க செல்லும் இடத்தில் காந்தி கோட்சேவால் கொல்லப்படுவதோடு படம் நிறைவடைகிறது. இந்த படத்திற்கு பிலிம்பேர் விருது, 3 சில்வர் லோட்டஸ் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனிய காலை வணக்கத்தோடு உங்கள் நாளை மகிழ்ச்சியோடு தொடங்குங்கள்!

twitter

கப்பலோட்டிய தமிழன் (Kappalottiya Thamizhan)

இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் (patriotic) ஒருவரான வ. உ. சிதம்பரதின் வாழ்க்கை வரலாறு குறித்து இந்த படத்தில் விளக்கியிருப்பார்கள். வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படம். இதில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பாரதியாரின் கவிதைகள் என்பது இத்திரைப்படத்தின் தனிச் சிறப்பு. சிவாஜி கணேசன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஆகச்சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. பி. ஆர். பந்துலு இயக்கி, தயாரித்த இத்திரைப்படம் சிறந்த தேசிய பட விருதை பெற்றது.  

twitter

இந்தியன் (Indian)

ஊழலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இதன் திரைக்கதை இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க செய்தது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம், இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஜப்பானில் ஏற்பட்ட விமான விபத்தில் போஸ் சிக்கி இறந்துவிட்டதாக அன்றைய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் சாகவில்லை. உயிருடன்தான் இருக்கிறார் என்றும் நம்பப்பட்டது. அந்தக் கதையை பின்புலமாகக் கொண்டே இந்தியன் க்ளைமேக்ஸை ஷங்கர் வடிவமைத்திருந்தார்.

திருச்சியில் ஒரு நாள் – வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை காண தவறாதீர்கள்!

twitter

ரோஜா (Roja)

ரோஜா திரைப்படம் 1992ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா மற்றும் ஜனகராஜ் நடித்துள்ளனர். மணி ரத்னம் இயக்கிய இந்த படத்தில், தேசத்திற்காக தன் உயிரையும் கொடுக்க துணியும் சாமனியனை காட்டிய விதம் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. அதிலும் தேசியகொடியை எறிக்கும் அந்த சமயத்தில் தன் உடலாலே அதை அனைக்க முற்படும் கதாநாயகன் என பார்ப்பவரை நெகிழ வைக்கும் பல காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது.’இசை புயல்’ என எல்லோராலும் புகழப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானது இந்தப் படத்தில் தான். மேலும் மூன்று தேசிய விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

twitter

பேராண்மை (Peranmai)

ஒரு பெண்கள் கல்லூரியில் இருந்து ஒரு குழு என்சிசி பயிற்சிக்காக வருகிறார்கள். அதில் உள்ள ஐந்து பெண்களுடன் பயிற்சிக்குச் செல்லும் இடத்தில் ஜெயம் ரவி அந்த பெண்களுடன் இணைந்து தங்கள் உயிரைப் பணையம் வைத்து நமது நாட்டின் செயற்கைகோள் ஏவும் முயற்சியை தடுக்கும் நோக்கோடு வரும் அந்நிய சக்திகளை வெற்றி கொள்வைதே இந்தப் படத்தின் கதை. இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் தேசப்பற்று மற்றும் பழங்குடியின மக்களின் துயரங்கள் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார். 

twitter

முதல்வன் (Mudhalvan)

முதல்வன் 1999ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் (patriotic)  அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் “ஒரு நாள் முதல்வர்” என தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிதான கதையை கொடுத்ததன் மூலம் மிகப் பெரும் வெற்றி பெற்றது.  ஒரு சி.எம்னா இப்படி இருக்கனும் என்று நம் அனைவரையும் அசத்திய அளவிற்கு புகழேந்தி கதாபாத்திரத்திற்கு அர்ஜூன் உயிரூட்டியிருப்பார். தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றது.

twitter

பாரதி (Bharathi)

பாரதி திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலைப் பேராட்டத்தில் பாரதியின் பங்கையும், பாரதியின் உயர்வான சிந்தனைகளும் இப்படத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். பாரதியாராக சாயாஜி ஷிண்டேயும், செல்லம்மாவாக தேவயாணியும் நடித்துள்ளனர். ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் 2000ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

twitter

மதராசப்பட்டினம் (Madrasapattinam)

