Health

எப்படி எப்போதும் புன்னகைத்த முகத்தோடு இருப்பது? மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான குறிப்புகள் !

Meena Madhunivas  |  Oct 31, 2019
எப்படி எப்போதும் புன்னகைத்த முகத்தோடு இருப்பது? மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான குறிப்புகள் !

இன்றைய விரைவாக ஓடிக்கொண்டிருக்கும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில், முகத்தில் முன்னகை என்ற ஒனோட்ரையே பெரும்பாலானோர்கள் மறந்து விட்டார்கள். எப்போதாவது புன்னகைத்தாலும், அது செயற்கையாகத்தான் வெளிப்படுகின்றதேத் தவிர, ஆழ்மனதில் இருந்து உண்மையாக வருவதில்லை. இதற்கு நாம் இன்று வாழ்ந்து கொன்றிக்கும் வாழ்க்கை முறை ஒரு பெரிய காரணமாக உள்ளது.

எனினும், இப்படியே வாழ்க்கை(life) கடுமையான முகத்தோடும், அழுத்தம் நிறைந்த மனதோடும் ஓடிக்கொண்டிருந்தால், அது பல நோய்களை உண்டாக்குவதோடு, ஆயுளையும் குறைத்து விடும். 

அனைவரும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த செயற்கை நிறைந்த வாழ்க்கையில் இருந்து சற்று விலகி, மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் (happy) வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதற்கு முதல் முயற்சி, உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகை.

எப்படி நாள் முழுவதும் புன்னகையோடு (smile) உங்கள் முகத்தை வைத்துக் கொள்வது என்று, இங்கே உங்களுக்காக சில சுவாரசியமான குறிப்புகள்;

1. மனதிற்கு பிடித்த பாடல்

Pexels

எந்த பாடலை நினைத்தால் உங்கள் முகத்தில் இருந்து உடனடியாக புன்னகை வருகின்றது, அதுவே உங்களுக்கான பாடல். உங்கள் மனதிற்கும், ஆன்மாவுக்கும் அமைதியைத் தந்து, உற்சாகத்தை ஏற்படுத்தும் பாடலை அவ்வப்போது கேளுங்கள். இது உங்களை புன்னகைத்த முகத்தோடு வைத்திருக்க உதவும். உங்கள் மனக் கவலையையும் மறக்க உதவும்.

2. உங்கள் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களை தரக் கூடிய நபரை பற்றி நினையுங்கள்

இது யாராகவும் இருக்கலாம். உங்கள் குடும்பதினராகவோ அல்லது நண்பராகவோ இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. உங்கள் பயணத்தின் போதோ, தெரிவில் நடக்கும் போது உங்களை கடந்து சென்ற, குறிப்பாக உங்களை புன்னகைக்க வைத்த ஒரு குழந்தை, அல்லது மனிதர் என்று உங்கள் மனதிற்கு சட்டென்று ஒரு மாற்றத்தை தரக்கூடிய ஒருவரைப் பற்றி நினையுங்கள். நிச்சயம் உங்கள் முகத்தில் புன்னகை எட்டிப் பார்க்கும்.

3. நன்றி கூறுங்கள்

Pexels

இது கடவுளுக்கோ, உங்கள் பெற்றோர்களுக்கோ, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முக்கியம் என்று தோன்றும் நபருக்கோ, அல்லது இயற்கைகோ, இல்லை இந்த பிரபஞ்சதிற்கோ, எப்போதும் உங்கள் மனதில் சில நல்ல விடயங்களை நினைத்து, இது உங்களால் தான் நடந்தது, இதனால் நான் மகிழ்ச்சியோடு இருக்கின்றேன் என்று கூறி, நன்றி சொல்லுங்கள். இது அந்த நொடி, உங்கள் மனதில் புன்னகையை ஏற்படுத்தும்.

4. எதிர்பார்ப்புகளை விட்டு விடுங்கள்

இந்த உலகத்தில் அனைவரையும், நாம் ஏன் இந்த உலகத்திற்கு வந்தோம் என்கின்ற காரணத்தை மறந்து, தவறான ஒரு இலக்கை நோக்கி, புரிதலே இல்லாமல் ஓட வைத்துக் கொண்டிருப்பது, போட்டி மற்றும் எதிர்பார்ப்புகள். எவற்றை விட்டு விட்டு, உங்கள் வாழ்க்கையில், எதார்த்தமாக, இயற்கையாக உங்களுக்கு கிடைக்கும் அனைத்து நல்ல விடயங்களையும், எதிர்பார்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்கினால், எப்போதும் உங்கள் முகத்தில் புன்னகை நிறைந்திருப்பது நிச்சயம்.

5. குழந்தையாக மாறுங்கள்

Youtube

இன்றைய உலகில், அனைவரும் வயதிற்கு ஏற்ற வாழ்க்கையை வாழ வேண்டும் என்று பல கட்டுபாடுகளை போடுகின்றனர். ஆனால் எவ்வளவு வயது முதிர்ந்தவராக இருந்தாலும், அனைவருக்குள்ளும் கொஞ்சமாவது குழந்தைத் தனம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. அதனால், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், பிறரை பற்றி கவலைப்படாமல், குழந்தையாகவே மாறி விடுங்கள். உங்கள் மனதிற்கு பிடித்த விடயங்களை செய்யுங்கள். இது உங்களுக்கு புத்துணர்ச்சியை தந்து, உங்கள் சக்தியை அதிகரிக்கும். மேலும் புன்னகையும் நிச்சயம்.

6. பயணம் செய்யுங்கள்

இன்று அனைவரும் தங்கள் இலக்கை நோக்கி மட்டுமே கடுமையாக ஓடிக்கொன்றிக்கும் போது, வேறு எதை பற்றின சிந்தனையும் இருப்பதில்லை. இதில் முகத்தில் இருக்கும் புன்னகையை மட்டும் எடுத்து விடுவதோடு, மனதில் இருக்கும் அமைதி, வாழ்க்கையில் இருக்கும் மகிழ்ச்சியையும் எடுத்து விடுகின்றது. மேலும் உறவுகளுடன் இருக்கும் பந்தத்தையும் குறைத்து, இன்னும் கூறப்போனால், முற்றிலுமாக அதையும் எடுத்து விடுகின்றது. அதனால், அவ்வப்போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம், தனியாகவோ அல்லது நீங்கள் நேசிப்பவரோடோ உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு பயணம் செய்யுங்கள். இந்த அழகிய பயணம் என்றும் உங்கள் எண்ணத்தில் நீங்கா நினைவாக இருந்து, உங்கள் முகத்திலும், அதை பற்றி நினைக்கும் போதெல்லாம் புன்னகையைத் தரும்.

7. பிடித்த விடயங்களை நினைத்துக் கொள்ளுங்கள்

Pexels

நாள் முழுவதும் மகிழ்ச்சியோடும், புன்னகையோடும் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்களை எப்போதும் உற்சாகத்தோடும், சக்தியோடும் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் முக்கியமாக உங்களுக்கு பிடித்த விடயங்களை செய்ய வேண்டும் அல்லது பிடித்த விடயங்களை நினைத்துக் கொண்டே உங்கள் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும். இது நிச்சயம், மறந்து போகும் உங்கள் புன்னகையை மீண்டும், மீண்டும் எட்டிப் பார்க்க வைக்கும். 

 

மேலும் படிக்க – மன அழுத்தத்தில் இருந்து பெண்கள் விடுபட உதவும் ஸ்பா தெரபிகள் மற்றும் சில சிம்பிள் டிப்ஸ்கள்

பட ஆதாரம்  – Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

Read More From Health