Beauty

பெண்ணுக்கு கூந்தல் அழகு : அடர்த்தியான ஆரோக்கியமான கூந்தலை பெற சில சிறந்த வழிகள்! (Best Shampoos For Hair Growth In Tamil)

Nithya Lakshmi  |  Apr 30, 2019
பெண்ணுக்கு  கூந்தல் அழகு : அடர்த்தியான ஆரோக்கியமான  கூந்தலை  பெற  சில சிறந்த வழிகள்!  (Best Shampoos For Hair Growth In Tamil)

கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்று அணைத்து  பெண்கள் ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட ஒரு கூடுதல் எனக்கு தேவை இல்லை என்று கூறுபவர்களை நீங்கள் கண்டறியவே முடியாது என்பதுதான் நிஜம்!ஆஹா! அந்த பெண்ணின் கூந்தல் எவ்வளவு அழகாக உள்ளது என்று நாம் வெளியில் போகும் இடங்களில் எல்லாம் சில பெண்களின் கூந்தலை கண்டு வியந்து போன நொடிகளும் உண்டு. அப்படிப்பட்ட அடர்த்தியான அழகிய நீண்ட கூந்தல் இன்றைய கால கட்டத்தில் பார்ப்பது அபூர்வம் ஏனெனில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை – முடி கொட்டுவது !

இதை எளிதில் எவ்வாறு சமாளிக்கலாம் என்று நீங்கள் இன்னும் சிந்தித்துக் கொண்டிருந்தால் நாங்கள் உங்களுக்கு  சில முக்கிய குறிப்புகளும் வழிகளையும் இங்கு காட்டியுள்ளோம்.

கூந்தல் வளர்ச்சிக்கு சில சிறந்து ஷாம்புகள்

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்

கூந்தல் பராமரிப்பு : கூந்தலை பராமரிப்பதற்கான சில டிப்ஸ்

கூந்தல் வளர்ச்சிக்கு சில சிறந்து ஷாம்புகள் (Best Shampoos For Hair Growth In Tamil)

உச்சந்தலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போதுமான அளவு இருப்பதால் அது தோல் மற்றும் ஸ்கேல்ப்பை (scalp) சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.  மேலும் இதன் PH மட்டத்தில் ஒரு சமநிலை இருக்க வேண்டும். சருமத்தில் இயல்பாக உருவாகும் எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை, அதன் நோய் எதிர்ப்பு பண்புகளால் சமநிலையில் கொண்டிருக்கும் தோல் போலன்றி உச்சந்தலை.

உச்சந்தலையில் இருக்கும் தூசி மற்றும் அழுகை எதிர்க்க நோய்த்தடுப்பு சக்தி அதற்கு இல்லை. எனவே கடுமையான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால், உச்சந்தலையில், முடி வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.ஆகையால், நீங்கள் ஷாம்பு வாங்குகையில் சல்பெட் , பாரபீந் பிரீ ஷாம்புகளை தேர்ந்தெடுங்கள். பெரும்பாலும் எலுமிச்சை வேப்பிலை, பாதாம், ஆரஞ்சு, நெல்லிக்காய் , ஆம்லா , கற்றாழை போன்ற பொருட்கள் அதிகம் உள்ள ஷாம்பூவை தேர்ந்தெடுங்கள். 

ஷாம்பு உங்கள் கூந்தலை சுத்தம் செய்து அதை பராமரித்து அதற்கு ஏற்ற ஊட்டச்சத்தை  மிக எளிதில் அளிக்கும். ஆகையால் வெளியே சென்று வரும்போது உங்கள் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு , எண்ணெய் பசை  இவை அனைத்தையும் அகற்ற ஒரு சிறந்த ஷாம்பூ உங்களுக்கு மிக அவசியமான ஒன்று. இங்கு நாங்கள் சில சிறந்து ஷாம்பு வகைகளை  உங்களுக்கு அளிக்கிறோம்.

Also Read முடி உதிர்தலை மறுசீரமைக்க 10 ஷாம்புகள்

1. வாவ் ஆப்பிள் சீடர் வினிகர் ஷாம்பு (Wow Apple Cidar Vinegar Shampoo )

ஆப்பிள் சிடர் கூந்தல் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய பொருளாகும். இதில் இருக்கும் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் அம்சங்கள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும். இதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் உங்கள் கூந்தலில் இருக்கும் செதில்கள் மற்றும் உச்சந்தலையில் இருக்கும் அழுக்கு அனைத்தையும் நீக்கி சுத்தம் செய்யும் . உணர்திறன் கொண்ட உச்சந்தலை  அல்லது அரிப்பு பொடுகு தொல்லை இருந்தால் உங்களுக்கு உதவும்.