1944-47 வரையிலான காலகட்டத்தில் நடந்த சுதந்திரப் போராட்டம் இந்த படத்தில் காண்பிக்கப்படுகிறது. சுதந்திரம் கிடைத்ததையும், சுதந்திரத்துக்குப் பின் நாம் அவற்றை எந்த அளவுக்கு சீர்கேட்டுக்கு உள்ளாக்கியுள்ளோம் என்பது படத்தில் தெளிவாக கட்டியுள்ள்னனர். இயக்குனர் ஏ.எல். விஜய் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் ஆர்யா, எமி ஜாக்சன் நதித்துள்ளனர். பிரிட்டிஷ் அரசரின் மகளான எமி, சலவை தொழிலாளியான ஆர்யாவை காதலிப்பார். சென்னையில் ஒரு காதல் கதையை மிக அழகாக காட்டியிருப்பார்கள்.  

twitter

துப்பாக்கி (Thuppakki)

தீவிரவாதிகளின் திட்டங்களை முறியடிக்கும் இராணுவ அதிகாரியின் துணிச்சல் துப்பாக்கி திரைப்படம். இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இராணுவத்தில் வேலை செய்யும் விஜய், தீவிரவாதிகளின் சதித் திட்டங்களைத் தெரிந்து கொண்டு, அவற்றை தன்னுடன் பணியாற்றும் இராணுவ வீரர்களின் துணையுடன் முறியடிப்பதே படம். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. 

twitter

பாம்பே (Bombay)

பம்பாயில் 1992 முதல் 1993 வரை நடைபெற்ற கலவரங்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படியாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மாற்றம் செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மணி ரத்னம் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் பில்ம்பேர் விருது, தேசிய திரைப்பட விருதுளை பெற்றுள்ளது.

twitter

பாலிவுட் தேசப்பற்று திரைப்படங்கள் (Bollywood Patriotic Movies)

தேசப்பற்று (patriotic) என்பது மக்கள் மீது பற்றுகொண்டிருப்பது. தேசியக் கொடி, தேசிய கீதம், எல்லைப் பாதுகாப்பு, போர் மீதான விருப்பம் முதலானவற்றை எல்லைகளாக வகுத்து, தேசப் பற்றுக்கான புதிய வரைமுறைகள் தற்போதைய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. தேசப்பற்று என்பதே ஒரு குடிமகனின் அளவுகோலாகக் கொள்ளப்படும். இந்தியாவில தேசப்பற்றை மையமாகக் கொண்டு பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஹிந்தி சினிமாவில் பல்வேறு தேசப்பற்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

பிரஹார் (Prahaar)

பிரஹார் திரைப்படம் மேஜர் சவானின் கதையை அடிப்படையாக கொண்டது.  ஒரு கடினமான மற்றும் எதிரிகளை அழிக்க பயிற்சி பெற்ற மேஜர் சவான் எல்லைகளில் நுழையும் எதிரிகளை அழிக்கிறார். ஆனால் நமக்குள் கண்ணுக்குத் தெரியாத எதிரியைப் பற்றி தெரியாது. மேஜரின் கமாண்டோக்களில் ஒருவரான பீட்டர் டிசோசா கொல்லப்படும்போது, அவரை சுற்றியுள்ளவர்களின் உண்மை முகம் வெளி வருகிறது. இதனால் மேஜர் சவான் எதிரி மீது தனது இறுதி தாக்குதலை நடத்துவதே இந்த படம். படத்தை நானா படேகர் எழுதி இயக்கியுள்ளார். 

twitter

பார்டர் (Border)

எல்லோருக்கும் சிறந்த தேசபக்தி இந்திய திரைப்படங்களில் ஒன்றானது பார்டர் திரைப்படம். இந்த படமானது பாலிவுட் வரலாற்றில் இதுவரை தயாரிக்கப்பட்ட சிறந்த போர் அடிப்படையான திரைப்படமாக இருக்கிறது. ஜே.பி. தத்தா இயக்கிய இந்த படத்தின் காட்சிகள் லாங்வாலா போரை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுளளது. இந்தியா- பாகிஸ்தான் போரின் போது நடந்தவற்றை எதார்தமாக படத்தில் கட்டியிருப்பார்கள். இந்தத் திரைப்படத்தில் நடிங்கர் சன்னி தியோல் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

twitter

காந்தி (Gandhi)

