Beauty

முடி கொட்டுவதால் வருத்தமா? அடர்த்தியான கூந்தலைப் பெற 10 சிறந்த ஷாம்பு வகைகள்!! (Best Hair Fall Shampoos In Tamil)

Nithya Lakshmi  |  May 20, 2019
முடி கொட்டுவதால் வருத்தமா?  அடர்த்தியான கூந்தலைப் பெற 10 சிறந்த ஷாம்பு வகைகள்!!  (Best Hair Fall Shampoos In Tamil)

பெண்ணுக்கு அழகு சேர்க்கும் பல அம்சங்களில் அவளது அடர்த்தியான அழகிய கூந்தல் ஒன்று. அப்பேர்ப்பட்ட கூந்தலை பராமரிப்பது தான் இன்றைய காலகட்டத்தில் மிக கடினமான ஒன்றாகிவிட்டது. இன்றைய வாழ்க்கை முறை மாறி விட்டதால் மன அழுத்தம், உண்ணும் உணவு முறை, ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்கள்,மருந்துகள் என்று அனைத்தும் கூந்தல் உதிர்வதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. சீப்பை எடுத்து தலை வாரினால் , “இப்போ எவளோ முடி கொட்டுமோ தேரிலேயே!” என்று பயந்து போகும் பெண்மணிகளுக்கு நாங்கள் சில சிறந்த ஷாம்பு வகைகளை தேடி கண்டறிந்து இங்கு பட்டியலிட்டு இருக்கிறோம்.

இவை அனைத்தும் உங்கள் கூந்தல் அடர்த்தியாக நீளமாக வளர உதவும் ஷாம்பு வகைகள் ஆகும்.

சிறந்த ஷாம்புகள்

முடி கழுவும் குறிப்புகள்

கூந்தல் உதிர்வதை கட்டுப்படுத்த 10 சிறந்த ஷாம்பு வகைகள் (10 Best Hair Fall Shampoos In Tamil)

இவை அனைத்தையும் படித்து நன்கு அறிந்து உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பூவை (shampoo) உபயோகித்து பயன் அடையுங்கள்.

1. காதி நாச்சுரல்ஸ்ஆம்லா பிரிங்கிராஜ் ஹெர்பல் ஹேர் கிளென்சர் ( Khadi Naturals Amla Bringraj Herbal Hair Cleanser) 

உங்களுக்கு எந்தவித கலப்படமும் இல்லாமல் இயற்கையை சார்ந்த பொருட்கள் கொண்ட ஷாம்பு தேவைப்பட்டால் காதி நாச்சுரல்ஸ் ஹெர்பல் ஷாம்பூவை (shampoo) வாங்கலாம். இதில் இருக்கும் வேப்பிலை எண்ணெய், அலோ வேறா ,நெல்லிக்கா, ஹென்னா, ஹரிதகி (haritaki) போன்ற பொருட்கள் உங்கள் உச்சந்தலையில் இருக்கும் எண்ணெய், தூசி போன்ற அனைத்தையும் சுத்தம் செய்து உங்களுக்கு ஒரு பளபளப்பான அடர்த்தியான கூந்தலைப் பெறுவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது.இது எல்லா வித கூந்தலுக்கும் ஏற்றது.

நன்மைகள் : 100% இயற்கையான பொருட்களைக் கொண்டது, சல்பேட் பிரீ, பாரபீந் பிரீ

குறைபாடு : உச்சந்தலையை இது மேலும் வறண்டதாக்கலாம்

ரூ 140

இதை இங்கு வாங்கலாம்

கூந்தல் வளர்ச்சிக்கு சில சிறந்து ஷாம்புகள்

2. த்ரிசப் ஹேர் பால் கண்ட்ரோல் ஹேர் ஷாம்பு (Trichup Hairfall Control Hair Shampoo)

உங்கள் மெல்லிய கூந்தலுக்கு இலகுவான ஒரு ஷாம்புவை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் இந்த த்ரிசப் ஹேர் பால் கண்ட்ரோல் ஹேர் ஷாம்பு உங்களுக்கு உதவும். இதில் இருக்கும் மூலிகைகள் உங்கள் கூந்தலின் நுண்ணறைகளை வலுவாக்கி மேலும் கூந்தல் ஆரோக்யமாக வளர உதவும். ஈரமான கூந்தலில் சிறிதளவு இந்த ஷாம்பூவை எடுத்துக் கொண்டு உங்கள் உச்சந்தலையில் தேய்த்து அலசுங்கள்.

