Beauty

தடிம தாடையை எளிமையாக போக்க உங்களுக்காக சில முக்கிய குறிப்புகள்! How To Remove Double Chin

Meena Madhunivas  |  Jun 27, 2019
தடிம தாடையை எளிமையாக போக்க உங்களுக்காக சில முக்கிய குறிப்புகள்! How To Remove Double Chin

முகம் இளமையாகவும், அழகாகவும் தோன்ற முகத்தின் அனைத்து பாகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த வகையில், தாடையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒருவருக்கு இளமையில் இப்படி தோன்றுவதில்லை. ஆனால், வயது அதிகரிக்கும் போதோ அல்லது, முதுர்ச்சி தோன்றும் போது இது ஏற்படுகின்றது. இது பொதுவானது என்றாலும், இன்றைய காலத்தில் பலருக்கு இளம் வயதிலேயே இவ்வாறான தடிம தாடை தோன்றி விடுகின்றது. குறிப்பாக இளம் வயதில் உடல் எடை அதிகரிப்பாலும், வேறு சில காரணங்களாலும் இந்த தடிம தாடை ஏற்படுகின்றது. இதனால், வயதான தோற்றம் ஏற்படுவதோடு, முகத்தின் அழகு சற்று பாதிக்கப் படுகின்றது. 

தடிம தாடை(Double chin) ஏற்படுவதை தவிர்க்க அல்லது ஏற்பட்டால் அதனை குறைக்க பல எளிய வழிகள் உள்ளன. அதனை நீங்கள் முறையாக செய்து வந்தால் விரைவாக எதிர் பார்த்த பலன்களை பெறலாம். எப்படி தடிம தாடையை குறைப்பது என்று தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள். 

தடிம தாடை என்றால் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள சில தகவல்கள் (What Is Double Chin)

தடிம தாடையை குறைக்க நீங்கள் முயற்சிகளை எடுப்பதற்கு முன், அதனை பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது.

தடிம தாடை துணை கொழுப்பு என்றும் கூறப்படுகின்றது. இது தாடைக்கு கீழ் அதிக திசுக்கள் உருவாவதால் ஏற்படுகின்றது. இப்படி தேவை இல்லாத திசுக்கள் தோன்றுவதால் தாடை பெரிதாக தோற்றம் தருகின்றது. 

நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், எளிதாக இதனை போக்கி விட முடியாது. இது உங்கள் முகத்திற்கு சற்று மங்கிய தோற்றத்தை தரும். தடிம தாடையை, முக கொழுப்பு என்றும் கூறுவார்கள். இதனால் உங்கள் முகமும் சற்று உப்பிய தோற்றத்தில் இருக்கும். இந்த கொழுப்பு தாடையின் கீழ் பகுதியில் சேர்வதால், நாளடைவில் உங்கள் கண்ணங்கள், கழுத்து மற்றும் கண்களுக்கு கீழ் இருக்கும் பகுதிகளிலும் ஒரு உப்பிய தோற்றத்தை ஏற்படுத்தும். 

தடிம தாடை ஏன் தோன்றுகின்றது? (Why Does Double Chin Appear)

இந்த துணை கொழுப்பு தாடைக்கு கீழ் தோன்றுவது ஒரு இயல்பான நிகழ்வே. இது குறிப்பாக உடல் எடை அதிகரிப்பால் ஏற்படுகின்றது. அல்லது மரபு சார்ந்த பிரச்சனை அல்லது முகத்தில் இருக்கும் தோல் இலகுவாக இருப்பதாலும் இத்தகைய தடிம தாடை தோன்ற காரணமாக உள்ளது. இது குறிப்பாக வயதாகும் அறிகுறியை காட்டுகின்றது. 

தடிம தாடை தோன்றுவதற்கான சில காரணங்கள் இங்கே:

வயது: வயதாகும் போது முகத்தில் இருக்கும் தோல் இலகுவாகின்றது. இதனால் தடிம தாடை தோன்றுகின்றது 

புகை பிடித்தல்: புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு இது விரைவாக ஏற்படுகின்றது. 

உடல் எடை அதிகரிப்பு: உடல் எடை விரைவாக அதிகரிப்பதாலோ அல்லது குறைவதாலோ முகத்தில் இருக்கும் திசுக்கள் காலப்போக்கில் அதிகம் சேர்ந்து தாடையை தடிமமாக்குகின்றது. 

