Dating

காதல் தோல்வியில் இருந்து உடைந்து போகாமல் ..வெளிவருவது எப்படி?

Manjula Sadaiyan  |  Feb 7, 2019
காதல் தோல்வியில் இருந்து உடைந்து போகாமல் ..வெளிவருவது எப்படி?

பிரேக்கப்(Love Failure) என்னும் வார்த்தை இன்று இளைஞர்கள் மத்தியில் மிகவும் சகஜமாகி விட்டது. காபி ஷாப் போவது போல, ஹோட்டலுக்கு போவது போல காதல் செய்வதும் அது பிரேக்கப்பில்(Love Failure) முடிவதும் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது. காதலிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் மனநிலை காதல் தோல்விக்குப்(Love Failure) பின் அப்படியே மாறிவிடுகிறது.

எனினும் காதல்(Love) உடைந்து போனால் அதிலிருந்து மீண்டு வெளிவருவது என்பது எல்லா காலகட்டத்திலும் கடினமான ஒன்றாகவே உள்ளது. மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்? இது வெளியில் தெரிந்தால் நமது மதிப்பு என்னவாகும்? நம்மேல் எதுவும் தவறு உள்ளதா? என பூதக்கண்ணாடி வைக்காத குறையாக உடைந்து போன காதல்(Love) குறித்து அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார்கள்.

காதல் முடிந்து போனால் அத்துடன் வாழ்க்கை முடிந்து போவதில்லை என்னும் உண்மையை புரிந்து கொள்ளக்கூடியவர்களை, இங்கு விரல்விட்டு
எண்ணிவிடலாம். ஒரு காதல்(Love) மட்டுமே வாழ்வில் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம்
கற்றுக்கொண்டு அடுத்தமுறை அதுபோன்ற தவறினை செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு காதல் தோல்வியில்(Love Failure) இருந்து உடைந்து போகாமல் வெளிவருவது எப்படி? என்பதை பார்க்கலாம்.

என்ன செய்யலாம்

படிப்பு,வேலை,திருமணம் போல காதலும் வாழ்க்கையில் எளிதாக கடந்து செல்லக்கூடிய ஒன்று தான். அதிலிருந்து எப்படி வெளியே வருவது? என்று
யோசியுங்கள். முடிந்தவரை பழைய காதல் தொடர்பான நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை செய்ய
முன்வாருங்கள். வேலையில் இருந்தால் அதில் முன்னேறுவது குறித்து சிந்தியுங்கள். ஒருவேளை வேலைக்கு செல்ல ஆசைப்பட்டால் அதுதொடர்பான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

சுதந்திரப் பறவை

காதலிக்கும்போது உங்கள் காதலருடன் அதிகமான பொழுதுகளை செலவு செய்திருப்பீர்கள். எல்லாவற்றிலும் அவரது ஆலோசனையைக் கேட்டு
நடந்திருப்பீர்கள். இப்போது நீங்கள் சுதந்திரப்பறவை என்பதை உணருங்கள். உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ? நீங்கள் என்ன ஆசைப்பட்டீர்களோ?
அதனை செய்யுங்கள். இது உங்களுக்கு ஒரு சுதந்திரமான நிலையை அளிக்கும். உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதன்படி கேட்டு நடங்கள்.
முன்புபோல உங்கள் காதலனிடம் நீங்கள் எல்லாவற்றையும் ஒப்புவிக்க வேண்டிய அவசியமில்லை.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்

காதலிக்கும்போது உங்கள் காதலை நீங்கள் நண்பர்கள்,உறவினர்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கலாம். காதல் தோல்விக்குப்பின் அவர்களை
ஒருவேளை நீங்கள் பார்க்க நேர்ந்தால் சகஜமாக எதிர்கொள்ளுங்கள். தேவையில்லாமல் பதட்டப்படாதீர்கள். ஒருவேளை உங்கள் காதல் குறித்து
அவர்கள் ஏதாவது கேட்டால் எந்தளவுக்கு அவர்களுக்கு விவரம் தெரியும் என்பதைத் தெரிந்து கொண்டு பின்னர் பேசுங்கள் எல்லாரிடமும்
எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணருங்கள்.

