Wellness
ஜாதிக்காய் : பலன்கள் மற்றும் உபாதைகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! (Benefits Of Nutmeg (Jathikai) In Tamil)
பல மூலிகைகள் நம் பயன்பாட்டில் இருந்தாலும், ஒரு சில குறிப்பிடத்தக்க வகை மூலிகைகளைப் பற்றி பெரிதாக யாருக்கும்த் தெரிவதில்லை. இந்த வகையில் ஜாதிக்காய் (Nutmeg) ஓர் அறிய மற்றும் பல நற்குணங்கள் கொண்ட கொட்டை வகையை சேர்ந்த மூலிகையாகும். இதன் பலன்கள் ஏராளம். இதனை சரியான முறையில் உங்கள் தினசரி வாழ்க்கையில் பயன் படுத்தி வந்தால், உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும்.
Table of Contents
- ஜாதிக்காயைப் பற்றி சில குறிப்பிடத்தக்க தகவல்கள் (What Is Nutmeg In Tamil)
- ஜாதிக்காயில் நிறைந்துள்ள சத்துக்கள் என்ன? (Nutrients In Nutmeg)
- சாதிக்காயின் பயன்பாடுகள் (Uses Of Nutmeg)
- ஜாதிக்காயும் உடல் எடையும் (Nutmeg To Loose Weight)
- ஜாதிக்காயினால் கிடைக்கும் நற்பலன்கள் (Benefits Of Nutmeg (Jathikai) In Tamil)
- ஜாதிக்காயின் மருத்துவ பயன்கள் (Health Benefits Of Nutmeg)
- ஜாதிக்காயால் ஏற்படும் உபாதைகள் (Side Effects Of Nutmeg In Tamil)
- கேள்வி பதில் (FAQ’s)
ஜாதிக்காயில் இருந்து எண்ணை தயாரிக்கப் படுகிறது. மேலும் இது உணவு பொருட்கள், குறிப்பாக மசாலா செய்வதற்கு பயன் படுத்தப்படுகின்றது. இது பாரம்பரியமாக மருத்துவத்தில், குறிப்பாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் அதிக மருத்துவ குணங்களும் உள்ளது.
ஜாதிக்காயைப் பற்றி சில குறிப்பிடத்தக்க தகவல்கள்
ஜாதிக்காயில் நிறைந்துள்ள சத்துக்கள் என்ன?
ஜாதிக்காயைப் பற்றி சில குறிப்பிடத்தக்க தகவல்கள் (What Is Nutmeg In Tamil)
- ஜாதிக்காய் (Jathikai) பொதுவாக வெயிலில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உலர வைக்கப்பட்டு, காய்ந்த பின் பயன் படுத்தப்படுகிறது.
- இதை பொதுவாக 6 முதல் 8 வாரங்கள் வரை உலர வைப்பார்கள். இந்த காலகட்டத்தில் இந்த காய் சுருங்கி, இதன் ஓடுகள் கடுமையாக மாறுகின்றது.
- ஜாதிக்காய் இரண்டு வகைகளில் கிடைகின்றது. இது தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற தெனிந்திய பகுதிகளில் அதிகம் விளைவிக்கப் படுகின்றது.
- ஜாதிக்காய் பல ஆரோக்கிய நலன்களைத் தருகின்றது. வலி, அஜீரண பிரச்சனை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எளிதாக குணப்படுத்த உதவுகின்றது. மேலும் மூளையின் செயல்பாடு, ஈரல், போன்ற உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றது.
- உடம்பில் கொழுப்பு சத்து அதிகமாக இருந்தால், அதை குறைக்க ஜாதிக்காய் ஒரு நல்ல மருந்தாக இருக்கும்.
- மேலும் இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றது.
- வாய் அல்லது பற்களில் பிரச்சனை ஏற்பட்டால் அதை விரைவாக குணப்படுத்த ஜாதிக்காய் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
- ஜாதிக்காய் புற்றுநோய், வயிற்று வலி, வாயு, வயிற்றுப்போக்கு, மாத விடாய் பிரச்சனைகள், போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றது.