கொழுப்பு சேருவதால். கீழ் தாடையில் எளிதாக கொழுப்பு சேர்ந்து விடுகின்றது. இதனால் தடிம தாடை சிறு வயதில் கூட ஏற்படுகின்றது 

மரபு: ஒரு சிலருக்கு இது போன்ற தடிம தாடை மரபு காரணங்களாலும் தோன்றும். மேலும் அவரது முக தோற்றத்திற்கு ஏற்றவாறும் அப்படியான தாடை இருப்பது போல தோன்றும் 

உடல் நலம்: உங்களுக்கு ஏதாவது கடுமையான உடல் நல பிரச்சனைகள் இருந்தாலும், இந்த தடிம தாடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனை குணப் படுத்தும் போது, இந்த தடிம தாடையும் குறைய வாய்ப்பு உள்ளது. 

தைராய்டு: தைராய்டு பிரச்சனையை இருப்பவர்களுக்கும் இது போன்று தடிம தாடை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

சைனஸ்: சைனஸ் பிரச்சனை இருப்பவர்கலுக்கு நிணநீர் வீக்கம் ஏற்படுவதால் கழுத்து, தாடை மற்றும் முகம் உப்பிய தோற்றம் பெறுகின்றது, இதனால் தடிம தாடை இருபது போல தோன்றுகின்றது. 

சிறுநீரகம்: சிறுநீரகத்தில் பிரச்சனை இருந்தால் அது உங்கள் முகத்தில் பிரதிபலிக்கும். அந்த வகையில், உங்களுக்கு தடிம தாடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

எச்சில் சுரபி: எச்சில் சுரபியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் தடிம தாடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது போலவும் தோன்றும். 

சிறந்த தமிழ் படங்களின் பட்டியல் : இயக்குனர், நடிகர் குறித்த முழு விவரங்கள்!

எளிமையான, ஆனால் பலன் தரக்கூடிய தடிம தாடையை குறைக்கும் பயிற்சிகள் (Exercise For Double Chin)

ஒரு சில எளிய பயிற்சிகளால் நீங்கள் எளிதாக தடிம தாடையை குறைத்து விட முடியும். இதனை நீங்கள் செய்வதற்கு குறிப்பிடத்தக்க நேரம் இல்லை. உங்களால் ஒரு நாளைக்கு எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இந்த பயிற்சிகளை செய்யலாம். இது உங்களுக்கு நிச்சயம் பலன் தரும். 


தடிம தாடையை(Double chin) குறைக்க இங்கே சில எளிய மற்றும் பலன் தரக்கூடிய பயிற்சிகள்: 

நேரான தாடை ஜட் (Straight Jaw)

இந்த பயிற்சியை செய்ய, உங்கள் தலையை பின் புறமாக சாய்த்து, மேலே பார்க்க வேண்டும். 

உங்கள் கீழ் தாடையை முன்புறமாக தள்ளி தாடையை நீட்ட வேண்டும் 

இப்படி சில வினாடிகள் இருக்க வேண்டும் 

இந்த பயிற்சியை 2 நிமடங்கள் வரை செய்யலாம் 

பந்து பயிற்சி (Ball Training)

1௦ இன்ச் பந்தை உங்கள் தாடைக்கு கீழ் வைக்க வேண்டும் 

அதன் பின் உங்கள் தாடையை பந்தை அழுத்தும் வகையில் அமுக்க வேண்டும் 

இதனை ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும்

பக்கர் அப் (Pucker Up)

உங்கள் தலையை பின் புறமாக சாய்த்து மேலே பார்க்க வேண்டும் 

உங்கள் உதடுகளை முத்தம் கொடுப்பது போல மேலே பார்த்து நீட்ட வேண்டும் 

இப்படி சில வினாடிகள் இருந்து பின் மீண்டும் இயல்பு நிலைக்கு வர வேண்டும் 

இப்படி சில நிமிடங்கள் தினமும் செய்ய வேண்டும் 

நாக்கை நீட்டி பயிற்சி (Stretching The Tongue)