சமூக வலைதளங்கள்

பிரேக்கப்பிற்கு பின் நண்பர்களாகத் தொடர்வது என்பது படங்களுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். நிஜவாழ்வில் அது கடினம் என்பதை
உணருங்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் என எல்லாவிதமான சமூக வலைதளங்களிலும் இருந்து உங்கள் முன்னாள் காதலன்/காதலியை
பிளாக் செய்துவிடுங்கள். இதனால் ஒருவருக்கொருவர் மற்றவர் என்ன செய்கிறார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.மேலும் அதுகுறித்து தெரிந்து கொண்டு நீங்கள் வருந்தவேண்டிய அவசியமும் இருக்காது.

புகைப்படங்கள்-பரிசுப்பொருட்கள்

சேர்ந்து இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைத்து அழகு பார்த்துக்கொண்டிராமல் அவற்றை டெலிட் செய்துவிடுங்கள். உங்கள்
மொபைலில் அவரது நம்பர் இருந்தால் டெலிட் செய்து விடுங்கள். மெசேஜ்கள், வாட்ஸ் ஆப் சாட்கள் போன்றவற்றை அழித்து விடுங்கள். உங்கள் காதலன் உங்களுக்கு அளித்த பரிசுப்பொருட்கள் எதையும் உங்களிடம் வைத்துக்கொள்ளாதீர்கள், அவற்றைத் தூக்கி எறிந்து விடுங்கள். அவர் தொடர்பான எந்தவொரு பொருளும் உங்களிடம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சுற்றுலா

உங்கள் வேலையில் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ எங்காவது சுற்றுலா சென்று வாருங்கள். புதிய இடங்கள், புதிய மனிதர்கள் உங்கள் மனநிலையை மாற்ற உதவும். உங்களுக்கும் ஒரு மாற்றம் கிடைக்கும். முடிந்தால் உங்கள் குடும்பத்தினருடன் எங்காவது சென்று வாருங்கள். பயணங்கள் உங்களை முழுமையாக்கும்.

நன்றாக அழுங்கள்

பிரேக்கப்பிற்கு பின் நான் நன்றாக இருக்கிறேன் என மற்றவர்கள் மத்தியில் நடிக்க வேண்டாம். உங்கள் உண்மையான மனநிலையை
வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு அழ வேண்டும் என தோன்றினால் அழுது விடுங்கள். இது உங்கள் மனதில் இருக்கும் சோகங்களை வெளியேற்ற
உதவும். உங்கள் மனநிலையை உள்ளது உள்ளபடி அப்படியே வெளிப்படுத்தும் போது தேவையில்லாமல் மற்றவர்களுக்கு உங்கள் மீது கழிவிரக்கம் தோன்றாது. அத்துடன் உங்கள் சோகங்களில் இருந்து விடுபடவும் இவை உதவக்கூடும்.

புதிய காதல்

பிரேக்கப் ஆன கையோடு உடனே ஒரு புது உறவிற்குள் நுழையாதீர்கள். உங்களுக்கு தேவையான அளவு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். காதலோ,
கல்யாணமோ உடனடியாக எந்த உறவிலும் நுழைய வேண்டாம். நீங்கள் பழைய காதலை மறந்து வாழும் அளவுக்கு முன்னேறி விட்டீர்கள் என்றால்
அப்போது புது உறவு குறித்து யோசியுங்கள். அது உங்களுக்கு சரியாக வருமா? இல்லையா? என்பதை சிந்தித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள். எத்தனை பேரிடம் யோசனை கேட்டாலும் இறுதி முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டும் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். மேற்சொன்ன
வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகிறோம்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Dating