நன்மைகள் : முற்றிலும் இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஷாம்பூ,மலிவான விலை

குறைபாடு : மூலிகை காரணத்தினால் குறைவான நறுமணம் இருக்கலாம்

ரூ 140

இதை இங்கு வாங்கலாம்

Also Read About சுருள் முடியை கவனித்துக்கொள்வது எப்படி

3. ட்ரெஸ்ஸேமே ஹேர் பால் டிபென்ஸ் ஷாம்பு (Tresemme Hairfall Defense Shampoo)

உங்களுக்கு பிடித்த டிவி ஸ்டார் ஏதோ ஒரு விளம்பரத்தில் அடர்த்தியான நீளமான அற்புதமான கூந்தலை காட்டி ட்ரெஸ்ஸேமே ஹம்பூவை விளம்பரப்படுத்தி இருக்கலாம் !! அது வெறும் விளம்பரத்திற்கு தான் என்று நீங்கள் நம்பினால், தவறு!! ட்ரெஸ்ஸேமே ஹம்பூ உங்கள் கூந்தலை மிகவும் மென்மையாக்கி அதற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, முடி உதிர்வதை நீக்கி ஒரு அற்புதமான பவுன்ஸ் ஆன தோற்றத்தை உண்மையாகவே அளிக்கும் . இதில் இருக்கும் அமினோ வைட்டமின்கள், கேரட்டின் மற்றும் பல கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துமிக்க அம்சங்கள் உங்கள் கூந்தலை போஷாக்காக வளர்த்த உதவுகிறது. அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்றால் நிச்சயம் ட்ரெஸ்ஸேமேவை முயற்சித்துப் பாருங்கள்!

நன்மைகள் : நாள் முழுவதும் கூந்தல் மென்மையாக இருக்கும், பிசுபிசுப்பு தன்மை அற்றது, மெல்லிய கூந்தலுக்கு மிகவும் ஏற்றது

குறைபாடு : இதில் இரசாயனங்கள் இருக்கலாம்

ரூ 375

இதை இங்கு வாங்கலாம்

முடிக்கு முட்டையின் நன்மைகளையும் படிக்கவும்

4. லோரியல் ப்ரொபெஷனல்க்ஸ் டென்ஸோ கேர் ப்ரோ கெரோட்டின் ஷாம்பு (L’Oreal Professionals Pro Kerotin Shampoo)

உங்கள் கூந்தலை நேர் அல்லது சுருள் செய்ய பலவகையான ரசாயனங்கள் கலந்த பொருட்களை நீங்கள் பயன்படுத்தி இருக்கலாம். இதுபோல் உள்ள கூந்தலுக்கு இந்த லோரியல் ஷாம்பு மிகவும் ஏற்றது. இதில் இருக்கும் அமீனோ ஆசிட் மற்றும் தாவரவியல் சாற்றில் உங்கள் கூந்தலின் முன்னுரைகளை வலுவாக்கி, மென்மையாக்கி, ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

நன்மைகள் : உங்கள் கூந்தலின் தன்மையை மாற்றி சிறப்பாக அமைக்க உதவுகிறது,ப்ரோ கெரோட்டின் டெக்னாலஜியை பயன்படுத்துகிறது, உச்சந்தலையில் இருக்கும் எண்ணையை அகற்றுகிறது.