நேராக பார்த்து உங்கள் நாக்கை வெளியே நீட்ட வேண்டும் 

பின் உங்கள் நாக்கை மேலே நோக்கி மூக்கை தொடும் வகையில் உயர்த்த வேண்டும் 

இப்படி 1௦ நொடிகள் வைத்திருக்க வேண்டும் 

பின் இயல்பு நிலைக்கு வர வேண்டும் 

இப்படி சில நிமிடங்கள் தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

கழுத்து நீட்டி பயிற்சி (Neck Stretch Training)


உங்கள் தலையை முடிந்த வரை பின் பக்கம் சாய்த்து மேலே பார்க்க வேண்டும் 

உங்கள் நாக்கை வாயில் இருந்து வெளியே மேல் நோக்கி நீட்ட வேண்டும் 

அப்படியே 1௦ நொடிகள் வைத்திருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு வர வேண்டும் 

இப்படி சில நிமிடங்கள் தினமும் செய்ய வேண்டும் 

கீழ் தாடை ஜட் (Lower Jaw)

உங்கள் தலையை பின் நோக்கி சாய்த்து மேலே பார்க்க வேண்டும் 

உங்கள் தலையை வலது பக்கம் திருப்ப வேண்டும் 

பின் உங்கள் கீழ் தாடையை முன்னோக்கி சாய்க்க வேண்டும் 

இப்படி 1௦ நொடிகள் வரை வைத்திருந்து பின் மீண்டும் இயல்பு நிலைக்கு வர வேண்டும் 

இது போல இடது பக்கமும் தலையை திருப்பி செய்ய வேண்டும்

கழுத்தை திருப்பி பயிற்சி (Neck Turning Training)

உங்கள் முதுகு தண்டை நேராக வைத்து அமர்ந்து கொள்ளவும் 

இதனை நின்று கொண்டே செய்யலாம் 

நேராக பார்த்து உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள் 

இப்போது உங்கள் தாடைக்கு நேராக கழுத்தை ஒரு பக்கம் திருப்ப வேண்டும் 

அப்படியே மெதுவாக உங்கள் தலையை மேலே பார்த்தபடி உயர்த்த வேண்டும் 

மெதுவாக இப்போது சில வினாடிகள் கழித்து மறு பக்கம் இது போன்று செய்ய வேண்டும் 

இந்த பயிற்சியை 1௦ முறையாவது செய்ய வேண்டும்

தாடையை உயர்த்துதல் (Raising The Jaw)

இந்த பயிற்சியில் உங்கள் தாடையை மேல் நோக்கி உயர்த்த வேண்டும் 

உங்கள் உதடுகளை உள்நோக்கி மடக்கிக் கொண்டு தடையை மேலே உயர்த்த வேண்டும் 

இப்படி நொடிகள் இருக்க வேண்டும் 

இதை 1௦ முறை செய்ய வேண்டும்

வாயை அகலமாக திறப்பது (Opening The Mouth Wide)

உங்களால் முடிந்த வரை கீழ் தாடையை நன்கு நீட்டி வாயை திறக்க வேண்டும் 

இப்படி 1௦ நொடிகள் இருக்க வேண்டும் 

இந்த பயிற்சியை 1௦ முறை செய்ய வேண்டும் 

மீன் முகம் (Fish Face)

உங்கள் கண்ணங்களை உள் நோக்கி இழுத்துக் கொள்ள வேண்டும் 

உதடுகளை ஒன்றாக குவித்துக் கொள்ள வேண்டும் 

இப்படி 1௦ நொடிகள் வரை வைத்துக் கொள்ள வேண்டும் 

இதனை தினமும் 1௦ முறையாவது செய்ய வேண்டும் 

எக்ஸ் என்றும் ஒ என்றும் சொல்லுங்கள் (Say X And O)

பல முறை எக்ஸ் என்றும் ஒ என்றும் சொல்ல வேண்டும் 

இப்படி செய்யும் போது உங்கள் தாடைக்கு பயிற்சி கிடைகின்றது 

இப்படி 5 நமிடங்கள் வரை சொல்ல வேண்டும்

புன்னகையுங்கள் (Smile)

உங்கள் உதடுகளை மூடிக் கொண்டு நன்கு புன்னகைக்க முயற்சி செய்யுங்கள் 

இப்படி 15 முறையாவது செய்ய வேண்டும் 

இப்படி செய்தால், கன்னத்தில் இருக்கும் கொழுப்பு குறையும் 

பலூனை ஊதுங்கள் (Blow Up The Baloon)

சில பலூன்களை வாங்கிக் கொண்டு உங்களால் முடிந்த வரை ஊதா வேண்டும் 

இப்படி செய்யும் போது உங்கள் முகத்திற்கு நல்ல பயிற்சி கிடைகின்றது 

இது முகத்தில் இருக்கும் கொழுப்பை ஒரே வாரத்தில் குறைக்க உதவுகின்றது 

வாத்து முகம் (Duck Face)

உங்கள் கன்னங்களை முடிந்த வரை உள்நோக்கி இழுத்துக் கொள்ளுங்கள் 

இப்படி முடிந்த வரை வைத்திருந்து பின் இயல்பான நிலைக்கு திரும்பவும் 

இப்படி 1௦ முறை செய்ய வேண்டும்

வாய் கொப்பளிக்கவும் (Give Mouthfulls)

சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு உங்கள் வாயை கொப்பளிக்க வேண்டும் 

இப்படி சிறிது நிமிடங்கள் ஒரு நாளைக்கு 3 முறையாவது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் 

மேலும் உங்கள் பற்களின் ஆரோக்கியமும் கூடும் 

தடிம தாடையை குறைக்க உணவுகள் (Food To Reduce Double Chin)

தடிம தாடையை குறைக்க பயிற்சிகள் மட்டுமல்லாது, உங்கள் உணவு பழக்கங்களிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இப்படி செய்தால், குறிப்பாக உடல் எடை குறையவும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் தடிம தாடையும் குறையும்.  


ஒரு சில குறிப்பிடத்தக்க உணவு பலக்கல்கள், அதாவது, தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து மணிக்கணக்கில் உடலுக்கு பயிற்சி இல்லாமல், பதபடுத்திய உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகள் அதிகம் உண்பதாலும், கலோரிகள் அதிகம் இருக்கும் உணவுகளை உண்பதாலும், உங்கள் காலை உணவை தவிர்ப்பதாலும், மற்றும் சர்க்கரை அதிகம் கலக்கப்பட்ட பானங்களை அதிகம் அருந்துவதாலும் இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இத்தகைய பழக்கங்கள் காலமாற்றதினால் ஏற்படுகின்றது. ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் தேவைகளை சரியான புரிந்து கொண்டு அதன் படி தங்கள் உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்ளும் போது நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றது. இது உங்கள் தடிம தாடையை குறைப்பதோடு, உங்கள் உடலில் இருக்கும் வேறு பல பிரச்சனைகளையும் சரி செய்கின்றது. 


தடிம தாடையை குறைக்க சில எளிமையான உணவு பழக்கங்கள்; 


• ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை பச்சை கைகளும் பழங்களும் சாப்பிட வேண்டும் 

• அதிகம் பயிர் வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் 

• பதபடுத்திய உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் 

• எண்ணையில் பொறித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் 

• சர்க்கரை அதிகம் இருக்கும் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் 

• புரத சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் 

• நல்லெண்ணெய் போன்ற பாரம்பரிய எண்ணை வகைகளை சேர்த்துக் கொள்ளலாம் 

• போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். எப்போதெல்லாம் தாகம் எடுகின்றதோ அப்போதெல்லாம் தவறாமல் தண்ணீர் குடித்து விட வேண்டும் 

• சோடியம் அதிகம் இருக்கும் பொருட்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது 

• சர்க்கரை சேர்க்காத பழ சாறுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள் 

• அளவாக சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். எனினும் பசியோடு உணவை கட்டுப்படுத்த வேண்டாம் 

• தக்காளி, பிரொக்கோலி, கீரை வகைகள்,  பட்டை, மிளகு, போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் 

• மது அருந்துவதையும், புகை பிடிப்பதையும் தவிர்ப்பது நல்லது 

• சரியான மற்றும் போதுமான உறக்கம் தேவை. அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்கக் கூடாது 

தடிம தாடையை குறைக்க வீட்டு குறிப்புகள் (Home Remedies To Reduce Double Chin)

எந்த மருத்துவ சிகிச்சையும் இல்லாமல், வீட்டிலேயே கிடைக்கும் போர்டுகளை வைத்து உங்கள் தடிம தாடையை எப்படி குறைப்பது என்று இங்கே பார்க்கலாம்