ஜாதிக்காயில் நிறைந்துள்ள சத்துக்கள் என்ன? (Nutrients In Nutmeg)
ஜாதிக்காயில் அதிகம் வைட்டமின்கள் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளது.இதை பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள, இங்கே சில குறிப்புகள்.
• ஜாதிக்காயில் வைட்டமின் B1 மற்றும் B6 நிறைந்துள்ளது
• இதில் மக்னீசியம், செம்பு மற்றும் மாங்கனீஸ் நிறைந்துள்ளது
• நார் சத்து மற்றும் தியாமின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது
1௦௦ கிராம் ஜாதிக்காயில் நிறைந்துள்ள சத்துக்களின் விவரங்கள்:
• 525 கலோரிகள்
• கொழுப்பு சத்து 36 கிராம்
• நிறைவுற்ற கொழுப்பு 26 கிராம்
• சோடியம் 16 மில்லி கிராம்
• நார் சத்து 21 கிராம்
• சர்க்கரை 28 கிராம்
• கார்போஹைட்ரேட் 49 கிராம்
• வைடமின் A 2%
• வைட்டமின் C 5%
• கால்சியம் 18%
• இரும்பு 17%
சாதிக்காயின் பயன்பாடுகள் (Uses Of Nutmeg)
உலக அளவில் ஜாதிக்காய் (Nutmeg)பல வகைகளில் பயன் பாட்டில் உள்ளது. இது, மருத்துவம், உணவு, அழகு சாதன பொருட்கள் என்று அனைத்திலும் பயன் படுத்தப்படுகின்றது.
• ஜாதிக்காய், சரும ஆரோக்கியத்திற்கு பயன் படுத்தபடுகின்றது
• உணவில் ஜாதிக்காய் நல்ல நறுமணம் பெற பயன் படுத்தப்படுகின்றது
• இதன் எண்ணை, குளியல் சோப் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன் படுத்தப்படுகின்றது
• இதன் இனிமையான மனம் பல உணவு தயாரிப்புகளில் இதன் பயன் பாட்டை அதிகரிக்கின்றது
• இது பெரும்பாலும் சிறிய அளவிலேயே பயன் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக ஒரு சிட்டிகை அளவே அதிகம் என்று கூறலாம். பெரும்பாலும் அசைவ உணவுகள் மற்றும் இனிப்பு பலகாரங்கள் சமைப்பதற்கு, ஜாதிக்காய் அதிகம் பயன் படுத்தபடுகின்றது
• சாக்லேட், தேநீர், காபி போன்ற பானங்களிலும் இது சேர்க்கப்படுகின்றது
• சீஸ் மற்றும் கிரீம் கலந்து தயாரிக்கப்பட்ட உணவுகளில் இது பெரிதும் பயன்படுத்தபடுகின்றது
• கரம் மசாலா தயாரிப்பில் இதனை சேர்ப்பார்கள்
ஜாதிக்காயும் உடல் எடையும் (Nutmeg To Loose Weight)
இன்று பெரும்பாலான மக்கள் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகின்றார்கள். இது அவர்களது எதார்த்தமான வாழ்க்கையை பாதிப்பதோடு, பல நோய்களும் ஏற்பட காரணமாக இருக்கின்றது. இதனால், உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை எடுகின்றனர். இருப்பினும், அவை அனைத்தும் பலன் தந்துவிடும் என்று உறுதியாக கூற முடியாது. இந்த வகையில், ஜாதிக்காய்(jathikai), உடல் எடையை குறைக்க ஒரு நல்ல தீர்வாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள், குறிப்பாக ,மாங்கனீஸ், நார் சத்து மற்றும் குறைந்த கலோரிகள், உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது.
ஜாதிக்காயில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளதால், உங்களுக்கு எப்போதும் வயிர் நிறைந்திருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகின்றது. இதனால் அதிகம் பசி எடுப்பதில்லை. இதனால் கலோரிக்கள் அதிக அளவு குறைகின்றது. குறைந்த கொழுப்பு சத்து, மற்றும் குறைந்த சோடியம் ஆகிய இரண்டும் உடல் எடையை குறைக்க ஒரு நல்ல காரணிகளாக உள்ளது.