எந்த வகை கூந்தலிற்கு உதவும் ? இது எண்ணெய் கொண்ட கூந்தல், வறண்ட கூந்தல் மற்றும்  சாதாரண கூந்தல் அனைத்திற்கும் உங்களுக்கு ஒரு சிறந்த ஷாம்பு ஆகும் .

நன்மை : அசிட்டிக் ஆசிட் மற்றும் ph லெவல் கூந்தலுக்கு தேவையானது , பயனுள்ள பம்ப் பேக்கிங்

குறைபாடு : கூந்தல் சிறிது வறண்டு போகும் வாய்ப்புள்ளது

ரூ . 399

இங்கே வாங்குங்கள்

Also Read : சுருள் முடியை அகற்றுவது எப்படி

2. VLCC  ஹேர் ஃ பால் ரிப்பேர் ஷாம்பு (VLCC Hair Fall Repair Shampoo)

இந்த ஷாம்பூவில் (shampoo) உள்ள  தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சியில் உதவுகிறது. செம்பருத்தி , தேங்காய் எண்ணெய், நெல்லிக்கா மற்றும் அலோ வேரா போன்ற இயற்கை பொருட்கள் உங்கள் தலைமுடிக்கு வேரிலிருந்து ஊட்டச்சத்தை அளித்து உங்கள் முடி வளர்ச்சிக்காக ஆழமாக செயல்படுகிறது.

எந்த வகை கூந்தலிற்கு உதவும் ? இது எண்ணெய் கொண்ட மற்றும் சாதாரண கூந்தலுக்கு சிறந்தது

நன்மை: இயற்கை பொருட்கள் இதில் அடங்கி உள்ளது

குறைபாடு:  இது சிலருக்கு  கூந்தலை வறண்டதாக்கி விடும்.

ரூ . 180

இங்கே வாங்குங்கள்

 

முட்டை பற்றிய உண்மைகளையும் படிக்கவும்

3. காதி நச்சுரல்ஸ் ஹேர் கிளென்சர் (Khadi Naturals Hair Cleanser)

இது ஒரு ஹெர்பல் ஷாம்பு. இதில் இருக்கும் நெல்லிக்காய், பிரிங்கிராஜ் , பாதாம் எண்ணெய், வேப்பிலை இவை அனைத்தும் உங்கள் கூந்தல் உள்ளே சென்று அதற்கு ஏற்ற ஊட்டச்சத்தை அளிக்கிறது. மேலும் இது உங்கள் உச்சந்தலையை குளிர்ச்சியாகவும் ஈர தன்மையுடனும்  வைத்துக்கொள்ள உதவும். ஆகையால், இது கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற ஒரு ஷாம்பு.

எந்த வகை கூந்தலிற்கு உதவும் ? இதை  எல்லா வித கூந்தலிற்கும் உபயோகிக்கலாம்.

நன்மை : வெகு வேகத்தில் கூந்தல் கொட்டுவதை நிறுத்திவிடும்

குறைபாடு : கூந்தல் அலசிய பிறகு வறண்டது  போல் ஆகும்

ரூ . 210

இங்கே வாங்குங்கள்

4. ட்ரெசெம்மே ஹேர் ஃபால் டிபென்ஸ் ஷாம்பு (TreSemme Hair Fall Defense Shampoo)

ட்ரெசெம்மே ஷாம்பூவில் இருக்கும் கேரட்டின் ப்ரோட்டீன்உங்கள் கூந்தலை வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்ற உதவுகிறது. இது உங்கள் தலையில் இருக்கும் கடுமையான சேதமடைத கூந்தலை சரிசெய்து , கூந்தல் மீண்டும் ஆரோக்யமாக வளர உதவும். ஒரே வாஷில் 90% கூந்தலை உடைந்து அகற்றி , நீளமான அடர்த்தியான கூந்தலை அளிக்கிறது.

எந்த வகை கூந்தலிற்கு உதவும் ? அணைத்து வித கூந்தலுக்கும் ஏற்றது 

நன்மை : முடி உதிர்வதை விரைவில் கட்டுப்படுத்தும் , மலிவான விலை

குறைபாடு : உணர்திறன் கொண்ட கூந்தலுக்கு ஏற்றதல்ல 

ரூ . 184

இங்கே வாங்குங்கள்

5. பையோட்டிக் பயோ கெல்ப் ப்ரோடீன் ஷாம்பு ( Biotique Bio-Kelp Protein Shampoo)

ஓதிலிருக்கும் கெல்ப் பல வகையான ப்ரோடீன்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ள ஒரு குளிர்ந்த கடற்பாசி ஆகும். இது உங்கள் தலையை குளுமையாக வைத்து, மேலும் புதினா மற்றும் பெப்பெர்மிண்ட் ஆயில் எனும் பொருட்களால் கூந்தலை அழகை ஆரோக்கியமாக வளர ஊக்குவிக்குது. மேலும் இதிலிருக்கும் வேப்பிலை, பிரிங்கிராஜ், சீவக்காய் ஏற்ற பொருளாகும்.