கிரீன் டீ தீர்வு (Green Tea Solution)

கிரீன் டீயில் அதிகம் ஆக்ஸிஜனேற்றம் இருப்பதால் மேட்டபாளிசத்தை இது அதிகப் படுத்துகின்றது. இதனால் முகத்திற்கும் பிற உடல் பகுதிகளுக்கும் போதுமான ரத்த ஓட்டம் கிடைகின்றது. தினமும் 3 அல்லது 4 கப் கிரீன் டீ அருந்தி வந்தால் நல்ல பலனை நீங்கள் காலப் போக்கில் காணலாம்

பால் (Ball)

பாலில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் இது உங்கள் சருமத்திற்கு இறுக்கத்தை ஏற்படுத்த உதவும். மேலும் இது முதிர்வு ஏற்படுவதையும் தவிர்க்கும். சிறிது பச்சை பாலை எடுத்து உங்கள் முகத்திற்கும், கழுத்து பகுதிக்கும் மசாஜ் செய்யவும். பின் மிதமான சுடு தண்ணீரால் முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி செய்து வந்தால், தடிம தாடை விரைவாக குறைந்து விடும். இதனோடு சிறிது தேனையும் சேர்த்துக் கொள்ளலாம். 

ஏன் விநாயகர் சதுர்த்தி இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக இருக்கிறது !

எலுமிச்சை பழம் (Lemon Fruit)

எலுமிச்சைப் பழம் விரைவாக கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. நீங்கள் தினமும் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாரை கலந்து அருந்தி வரலாம். இது மேட்டசளிசத்தை  அதிகப் படுத்தும். மேலும் இதனுடன் சிறிது தேனும் கலந்து அருந்தலாம். காலையில் வெறும் வயிற்றில் இதனை அருந்தி வந்தால் நல்ல பலனைத் தரும். 

மஞ்சள்(Yellow)

இது மற்றுமொரு நல்ல பலனைத் தரக் கூடிய பொருளாகும். அதிக மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சளை எப்படி தடிம தாடையை போக்க பயன் படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம். சிறிது மஞ்சள் தூளை, கடலை மாவோடு சேர்த்து. இதனுடன் சிறிது தயிர் சேர்த்து ஒரு கலவை போல செய்ய வேண்டும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி மிதமாக மசாஜ் செய்து, மிதமான சுடு நீரில் முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி செய்தால், முகத்தில் இருக்கும் கொழுப்பு குறைந்து, தடிம தாடையும் குறையும். 

முட்டையின் வெள்ளை கரு (Egg White)

இதில் அதிகம் வைட்டமின் A நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்திற்கும் நல்ல பொலிவைத் தரும். முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது பால், தேன், மற்றும் எலுமிச்சை சாரை சேர்க்க வேண்டும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து சுடு தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கொழுப்பு கரைந்து, தடிம தாடையும் குறையும். 

கிளிசரின் (Glycerine)

கிளிசரினுக்கு ஈரத்தன்மையை அதிகப் படுத்தும் தன்மை உள்ளது. மேலும் இது உங்கள் சருமத்திற்கு இறுக்கத்தையும், ஆரோகியத்தையும் தரும். சிறிது கிளிசரின் எடுத்துக் கொண்டு அதனுடன் எப்சம் உப்பு சேர்த்து நன்கு உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி வாரத்திற்கு 5 முறை வரை செய்து வந்தால் நல்ல பலனை நீங்கள் காணலாம். 

சூடான துண்டு சிகிச்சை (Hot Towel Treatment)

இதற்கு நீங்கள் நன்கு கொதித்த தண்ணீரை சூடாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் துண்டை முக்கி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் உங்கள் முகத்தில் கொழுப்பு நிறைந்திருக்கும் பகுதிகளில் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உப்பிய முகம் குறைந்து, இளமையான தோற்றம் கிடைக்கும். 