குறைபாடுகள்: இது உங்கள் உச்சந்தலையை மேலும் வறண்டதாக்கலாம்

ரூ 530

தை இங்கு வாங்கலாம்

மேலும் படிக்க – உங்களுக்கு பிடித்த பிரபலங்களை போல அடர்த்தியான அழகிய கூந்தலை பெற 5 சிறந்த ஹேர் மாஸ்க்ஸ்

5. காயா இன்டென்ஸ் வொளுமைசிங் ஷாம்பு (Kaya Intense Volumizing Shampoo)

உங்கள் மெல்லிய கூந்தலுக்கு ஒரு இலகுவான ஷாம்பூவை தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், இந்த ஷாம்புவை நீங்கள் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் அரிசியின் நற்குணங்கள், பழங்களின் சாற்றில் , ஒலிவ் எண்ணெய் , நட்ஸ், அவகேடோ உங்கள் கூந்தலை வலுவாக்கி, இரண்டு மடங்கு மேலும் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது. இது உங்கள் உச்சந்தலையில் இருக்கும் எண்ணெய் ,அழுக்கு தூசி போன்ற அனைத்தையும் சுத்தம் செய்து உங்கள் கூந்தலை மென்மையாக்க உதவுகிறது.

நன்மைகள் : ஒரு அழகிய கூந்தலை பெறலாம் , மந்தமான கூந்தலிற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது

குறைபாடுகள்: விலை கொஞ்சம் அதிகம்,உணர்திறன் கொண்ட தலையில் கவனம் தேவை

ரூ 757

இதை இங்கு வாங்கலாம் 

6. இந்துலேகா பிரிங்க ஹேர் கிளென்சர் (Indulekha Bringha Hair Cleanser)

ஆயுர்வேதத்தில் சிறந்த ஷாம்புவை நீங்கள் தேடிக்கொண்டிருந்தாள் இந்துலேகா பிரிங்க ஹேர் கிளென்சர் பயன்படுத்திப் பார்க்கலாம். இதில் இருக்கும் பொருட்கள் அதாவது நெல்லிக்காய் ,வேப்பிலை, ஹென்னா , துளசி இவை அனைத்தும் உங்கள் கூந்தலின் வேர்களில் சென்று தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதை வலுவாக வளர உதவுகிறது. உச்சந்தலையில் போதுமான ஈரப்பதத்தை குடுத்து , இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உங்கள் கூந்தல் வேகமாக வளர உதவுகிறது.

நன்மைகள் : ரசாயனங்கள் கிடையாது

குறைபாடுகள்: ஆயுர்வேத பொருட்களைக் கொண்டு தயாரிப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் நறுமணம் இதில் இருக்காது

ரூ 234

இதை இங்கு வாங்கலாம்

7. வாடி ஹெர்பல் ஆம்லா ஷிகக்காய் ஷாம்பு (Vaadi Herbals Amla Shikakai Shampoo)

உங்கள் கூந்தல் சன்னமாக இருந்தால் அல்லது  உங்கள் கூந்தலை நீங்கள் தினமும் அலச ஒரு இலகுவான ஷாம்புவை தேடுகிறீர்கள் என்றால் இந்த வாடி ஹெர்பல் ஆம்லா ஷாம்பூ உங்களுக்கு உதவும். இதன் லைட் வெயிட் பார்முலா மற்றும் இதில் இருக்கும் நெல்லிக்காய் , அவகேடோ, ஒலிவ் , சீவக்காய் உங்கள் கூந்தலை வெகுவேகமாக வளர உதவுகிறது. உச்சந்தலையில் இருக்கும் எண்ணெய் ,அழுக்கு இவை அனைத்தையும் இந்த ஷாம்பூ எளிதில் சுத்தம் செய்து உங்கள் கூந்தலின் வேர்களை நிலைப்படுத்தி ஒரு அழகிய ஆரோக்கியமான கூந்தலை உங்களுக்கு அளிக்கிறது.

