பொதுவாக ஒரு குடும்பத்தில் ஆண்களை விட பெண்களே நிதி குறித்த விடயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். மேலும் பெண்களுக்கு தங்கள் குடும்பத்தின் வரவு, செலவுகளை திட்டமிட்டு, ஒரு பாதுகாப்பான நிதி சூழலை உண்டாக்க வேண்டிய கடமை அதிகம் உள்ளது. எனினும், பல பெண்களுக்கு சரியாக திட்டமிட முடியாமல், வரவை விட செலவு அதிகமாக இருப்பதும், அவசர காலங்களில், ஏதாவது கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாவதும் மேலும் மாத கடைசியில் செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுவதும் வழக்கமாகி விடுகின்றது. இதனை தவிர்க்க, குடும்பப் பெண்களோ அல்லது தனியாக தங்கள் வாழ்க்கையை வாழும் பெண்களோ (women), யாராக இருந்தாலும், ஒரு பாதுகாப்பான நிதி நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டியது முக்கியம்.
இந்த வகையில், உங்களுக்கு உதவ, உங்கள் நிதியை திட்டமிட்டு (financial saving) ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க இங்கே சில பயனுள்ள குறிப்புகள்;
1. திட்டமிடுங்கள்
Pexels
ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளம் வந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் திட்டமிடுதல். உங்கள் செலவுகளை ஒரு பட்டியலிடுங்கள். அது எவ்வளவு ஆகின்றது என்று பாருங்கள். மேலும் அந்த பட்டியலில் இருந்து தேவையற்ற மற்றும் அந்த பொருள் இல்லையென்றாலும், சமாளிக்க முடியும் என்கின்ற பொருட்களை எடுத்து விடுங்கள். மேலும் பிற தேவையற்ற மாதாந்திர செலவுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்ள முடியுமா என்று பாருங்கள். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் செலவுகள் உங்கள் வரவை விட அதிகமாக இருக்கக் கூடாது. மேலும் குறைந்தது 2௦ முதல் 3௦% சேமிப்பு கட்டாயம். இதற்கு ஏற்றவாறு உங்கள் வரவு செலவை ஒவ்வொரு மாதமும் திட்டமிடுங்கள்.
2. தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள்
பலர், சம்பளம் வந்தவுடன் தோன்றுகின்ற பொருட்களை எல்லாம், தேவை இருகின்றதோ, இல்லையோ வாங்கி விட வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த பழக்கத்தை முதலில் நீங்கள் அறவே நிறுத்தி விட வேண்டும். ஒரு பொருளை வாங்க நினைக்கும் முன், அது உங்களுக்கு உண்மையிலேயே தேவையா, அது இல்லாமல் உங்களால் சமாளிக்க முடியுமா என்றெல்லாம் சிந்தியுங்கள். முடிந்தவரை தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள். இதனால் உங்களுக்கு கணிசமான தொகை மிச்சமாகும். பின் அது ஒரு நல்ல சேமிப்பாகவும் மாறும்.
3. ஷோப்பிங்கை தள்ளிப்போடுங்கள்
Pexels
ஒவ்வொரு மாதமும், முடிந்த வரை உங்களுக்கு ஒரு பொருள் இப்போது தேவை என்று பட்டால், அதனை உடனடியாக கடைக்கு சென்று வாங்கி விடாமல், சிறிது நாள் தள்ளிப் போடுங்கள். அப்படி செய்யும் போது, நீங்கள் அந்த பொருள் இல்லாமலே சமாளிக்கத் தொடங்குவீர்கள். மேலும் ஒரு நேரத்தில் அது உங்களுக்குத் தேவை இல்லாமலே போய் விடலாம். அதனால் எப்போதும், தவிர்க்க முடியாத முக்கியமான சூழலைத் தவிர, மற்ற நேரங்களில் ஒவ்வொரு மாதமும் ஷாப்பிங் செய்வதை தவிர்ப்பது நல்லது. இது உங்கள் சேமிப்பையும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க – ஷாப்பிங் செய்யும் போது எப்படி பணத்தை சேமிப்பது?
4. சேமிப்பை கட்டாயமாக்குங்கள் – தினசரி சேமிப்பு – மாதாந்திர சேமிப்பு – ஆண்டு சேமிப்பு
ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், நீங்கள் செய்யும் முதல் செலவு, உங்கள் சேமிப்பாக மட்டும் தான் இருக்க வேண்டும். உங்கள் சம்பளத்தில் இருந்து 2௦% முதல் 40% வரை அல்லது உங்களால் முடியும் என்றால் அதற்கும் மேல் சேமிப்பிற்காக முதலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னரே நீங்கள் உங்கள் வீட்டு செலவுகளுக்கு பட்டியால் போடா வேண்டும். மேலும் மாதாந்திர சேமிப்பு மட்டுமல்லாது, ஒரு நாளைக்கு இவ்வளவு நாள் செலவு என்று நீங்கள் எடுத்து வைக்கும் தொகையில் இருந்தும் தினமும் ஒரு தனி சேமிப்பை செய்யுங்கள். இது உங்கள் சேமிப்பை மேலும் அதிகரிக்க உதவும். நீங்கள் சேமிப்பிற்கு அடிமையாகி விட்டால், பின்னர் நிச்சயம் செலவு செய்ய நினைக்கவே மாட்டீர்கள்.
5. எதிர்காலத்திற்கான முதலீடு செய்யுங்கள்
Pexels
ஒவ்வொரு பெண்ணும், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பலர், இன்று என்ன செய்யப் போகின்றோம், இந்த மாதம் என்ன செய்யப்ப்போங்கின்றோம் மேலும் குழந்தைகளுக்கு என்ன செய்யப் போன்கின்றோம் என்று நினைப்பிலேயே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து விடுகின்றனர். இதனால் வயதான காலத்தில் பல பிரச்சனைகளுக்கு ஆளாகியும் விடுகின்றனர். ஆனால், என்ன தான் உங்கள் உங்கள் குழந்தைகளின் எதிர் காலத்திற்கு நீங்கள் சேமிப்பு, செலவு என்று செய்தாலும், உங்கள் வயதான காலத்திற்கும் தேவையான சேமிப்பை செய்ய வேண்டும். நீங்களும், உங்கள் கணவரும் ஒரு பாதுகாப்பான, யாரையும் சார்ந்து வாழாத ஒரு ஓய்வு காலத்தை வாழ இப்போதே திட்டமிட வேண்டும்.
மேலும் படிக்க – பெண்கள் தனது 20/30 வயதில் எளிதில் சேமிக்க ஐந்து சிறந்த முதலீடு திட்டங்கள்
பட ஆதாரம் – Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Finance
தமிழகப் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு! அரசு சான்றிதழுடன் இலவச அழகுக்கலை பயிற்சி !
Deepa Lakshmi
பஸ்ஸுக்கு காசில்லை.. ஆனாலும் 5 லட்ச ரூபாய் தந்தும் வாங்கவில்லை.. தனஞ்ச் ஜெக்தலேயின் நேர்மை
Deepa Lakshmi
புறக்கணிக்கப்படும் அனைவருமே கடவுளின் குழந்தைகள்.. வாழ்வை உயர்த்தும் திருநங்கை ஆசிர்வாதம்!
Deepa Lakshmi