Fiction

ஏலியன்கள் வந்து போகும் இமயமலை.. அதிர வைக்கும் மர்மங்கள்.. கைலாஷ் – மானசரோவர் ஒரு தேடல் !

Deepa Lakshmi  |  Apr 26, 2019
ஏலியன்கள் வந்து போகும் இமயமலை.. அதிர வைக்கும் மர்மங்கள்.. கைலாஷ் – மானசரோவர் ஒரு தேடல் !

உலகின் மர்மங்களில் உயரமான மர்மம் இமயம் மற்றும் கைலாஷ் என்று கூறப்படுகிறது. இந்த இடத்தில் நடக்கும் அதிசயங்கள் மர்மங்கள் இன்னமும் தீர்வு தேடியபடியே இருக்கிறது.

225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு பக்கத்தில் இருந்திருக்கிறது. இந்தியாவின் டெக்ட்டானிக் பிளேட்டுக்கள் வடக்கே வருடத்திற்கு 14 cm அளவிற்கு நகர்ந்திருக்கிறது. இப்படியே நகர்ந்து 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் யூரோ ஏசியன் டெக்ட்டானிக் தட்டுகளுடன் மோதி இணைந்தது. இந்த மோதலால் உருவானதுதான் இமயமலை ( Himalayas ) எனும் அதிசய சிகரம்.

இந்த இமயமலை தொடர்கள்தான் உலகின் உயர்வான மலை தொடர்கள் என்று கூறப்படுகின்றன. இங்கே 23600 அடிகள் உயரம் கொண்ட மலைகள் மட்டுமே 500கும் மேல் இருக்கிறது. இதில் 8000 மீட்டருக்கும் மேல் உள்ள மலைகளே 10க்கும் மேல் உள்ளன. இன்னமும் இந்தியாவின் டெக்ட்டானிக் பிளேட்டுகள் நகர்வதாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கும் திபெத்திற்கும் நடுவே இருக்கிறது கைலாஷ் எனும் கைலாய மலை. இங்கே தான் பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. உலகின் மிக பெரிய சிவலிங்கம் கைலாயமலை என்கிறது ஆன்மிகம். கூகுளின் சாட்டிலைட் படங்கள் இது உண்மை என்பதை உணர்த்துவது போல அமையப்பட்டிருக்கிறது.

வெகு உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்களில் கைலாய மலை என்பது மிக பெரிய ஆவுடையை தன்னகத்தே கொண்டிருப்பது போன்ற வடிவத்தில் அமைந்திருக்கிறது மிக பெரிய ஆச்சர்யம்.

கைலாஷ் என்றால் சாஸ்வதமான உலகில் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்று அர்த்தம். இங்கேதான் ஆதி சிவன் தனது மனைவி பார்வதியோடு வாழ்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இது தவிர புத்த மதமும் சமண மதமும் கூட இமயமலையை புனிதமான தலம் என்றும் முக்திக்கு வழி தரும் தலம் என்றும் நம்புகின்றனர்.

இந்து, சட்லஜ், பிரம்மபுத்ரா மற்றும் கர்னாலி போன்ற நதிகள் இங்கிருந்துதான் தங்கள் பயணத்தை தொடங்குகின்றன. இங்கே உள்ள மானசரோவர் நதியை பிரம்மன் மானசீகமாக வடிவமைத்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இன்றளவும் தேவர்கள் அதிகாலை வேளையில் தேவலோகத்தில் இருந்து இங்கு தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் தினமும் ஒளி ரூபத்தில் வருவதாக கூறப்படுகிறது.

மானசரோவர் நதிக்கு வெகு அருகே ராட்சச தால் எனும் ஏரி இருக்கிறது. மானசரோவர் நீர் இனிப்பாகவும் இதற்கு வெகு அருகே இருக்கும் ராட்சச தால் நீர் உப்பாகவும் இருப்பதன் மர்மங்கள் இன்னமும் விளங்கவில்லை. தவிர மானசரோவர் மிக அமைதியான நதி ராட்சச தாலோ அலையடிக்கும் ஆர்ப்பாரத்துடன் திகழ்கிறது என்கிறார்கள்.

மஹாஷிவ ராத்திரி மகிமைகள்

அதிர வைக்கும் மர்மங்கள்..

மேலும் மானஸரோவரில் பறவைகள் காணப்படுகிறது ஆனால் ராட்சச தாலுக்கு பறவைகள் செல்வதில்லையாம். காரணம் இந்த இடத்தில் ராவணன் தவம் செய்ததால் அந்த அதிர்வுகள் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பிரபஞ்சத்தின் அதிர்வானது ஓம் என்று ஒலிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கைலாச மலையில் இந்த ஓம் எனும் எழுத்தின் வடிவம் பனி பெய்யும் சமயங்களில் தெரிவதாக கூறப்படுகிறது.

பக்தியோடு முக்தி வேண்டி வருபவரை வரவேற்கும் கைலாச மலை தனது ரகசியங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களை காணாமல் போக செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது. கைலாச மலைக்கு அருகே இருக்கும் எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்கின்றனர்.

ஆனால் அதனை விட உயரத்தில் குறைவான இந்த மலையை யாராலும் ஏறவே முடியவில்லை என்பது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது. இந்த மலை நகரும் தன்மை கொண்டது என்றும் இதில் ஏறுபவர்கள் இதன் நகர்தலால் திசை மாறி காணாமல் போவதாகவும் கூறுகின்றனர்.

சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை – அதிசயமும் அற்புதமும்

இந்த மலைத் தொடர்களின் ஏதோ ஒரு பகுதியில் ஷெம்மலா எனும் ரகசிய நகரம் இருப்பதாகவும் அங்கே வாழ்பவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.இந்த கதையை சித்தர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் உண்மையாக இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது 

இமயமலைக்கு அருகே இருக்கும் கொங்காலா பாஸ் எனும் இடம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருக்கிறது. இந்திய சீன சண்டையில் இந்த இடம் இரண்டாக பிரிக்கப்பட்டு பாதி சீனாவிற்கும் மீதி இந்தியாவிற்கும் சொந்தமாகிறது. இந்த இடத்தில் ஏலியன்கள் வந்து போவதாகவும் பூமிக்கு அடியில் ஏலியன்கள் தங்கும் தளம் இருப்பதாக இரண்டு நாட்டு மக்களுமே கூறுகிறார்கள்.

2004 ஆம் வருடம் 5 இஸ்ரோ விஞ்ஞானிகள் அந்த பகுதியில் நடத்திய இது குறித்த ஆராய்ச்சியில் நாலு அடி உயரத்தில் ரோபோட் போன்ற ஏதோ ஒன்று நடப்பதை கண்டிருக்கின்றனர். அதனை மேலும் ஆராய விரும்பியதில் அது அங்கிருந்து காணாமல் போயிருக்கிறது.

அங்கே புனித யாத்திரை மேற்கொள்ளும் மக்களும் ராணுவத்தினரும் கூட இந்த ஏலியன் ரக விண்கலங்களை நேராக கண்டிருக்கின்றனர் புகைப்படம் எடுத்திருக்கின்றனர் என்கிறது நாளிதழ். இந்த இடத்திற்கு ராணுவம் கூட செல்ல அனுமதி இல்லையாம். இது பற்றி இரண்டு நாடுகளும் ரகசியம் காப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

 

 

 

Read More From Fiction