Beauty

இப்படி செய்தால் முகத்தின் கரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்கலாம்

Deepa Lakshmi  |  Dec 28, 2018
இப்படி செய்தால் முகத்தின் கரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்கலாம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனாலும் சில புற காரணிகளால் நம் முக அழகு சில சமயம் கெட்டுத்தான் போய் விடுகிறது. முக்கியமாக இந்த கரும்புள்ளிகளால் நம் முகத்தின் பொலிவு மற்றும் அழகு பெரிதாகவே பாதிக்கப்படுகிறது.

சரியாக தூக்கம் இல்லாமை, சுற்றுப்புற மாசுக்கள், ஹார்மோன் பிரச்னைகள், மருத்துவரின் ஆலோசனை இன்றி மாத்திரைகள் சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் இந்த கரும்புள்ளிகள் தோன்றுகின்றன. இவற்றை இயற்கை பொருட்கள் மூலம் சரி செய்ய முடியும் என்றால் முயற்சி செய்து பார்க்கலாம் அல்லவா.

கற்றாழை ஜெல்

கற்றாழை பல்வேறு மருத்துவ நன்மைகள் கொண்டது. இந்த ஜெல்லை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வரலாம். இதனால் கரும்புள்ளிகள் மற்றும் பல சரும பிரச்னைகள் சரியாகும்.

தேன் எலுமிச்சை பூச்சு

முகத்தின் பளபளப்பிற்கு எலுமிச்சையும் மிருது தன்மைக்கு தேனும் பயன்படுகிறது. இவற்றை நீங்கள் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்யவும். அதன்பின் 15 நிமிடம் களைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவி வரலாம். வாரம் இரண்டு முறை இப்படி செய்தால் கரும்புள்ளிகள் மறைய தொடங்குவதை கண்கூடாக பார்க்க முடியும்.

Also Read: எப்படி முகத்திற்கு தேவையான சத்துக்களை கொடுப்பது

உருளை கிழங்கு பூச்சு

உருளை கிழங்கு சாப்பிடுவதில் மட்டும் சுவை கொடுப்பதில் வல்லது என்றில்லை இது சருமத்திற்கு பல நலன்களை தருகிறது. இதில் உள்ள மாவு சத்து இதன் சிறப்பம்சம். இதனை வேக வைத்து பேக் போலவும் பயன்படுத்தலாம். அப்படியே சாறு எடுத்தும் பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் கண்களின் கருவளையங்கள் ஆகியவை நீங்கி முகம் பளிச்சென இருக்கும். வாரம் இருமுறை முயற்சிக்கலாம்.            

பப்பாளி பூச்சு

தேவையான பொருட்கள்

பப்பாளி சாறு 2 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்

மூன்றையும் ஒன்றாக கலக்க வேண்டும். அதன் பின் இவைகளை கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் முகத்தை 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்யலாம்.             


பால் மற்றும் மஞ்சள் பூச்சு

தேவையானவை

பால் 2 ஸ்பூன்
மஞ்சள் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்

இவை மூன்றையும் ஒன்றாக கட்டியில்லாமல் கலக்கி முகத்தில் பேக் போடவும். 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். கண்களுக்கு வெள்ளரி பிஞ்சுகள் நறுக்கி வைக்கலாம். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இப்படி செய்து வரலாம்.           

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!              

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.                                                         

 

 

 

Read More From Beauty