Celebrity Life
உயிருக்கு அச்சுறுத்தல்…பாதுகாப்பு அளிக்க கோரி காவல் ஆணையரிடம் நடிகை காயத்ரி ரகுராம் மனு!

நடிகை காயத்ரி ரகுராம் பாதுகாப்பு கேட்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு சமீபத்தில் புதுச்சேரியில் நடந்தது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் “பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். “அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது.
ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம்” என்று பேசினார். இது பெரும் சர்ச்சையானது.
இதனால் கோபம் அடைந்த இந்து அமைப்பினர் திருமாவளவனை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்தனர். பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும் அந்த அறிக்கையில் உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்கள் அவை என்று திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க – நித்யானந்தாவுடன் இருக்கும் புகைப்படம் உண்மையானது இல்லை : பாடகி சின்மயி விளக்கம்!
எனினும் பலரும் சமூகவலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். அந்த வரிசையில் நடிகையும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் (gayathri raghuram) கடுமையான வார்த்தைகளில் திருமாவளவனை விமர்சித்ததோடு, இந்து மதத்தை விமர்சித்த திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் திருமாவளவன் வருத்தம் தெரிவித்த போது கண்ணுல கிளசின் போடுங்க… நடிப்பு பத்தல எனவும் கேலியாக கமெண்ட் செய்திருந்தார். இதனால் கோபம் அடைந்த விசிக கட்சியினர்வினர் அவரது வீடடை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அதையும் அவர் டுவிட் செய்திருந்தார். மேலும் திருமாவளவன் ஆதரவாளர்களிடம் இருந்து தனக்கு வந்த அழைப்புகள் அனைத்தையும் நேரலை செய்து பதிவிட்டிருந்தார். மெரினாவுக்கு வருகிறேன், அப்போது திருமாவளவன் என்னை சந்தித்து விவாதிக்க தயாரா? என்றும் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க – நடிகர் ரியோ ராஜ் மனைவி ஸ்ருதிக்கு வளைகாப்பு : இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்!
அத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக திருமாவளவன் மற்றும் விசிக குறித்து சர்ச்சை பதிவுகளை காயத்ரி ரகுராம் வெளியிட்டு (gayathri raghuram) வந்த நிலையில் விதிகளை மீறியதாக அவரது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
ட்விட்டரில் காயத்ரி ரகுராமை மூன்றரை லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்த நிலையில் அவரது கணக்கு முடக்கப்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டுவிட்டர் நிர்வாகம் விதி முறையை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
திருமாவளவனுக்கு எதிராக காயத்ரி ரகுராமன் (gayathri raghuram) பதிவு செய்த இந்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் பாதுகாப்பு கேட்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து பேசியதில், பலர் தனது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதாலும், போன் மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாலும் காவல்துறையினர் தனது வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்த விவகாரம் தொடர்பாக நடிகை அக்கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆபாசமாக திட்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் காயத்ரி ரகுராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க – ஆடம்பரமாக நடைபெற்ற திருமணம்… விலை உயர்ந்த மோதிரத்தை பரிசாக பெற்ற நடிகைகள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Celebrity Life
மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!
Swathi Subramanian
தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்….. ரசிகர்கள் அதிர்ச்சி!
Swathi Subramanian
25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!
Swathi Subramanian
நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!
Swathi Subramanian