மாங்கனீஸ் உடலில் உள்ள கொழுப்பை விரைவாக உடைக்க உதவுகின்றது. இதனால் விரைவாக உடல் எடை குறைகின்றது.
எப்படி ஜாதிக்காயை உடல் எடை குறைக்க பயன் படுத்துவது? (How To Use Nutmeg To Reduce Body Weight)
உடல் எடை குறைய அதிக பலனை நீங்கள் பெற, பின்வரும் இந்த முறைகளை முயற்சி செய்து பாருங்கள். இது நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்
1. ஜாதிக்காய் (Nutmeg) பொடியை வாழைப்பழம், ஆப்பிள், பேரிகை, அன்னாச்சிப்பழம், மாம்பழம் ஆகிய பலன்களை பொடியாக நறுக்கி சாலட் செய்து, அதன் மீது சிறிது தூவி உண்ணலாம்
2. முட்டை தோசை, அவுல் போன்ற காலை உணவில் ஜாதிக்காய் பொடியையும் சேர்த்து சமைத்து உண்ணலாம்
3. வேஜிடேபிள் சாலட் செய்யும் போது, காரட், முட்டைகோஸ், கீரை ஆகியவற்றோடு சிறிது ஜாதிக்காய் பொடியையும் சேர்த்து தூவி கலந்து உண்ணலாம்
4. நீங்கள் அருந்தும் தேநீர் அல்லது காபியுடன் சிறிது ஜாதிக்காய் பொடியை சேர்த்து அருந்தலாம். இது நல்ல சுவையையும் தரும்.
மேலும் படிக்க – பெண்களின் உடல் எடையை குறைக்கும் 10 அற்புதமான எளிய உடற்பயிற்சிகள்
ஜாதிக்காயினால் கிடைக்கும் நற்பலன்கள் (Benefits Of Nutmeg (Jathikai) In Tamil)
ஜாதிக்காய் (Jathikai) பல நல்ல பலன்களை உங்கள் உடலுக்குத் தரும். இதன் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயம் நீங்கள் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் நல்ல ஆரோக்கியத்தோடு வாழலாம்.ஜாதிக்காயின் சில குறிப்பிடத்தக்க பலன்கள் இங்கே:
1. வலி நிவாரணி (Pain Reliever)
நீரழிவு நோய், தொற்றுநோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றால் ஏற்படும் வலிகளை போக்க ஜாதிக்காய் ஒரு நல்லத் தீர்வாக இருக்கின்றது. இதற்கு அதிர வலியை போக்கும் குணங்கள் இருப்பதால், பெரும்பாலான மருந்துகளில் இது சேர்க்கப்படுகின்றது.
2. நல்ல தூக்கம் (For Sound Sleep)
காலம் காலமாக ஜாதிக்காய் தூக்கமின்மைக்கு ஒரு நல்ல வீட்டு வைத்தியமாக இருந்து வருகின்றது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய்ப் பொடியை மிதமான சூடுள்ள பாலில் கலந்து தூங்கப் போவதற்கு முன் கலந்து அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். மேலும் இவ்வாறு செய்யும் போது உடலில் உள்ள சோர்வு நீங்கி நல்ல உறக்கத்தை நீண்ட நேரத்திற்கு நீங்கள் பெறுவீர்கள்.
மேலும் படிக்க – உங்கள் மனதை அமைதியாக்கி நிம்மதியாகத் தூங்க வைக்கும் இயற்கை எண்ணெய் வகைகள்
3. நல்ல ஜீரணம் ஏற்படும் (Improves Digestion)
உணவு, உண்ணும் நேரம், வாழ்க்கை முறை என்று பல காரணங்களால், உண்ணும் உணவு சரியாக ஜீரணமாகாமல் போவதுண்டு. இதனால் பல பிரச்சனைகள், ஏற்படுவதுண்டு. குறிப்பாக, மல சிக்கல், வயிற்றுப் போக்கு, வாயு என்று பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. ஆனால், ஜாதிக்காயை கசாயம் போல செய்து நீங்கள் அருந்தி வந்தால், உங்கள் வயிற்றில் ஜீரணம் செய்யத் தேவையான சுரபிகளை இது சுரக்க வைத்து, அஜீரணத்தை போக்க உதவுகின்றது. மேலும் வயிற்றில் உள்ள வாயு வெளியேறவும் இந்த ஜாதிக்காய் உதவுகின்றது.