வெள்ளரிக்காய் மாஸ்க் (Cucumber Mask)

இது உங்கள் முகத்தில் இருக்கும் வீக்கத்தை போக்க உதவும். மேலும் இதில் அதிகம் நார் சத்து இருப்பதாலும், நீர் சத்து நிறைந்திருப்பதாலும், உங்கள் முகத்தை குரிதியாகவும், ஈரத்தனமையோடும் வைத்துக் கொள்ள உதவும். வெள்ளரிக்காய் சிறிதாக நறுக்கி அதனை உங்கள் முகத்தில் வீக்கம் இருக்கும் இடங்களில் சிறிது நேரம் வைக்க வேண்டும். இது நல்ல குளிர்ச்சியான உணர்வை உங்கள் முகத்திற்கு தரும்.

களிமண் மாஸ்க் (Clay Mask)

இது ஒரு நல்ல பலன் தரக்கூடிய இயற்க்கை வைத்தியம். உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க இது உதவும். மேலும் உங்கள் முகத்தில் தேவை இல்லாமல் தேங்கி இருக்கும் எண்ணை பிசுக்கையும் போக்கி விடும். சருமத்தில் கொலாஜன் அளவை அதிகப் படுத்தும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

தடிம தாடையை போக்க மருத்துவ சிகிச்சைகள் (Medical Treatment For Double Chin)

ஒரு சில பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கங்கள் உங்களுக்கு ஏற்பட்டுள்ள தடிம தாடையை (Double chin) போக்க உதவினாலும், விரைவான பலனைப் பெற மருத்துவ சிகிச்சைகளும் உள்ளன. இந்த வகையில், நீங்கள் தெரிந்து கொள்ள, அவை பின்வருமாறு

லிப்போ சிதைப்பு (Lipo Disintegration)

இந்த சிகிச்சை முறையில் லேசரில் இருந்து வரும் சூட்டை வைத்து முகத்தில் இருக்கும் கொழுப்பை கரைக்க வைப்பார்கள். இதற்க்கு லோகல் அனஸ்திசிய கொடுப்பார்கள். இது ஒரு எளிமையான மற்றும் விரைவான பலன் தரக்கூடிய சிகிச்சை முறையாகும். மேலும் இந்த சிகிச்சை உங்கள் சருமத்தில் இருக்கும் வேறு பல பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும். குறிப்பாக உப்பிய முகம், சிராய்புண் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்துகின்றது

மிசொதெரபி (Microtherapy)

இந்த சிகிச்சை முறையும் தடிம தாடையில் இருக்கும் கொழுப்பை கரைக்க ஊசி போடப் படுகின்றது. இது ஒரு நீளமான சிகிச்சை முறை, இதற்கு 6 மாத காலமும், சுமார் 2௦ முதல் 1௦௦ ஊசிகள் வரையிலும் கூட போட வேண்டிய தேவை ஏற்படலாம். மேலும் இது சற்று அதிக செலவு ஆகும் சிகிச்சை முறையும் ஆகும். இந்த சிகிச்சை சில உபாதைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, வீக்கம், வலி, மறத்தல் மற்றும் சிவந்தால் போன்றவை. எனினும் இவை சிறிது நேரத்தில் அல்லது ஓரிரு நாட்களில் மறைந்து விடும்.

எப்படி தடிம தாடையை வரவிடாமல் தவிர்ப்பது? (How To Avoid Double Chin)


மேலே குறிப்பிடப்பட்ட குறிப்புகள் மட்டுமல்லாது, உங்கள் தடிம தாடையை குறைக்க இங்கே மேலும் சில குறிப்புகள். இவை நிச்சயம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும் என்று நம்புகின்றோம்: 


• தினமும் உடற் பயிற்சி மற்றும் முகத்திற்கான பயிற்சிகளை செய்ய வேண்டும் 

• உங்கள் உணவை எப்போதும் கண்காணிக்க வேண்டும் 

• அதிகம் உடலுக்கு வேலை தரக்கூடிய பயிற்சிகளை செய்ய வேண்டும் 

• காபி போன்ற பானங்களை தவிர்த்து விட்டு கிரீன் டீ போன்ற ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ள பானங்களை எடுத்துக் கொள்ளலாம். இது விரைவாக முகத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவும் 

• கொழுப்பு நிறைந்த மாமிசத்தை தவிர்ப்பது நல்லது. மாறாக மீன் அதிகம் எடுத்துக் கொள்ளலாம் 

• அதிகம் சுடு தண்ணீர் குடிப்பது, கொழுப்பை குறைக்க உதவும் 

• பகல் நேரங்களில் தூங்குவதை குறைத்துக் கொள்வது நல்லது 

• முகத்திற்கு அவ்வப்போது மசாஜ் செய்து, கண்ணம், தாடை, கழுத்துப் பகுதிகளில் இருக்கும் கொழுப்பை குறைக்கலாம்

தடிம தாடையை குறைக்க முகத்திற்கு மசாஜ் (Massage Face To Reduce Double Chin)

உங்கள் முகத்தை மசாஜ் செய்யும் போது தடிம தாடை எளிமையாக குறைந்து விடும். இதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். 