நன்மைகள் : இயற்கையான பொருட்களால் செய்த ஒரு ஷாம்பூ ,மலிவான விலை, நல்ல நறுமணம், எல்லா வித கூந்தலுக்கும் ஏற்றது

குறைபாடுகள் : இதை அலச நேரம் ஆகலாம் , அதிகம் உபயோகித்தால் கூந்தல் வறண்டு போகலாம்

ரூ 69

இதை இங்கு வாங்கலாம்

8 . சன்சில்க் ஹேர் பால் சொலுஷன் ஷாம்பு (Sunsilk Hairfall Solution Shampoo)

ஒவ்வொரு முறையும் நீங்கள் சீப்பால் கூந்தலை சீவும் போது கூந்தல் உதிர்வதை பார்த்து, பல வகை ஷாம்புகளை பயன்படுத்தி வெறுத்து போயிருப்பீர்கள்! அதை தவிர்க்க பெண்களின் கூந்தலைப் பற்றி நன்கு அறிந்து ஆராய்ந்து நியூயார்க்கை சேர்ந்த சில நிபுணர்கள் தயாரித்து வெளிவந்ததுதான் இந்த சன்சில்க் ஹேர் பால் சொலுஷன் ஷாம்பு.இதில் இருக்கும் சோயா வைட்டமின்கள் உங்கள் கூந்தலை வலுவாக்கி உடைந்து போவதை நீக்குகிறது. மேலும் உங்கள் உச்சந்தலையில் கூந்தலின் வேர்களை ஆரோக்கியமாக வளரவும், போதுமான ஈரப்பதத்தையும் அளித்து போஷாக்கான கூந்தலுக்கு வழிகாட்டுகிறது.

நன்மைகள் : அற்புதமான மென்மையான கூந்தலை பெறலாம் , சிறப்பான நறுமணம்

குறைபாடுகள் : உணர்திறன் கொண்ட உச்சந்தலையில் கவனம் தேவை, அதிகம் வறண்டு போக வாய்ப்பு உள்ளது

ரூ 165

இதை இங்கு வாங்கலாம்

9. வாவ் ஸ்கின் சயின்ஸ் ஹேர் லாஸ் கண்ட்ரோல் தெரபி ஷாம்பு ( WOW Skin Science Hair Loss Control Therapy Shampoo)

அனைத்து இயற்கை பொருட்களையும் கொண்ட மற்றுமொரு சிறப்பான ஷாம்புதான் இந்த வாவ் ஹேர் லாஸ் கண்ட்ரோல் தெரபி ஷாம்பு . இதில் இருக்கும் ஆர்கன் ஆயில், ஒலிவ் ஆயில், நெல்லிக்காய், ஷிகக்காய் ,ரோஸ்மேரி ஆயில் இவை அனைத்தும் உங்கள் கூந்தலின் வேர்களில் சென்று அதை வலுவாக்கி மேலும் உங்கள் உச்சந்தலையில் இருக்கும் அனைத்து அசுத்தங்களையும் அகற்றித், துளைகளை திறந்து உங்கள் கூந்தலை வேகமாக வளர உதவுகிறது . இத்தனை போஷாக்கையும் அளிக்கும் ஒரு ஷாம்பூவை நீங்கள் பயன்படுத்தினால் நிச்சயம் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளர வாய்ப்புள்ளது.

நன்மைகள் : இதில் ரசாயன பொருட்கள் கிடையாது, பம்ப் பாட்டில் பயன்படுத்த வசதியான ஒன்று
குறைபாடுகள்: அதிக நறுமணம் கிடையாது

ரூ 499

இதை இங்கு வாங்கலாம்

10. பையோட்டிக் பயோ கெல்ப் பிரெஷ் குரோத் ப்ரோட்டீன் ஷாம்பு (Biotique Bio Kelp Fresh Growth Protein Shampoo)