4. மூளையின் ஆரோக்கியம் (Good For Brain)
ஜாதிக்காய் மூளையில் இருக்கும் நரம்புகளை ஊக்கப் படுத்த உதவுகின்றது. பண்டை காலம் முதல் இது மூளையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த பயன் படுத்தப்பட்டு வருகின்றது. மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கின்றது. கவனத்தை அதிகப்படுத்தி, நல்ல ஞாபக சக்த்தியையும் இது அதிகப்படுத்துகின்றது. இதனால் உங்கள் சிந்திக்கும் திறனும் அதிகமாகின்றது.
5. வாய் துர்நாற்றத்தை போக்கும் (Removes Bad Mouth Odor)
பலர் இன்று வாய் துர்நாற்றம் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இது அவர்களை பல வகையில் பாதிக்கின்றது. குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள், அதிக அளவில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள். இதனை போக்க பல தீர்வுகள் இருந்தாலும், ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்றால், அதற்க்கு நீங்கள் ஜாதிக்காயைப் பயன் படுத்துவது நல்ல வழியாகும் .
ஜாதிக்காய் உங்கள் உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி, உங்கள் உடலை சுத்தப் படுத்துகின்றது. மேலும் இதில் இருக்கும் எண்ணை, வாயில் இருக்கும் துர்நாற்றம் ஏற்படுத்தும் பக்டீரியாக்களை அகற்ற உதவுகின்றது. ஆயுர்வேத பற்பசைகளில் ஜாதிக்காய் பெரும்பாலும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது.
6. ஆரோக்கியமான சருமம் (To Get Healthy Skin)
ஜாதிக்காயில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஒவ்வாமையை தடுக்கும் தன்மைகள் இருப்பதால், இது முகத்தில் இருக்கும் கருங்கறைகள், பருக்கல் மற்றும் அடைப்புகளை போக்கி உங்கள் சருமம் ஆரோக்கியம் பெற உதவுகின்றது. ஜாதிக்காய்ப் பொடியை தேனில் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பருக்கள் மற்றும் பிற சரும பிரச்சனைகள் விரைவாக குணமடையும். இதில் நீங்கள் சிறிது பாலும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் முகத்திற்கு நல்ல பொலிவும் கிடைக்கின்றது.
7. இரத்த அழுத்தத்தை சீர் படுத்தும் (Reduces Blood Pressure)
ஜாதிக்காயில் இருக்கும் தாது பொருட்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டத்தை சீர் படுத்த உதவும். இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தாது பொருட்கள் இருப்பதால் உங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றது. இதனால் அழுத்தத்தை குறைத்து இரத்த நாணங்களை சீர் படுத்துகின்றது. இதனால் நீங்கள் ஆரோக்கியமாக உணருவீர்கள்.
8. கொழுப்பு சத்தை குறைக்க உதவும் (Helps Reduce Cholesterol)
ஜாதிக்காய் குறிப்பிடத்தக்க அளவு உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை குறைக்க உதவுகின்றது. இதனாலேயே இது பெரும்பாலும் உடல் எடையை குறைக்கவும் பயன் படுத்தப்படுகின்றது.
ஜாதிக்காயின் மருத்துவ பயன்கள் (Health Benefits Of Nutmeg)
• பண்டைய காலம் முதல் ஜாதிக்காய் மற்றும் அதன் எண்ணை இந்திய மற்றும் சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன் படுத்தப்பட்டு வருகின்றது
• நரம்பு மண்டலம் மற்றும் ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்ய இது பெரிதும் உதவுகின்றது
• மூளையின் செயல்பாட்டை ஊக்கவிக்க இது பயன்படுத்தப்படுகின்றது
• ஜாதிக்காயில் இருக்கும் யூஜினால் பற்கள் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றது
• தசைகளில் ஏற்படும் வலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றை குணப்படுத்த இது பயன்படுகின்றது
• ஜாதிக்காய் கசாயம் மயக்கம், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகின்றது
ஜாதிக்காயால் ஏற்படும் உபாதைகள் (Side Effects Of Nutmeg In Tamil)
ஜாதிக்காயால் பல நன்மைகள் இருந்தாலும், இதை அதிகம் உட்கொள்ளும் போது சில உபாதைகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடும். அவற்றை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், இதை நீங்கள் பாதுகாப்பாக பயன் படுத்தலாம்.
