Fashion

காஞ்சனா 3 திரைவிமர்சனம்! ஓர் பார்வை

Mohana Priya  |  Apr 19, 2019
காஞ்சனா 3 திரைவிமர்சனம்! ஓர் பார்வை

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா(kanchana) 3 படத்தை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது.

முனி படத்தின் 4வது தொடராக வெளியாக உள்ள படம் காஞ்சனா(kanchana) 3 படம். இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்கி நடித்த லாரன்ஸ் தயாரிப்பிலும் கூட்டு சேர்ந்துள்ளார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் தாண்டி ரூ 100 கோடி கிளப்பில் இணைந்த நடிகர் என்றால் லாரன்ஸ், அதுவும் இவர் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம், அந்த அளவிற்கு இந்த காஞ்சனா(kanchana) சீரியஸிற்கு ரசிகர்கள் அதிகம்.

படத்தின் கதை
தாத்தாவின் 60வது கல்யாணத்திற்கு செல்லும் லாரன்ஸ் குடும்பம், ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி சாப்பிட முடிவு செய்கின்றனர்.

அந்த இடத்தில் தான் மிக கொடூரமான பேய் ஒன்றை ஆணியில் அடித்து வைக்க, அதை லாரன்ஸ் யதார்த்தமாக பிடுங்க, பிறகு என்ன அந்த பேய் லாரன்ஸுடன் வீட்டிற்கு வந்து, அவர் மேல் ஏறி, தன்னுடைய ஆசையை நிறைவேற்றுகின்றது.

காஞ்சனா(kanchana) சீரியஸின் மிகப்பெரிய ஹிட்டிற்கு காரணமே ஹாரர் என்பதை விட காமெடி தான், அதிலும் கோவை சரளா என்ன தான் ஓவர் ஆக்டிங் என்றாலும், அது தான் அவரின் ப்ளஸ்ஸாக அமைந்துவிடும், அதை கடைசி பாகத்தில் விட்ட லாரன்ஸ் இதில் பிடித்துவிட்டார், அப்படியே காஞ்சனா-2வில்(kanchana) நடிகைகளை மட்டும் மாற்றினால் எப்படியிருக்கும், அது தான் காஞ்சனா-3(kanchana).

அதிலாவது லட்சுமி ராய் ஒருவர் இருந்தார், இதில் வேதிகா, ஓவியா, ஒரு புதுமுக நடிகை என மூன்று ஹீரோயின்கள், லாரன்ஸை சுற்றி சுற்றி காதலிக்கின்றனர், அவர்களுடன் ஜாலி, கலாட்டா என செல்ல, இரவு ஆனதும் பேய் வேலையை காட்ட ஆரம்பிக்கின்றது. அந்த காட்சிகள் எல்லாம் உண்மையாகவே நல்ல த்ரில்லங்காக எடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் காமெடிக்கும் பஞ்சமில்லை, காஞ்சனா-2(kanchana)வில் வந்தது போலவே பேய் இருக்கிறதா? என டெஸ்ட் செய்யும் காட்சிகள் எல்லாம் அதிரிபுதிரி சிரிப்பு, தியேட்டரே வெடித்து சிரிக்கின்றது, அதை தொடர்ந்து லாரன்ஸ் மேல் பேய் வந்ததும் அவர் செய்யும் வேலைகள் என கவர்கின்றது.

ஆனால், எப்போதும் ப்ளாஷ்பேக் காட்சிகள் நல்ல எமோஷ்னலாக வைக்கும் லாரன்ஸ், இதில் கொஞ்சம் ஓவர் எமோஷ்னலாக வைத்துவிட்டார், அதை விட நிறையவே சுயதம்பட்டம் தெரிகின்றது, இடையிடையே முக்கியமான கட்சி தலைவர் ஒருவரையும் அண்ணா, அண்ணா என்று சீண்டியுள்ளார். இரண்டாம் பாதி ப்ளாஷ்பேக் காட்சிகள் இன்னும் கொஞ்சம் எமோஷ்னல் நன்றாக இருந்திருந்தால் முழுமையாக ரசித்து இருக்கலாம்.

ஒளிப்பதிவு அந்த பங்களாவில் எங்கு பேய் வரும் என கேமராவை கொண்டு போகும் போதே நமக்கு பயம் ஒட்டிக்கொள்கிறது, இதற்கு தமனின் பின்னணி இசையும் பலம். படத்தின் முதல் பாதி செம்ம கலகலப்பாக செல்கின்றது. கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் என அனைவரும் காமெடியில் கலக்கியுள்ளனர். படத்தின் பின்னணி இசை தாருமாறாக அமைந்துள்ளது.

படத்தின் ப்ளாஷ்பேக் காட்சியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

லாஜிக் மீறல், அதை விட சொந்த முறை பெண்ணையே பிகர் என்று சொல்வது போன்ற காட்சிகள் தவிர்த்துவிடுங்கள்.

மொத்தத்தில் காமெடி, ஹாரர் என நாம் எதிர்ப்பார்த்தது அனைத்தும் படத்தில் அருமையாக வந்துள்ளது. குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.

செக்ஸ் உணர்வை தூண்டும் பெண்களின் மார்பகம் ஆண்கள் காதலிக்க காரணம்?

கூந்தல் அழகை பராமரிக்கும் கற்றாழையின் 6 அற்புத பயன்கள்

வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Fashion