இதை தலையில் இருக்கும் பொடுகு , அரிப்பு, எண்ணெய் போன்ற அணைத்து பிரெச்சனைகளுக்கும் ஏற்ற தீர்வாகும் .

நன்மை : உங்கள் முடி உதிர்வதை எளிதில் நீக்கும், தினம் பயன்படும், இலகுவான ஷாம்பு
குறைபாடு : மருத்துவ / ஹெர்பல் வாசனை வரலாம்

ரூ . 269

இங்கே வாங்குங்கள்

6. மேட்ரிக்ஸ் ஸ்மூத்திங் ஷாம்பு (Matrix Smoothing Shampoo)

ஒருவேளை உங்கள் கூந்தல் மிகவும் வறண்டு போனதாக இருந்தால் அதை நீங்கள் மென்மையாக்குவது மிக அவசியம். அதற்கு ஏற்ற ஷாம்பூ தான் இது. அதிக வறண்டு போன கூந்தல் முடி உதிருவதை அதிகரிக்கும். ஆகையால் அதை மென்மையாக்கி , பளபளக்க செய்து , சிக்கல்களை அகற்றி ஒரு ஆரோக்யமான கூந்தலை அளிக்கிறது இந்த மேட்ரிக்ஸ் ஷாம்பு.

அதிகம் வறண்ட கூந்தலுக்கு ஏற்றது
நன்மை : கூந்தலை மென்மையாகும், சுருள்களை ஓரளவுக்கு நேராக்கும்
குறைபாடு : இதில் சில கெமிக்கல்கள் உள்ளது

ரூ . 320

இங்கே வாங்குங்கள்

மேலும் படிக்க- பூக்களை கொண்டு உங்கள் சிகையை அலங்கரிக்க சில தனிப்பட்ட வழிகள் – பண்டிகை நாட்களிற்கான பாணி

7.கார்னியர் அல்ட்ரா ப்ளேன்ட் ரி வைடலைசிங் ஷாம்பு (Garnier Ultra Blend De-Tox Shampoo)

இது என்னுடைய பெவெரெட் ! இன்றைய வாழ்க்கை முறையில் நீங்கள் போதுமான அளவு நேரத்தை உங்கள் கூந்தலுக்கு அளிக்க முடியாவிட்டால் இதுபோல் ஒரு ஷாம்பு உங்களுக்கு கை கொடுக்கும். இதிலிருக்கும் 5 நற்குணங்கள் ஹென்னா , எலுமிச்சை, யூகலிப்டஸ் தைலம், அலோவேரா மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த கிறீன் டி உங்கள் கூந்தலை மென்மையாக்கி அதில் இருக்கும் அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்றி புத்துணர்ச்சி அளிக்கும். மேலும் இது முடி உதிர்வதை தடுத்து ஆரோக்யமாக வளர உதவும்.

நார்மலான ஸ்கேல்ப் இருக்கும் எந்த கூந்தலிற்கும் இதை பயன்படுத்தலாம்
நன்மை : இதன் நறுமணம் , விலை குறைவு, 5 கூந்தல் சார்ந்த பிரெச்சனைகளுக்கு 5 வகைகளில் உள்ளது
குறைபாடு : வறண்ட கூந்தலுக்கு இது சிறந்ததல்ல 

ரூ . 125

இங்கே வாங்குங்கள்

8. அரோமா ட்ரெஷர் டி ட்ரீ ஷாம்பு (Aroma Treasure Tree Shampoo)

உங்கள் ஸ்கேல்ப் உணர்திறன் கொண்டதாக இருந்தால் அதில் இருக்கும் அழுக்கு , எண்ணெய் என்று அனைத்தையும் சுத்தம் செய்து , கூந்தலை மென்மையாக்கி , அடர்த்தி அளிக்கும் ஒரு அற்புதமான ஷாம்பு இது. இது உங்கள் முடி உதிர்வதை கட்டுப்படுத்தும் அணைத்து அத்தியாவசிய எண்ணெய்கள் கொண்ட ஷாம்பு ஆகும். மேலும் இது உங்கள் உச்சந்தலைக்கு தேவைப்படும் ph பாலன்ஸ் அளிக்கிறது. இது நிச்சயம் உங்கள் கூந்தலை அழகை அடர்த்தியாக
மாற்றிவிடும்.

உணர்திறன் கொண்ட தலைக்கு ஏற்றது
நன்மை : அரிப்பு தன்மையை நீக்கி மென்மையான கூந்தலை பெறலாம்
குறைபாடு : இதன் விலை சிறிது அதிகம்

ரூ . 1015

இங்கே வாங்குங்கள்

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள் (Food For Hair Growth)

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை காரணிகள் காரணமாக நாம் உண்ணும் உணவும் வாழ்க்கை முறைகளும் மாறிவிட்டதால் அதன் விளைவுகள் கூந்தலிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்மூடித்தனமாக ஷம்பூவை மட்டுமே நம்பி இருப்பதால் கூந்தல் வளராது. உண்ணும் உணவிலும் போதுமான போஷாக்கை வேறுவது அவசியம் . கீழ் குறி இருக்கும் உணவுகளை நீங்கள் தினம் சாப்பிட்டால் எளிதில் உங்கள் கூந்தலை அடர்த்தியாக பெறலாம். 

1.விட்டமின் சி நிறைந்த பழங்கள் (Vitamin C Rich Fruits)

நம் உடலில் கொலாஜன் என்னும் புரோட்டின் முடி வளர்வதற்கு தேவைப்படும் .அதை விட்டமின் சி அளிக்கிறது . மேலும் விட்டமின் சி யில் உள்ள சத்துக்கள் முடி உதிர்வதை தடுத்து அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர உதவுகிறது அதனால் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் அதாவது ஆரஞ்சு ,பப்பாளி , இனிப்பான உருளை கிழங்கு, ஸ்ட்ராபெர்ரிகள், கிவி, ப்ரோக்கோலி இவை அனைத்தும் முடி வளர உதவும்.

2. முட்டை (Eggs)

தினம் ஒரு முட்டை யை நீங்கள் சாப்பிட்டால் உங்கள் முடி விரைவில் வளர்ந்து நீளமாகி விடும். அதாவது முட்டையில் உங்களுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் பயோடின் சத்துக்கள் அடைந்துள்ளது. இவை இரண்டும் கூந்தலை வேகமாக வளர வைக்கும் ஊட்டச்சத்துகள் ஆகும். ஆகையால் எளிதில் முடி வளர உங்கள் உணவில் முட்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.

3.அவகேடோ (Avacado)

ஒரு அற்புதமான முடி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் அவோகேடோவில் உள்ளது அதாவது விட்டமின் A ,B 6, காப்பர், ஐயன் சத்துக்கள் அனைத்தும் இதில் நிறைந்திருப்பதால் இது உங்கள் கூந்தல் மற்றும் ஸ்கேல்ப் ஆரோக்கியமாக வளர்வதற்கு அனைத்து காரணிகளையும் மிக அற்புதமாக உருவாக்கி தருகிறது.

4.நெல்லிக்காய் (Gooseberry)

நெல்லிக்காயில் அடங்கி இருக்கும் ஐயன் உங்கள் கூந்தலை வளர உதவும். கரோடின் உங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரித்து , முடி வளர உதவும். மேலும் இதன் எண்ணெய் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதுவே மற்றுமொரு காரணி! உங்கள் கூந்தலுக்கு போதுமான ஊட்டச்சத்து அளிக்க , தினம் இரண்டு நெல்லிக்காய் சாப்பிட்டாலே போதும்.

5.நட்ஸ் (Nuts)

பாதாம் பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை நீங்கள் சாப்பிட்டாலும் உங்கள் கூந்தல் மிகவும் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளர அதிக வாய்ப்புகள் உள்ளது ஏனெனில் இதில் ஜிங்க் (zinc) மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது

கூந்தல் பராமரிப்பு : கூந்தலை பராமரிப்பதற்கான சில டிப்ஸ் (Tips For Hair Growth)

தொடர்ந்து கருமையான ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்றால் அதை சரியாக பராமரிப்பது மிக அவசியம். அதற்கான டிப்ஸ் இங்கே உள்ளது. 

மேலும் படிக்க – உங்கள் சிகைக்கு எளிமையான மற்றும் வேறுபட்ட ஜடை வகைகள்

பட ஆதாரம்  – பிக்ஸாபெ,பேக்செல்ஸ் ,இன்ஸ்டாகிராம்  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

Read More From Beauty