Bath & Body

அரிசி நீரின் 8 சிறந்த பயன்பாடுகளும் அதை தயாரிப்பதற்கான வழிகளும்!

Nithya Lakshmi  |  Nov 5, 2019
அரிசி நீரின் 8 சிறந்த பயன்பாடுகளும்  அதை தயாரிப்பதற்கான வழிகளும்!

பண்டைய காலத்தில் நீண்ட அழகான பொலிவு பெரும் கூந்தலுக்கு அரிசி கஞ்சியை பயன்படுத்தினார்கள். அது எப்படியோ காலப்போக்கில் மறைந்து, தற்காலத்தில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. மிகவும் எளிமையாக செய்து பயன் தரக்கூடிய பொருள். அன்றாடம் ஒரு வேலையேனும் அரிசி பொங்காமல் நம் இல்லங்களில் சமையல் நடைபெறுவதில்லை. வெறும் அந்த அரிசி தண்ணீரைப்(rice water) பயன்படுத்தி நம் சருமத்தையும், கூந்தலையும் எப்படி பராமரிப்பது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அரிசி தண்ணீரின் நன்மைகள் (Rice water benefits)

முதலில், அரிசி தண்ணீரின் நன்மைகளைப் (benefits) பார்ப்போம்

அரிசி தண்ணீரை  எப்படி தயார் செய்வது? (How to make rice water)

Shutterstock

அரிசி தண்ணீரை இரண்டு வகைகளில் தயாரிக்கலாம்

  1. அரிசியை நன்றாக கழுவி, தண்ணீர் விட்டு அரை மணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை ஊரவைத்து, பின் தண்ணீரை மட்டும்  வடிகட்டி பயன்படுத்தலாம். 
  2. அரிசியை  நன்றாக கழுவி, தண்ணீர் விட்டு 15 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அந்த கஞ்சியை மட்டும் வடிகட்டி பயன்படுத்தலாம்.

இப்படி வடிகட்டிய தண்ணீரை 24 மணி நேரத்திற்கு பின் பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். ஆனால், புளித்துவிடும் என்பதால், சிறிது வாடை வரும். அதற்கு மேலும் வைத்துப் பயன்படுத்தவேண்டுமென்றால் 3 அல்லது 4 நாட்கள் குளிர் சாதன பெட்டியில்(fridge) வைத்து பயன்படுத்தலாம்.

சருமத்திற்கும், கூந்தலுக்கும் அரிசி கஞ்சி/தண்ணீர் செய்யும் நன்மைகள்

1. முகத்தையும், உடலையும் சுத்தம் செய்யும் சாதனம்

முகத்தையும், உடலையும் நன்றாக சுத்தம் செய்யும். பேஸ் வாஷ், பாடி வாஷ்க்கு பதிலாக அரசி தண்ணீரைப் பயன்படுத்தலாம். உங்கள் சருமத்தை மாசில்லாமல் நன்றாக சுத்தம் செய்து விடும்.பாத் டப் பயன்படுத்தி குளிப்பவர்கள், தண்ணீரில் இந்த அரிசித் தண்ணீரை கலந்து உங்கள் உடலை  ஊறவிடுங்கள். அதனால், உடலில் உள்ள பருக்களை குணப்படுத்தும்; வறண்டு அறிக்கும் சருமத்தை சரி செய்து, உடல் வலியை அகற்றி, நன்றாக தளர்த்திக் கொடுக்கும்.

2. முகத்தில் படர்ந்திருக்கும் பனிபோன்ற மாசுக்களை நீக்கும்

Shutterstock

சூரியக் கதிரினால் ஏற்படும் கருமையை நீக்க அரிசி நீர் உதவும். கற்றாழை ஜெல்லை அரிசித் தண்ணீரில் கலந்தும் பயன்படுத்தலாம். மேலும், இது சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்.

3. அரிசித் தண்ணீரினால் உடல் ஆரோக்கியம்

தசைகளின் தளர்ச்சியை சரி செய்து, வயது முதிர்வை வெளிப்படுத்தாது, சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும், அழகாக தோன்றவும் வைக்கும். அரிசித் தண்ணீரில் உள்ள வைட்டமின்களும், மினெரல்களும் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. எலும்பை உறுதியாக்கி, உடலை வலிமையாக்குகிறது.

4. ஐஸ் கட்டி முகப்பூச்சு

அரிசித் தண்ணீரை ஐஸ் கட்டி ட்ரேயில் ஊற்றி ஐஸ் ஆக்கி வைத்துக்கொள்ளுங்கள். சருமத்தில் உள்ள துளைகளை குறைத்து, முகப்பரு, தழும்பு போன்றவற்றை நீக்கி பொலிவான சருமம் பெற உங்கள் முகத்தில் இந்த ஐஸ் கட்டியை தேய்த்துக்கொள்ளுங்கள். இந்த அரிசி தண்ணீர் பேஸ் மாஸ்க் பயன்படுத்தினால் சருமம் பொலிவடையும், கரும்புள்ளிகள் தோன்றாமல் இருக்கும்.

5. பூச்சிக்கடி

Shutterstock

சருமத்திற்கு சிகிச்சை அளித்து நல்ல ஆரோக்கியத்தை தரும். தடிப்பு, கொசுக்கடி, நீண்டநாள் சரும பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.

6. ஹேர் மாஸ்க்

முகத்திற்கு மட்டுமல்ல, கூந்தலுக்கும் இந்த அரிசி தண்ணீரை தலையில் ஸ்பிரே செய்து, நன்றாக மயிர் கால்களில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். 20 நிமிடம் களித்து குளித்துப்பாருங்கள், உடனடியாக ஒரு பொலிவான கூந்தல், வறண்டு போகாமல் மிருதுவாக இருப்பதை உணர்வீர்கள்.

7. கூந்தலை அலச

கூந்தலில் உள்ள அழுக்குகளை நீக்கி, விரைவாக முடி வளரவும், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடவும் இந்த அரிசித் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

8. டோனர்

Shutterstock

முகத்திற்கு நல்ல நிறத்தை தரக்கூடியது. நல்ல டோனராக செயல்படும்.

எந்த  வகையான  அரிசியும்  இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால் ஆர்கானிக் அரிசியாக இருந்தால் போதும். பிரெஷ்ஷாக வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இயற்கையான பொருள் என்பதால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உணர்ச்சியுள்ள சருமம் உள்ளவர்கள், ரசாயனங்கள் கலந்த கிரீம் பயன்படுத்தாமல், இப்படி இயற்கையான பொருள் கொண்டு மிக மிக எளிதாக தயார் செய்து பயனுறுங்கள்.

 

மேலும் படிக்க – சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்! வீட்டிலேயே செய்வது எப்படி? மேலும் படிக்க – பல நன்மைகளைத் தரும் துளசி – உங்களுக்காக சில சுவாரசியமான தகவல்கள்!

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Bath & Body