பெண்கள் தனது 20/30 வயதில் எளிதில் சேமிக்க ஐந்து சிறந்த முதலீடு திட்டங்கள்!

பெண்கள் தனது 20/30 வயதில் எளிதில் சேமிக்க ஐந்து சிறந்த முதலீடு திட்டங்கள்!

முதலீடு, பங்குதாரர், வட்டி, செம்மிப்பு -  இவை அனைத்தையும் கேட்டு நீங்கள் ஒதுங்கி நிற்கும் பெண்ணாக (women)இருந்தால் இது உங்களிற்கான கட்டுரை. பெரும்பாலான பெண்கள் இன்றைக்கு தனது சொந்தமான தொழிலை செய்ய துவங்கி,  சிறப்பாக சேமிக்கவும் செய்கிறார்கள். அதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட்டு , இதுபோல் நம்மால் செய்யமுடியுமா என்று இனியும் யோசிக்க தேவை இல்லை. நாங்கள் உங்களுக்கு ஐந்து சிறந்த சேமிப்பு திட்டத்தை அளிக்கிறோம். இனி நீங்களும் சேமிக்கலாம்(savings). திறமையாக!


நேரடி பங்கு சந்தை முதலீடு - (Direct equity)


டீமாட் அக்கவுண்ட்டை துவங்கி நீங்கள் பங்கு சந்தையில் தனது முதலீட்டை செய்யலாம். பங்கு சந்தையில் எப்போதும் லாபத்தை மட்டுமே பார்க்கலாம் என்று நினைக்காதீர்கள் . அதற்கு  எந்த உத்தரவாதமும் இல்லை . இதில் சரியான நேரம், சரியான பங்கு, மேலும் எப்போது வெளியேற வேண்டும், பங்கை விற்கும் நேரம் என்று இவை அனைத்தையும் நீங்கள் நன்கு அறிந்து செயல்பட வேண்டும்.


இது அவ்வளவு எளிதில்லை என்று நினைக்காமல், பங்கு சந்தையை தொடர்ந்து கவனித்து வந்தால் உங்களுக்கு இதிலிருக்கும் வித்தைகள் புரியும். நீண்ட காலத்தில் , நீங்கள் மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும் போது அதிக வருவாய் இதில் கிடைக்க உள்ளது.இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள .


pexels-photo-1246954


தேசிய ஒய்வூதிய அமைப்பு (National Pension system)


ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்,ஒரு ஓய்வூதிய திட்டம். இது வாழ்நாள் சேமிப்புத் திட்டத்தில் கவனம் செலுத்துகின்ற ஒரு அரசாங்க ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இது நிச்சயமான சந்தை வருவாய் மூலம் தேவையான வருமானத்தை உருவாக்குகிறது. இதில் அனைத்து வகையான நிதி, பத்திரங்கள், வைப்புத்தொகைகள் அடங்கும்.கொடுக்கப்பட்ட காரணிகளின் அடிப்படையில் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானித்து கொள்ளுங்கள் .உங்கள் கணக்கில் குறைந்தபட்ச வருடாந்திர வைப்பு 1000 ரூபாய் ஆக இருக்க வேண்டும்.


வங்கியில் நிலையான வைப்பு ( Fixed Deposit)-


வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத நிறுவனம் விதிமுறைகளின் கீழ் வரும், நிலையான வைப்பு , மிகவும் பாதுகாப்பானது. இது மிகவும் பிரபலமான ஒன்றும் கூட. எந்த முதலீட்டில் ஆரம்பிக்கிறது என்று புரியவில்லை என்றால் , நீங்கள் இதிலிருந்து ஆரம்பிக்கலாம். அதற்கு பிறகு  நீங்கள் மற்றவையில் மேம்படுத்திக்கொள்ளலாம். இதில் , வங்கிகள் உங்கள் வருமானத்தில் வட்டி விகிதத்தை (7.5% வரை) வசூலிக்கின்றன, இது வரிக்கு உட்பட்டது. மேலும் இது பத்து வருட காலத்திற்கு மேல் இயங்குகிறது. இந்த திட்டத்தில்,  அதிகபட்சமாக 1 இலட்சம் வருவாய் ஈட்ட முடியும்.


சொத்து/ மனை -


home-1353389 960 720


நிதி முதலீடுகள்  (வங்கி வைப்புத்தொகை, சேமிப்புக் கணக்கு அல்லது பணம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ) தவிர, நிதிசார் முதலீடுகள்  இல்லாமல், சொத்து மற்றும் தங்கம் சார்ந்த முதலீடுகள் ஆகியவை பணத்தை சம்பாதிக்க பெரும் வாய்ப்புகளை அளிக்கும் . உங்கள் இடம் ,அமைப்பு,   நில மதிப்பு ஆகியவற்றை மிக முக்கியமாக பார்க்க வேண்டும். இதன் அடிப்படையில், வாடகை மதிப்பை கணித்து , மூலதன முதலீட்டை(investments)  மீட்டெடுத்து , மேற்கொண்டு சம்பாரிக்கலாம. (நீண்ட காலம்!) .


பப்ளிக்  ப்ரொவிடென்ட் ஃபன்ட் - 


பல முதலீட்டு திட்டங்களில்,  இது சிறந்த ஒன்றாகும். பெரும்பாலானவர்கள் இதை நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள்.  இது மிகவும் பாதுகாப்பானது. பிற்பகுதியில், அதாவது இது ஒரு 15 வருட கால முதலீடு என்றதினால் ,  வரி சார்ந்த எந்த வட்டி  இல்லாமல் , நீண்டகாலத்தில், அதிக வருமானத்தை இதில் எளிதில் பெறலாம்.


#POPxoWomenWantsMore: பெண்களே! இனி சேமிப்பு திட்டத்தை பார்த்து பயந்து திணற வேண்டாம். அதை நன்கு அறிந்து சிந்தித்து செயல் படுங்கள்.


பட ஆதாரம்  - unsplash, pexels,pixabay 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.