Beauty

கழுத்தில் அசிங்கமாக இருக்கும் கருமை நிறத்தை நீக்க எளிமையான குறிப்புகள்!

Swathi Subramanian  |  Nov 21, 2019
கழுத்தில் அசிங்கமாக இருக்கும் கருமை நிறத்தை நீக்க எளிமையான குறிப்புகள்!

சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். கழுத்தில் உள்ள கருமையானது வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், நகைகள் அணிவதாலும்  ஏற்படுகிறது. ஒரு முறை கருமை தோன்றினால் அதனை அவ்வளவு எளிதில் நீக்குவது சற்று கடினமே.

அதனால் முகத்திற்கு பயன்படுத்தும் மேக்கப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. எனினும் இது கருமை மறைக்க மட்டுமே செய்ய உதவும். கழுத்து கருமை நிறத்தை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே (home remedies) எளிய முறையில் நீக்க முடியும்.  சில எளிய வழிமுறைகள் உங்களுக்காக…. 

pixabay

1. கற்றாழை

கற்றாழை ஜெல்லில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் இது சிறந்த ஸ்கின் லைட்னரும் கூட. எனவே கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

    மேலும் படிக்க – பெண்கள் ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்ட அறிவுறுத்துவது ஏன்? உண்மை காரணங்கள்!

2. எலுமிச்சை

3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் பவுடர் ஆகியவற்றை சம அளவு கலந்து அதனுடன் தேவைப்பட்டால் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்துக் கொள்ளலாம். இதை இரவு நேரத்தில் கருமையான பகுதியில் தடவி 30 நிமிடம் கழித்து (neck) குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பளிச்சென்று இருக்கும். எலுமிச்சையில் இருக்கும் ப்ளீச்சிங் தன்மை கழுத்து கருமையை (dark neck) நீக்க வல்லது. 

3. ஆரஞ்சு

pixabay

ஆரஞ்சுப் பழத்தில் உள்ள விட்டமின்- சி நமது சரும அழகை மேம்படுத்துகிறது. எனவே உலர்த்திய ஆரஞ்சு தோலில் செய்த பொடியுடன், 1 டேபிள் டீஸ்பூன் பால் அல்லது தயிரை கலந்து கழுத்தின் கருமைப் பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

4. தேன்

தேன், 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து பேஸ்ட் போல செய்து முகம் மற்றும் கருமை நிறைந்த கழுத்துப் பகுதியில் தேய்த்து 15 நிமிடம் கழித்து (neck) கழுவினால் நம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீக்கப்பட்டு முகம் பொலிவாக இருக்கும்.

5. பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே 1 டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்து முகம் அல்லது  கழுத்து பகுதி முழுவது தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.

6. வெள்ளரிக்காய்

pixabay

வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். எனவே வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். 

     மேலும் படிக்க – சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்! வீட்டிலேயே செய்வது எப்படி?

7. சந்தனப் பொடி

பொதுவாக சருமத்தின் நிறம் அதிகரிக்க சந்தனப் பொடி கொண்டு ஃபேஸ் பேக் போடப்படும். அத்தகைய சந்தனப் பொடியை கழுத்தில் தடவி வர கழுத்தில் உள்ள கருமை வேகமாக மறையும். அதற்கு இரவில் படுக்கும் முன், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.

8. தக்காளி

தக்காளி இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்தது. தக்காளியின் சாறை எடுத்து கருமை நிறம் அதிகமான இடத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்து வந்தால் கருமை நீங்கி சருமம் பளபளப்பாக இருக்கும்.

9. ஆப்பிள் சீடர் வினிகர்

pixabay

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து காட்டனை பயன்படுத்தி கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் பின்பற்றி வந்தால், விரைவில் கழுத்தில் உள்ள கருமை மறையும்.

10. பப்பாளி

பப்பாளி பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தாலே நமது சருமம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பப்பாளி பழத்தின் சாறு மற்றும் எலுமிச்சைப் பழத்தின் சாறு ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கருமை இருக்கும் இடத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருமை அறவே நீங்கி விடும். 

    மேலும் படிக்க – பார்லர் போகாமலே பளபளக்க வேண்டுமா ?மேனி அழகை மேலும் அழகாக்க இயற்கை குளியல் பொடி !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty