
இன்றைய குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் (mobile phone) என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த முந்தைய காலகட்டத்தில் விளையாட்டு பொருட்களை காட்டியும், வேடிக்கை காட்டியும் சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது, அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்களையோ போட்டு அவர்கள் கையிலேயே கொடுத்து விடும் நடைமுறை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் சமாதானம் ஆகலாம், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். மொபைல் போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கே காணலாம்.
செல்போனால் ஏற்படும் பாதிப்புகள்
- பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. இதனால் நாளடைவில் எலும்புகள் தேய்மானம் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கின்றனர். பின்னாளில் இது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கலாம்.
pixabay
- குழந்தைகள் நீண்ட நேரம் செல்போனை (mobile phone) பயன்படுத்துவதால் செல்போன் கதிரியக்கமானது அவர்களை பாதிக்கிறது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சுகள் குழந்தைகளை எளிதில் தாக்கும். இதனால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே – தூங்கும் முன் நீங்கள் செய்யவேண்டிய 6 விஷயங்கள்!
- குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் வெளியில் ஓடி ஆடும் குழந்தைகளை பார்ப்பதே தற்போது அரிதாகியுள்ளது. வெயிலில் இருந்து கிடைக்கும் வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைகாததால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன.
- ஒரே இடத்தில் அமர்ந்து எப்போதும் செல்போனை உபயோகித்து கொண்டிருப்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இன்றைய தலைமுறை குழந்தைகள் பலர் உடல் பருமன் பிரச்சனைகளால் அவதிப்படுவதை நான் அன்றாடம் காண முடிகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும், உயர் ரத்த அழுத்தத்திலும் கொண்டு வந்து விட்டு விடுகிறது.
pixabay
- செல்போன் பயன்படுத்துவதால் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்பட்டு சிவக்கின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது.
- செல்போனுக்கு அடிமையான குழந்தைகள் யார் முகத்தையும் பார்த்துப் பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு உடனே வார்த்தைகளை கோர்த்து பதில் சொல்லத் தெரிவதில்லை. மற்றவர்களோடு பழகவோ பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் தனிமைப்பட்டு விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் எனபதால் கவனம் தேவை.
தவிர்க்கும் முறைகள்
- உங்களது மொபைலை (mobile phone) குழந்தைகளிடம் கொடுக்கும் போது அதனை ஏரோ பிளைன் மோடில் போட்டு அவர்களிடம் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு கதிரியக்க பாதிப்பு உண்டாகாமல் தவிர்க்கலாம்.
குளிர்கால தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் மற்றும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் விதம்!
- ஒரே நாளில் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் பழக்கத்தை மாற்ற முடியாது. முதலில் குழந்தைகள் முன் பெரியவர்களாகிய நாம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அவர்களுக்கு பயன்படுத்த கொடுக்கும் நேரத்தை குறைக்கவும் தொடர்ந்து பயன்படுத்தாமல் இடைவெளி விட்டு பயன்படுத்த செய்யுங்கள்.
- வீட்டுக்கு வெளியே போய் விளையாடும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். அவர்களோடு சேர்ந்து நீங்களும் விளையாடினால் அவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
pixabay
- குழந்தைகள் போனை பயன்படுத்தும்போதும் நேராக அமர்ந்து இருக்கிறார்களா,என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை குனிந்து போனை பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.
- குழந்தைகளின் கல்வி சம்பந்தமான ஏராளமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதிக நேரத்தை போனிலேயே செலவழிக்க அனுமதிக்கக்கூடாது.
- பெற்றோர்கள் தங்கள் கையில் செல்போனை வைத்து கொண்டு குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம்.
மொபைல் (mobile phone) போன்களால் உயிருக்கு ஆபத்தான பல வியாதிகள் தாக்குவது உண்மைதான் என மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க மேலே கூறியுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி பாதுகாப்பாக இருங்கள்.
மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.