முடி உதிர்வதை நீங்கள் தடுத்து எளிதில் கூந்தலை திரும்ப அடர்த்தியாக பெற நினைத்தால் பையோட்டிக் ஷாம்புவை நீங்கள் நிச்சயம் பயன்படுத்தி பார்க்கலாம். இதில் இருக்கும் சி கெல்ப் (sea kelp) அம்சங்கள் உங்கள் கூந்தலை மிக வேகமாக வளர உதவுகிறது மேலும் இதில் இருக்கும் மூலிகைகள் ,பிரிங்கிராஜ், பெப்பர்மின்ட் ஆயில் மற்றும் பல வைட்டமின்கள் உதிரும் கூந்தலை கட்டுப்படுத்தி மேற்கொண்டு புதிதாக கூந்தல் வளர ஊக்குவிக்கிறது .

நன்மைகள்: எல்லா வகையான கூந்தலுக்கும் ஏற்றது, மலிவான விலை

குறைபாடுகள் : சிறந்த நிறுவனம் கிடையாது மற்றும் அதிகம் நூறை வராது

ரூ 155

இதை இங்கு வாங்கலாம்

உங்கள் கூந்தலை சரியான முறையில் சுத்தம் செய்வதற்கான உதவிக்குறிப்புகள் (Hair Wash Tips) 

1. தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையில் உங்கள் கூந்தலை மிதமாக தேய்த்து மசாஜ் செய்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அலசுவது அவசியம். இதனால் உங்கள் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தை இந்த எண்ணை வகைகள் அளிக்கிறது .

2. உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பூ தேர்ந்தெடுத்த பிறகு அதை ஒரு காயின் அளவிற்கு உங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீரில் கலந்து உங்கள் உச்சந்தலையில் மட்டும் மிதமாக தேய்த்து அலசுங்கள்.

3.கூந்தலின் நுனிகளில் உங்கள் ஷாம்புவை பயன்படுத்துவதை தவிர்க்கவும் மேலும் உங்கள் ஷாம்பூ உங்கள் கூந்தலை மிகவும் வறண்டு போக வைக்கிறது என்றால் அதில் தண்ணீர் கலப்பது அவசியம்.

4. கூந்தலை அலசும்போது வெந்நீரை பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் அல்லது குளிர் நீரில் உங்கள் கூந்தலை அலசுவது அவசியம். இதனால் உங்கள் உச்சந்தலையில் இருக்கும் துளைகளை திறந்து , உங்கள் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்றில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்தும் கூந்தலின் வேர்களில் செல்ல உதவும்.

5. உங்கள் கூந்தலை கண்டிஷனரால் பராமரிப்பது மிக அவசியம். கூந்தலின் நடுவில் இருந்து அதன் நுனி வரை ஒரு காயின் அளவிற்கான கண்டிஷனரை எடுத்துக் கொண்டு மிதமாக தேய்த்து அலசுங்கள்.

6.கூந்தலை அலசிய பிறகு அதில் இருக்கும் தண்ணீரை மிதமாக கசக்கி எடுத்து விட்டு ஒரு துண்டை பயன்படுத்தி உச்சந்தலையில் இருந்து நுனி வரை ஒத்தி எடுங்கள் .தலையைத் துவட்டும்போது எந்தவித கடுமையான முறையையும் பயன்படுத்தாதீர்கள் ஏனெனில் கூந்தல் ஈரமான தோற்றத்தில் மிகவும் மென்மையாக இருக்கும். அதை பொறுமையாக கையாளுவது அவசியம்.

7. கடைசியாக மிக முக்கியமாக உங்கள் கூந்தலுக்கும் உச்சந்தலையில் உள்ள அதன் தோற்றத்துக்கும் ஏற்ற ஷாம்புவை தேர்ந்தெடுங்கள். மெல்லிய கூந்தலாக இருந்தால் இலகுவான ப்ரோடீன் ஷாம்புவையும் வறண்ட கூந்தலாக இருந்தால் கிரீம் கொண்ட ஷாம்பூவையும் உபயோகித்து பயனடையுங்கள்!

பட ஆதாரம்  – Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo. 

Read More From Beauty