ஜாதிக்காயால் ஏற்படும் உபாதைகள், பின் வருமாறு:
• நீண்ட காலத்திற்கு ஜாதிக்காயை அதிக அளவு தொடர்ந்து உணவில் சேர்த்து உட்கொண்டால் சில உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்
• அப்படித் தொடர்ந்து பயன் படுத்தும் போது பிரம்மை மற்றும் பிற மன நோய் ஏற்பட இது காரணமாக மாறி விடலாம்
• பரிந்துரைக்கப் பட்ட அளவை விட அதிகமான அளவு இதை எடுத்துக் கொள்ளும் போது, உலர்ந்த வாய், மயக்கம், சீரற்ற இருதயத் துடிப்பு, பதற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும்
• இதை அதிக அளவு உட்கொள்ளும் போது மனதில் குழப்பம் இருப்பது போல எப்போதும் ஒரு சூழல் நிலவும்
இத்தகைய உபாதைகள் நாளடைவில் பிற பதிப்புகளையும் உங்கள் உடல் நலத்தில் ஏற்படுத்தி விடக் கூடும். அதனால், ஜாதிக்காயை எப்போதும் பரிந்துரைக்கப் பட்ட அளவிலேயே எடுத்துக் கொள்வது நல்லது.
கேள்வி பதில் (FAQ’s)
1. ஒரு முழு ஜாதிக்காயையும் உண்ணலாமா?
இது ஒருவருடைய உடல் ஆரோக்கியம் மற்றும் திடத்தை பொறுத்தே உள்ளது. எனினும், பெரும்பாலோனர்களால், ஒரு ஜாதிக்காயை முழுமையாக உன்ன முடியாது. அவ்வாறு முயற்சித்தால் அது சில உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
2. எவ்வளவு ஜாதிக்காய் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளலாம்?
பொதுவாக ஒரு சிட்டிகை ஜாதிக்காய்ப் பொடி ஒரு நாளைக்கு ஒருவருக்குப் போதுமானது. இதனை அதிக அளவு எடுத்துக்கொள்ள முயற்சிக்கும் போது உடலில் வேறு பிற பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
3. ஜாதிக்காயை பச்சையாக உன்ன முடியுமா?
இது சற்று கடினமான ஒன்று. ஜாதிக்காயை வெயிலில் காய வைத்து, உலர்ந்த பின் அதனை பொடி செய்து உண்பதே பொதுவான முறையாக உள்ளது.
4. எத்தனை நாட்கள் ஜாதிக்காயை வைத்து பயன் படுத்தலாம்?
பொதுவாக ஒவ்வொரு இயற்கையாக விளையும் பொருளுக்கும் ஒரு கால கெடு உள்ளது. இந்த வகையில், ஜாதிக்காயிக்கும் குறிப்பிட்ட கால கெடு உள்ளது. அதற்குமேல் ஆனால், அதனை பயன் படுத்தக் கூடாது. நன்கு உலர்ந்த ஜாதிக்காயை நீங்கள் 3 முதல் 4 வருடங்கள் வரை வைத்து பயன் படுத்தலாம். அதன் இயற்கைத் தன்மையோடு இருக்கும் இந்த குறிப்பிட்ட காலம் வரை இருக்கும்.
5. ஜாதிக்காய் எங்கு கிடைக்கும்?
நீங்கள் ஜாதிக்காயை மலிவான விலையில் நாட்டு மருந்து கடைகளிலும், பலசரக்கு கடைகளிலும் எளிதாக வாங்கலாம். இதை பொடியாகவும் நீங்கள் கடைகளில் வாங்கலாம். பொடி செய்த ஜாதிக்காயை நீங்கள் எளிதாக பயன் படுத்த முடியும்.
பட ஆதாரம் – pixabay,pexels,shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.