இந்த ம் படம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. தென்னிந்தியாவிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் காந்தியின் பயணத்தையும், பிரிட்டிஷ் நாட்டுக்காரர்களிடம்  இருந்து சுதந்திரம் பெறுவதில் அவரது முக்கிய பங்குகள் பற்றி இந்த படம் நமக்கு சொல்கிறது. ரிச்சர்ட் அட்டன்பரோவால் இயக்கப்பட்ட இந்த படமானது, 8 அகாடமி விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பென் கிங்ஸ்லி காந்தி கதாப்பாத்திரத்தில் நடித்தார். 

twitter

லஷ்க்யா (Lakshya)

லஷ்க்யா போர் குறித்த திரைப்படமாகும். நடிகர் அமிதாப் பச்சன், ப்ரீத்தி ஜிந்தா, ஹ்ருதிக் ரோஷன் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். படத்தில் ரோஷான் லெப்டினன்ட் கரன் ஷெர்கில் பாத்திரத்தில் நடித்துள்ளார். பாக்கிஸ்தானிய துருப்புக்களை வெற்றிக் கொள்வதற்கு அவர் தனது அணிக்கு தலைமை தாங்கினார். பர்ஹான் அக்தர் இயக்கிய இந்த திரைப்படம் நேஷனல் பிலிம் பேர் விருதை வென்றுள்ளது. 

திரைக்கு வரும் எனை நோக்கி பாயும் தோட்டா!அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களால் சந்தோஷத்தில் ரசிகர்கள்!

twitter

ரங் தே பசந்தி (Rang De Basanti)

ரங் தே பசந்தி 2006ம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் திரைப்படமாகும். கோல்டன் குலோப் விருதிற்காக 2006 மற்றும் 2007ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. லண்டனில் இருக்கும் ஓர் ஆங்கிலேயப் பெண் இந்தியாவில் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய புரட்சிகர வீரர்களான சந்திரசேகர ஆசாத், பகத்சிங், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் முதலானவர்களின் வரலாற்றில் ஆர்வம் கொண்டு அவர்கள் குறித்து ஆவணப்படம் எடுக்க இந்தியா வருகிறார். இந்தியா வந்த பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் கதை. ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அமர் கான், மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

twitter

லாக் கார்கில் ஜான் சே (LOC Kargil)

1999ம் ஆண்டு மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நடந்தது. இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஜே.பி.தத்தா தயாரித்து இயக்கிய இந்தப் படம் 2003ம் ஆண்டு வெளியானது. அஜய் தேவ்கன், சஞ்சய் தத், கரண் நாத், சுனில் ஷெட்டி, ராணி முகர்ஜி, கரீனா கபூர், ஈஷா தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்தனர்.

twitter

தி காஸி அட்டாக் (Ghazi Attack)

1971ம் ஆண்டு நடந்த இந்தியா, பாகிஸ்தான் போரின்போது விசாகப்பட்டிணத்தை தாக்க வந்த பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பலான ‘காஸி’யை நம் இந்திய நீர்மூழ்கி கப்பலான ‘சி-21’ படை வீரர்கள் எப்படி புத்திசாலித்தனமாக அழித்து நம் நாட்டை காப்பாற்றினார்கள் என்பதுதான் காஸி  படத்தின் கதை. புளூ ஃபிஷ்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் அறிமுக இயக்குனர் சங்கல்ப் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ராணா நடித்துள்ளார். 

twitter

உரி : தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் (Uri: The Surgical Strike)

காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம், “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” எனும் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து “உரி-தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்” எனும் இந்தி திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆதித்யா தார் தயாரித்த இந்த படத்தில் விக்கி கவுஷல், யாமி கௌதம் முதலானோர் நடித்துள்ளனர். 

twitter

தி லெஜெண்ட் ஆஃப் பகத் சிங் (The Legend of Bhagat Singh)

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்து இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய இந்த படத்தில், தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டது போலவும், தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில் கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அஜய் தேவன் நாயகனாக நடித்த இத்திரைப்படம் நேஷனல் பிலிம் பேர் விருதை வென்றுள்ளது. 

twitter

சக் டே இந்தியா (Chak De! India)