1. கண்ணம் மற்றும் தாடையை மசாஜ் செய்யவும் 


o உங்கள் கண்ணம் மற்றும் தாடைப் பகுதியில் மசாஜ் செய்யும் போது, தாடை பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் 

o இதனால் தாடை பகுதியில் இருக்கும் கொழுப்பு குறையும் 

o ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ள எண்ணை ஏதாவது ஒன்றை பயன் படுத்தி நீங்கள் இந்த மசாஜை செய்யலாம். 

o மெதுவாக உங்கள் தாடை மற்றும் கண்ணம் பகுதிகளில் சுழற்சி முறையில் மசாஜ் செய்யவும் 

o இப்படி தினமும் 1௦ நிமிடங்கள் வரை செய்ய வேண்டும் 


2. சிவிங் கம் மெல்லுங்கள் 


o சிவிங் கம் மெல்லும் போது உங்கள் தாடை பகுதிகளுக்கு நல்ல பயிற்சி கிடைகின்றது 

o மேலும் இது தாடை பகுதியில் இருக்கும் தோல் மற்றும் எலும்புகளுக்கு ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகின்றது 

o இந்த பயிற்சியை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

இயற்கையுடன் ஒரு பயணம் : இயற்கையின் பாடங்களை கற்றிட இந்தியாவின் 20 சிறந்த ட்ரெக்கிங் பகுதி!

கேள்வி பதில் (Question And Answer)

1. நிரந்தரமாக தடிம தாடையை போக்கி விட முடியுமா? 
அறுவை சிகிச்சையைத் தவிர இதற்கு உங்களால் நிரந்தர தீரு பெற முடியாது. எனினும் நீங்கள் செய்யும் பயிற்சி மற்றும் எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஓரளவிர்க்காயினும் உங்களுக்கு பலனைத் தரும். 


2. மெல்லிய உருவம் கொண்டிருந்தாலும் தடிம தாடை ஏற்படுமா? 
தடிம தாடை பொதுவாக கழுத்திற்கு கீழ் பகுதியில் ஒரு படிவமாக ஏற்படும் கொழுப்பால் உருவாகின்றது. சருமணம் தன்னுடைய நெகிழ்வு தன்மையை இழக்கும் போது இவ்வாறான தடிம தாடை ஏற்படுவது இயல்பு. 


3. மரபு காரணங்களால் தோன்றிய தடிம தாடையை போக்கி விட முடியுமா?
பலர் அப்படி செய்ய முடியாது என்று நம்பினாலும், சரியான உணவு பழக்கங்கள் மற்றும் உடற் பயிற்சி அதனை குறைக்க உதவுகின்றது. ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தடிம தாடை பொதுவாக வயதாகும் போது ஏற்படுகின்றது. அதனால், உங்கள் உணவு பழக்கங்களும், உடற் பயிற்சியும் மட்டுமே ஒரு நல்ல மற்றும் நிரந்தர தீர்வாக இருக்க முடியும். 


4. உடற் பயிற்சி தடிம தாடையை குறைக்க உதவுமா? 
நீங்கள் தினமும் உடற் பயிற்சி மற்றும் முகத்திற்கான பயிற்சிகளை செய்து வரும் போது நல்ல பலனை நாளடைவில் எதிர் பார்க்கலாம். எனினும், சுவிங் கம் மெல்லுவது மற்றும் மசாஜ் செய்வது போன்றவைகலும் உங்களுக்கு நலல் பலனைத் தரும். 


5. தண்ணீர் குடிப்பதால் தடிம தாடை குறையுமா? 
தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடல் எடை குறையும். எனினும் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மேலும் உங்களுக்கு தாகம் எடுத்தால்உடனடியாக தண்ணீர் குடித்து விட வேண்டும். 

Read More From Beauty