Lifestyle

வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எப்படி கையாளுவது?

Meena Madhunivas  |  Dec 5, 2019
வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எப்படி கையாளுவது?

வாழ்க்கை என்று வந்து விட்டாலே சவால்கள் இல்லாமலா?சவால்கள் தான் வாழ்க்கையை சுவாரசியமாக்கும்!இந்த உண்மையை வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்பவர்கள் மறுக்க மாட்டார்கள்!

உங்கள் வாழ்க்கையில் சவால்கள் அதிகம் உள்ளதா?
அதனை எப்படி சமாளித்து, முன்னேறி செல்வது என்று உங்களுக்கு தெரியவில்லையா?

அப்படியென்றால், நீங்கள் இந்த தொகுப்பை கட்டாயம் படிக்க வேண்டும்!உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல சவால்களை எப்படி நீங்கள் சமாளிக்கலாம் (life challenge) என்பதற்கு இங்கே உங்களுக்காக சில பயனுள்ள குறிப்புகள்:

1. உண்மையை புரிந்து கொள்ளுங்கள்

உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தாள், முதலில் நீங்கள் நடக்கும் உண்மையை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதனை புரிந்து கொண்டாலே, பாதிக்கு மேல் உங்கள் பிரச்சனையை நீங்களே எளிதாக கையாளலாம், நல்ல தீர்வையும் காணலாம்.

2. அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்

Pexels

எந்த சூழலிலும், உணர்ச்சிவசப் பட்டு அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். கோபத்திலும், அவசரத்திலும் எடுக்கும் முடிவுகள் உங்கள் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்குமே தவிர நல்ல தீர்வைப் பெற உதவாது. அதனால், சில மணி நேரம் அல்லது சில நாட்கள் தள்ளிப் போட்டு, உங்கள் மனம் அமைதியான நிலைக்கு வந்த பின் நன்கு சிந்தித்து பின்னர் முடிவு எடுங்கள். இது பெரும் அளவு பிரச்சனைகளை எளிதில் சரி செய்து விட உதவும்.

3. சிந்தித்து செயல் படுங்கள்

உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்க நினைப்பவர்கள் உங்கள் நிம்மதியையும், உங்கள் முன்னேற்றத்தையும் பாதிக்கும் நோக்கத்தோடே பெரும்பாலும் செயல்படுவார்கள். அதனால், அவர்களுக்கு மேலும் தீனி போடுவது போல அவசரப்பட்டு நடந்து கொள்ளாமல், சற்று சிந்தித்து, அவர்கள் உங்களுக்கு உண்டாக்கும் பிரச்சனைகளுக்கு நீங்கள் பாதித்து விட்டீர்கள் என்று உணர்த்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமா? அது அவர்களை மகிழ்ச்சி அடையவே செய்யும். அதனால், ஒருவர் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்குகின்றார் என்று தெரிந்து விட்டால், முதலில் நிதானித்து, பின்னர் சிந்தித்து, அவசியம் இருந்தால் மட்டுமே அவருக்கு பதிலளியுங்கள். இல்லையென்றால், அங்கிருந்தோ அல்லது அவரிடம் இருந்தோ விலகி போய் விடுங்கள்.

மேலும் படிக்க – கோபத்தை குறைத்து நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ சில எளிய வழிகள்!

4. நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்

Pexels

எந்த ஒரு முடிவையும் உடனுக்குடன் எடுக்க முயற்சி செய்யாமல், சிறிது நேரம் ஆரப் போடுங்கள். நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்து சிந்தித்து செயல்படுகின்றீர்களோ, அவ்வளவு வெற்றியை பெறுவீர்கள். மகிழ்ச்சியாகவும் தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

5. உங்களுக்கு நடக்கும் மகிழ்ச்சியான மற்றும் நல்ல விடயங்களுக்கு நன்றி கூறுங்கள்

அனைவருது வாழ்க்கையிலும் தொடர்ந்து துன்பங்கள் அல்லது தொடர்ந்து மகிழ்ச்சி மட்டும் இருக்காது. இரண்டுமே கலந்து வருவது தான் வாழ்க்கை. இந்த விதத்தில், நீங்கள் உங்களுக்கு நடக்கும் துன்பங்களை பற்றி மட்டுமே அதிகம் நினைக்காமல், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல மற்றும் மகிழ்ச்சியான விடயங்களை பற்றி அதிகம் நினைக்கத் தொடங்குங்கள். இது உங்கள் மனதிற்கு நிம்மதியையும், அமைதியையும் தரும். பிரச்சனைகளை நீங்கள் எளிதில் இதனால் சமாளித்து விடலாம். குறிப்பாக எந்த பிரச்சனையும் உங்களை பாதிக்காது.

6. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

Pexels

எப்போதும் நேர்மறை எண்ணங்களோடு இருக்க பழகிக் கொள்ளுங்கள். மனிதர்களுக்கு எளிதாக எதிர்மறை எண்ணங்கள் வந்து விடும். ஆனால், நேர்மறை எண்ணங்களை உண்டாக்குவதும், வளர்த்துக் கொள்வதும் மிகக் கடினமான ஒன்றாக இருக்கும். ஆனால், நீங்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் போது, உங்களுக்கு நல்ல சக்திகள் அதிகரித்து, நீங்கள் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான ஒரு மன நிலையில் வாழத் தொடங்குவீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் வரவிருக்கும் பெரும்பாலான பிரச்சனைகளை முன் கூட்டியே சாமர்த்தியமாக தடுத்து விடும் ஆற்றலை உங்களுக்கு கொடுக்கும். மேலும் அப்படியே பிரச்சனைகள் வந்தாலும், அதனை சமாளிக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள உதவும்.

7. தீய மனிதர்களிடம் இருந்து விலகி இருங்கள்

உங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் உங்களுக்கு நன்மை செய்பவராக இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அதிலும், இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மனிதர்களே அதிகம். அது உங்கள் நண்பரோ, உறவினரோ, உடன் பிறந்தவர்களோ, அக்கம் பக்கத்து வீட்டார்களோ, அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களோ என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாமா. அப்படி உங்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் இருந்தாலோ, அல்லது நீங்கள் ஒருவர் உங்களுக்கு எதிர்மறை பலன்களை தரக்கூடியவராக இருப்பார் என்று நம்பினாலோ, அவரை விட்டு விலகி இருப்பது நல்லது. அது எந்த உறவாக இருந்தாலும், நீங்கள் விலகி சென்று விடுவது, பெரும்பாலான பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.

மேலும் படிக்க – நேர்மறை சக்திகளை எப்படி அதிகரித்து, மகிழ்ச்சியான மற்றும் வெற்றி தரும் வாழ்க்கையை வாழ்வது?

பட ஆதாரம்  – Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

Read More From Lifestyle