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் “சக் தே இந்தியா”. இந்த திரைப்படத்தில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஷாருக் கான் நடித்திருப்பார். இப்படத்தில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக ஷாருக் கான் இருந்தபோது பாகிஸ்தானிடம் இந்திய அணி உலக கோப்பையை தோற்றுவிடும். பெண்கள் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக இருந்து உலக கோப்பை போட்டியில் வெற்றி பெறச்செய்வார். ஷிமித் அமீன் இயக்கிய இத்திரைப்படம் 5 பிலிம்பேர் விருதுகள், நேஷனல் பிலிம் அவார்ட் உள்ளிட்ட பல்வேறு விருத்துகளை பெற்றுள்ளது. 

twitter

லகான் (Lagaan)

2001ம் ஆண்டு பிரபல ஹிந்தி நட்சத்திரமான அமீர்கானின் நடிப்பில் வெளியானது. அஸுதோஸ் கௌவாரிகர் இயக்கிய இந்த படம் இந்திய திரைப்பட வரலாற்றில் மூன்றாவது முறையாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் இந்தியர்கள் அனைவரும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு வரி செலுத்தி வந்தனர். அப்போது வரிப்பணத்தை குறைக்குமாறு வலியுறுத்திய மக்களிடம், அனைவரும் மாமிசம் உண்ண வேண்டும் என பிரித்தானிய அதிகாரி கூறினார். இதனை ஏற்க மக்கள் மறுக்கவே வரி பணம் இரு மடங்காக உயருகிறது. படத்தின் நாயகன் தன் கிராமத்தில் பலரை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அழித்து பிரித்தானியர்களை வெல்வதே கதை. 

twitter

1971

1971ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் 6 துணிச்சலான வீரர்கள் குறித்து இந்த படத்தில் கட்டப்பட்டுள்ளது. அமிர்த சாகர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இரண்டு நேஷனல் பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளது. மனோஜ் பாஜ்பாய், ரவி கிஷன், தீபக் டோப்ரியல் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

twitter

கேசரி (Kesari)

கேசரி திரைப்படம் 10,000 எதிரிகளை வீழ்த்திய 21 வீரர்களின் வரலாறாகும். இந்தி திரையுலகில் வித்தியாசமான படங்களில் நடிக்கும் நடிகர் அக்‌ஷய் குமார் இந்த படத்தில் கதாநாயகனாவார். ‘கேசரி’ என்றால் ‘காவி’ என்று அர்த்தம். அனுராக் சிங் இயக்கிய இந்த படத்தில், பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கன் படையினரை எதிர்கொண்ட 21 சீக்கிய வீரர்களின் தீரத்தை பற்றி விளக்கி இருப்பார்கள்.

twitter

மங்கல் பாண்டே (Mangal Pandey)

கேதன் மெஹ்ரா இயக்கிய இந்த படம் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் மங்கல் பாண்டேயின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கிந்திய கம்பனிகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். படத்தில் மங்கல் பாண்டே கதாபாத்திரத்தில் ஆமிர் கான் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆனது.

twitter

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் : மறக்க முடியாத நாயகன் (Netaji Subhash Chandra Bose: The Unforgettable Man)

இந்தியாவிற்கு இப்படியும் போராடத் தெரியும் என்பதை உலகத்திற்கு உணர்த்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாற்றை இந்த படம் உணர்த்துகிறது. இந்திய தேசிய காங்கிரசின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பின்னர், இரண்டாம் உலகப் போரின்போது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் சுபாஸ் முக்கிய பங்கு வகிக்த நிகழ்வுகள் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஷியாம் பெனகல் இயக்கிய இந்த படத்தில் சச்சின் கெடேகர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸாக நடித்துள்ளார். 

twitter

கோல்ட் (Gold)

இரண்டாம் உலகப் போர் நடைபெற இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு நாடுகளாக பிரிந்தது. இதனால் ஹாக்கி அணியும் இரண்டாக உடைகிறது. தடைகளை மீறி எப்படி தபன் தாஸ் 200 வருட பகையை வென்றார் என்பதே ‘கோல்ட்’ திரைப்படம். 1948ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா, பிரிட்டன் அணியை வென்று தங்கப் பதக்கம் பெற்றது என்ற ஒன் லைனை மட்டும் வைத்துக் கொண்டு அபாரமான கற்பனைக் கதை ஒன்றை உருவாக்கி, சிறப்பாக இயக்கியுள்ளார் ரீமா கக்தி. இந்திய ஹாக்கி அணியின் மேனஜராக நடிகர் அக்‌ஷய் குமார் சிறப்பாக நடித்துள்ளார். 

