Health

உங்கள் ஊருக்கு ஏற்றதா ஏர் கூலர்?

Shalini SV  |  May 10, 2019
உங்கள் ஊருக்கு ஏற்றதா ஏர் கூலர்?

 

ஒவ்வொரு கோடைக்காலமும் முந்தைய கோடைக்காலத்தைவிடக் கடும் வெயிலைத் தந்துவருகிறது. கோடையைச் சமாளிக்க நாம் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. என்னதான் மின் விசிறி வைத்திருந்தாலும் இந்தக் கோடை வெப்பத்தில் அதனால் பிரயோஜனம் இல்லை. இந்த நேரத்தில்தான் பலரும் ஏர் கூலர்(Air Cooler), ஏசி எனப் புதிய சாதனங்கள் வாங்க நினைப்போம். இதில் ஏசியைக் காட்டிலும் விலை குறைவு, சுற்றுச்சுழலுக்கு உகந்தது எனப் பலரும் ஏர் கூலரை வாங்க நினைப்போம். ஆனால் ஏர் கூலர் எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்றதல்ல எனச் சொல்லப்படுகிறது. இதனால் நாம் வசிக்கும் பகுதிக்கு ஏர் கூலர் உகந்ததா எனப் பார்த்து வாங்குவது நல்லது. அதைப் பற்றிப் பார்ப்போம்.

ஏர் கூலர் (Air Cooler)

ஏர் கூலர்(Air Cooler)என்ற பெயரிலேயே அதன் தொழில்நுட்பத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். காற்றைக் குளிராக்குவதே இதன் வேலை. அறிவியல் பூர்வமாகச் சொன்னால் காற்றில் உள்ள ஈரப்பதத்தைக் குறைப்பது. நமது வீட்டுச் சமையலறையில் பொருத்தியுள்ள புகையை வெளியே இழுத்துத் தள்ளும் எக்சாஸ்ட் ஃபேன் (Exhaust Fan) போல, ஏர் கூலரில் உள்ள ஃபேன் காற்றை ஏர் கூலர்க்குள் உள் நோக்கி இழுக்கும். இப்படி உள்நோக்கி இழுக்கப்படும் காற்று, ஒரு வடிகட்டி (Filter) மூலம் சுத்தப்படுத்தப்பட்டு உள்ளே வந்து, அங்குள்ள கூலிங் அட்டை (Cooling Pad) வழியாக வெளியேற்றப்படும். இந்த கூலிங் அட்டையின் மேல்புறம் நீர்த் துளிகள் கசியும்படியான அமைப்பு இருக்கும். இதனால் ஏர் கூலரில் இருந்து வெளிவரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். அதாவது காற்றில் உள்ள வெக்கையைக் களைந்து ஈரப்பதத்தை ஏர் கூலர்(Air Cooler) அதிகரிக்கச் செய்யும்.

இதிலிருந்து, ஏர் கூலர்(Air Cooler) காற்றிலுள்ள ஈரப்பதத்தை அதிகரிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அதனால் ஏற்கனவே ஈரப்பதம் குறைவாக உள்ள பகுதிகளில் ஏர் கூலரைப்(Air Cooler)பயன்படுத்தும்போது ஈரப்பதம் மேலும் குறையும். இது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவ ஆலோசகர்கள்.

முகத்தின் அழகை கெடுக்கும் முடியை வீட்டிலேயே சரி செய்யலாம்!

எந்தப் பகுதிக்கு ஏற்றது ஏர் கூலர்(Air Cooler)?

ஏர் கூலர்(Air Cooler) எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்றது அல்ல. பொதுவாக இந்தியாவின் மத்தியப் பகுதிகளான டெல்லி, மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளில்தாம் ஏர் கூலர்(Air Cooler) அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் இந்தியாவின் கடற்கரை நகரங்களான மும்பை, சென்னை, கொல்கத்தா போன்றவற்றில் ஏர் கூலர்(Air Cooler) பயன்பாடு வெகு குறைவு. இது ஏன் எனப் பார்ப்போம். உதாரணமாக சென்னையை எடுத்துக் கொள்வோம். சென்னையின் சராசரி ஈரப்பதம் (Average humidity) 70 சதவீதத்துக்கும் மேல். சென்னையில் அதிகபட்ச வெயில் இருக்கும் மே மாதத்தில்கூட 62 சதவீதம் அளவு இருக்கிறது. அதனால் சென்னையில் ஏர் கூலரைப்(Air Cooler) பயன்படுத்தும்போது காற்றின் ஈரப்பதம் மேலும் அதிகமாகி உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும். சென்னையில் ஈரப்பத அளவு அதிகமாக இருக்கக் காரணம் அது கடற்கரைப் பகுதியாக இருப்பதால்தான். சென்னை போல கொல்கத்தா, மும்பை பகுதிகளும் கடற்கரைப் பகுதிகளில் இருப்பதால் ஈரப்பத அளவு அதிகம். அதனால் அங்கும் ஏர் கூலர்(Air Cooler) பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல. இந்தியத் தலைநகர் டெல்லியில் ஈரப்பத அளவு வெறும் 12 சதவீதம்தான். அதனால் அங்கு ஏர் கூலர் பயன்படுத்துவது ஏற்புடையதாக இருக்கும். அதேபோல் கடற்கரைப் பகுதி அல்லாத மத்தியில் இருக்கும் ஊர்களுக்கு ஏர் கூலர்(Air Cooler) ஏற்றது.

செக்க சிவந்த அழகான உதடு வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!

ஈரப்பதம் அதிகமான பகுதியில் பயன்படுத்தினால் என்ன நேரும்?

ஈரப்பதம் குறைந்த அளவு உள்ள பகுதிகளில் பயன்படும் வகையில்தான் ஏர் கூலரின்(Air Cooler) வடிவமைப்பு இருக்கும். அதனால் சென்னை போன்ற ஈரப்பத அளவு அதிகம் உள்ள பகுதிகளில் பயன்படுத்தும்போது அறையின் ஈரப்பத அளவு மிகவும் குறையும். இதனால் ஏர் கூலர்(Air Cooler) மூலம் நமக்குக் கிடைக்கும் காற்று, குளிர்ச்சியான காற்றாக இருக்காது. ஈரக் காற்றாக இருக்கும். இது ஒரு விதமான கசகசப்பை உண்டு பண்ணும். மேலும் ஆஸ்துமா, சைனஸ் போன்ற நுரையீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்தக் காற்று ஏற்றதல்ல. இப்போதுள்ள ஏர் கூலர்களில் ஈரப்பத அளவை மாற்றியமைக்கும் வசதிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் எந்த அளவு செயல்படுகிறது என்பது கேள்விக்குறிதான். அதனால் ஏர் கூலர்(Air Cooler) வாங்கும் முன் உங்கள் ஊரின் ஈரப்பத அளவு (Average humidity) என்ன என்பதைப் பார்க்க மறக்காதீர்கள்.

அரசியலுக்கு வருகிறார் நயன்தாரா! தீவிர ஏற்பாடுகள் ஆரம்பம்…

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Health