twitter

பார்மனு (Parmanu)

இந்தியா அணுசக்தி வல்லரசு நாடு என நிரூபிக்க 1998ம் ஆண்டு பொக்ரானில் நடத்திய அனுகுண்டு சோதனையை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கபட்டுள்ளது. அபிஷேக் சர்மா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தொடங்கும் போதே, அமெரிக்கா அணு குண்டு வெடிச்சது வல்லரசு ஆனது, சீனா அணு குண்டு வெடிச்சது வல்லரசு ஆனது. அது போல நாமும் அணு குண்டு வெடித்தால் வல்லரசு ஆகலாம் என்ற காட்சிகள் இருக்கும். ஜான் ஆபிரகாம், டயானா பெண்டி, போமன் இரானி உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர்.

twitter

ரோமியோ அக்பர் வால்டர் (RAW)

ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான ‘ரோமியோ அக்பர் வால்டர்’ பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க அனுப்பப்பட்ட ‘ரா’ அதிகாரியின் கதை. ராபி க்ரேவால் எழுதி இயக்கப்பட்ட இந்தப் படம் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் முதலில் திரையிடப்பட்டு பிறகு வெளியானது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதம் பற்றி பல திரைப்படங்கள் நடித்த ஜான் ஆபிரஹாம் இதிலும் கச்சிதமாக நடித்திருந்தார்.

twitter

ஏர்லிப்ட் (Airlift)

குவைத் மீது ஈராக் நடத்திய தாக்குதலின் போது ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அறிமுக இயக்குனர் ராஜா கிருஷ்ண மேனன் படத்தை எடுத்துள்ளார். படத்தில் கதாநாயகனாக அக்சய் குமார் நடித்துள்ளார். ஈராக் திடீரென குவைத் மீது போர் தொடுத்ததால், அந்நாட்டு மக்களுடன் இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களை காப்பாற்ற அக்சய் குமார் களம் இறங்கி போராடுவதே படத்தின் மீதி கதை. 

twitter

ஸ்வதேஸ் (Swades)

நாசாவில் வேலை பார்த்து வரும் கதாநாயகன் ஷாருக்கான் 12 வருடங்களுக்கு பிறகு தன்னை வளர்த்த பாட்டியை பார்க்க டெல்லி செல்கிறார். அங்கு சென்று அவரை வளர்த்த காவேரி பாட்டியை சந்திக்கிறார். அப்போது அந்த கிராமம் சாதிப்பிரிவால் சிக்கியிருப்பதை உணர்ந்து அனைத்து குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார். இறுதியில் இந்தியாவின் ஏழ்மை, படிப்பின்மை, குழந்தைத் தொழிலாளர்கள், வறுமை ஆகியவற்றை உணர்வதே இந்தப் படம். அஷுதோஷ் கோவாரிகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ரஹ்மானின் அருமையான இசையும் படத்திற்கு உயிரூட்டியுள்ளது.

twitter

பேபி (Baby)

இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் 2015ம் ஆண்டு பேபி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அக்ஷய் குமார், ராணா, டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் மும்பை தாக்குதல்களை அடிப்படையாக கொண்டது என கூறப்பட்டது. ஆனால் இது ஒரு கற்பனை திரைப்படம். படம் குறித்து நிறைய ஆராய்ச்சிகளை இயக்குனர் நீரஜ் பாண்டே மேற்கொண்டுள்ளார். இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. 

twitter

ஹாலிடே (Holiday)

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் தமிழில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தின் ரீமேக் படம் தான் ஹாலிடே திரைப்படம். விஜய்க்கு பதிலாக அக்ஷய் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்லீப்பர் செல் எனப்படும் தீவிரவாதிகள் கும்பலை வேருடன் அழிக்கும் பணியில் ராணுவ வீரரான அக்ஷய் குமார் ஈடுபட்டு, இறுதியில் ஸ்லீப்பர் செல் கும்பலின் தலைவனை தனது உயிரை பணயம் வைத்து அழிப்பதே இந்த (patriotic) திரைப்படம். 

twitter

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Bollywood